PDA

View Full Version : நான்(ண்)!

பூமகள்
25-11-2007, 06:01 PM
http://img37.picoodle.com/img/img37/5/11/25/poomagal/f_vIndianShoom_7aa1bf3.jpg

அன்று..!

அம்(ன்)பாக நீயிருந்தாய்..!
விசையுறு கவண் நாண்! - நான்..!

இன்று..!

அம்(ன்)பாக நீயில்லை..!
விசையில்லா நாண் ! - நான்..!

ஆதி
25-11-2007, 06:14 PM
அன்று..!

அம்(ன்)பாக நீயிருந்தாய்..!
விசையுறுகவன் நாண்! - நான்..!

இன்று..!

அம்(ன்)பாக நீயில்லை..!
விசையில்லா நாண் ! - நான்..!

[/CENTER]

அருமையான குறுங்கவி பூமகள்..

அம்புக்கும் நாணுக்கும் உள்ள உறவை பற்றி சிறிது சிந்தித்த பொழுதில் எண்ணத்தில் தேங்கிய வார்த்தைகள் இவை..

என்னை பின்னுக்குதள்ளி
முன்னுக்கு சென்றவன் நீ

வாழ்த்துகள்..

-ஆதி

பூமகள்
25-11-2007, 06:18 PM
என்னை பின்னுக்குதள்ளி
முன்னுக்கு சென்றவன் நீ
ஆஹா...!! இருவரியில் அசத்திவிட்டீர்களே..!! :icon_b:
மிகுந்த நன்றிகள் ஆதி.:icon_rollout:

அமரன்
25-11-2007, 06:21 PM
அம்புக்கு விசை
கொடுப்பது நாண்
நாணுக்கு விசை
கொடுப்பது நான்..

நான் நாணாயின்
நான் யாரோ(வா)?

நாணின்றி சொல்கிறாயே
அன்பின்றி கொல்கிறாயே..!

ஓவியன்
25-11-2007, 06:22 PM
அன்று..!
அம்(ன்)பாக நீயிருந்தாய்..!
விசையுறுகவன் நாண்! - நான்..!

இன்று..!
அம்(ன்)பாக நீயில்லை..!
விசையில்லா நாண் ! - நான்..!

அம்(ன்)பின் வேகம்
நாணி(னி)னால் தீர்மானிக்கப்படும்
அப்படியானால்
விசையுறு நாணா(ன)க இருந்தால்
அம்(ன்)பாகி விடும்...!!

இதனைக் கொண்டு
உங்கள் கவியை நோக்கினால்
தப்பு நாணி(னி)லேயே என்று வருகிறதே...
சரியா பூமகள்...???

இப்படி எழுதி இருக்க மாட்டீர்கள்
என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்.....

ஓவியன்
25-11-2007, 06:26 PM
என்னை பின்னுக்குதள்ளி
முன்னுக்கு சென்றவன் நீ

ஆதி..!!

அம்பு நாணை பின்னுக்குத் தள்ளுமா...??
இல்லையே
நான் தானே அம்பை பின்னுக்கு
இழுத்து முன்னாலே தள்ளுகிறது..!!

ஆதி
25-11-2007, 06:33 PM
ஆதி..!!

அம்பு நாணை பின்னுக்குத் தள்ளுமா...??
இல்லையே
நான் தானே அம்பை பின்னுக்கு
இழுத்து முன்னாலே தள்ளுகிறது..!!

ஓவியன்..

அம்பை ஏந்திய உடன் நாண் வளைந்துவிடும்..

அன்பை ஏந்திய உடன் நா(ன்)மும் வளைந்துவிடு(வோ)ம்..

இந்த பதில் சரியாக இருக்கும் உங்கள் கேள்விக்கு என நம்புகிறேன்..

நன்றி அன்பன் ஆதி

தாமரை
25-11-2007, 06:42 PM
நாணை (நாணத்தை) பின்னிழுத்து அம்பை(அன்பை) முன் செலுத்தல் வில் (ஆசை - Will) வளைக்கப்பட்ட பிண்புதானே!

ஆதி
25-11-2007, 06:47 PM
நாணை (நாணத்தை) பின்னிழுத்து அம்பை(அன்பை) முன் செலுத்தல் வில் (ஆசை - Will) வளைக்கப்பட்ட பிண்புதானே!

அன்(ம்)பு ஆட்கொண்ட
நான்(ண்) விசைக்கொள்ளும்
வில் விறைப்பிலக்கும்..

அமரன்
25-11-2007, 06:47 PM
நாணை (நாணத்தை) பின்னிழுத்து அம்பை(அன்பை) முன் செலுத்தல் வில் (ஆசை - Will) வளைக்கப்பட்ட பிண்புதானே!

நாணைப் பின்னிழுப்பது சிலநேரம் நாண்தான்..
ஆணுக்கும் உள்ளதல்லவா நாண்..

யவனிகா
25-11-2007, 06:48 PM
அடடா அம்பையும் வில்லையும் வெச்சி இந்தப் போடு போடுறாங்களே கவிதாயினியும், கவிஞர்களும்....கவிதைகள் அம்பாய் மனதில் நச்சென்று தைக்கின்றன.

ஓவியன்
25-11-2007, 06:52 PM
அம்பு விடுவதை நாணேற்றுவது என்பார்களே
ஆகவே
ஆசையை வளைத்து அன்பை நாடுகையில்
நாணத்தைக் கப்பலேற்றுவது என்று பொருள் படும் போல...

பூமகள்
26-11-2007, 06:25 AM
நாணின்றி சொல்கிறாயே
அன்பின்றி கொல்கிறாயே..!
அழகு கவி அமரன் அண்ணா.
மிகுந்த நன்றிகள். :)

தாமரை
26-11-2007, 06:27 AM
அம்பு விடுவதை நாணேற்றுவது என்பார்களே
ஆகவே
ஆசையை வளைத்து அன்பை நாடுகையில்
நாணத்தைக் கப்பலேற்றுவது என்று பொருள் படும் போல...

மானத்தை கப்பலேதிறாதீங்க..

பூமகள்
26-11-2007, 06:32 AM
அம்(ன்)பின் வேகம்
நாணி(னி)னால் தீர்மானிக்கப்படும்
அப்படியானால்
விசையுறு நாணா(ன)க இருந்தால்
அம்(ன்)பாகி விடும்...!!

இதனைக் கொண்டு
உங்கள் கவியை நோக்கினால்
தப்பு நாணி(னி)லேயே என்று வருகிறதே...
சரியா பூமகள்...???
அன்பின் அம்பாய் நீயானாய்..!
நாண்(ன்) உன்
ஊக்கத்தால் விசை கொண்டேன்..!
அன்பின் அம்பாய் நீயில்லை..!
நாண்(ன்) விசையில்லா நாணானேன்..!

"நீயின்றி நானில்லை..!!" என்பது போல்
கருத்து கொண்டு யோசித்துப் பாருங்கள் ஓவியன் அண்ணா.

சிவா.ஜி
26-11-2007, 06:40 AM
நச்சுன்னு ஒரு நாண்(ன்) கவிதை பச்சக்குன்னு நெஞ்சை தைத்துவிட்டது.பதில் கவிதைகள் சூப்பரோ சூப்பர்.அம்(ன்)பால் விசையூட்டப்பட்ட நாண்(ன்)...நாமாவதற்குள் அம்(ன்)பு முறிந்துவிட்டதே.

பூமகள்
26-11-2007, 06:52 AM
அடடா அம்பையும் வில்லையும் வெச்சி இந்தப் போடு போடுறாங்களே கவிதாயினியும், கவிஞர்களும்....கவிதைகள் அம்பாய் மனதில் நச்சென்று தைக்கின்றன.
மிகுந்த நன்றிகள் யவனி அக்கா..! :)

நச்சுன்னு ஒரு நாண்(ன்) கவிதை பச்சக்குன்னு நெஞ்சை தைத்துவிட்டது.பதில் கவிதைகள் சூப்பரோ சூப்பர்.அம்(ன்)பால் விசையூட்டப்பட்ட நாண்(ன்)...நாமாவதற்குள் அம்(ன்)பு முறிந்துவிட்டதே.
மிகுந்த நன்றிகள் சிவா அண்ணா. :)

இதயம்
26-11-2007, 06:55 AM
அழகிய கருத்து, வார்த்தை ஜாலம் கொண்டு அசர வைத்த கவிதை இது. கொஞ்சம் பொறுமையாக செதுக்கியிருந்தால் பூமகள் எதிர்பார்த்து எய்த கனி கைகளில் கிடைத்திருக்கும்..! இருந்தாலும் அடுத்த அம்பு அழகாய் தாக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு..!

பாராட்டுக்கள் பூ..!

மதி
26-11-2007, 07:02 AM
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பாடா...
அழகிய கவிதை பூமகள்..
பதில் கவிதைகளும் சூப்பர்... நாண் எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது..

பூமகள்
26-11-2007, 07:03 AM
மிகுந்த நன்றிகள் இதயம் அண்ணா.
கண நேரத்தில் தோன்றிய கவி..!
குறுங்கவி எழுதும் நோக்கில் படைத்தது. தாங்கள் சொன்னது போல், கொஞ்சம் செதுக்கியிருக்கலாமோ? அப்போ, இந்த (க)வி(ல்) நன்றாக இல்லையா??

அடுத்த முறை இன்னும் முயல்கிறேன் இதயம் அண்ணா.
ஊக்கத்துக்கு நன்றிகள்.

அமரன்
26-11-2007, 07:28 AM
அழகு கவி அமரன் அண்ணா.
மிகுந்த நன்றிகள். :)

கடைசிவரை
நம்பிக்கை கொடுத்தது
யாரென்று
சொல்லவில்லையே...!:)

பூமகள்
26-11-2007, 07:35 AM
கடைசிவரை
நம்பிக்கை கொடுத்தது
யாரென்று
சொல்லவில்லையே...!:)
சொன்னாலும் கேட்பதில்லை..!
கன்னி மனது..!
ஒன்றை மறைத்து வைத்தேன்..
சொல்ல தடைவிதித்தேன்..!
நெஞ்சை நம்பியிருந்தேன்.. அது
வஞ்சம் செய்தது..! :icon_ush:

நன்றி: படம் - காதல் வைரஸ்

ஓவியன்
26-11-2007, 07:43 AM
மானத்தை கப்பலேதிறாதீங்க..

தன்மானத்தையா?
இல்லை
அவமானத்தையா...??

தாமரை
26-11-2007, 07:49 AM
தன்மானத்தையா?
இல்லை
அவமானத்தையா...??

அவ(ள்)மானமும்
தன்மானம்தானே
காதலில்

சுகந்தப்ரீதன்
26-11-2007, 08:32 AM
அன்பு-அம்பு
நாண்-நான்

நல்ல சொல்லாடல்..வாழ்த்துக்கள் பூமகள்..!

ஷீ-நிசி
26-11-2007, 09:23 AM
அவ(ள்)மானமும்
தன்மானம்தானே
காதலில்

எங்களையெல்லாம் சொல்லவே விடமாட்டீங்களா?!:traurig001:

பூமகள்! நல்லா இருக்கு.. நல்லா திங்க பன்றீங்க!

அமரன்
26-11-2007, 09:24 AM
எங்களையெல்லாம் சொல்லவே விடமாட்டீங்களா?!:traurig001:
பூமகள்! நல்லா இருக்கு.. நல்லா திங்க பன்றீங்க!
பின்னே எத்தனைபேர் மென்று தின்று துப்பி இருக்காங்க இங்கே..

பென்ஸ்
26-11-2007, 09:38 AM
நல்ல சொல்லாடல் பூ...
ஆனால் கவிதையின் கருவை புரிந்துகொள்ளமுடிந்தாலும் ஏற்று கொள்ளமுடியவில்லை...

வாய் தவறிய சொல்
கை தவறிய ஆயுதம்
திரும்ப கிடைக்காது...
திரும்புமானால் தாக்கவே வரும்...

அம்பு அதன் பணியை செய்து முடித்துவிட்டபிறகும் வில்லுக்கு அதன் மேல் அக்கரை எதற்கு???

பூமகள்
26-11-2007, 10:21 AM
பூமகள்! நல்லா இருக்கு.. நல்லா திங்க் பன்றீங்க!
நன்றிகள் ஷீ..!!
"திங்க பன்றீங்க! - லா??"
ஆனாலும் நீங்க நல்லாவே கலாய்க்கிறீங்க...!! :icon_ush:

பின்னே எத்தனைபேர் மென்று தின்று துப்பி இருக்காங்க இங்கே..
எல்லாரும் தின்று விழுங்கத்தானே செய்வாங்க... எப்படி தின்று விட்டு துப்ப முடியும்...!! :confused:

பூமகள்
26-11-2007, 10:27 AM
நல்ல சொல்லாடல் பூ...
ஆனால் கவிதையின் கருவை புரிந்துகொள்ளமுடிந்தாலும் ஏற்று கொள்ளமுடியவில்லை...
அம்பு அதன் பணியை செய்து முடித்துவிட்டபிறகும் வில்லுக்கு அதன் மேல் அக்கரை எதற்கு???
புரிகிறது பென்ஸ் அண்ணா. எழுதும் போதே உங்களின் பதில் பற்றி யோசித்தேன். அது போலவே தங்களின் பதில்.
என் கணிப்பு சரி தான்.:icon_b:

நன்றிகள் அண்ணா.

தாமரை
26-11-2007, 10:57 AM
பின்னே எத்தனைபேர் மென்று தின்று துப்பி இருக்காங்க இங்கே..

என்ன இருந்தாலும் சூயிங்கம், இழுவை, ஜவ்வுன்னு இப்படி வெளிப்படையா சொல்லக்கூடாது அமரன். :aetsch013::sprachlos020:

அமரன்
26-11-2007, 11:04 AM
என்ன இருந்தாலும் சூயிங்கம், இழுவை, ஜவ்வுன்னு இப்படி வெளிப்படையா சொல்லக்கூடாது அமரன். :aetsch013::sprachlos020:
இவ்வளவு வெளிப்படையா சொல்லியும் பூவுக்கு புரியலையே.

பூமகள்
26-11-2007, 11:10 AM
என்ன இருந்தாலும் சூயிங்கம், இழுவை, ஜவ்வுன்னு இப்படி வெளிப்படையா சொல்லக்கூடாது அமரன். :aetsch013::sprachlos020:

இவ்வளவு வெளிப்படையா சொல்லியும் பூவுக்கு புரியலையே.
இப்போ சுயிங்கமாய் இழுப்பது யார்??!!:icon_p:

தாமரை
26-11-2007, 11:25 AM
இப்போ சுயிங்கமாய் இழுப்பது யார்??!!:icon_p:

அது யார்ன்னு தெரியாது.. ஆனா சூயிங்கம்மே நீங்கதான்னு நல்லாத் தெரியும்.

பூமகள்
26-11-2007, 04:42 PM
அன்பு-அம்பு
நாண்-நான்
நல்ல சொல்லாடல்..வாழ்த்துக்கள் பூமகள்..!
மிகுந்த நன்றிகள் ப்ரீதன்.. இல்ல இல்ல....சுபி.!! :)

பூமகள்
26-11-2007, 04:46 PM
அது யார்ன்னு தெரியாது.. ஆனா சூயிங்கம்மே நீங்கதான்னு நல்லாத் தெரியும்.
சுவிங்கமாய் இழுக்கவாவது உபயோகமாவதை நினைத்து மகிழ்ச்சி அண்ணா.:icon_rollout:

(குட்டுப் பட்டாலும் பட்டம் பெற்றாலும் மோதிரக் கையால் தானே கிடைக்கிறது..!! மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.:D)

ஷீ-நிசி
26-11-2007, 04:51 PM
நன்றிகள் ஷீ..!!
"திங்க பன்றீங்க! - லா??"
ஆனாலும் நீங்க நல்லாவே கலாய்க்கிறீங்க...!! :icon_ush:

எல்லாரும் தின்று விழுங்கத்தானே செய்வாங்க... எப்படி தின்று விட்டு துப்ப முடியும்...!! :confused:

அதாவது பூ! உங்க கவிதை கரும்பு மாதிரி...

என்னதான் இனிப்பா இருந்தாலும்... கடிச்சி மென்னுட்டு கடைசியில துப்பதான் செய்யறோம்.... அதத்தான் சொல்றாரு அமரன்....:icon_rollout:

கரும்பு தின்ன,
கசக்குமா என்ன?

பூமகள்
26-11-2007, 05:15 PM
அதாவது பூ! உங்க கவிதை கரும்பு மாதிரி...கரும்பு தின்ன,கசக்குமா என்ன?
ஷீ...! நல்லாவே சமாளிக்கிறீங்க...!! :icon_b::rolleyes:

அமரன்
26-11-2007, 08:32 PM
சுவிங்கமாய் இழுக்கவாவது உபயோகமாவதை நினைத்து மகிழ்ச்சி அண்ணா.:icon_rollout:
(குட்டுப் பட்டாலும் பட்டம் பெற்றாலும் மோதிரக் கையால் தானே கிடைக்கிறது..!! மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.:D)

மோ(மூக்கு) உதிர கையால் கிடைக்குதா.. இதுதான் மூக்குடைப்பது என்பதோ??

மலர்
26-11-2007, 09:12 PM
என்ன இருந்தாலும் சூயிங்கம், இழுவை, ஜவ்வுன்னு இப்படி வெளிப்படையா சொல்லக்கூடாது அமரன். :aetsch013::sprachlos020:

இப்போ சுயிங்கமாய் இழுப்பது யார்??!!:icon_p:

அது யார்ன்னு தெரியாது.. ஆனா சூயிங்கம்மே நீங்கதான்னு நல்லாத் தெரியும்.

சுவிங்கமாய் இழுக்கவாவது உபயோகமாவதை நினைத்து மகிழ்ச்சி அண்ணா.

ஆமா...
இங்க தான் எல்லாரும் சுயிங்கத்தை பத்தி பேசுறீங்கன்னா....
அன்புவும் ஆரம்பிச்ட்டாரு...

நடத்துங்க..நடத்துங்க,,,
ஒண்ணும் புரியலை...

இப்போது sorry செல்வது சுவிங்கம் மென்று துப்புவது போல்...

அமரன்
27-11-2007, 07:49 AM
நடத்துங்க..நடத்துங்க,,,
ஒண்ணும் புரியலை...
கவிதைப்பக்கம் அடிக்கடி வந்தால்த்தானே புரியும்.

விகடன்
27-11-2007, 08:44 AM
கவிதையில் வார்த்தை ஜாலம் பாராட்டத்தக்கது.
இருந்தாலும்,
கவியின் கரு என்னைப் பொறுத்தவரை இரசிக்கக் கூடியதாக இல்லை.

M.Jagadeesan
19-01-2013, 07:04 AM
http://img37.picoodle.com/img/img37/5/11/25/poomagal/f_vIndianShoom_7aa1bf3.jpg

அன்று..!

அம்(ன்)பாக நீயிருந்தாய்..!
விசையுறு கவண் நாண்! - நான்..!

இன்று..!

அம்(ன்)பாக நீயில்லை..!
விசையில்லா நாண் ! - நான்..!

பூமகளின் குறுங்கவிதை நன்று! ஆனாலும் , அம்பை , வில்லில்தானே வைத்து ஏற்றுவார்கள் ! கவண் என்பது கல்லெறி கருவி !