PDA

View Full Version : கரிசலாங்கண்ணி



mgandhi
25-11-2007, 04:44 PM
கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணிக் கீரையில் இரண்டு வகைகள் உண்டு.

மஞ்சள் பூ பூக்கும் கரிசலாங்கண்ணி கிடைப்பது அரிது. வெள்ளைப் பூக்கள் பூக்கும் கரிசலாங்கண்ணியைத்தான் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

இந்தக் கீரையை பொரியல், கடைதல், கூட்டு, சட்னி என அனைத்து வகையான வடிவத்திலும் உட்கொள்ளலாம். கல்லீரல் கோளாறுகள், மலச்சிக்கல் ஆகியவை நீங்கி ரத்தம் சுத்திகரிக்கப்பட, இது நல்ல மருந்து. ரத்தசோகை உள்ளவர்களுக்கு இந்தக் கீரை உண்மையிலேயே வரப்பிரசாதம்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையை நன்றாக உலர்த்தி இடித்துத் தூளாக்கி சுத்தமான துணியில்


சலித்து எடுத்து பத்திரப்படுத்தி, தினமும் இரவு படுக்கைக்குப் போகும் முன் ஒரு டீ ஸ்பூன் எடுத்து அதே அளவில் கற்கண்டுத் தூளையும் சேர்த்து பாலில் கலந்து சாப்பிடுவது, ஆரோக்கியத்துக்கு அருமருந்து.

வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையை இடித்துச் சாறு எடுத்து தைலமாக்கி, தினசரி நெற்றியில் சிறிது தடவி வந்தால், கண்கள் குளிர்ச்சியடையும். மூளை வலுப்பெறும்.

சில குழந்தைகள் மண் தின்பதால், வயிறு உப்புசமாகிவிடும். அதனால் ஜீரண சக்தி சரியாக இல்லாமல் அவதிப்படுவார்கள். இதற்கு இந்தக் கீரையை மை போல அரைத்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுத்தால் நல்ல பலன் தரும்.

பொடுகுத் தொல்லைகளில் இருந்து விடுபடவும் முடி உதிர்வதைத் தடுக்கவும் கரிசலாங்கண்ணிக் கீரை உதவுகிறது. தலைமுடியும் நன்கு வளரும்.

பொதுவாகவே நல்ல மலம் இளக்கியாகச் செயல்படும் இந்தக் கீரையைப் பெரியவர்களும் தொடர்ந்து சாப்பிட்டால், நல்ல ஜீரண சக்தியுடன் எந்த நோயும் நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ள-லாம்!

பூமகள்
25-11-2007, 05:08 PM
கரிசிலாங்கண்ணி...!!
சஞ்சீவி மூலிகை போல் ஒரு அற்புத மருந்து..!!
தலைமுடி பராமரிப்புக்கு இது தான் இயற்கை கொடுத்த அற்புதம்..!!

நல்லதொரு முக்கியமான, உபயோகமான பகிர்வு காந்தி அண்ணா.
மிக்க நன்றிகள். :)

ஓவியன்
25-11-2007, 05:47 PM
நல்ல தகவல் பரிமாற்றுக்கு நன்றி காந்தி அண்ணா..!!
____________________________________________________________________________________________________________________________
கரிசிலாங்கணி கீரை சாப்பிட்டு வந்தால் கரிய நிறமுடைய அழகிய கண் வாய்க்குமோ...???

பார்க சொல் வேந்தரின் கீரைக் கவிதை.....

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=302768&postcount=658

அனுராகவன்
31-01-2008, 08:21 AM
நல்ல தகவல் பரிமாற்றுக்கு நன்றி காந்தி
மிக்க நன்றிகள்!!!!