PDA

View Full Version : ஹைக்கூ - விஷப்பூச்சிகள்



ஆர்.ஈஸ்வரன்
26-11-2007, 10:47 AM
சுத்தத்தைக்
கற்றுக்கொடுக்கும்
விஷப்பூச்சிகள்

தாமரை
26-11-2007, 11:00 AM
சுத்தத்தைக்
கற்றுக்கொடுக்கும்
விஷப்பூச்சிகள்

அதனால்தான்
சுத்தப்படுத்தக்கூட
தெளிக்கப்படுகிறது
விஷம்:icon_rollout:

சிவா.ஜி
26-11-2007, 11:35 AM
விஷமுண்டும்
பிழைத்துவிட்டார்
சுத்தமில்லா விஷம்!

யவனிகா
26-11-2007, 12:54 PM
விசமுள்ள மனதை
எதைக் கொண்டு
சுத்தப் படுத்த?
விசத்துக்கு
விசம் தான்
முறிவா?

தாமரை
26-11-2007, 01:12 PM
விசமுள்ள மனதை
எதைக் கொண்டு
சுத்தப் படுத்த?
விசத்துக்கு
விசம் தான்
முறிவா?

விஷப் பூச்சிகளிடம்
கற்றுக்கொண்டால்

பூமகள்
30-03-2008, 05:04 PM
வயிற்றில்..
விஷப்பூச்சிகள்
தற்கொலை..

வீட்டில் இன்று
பாவக்காய் குழம்பு..!!

-----------
நல்லதொரு கவி..!! பாராட்டுகள் சகோதரர் ஈஸ்வரன். :)

கண்மணி
31-03-2008, 12:21 PM
வயிற்றில்..
விஷப்பூச்சிகள்
தற்கொலை..

வீட்டில் இன்று
பாவக்காய் குழம்பு..!!

-----------
நல்லதொரு கவி..!! பாராட்டுகள் சகோதரர் ஈஸ்வரன். :)

வயிற்றில் பூச்சிகள்
கொலை
"பாவக்" காய்!

இப்படி போடு பூ!

அறிஞர்
31-03-2008, 12:52 PM
விசப்பூச்சிகள்
பற்றி இத்தனை சிந்தனையா...
அருமை மக்களே..

பூமகள்
31-03-2008, 01:34 PM
அற்புதம் அக்கா..!! வெற்றுக் கல்லாக போட்ட என் கவி.. சிற்பமாகி நிற்கிறது உங்கள் உளி பட்டவுடன்..!! பாராட்டுகள்..!!

கொலை பாவம் செய்த
பாவக் காய்..!!
காரணப்பெயரானதோ??!!

என்னே தமிழின் இனிமை..!!

நன்றிகள் கண்மணி அக்கா..!! :)

ஜெயாஸ்தா
31-03-2008, 03:33 PM
அற்புதம் அக்கா..!! வெற்றுக் கல்லாக போட்ட என் கவி.. சிற்பமாகி நிற்கிறது உங்கள் உளி பட்டவுடன்..!! பாராட்டுகள்..!!

கொலை பாவம் செய்த
பாவக் காய்..!!காரணப்பெயரானதோ??!!


அடடா... செதுக்காமலே ஒரு சிற்பம்.