PDA

View Full Version : கடல்



IDEALEYE
25-11-2007, 03:17 PM
மனிதன்
தோற்றுப்போன
முதல் இடம்
உயிர் தோன்றிப்போன
முதல் இடம்
கடல்

mgandhi
25-11-2007, 05:53 PM
எதை கூறுகிறிர்கள் சுனாமியையா!

ஆதி
25-11-2007, 05:58 PM
எதை கூறுகிறிர்கள் சுனாமியையா!

கடலென்று பெயரிட்ட பொழுதே
தோற்றுவிட்டோம்
சுனாமியிடம் தோற்றதில்
வியப்பென்ன ?

கடல் - கடக்க முடியாததால் கடல் என்றோம்..

ஓவியன்
25-11-2007, 06:40 PM
மனிதன் தோற்றது
கடலிடமா
இல்லை
அலையிடமா....??

ஓவியன்
25-11-2007, 06:41 PM
கடலென்ற பெயரிட்ட பொழுதே
தோற்றுவிட்டோம்
சுனாமியிடம் தோற்றதில்
வியப்பென்ன ?

கடல் - கடக்க முடியாததால் கடல் என்றோம்..

அருமை ஆதி..
அசத்தல் பின்னூட்டம்..

ஆதி
25-11-2007, 06:58 PM
அருமை ஆதி..
அசத்தல் பின்னூட்டம்..

நன்றி ஓவியன்.. எல்லாம் உங்கள் ஊக்கத்தால்தான்..

-ஆதி

சுகந்தப்ரீதன்
26-11-2007, 08:31 AM
தோற்ற இடமும் தோன்றிய இடமும் ஒன்றா..அப்ப இனி தோல்விக்கு வருந்த தேவையில்லை அப்படிதானே ஐடியல்... வாழ்த்துக்க:ள்..!

IDEALEYE
26-11-2007, 10:03 AM
ஊக்கம் தரும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்,
இந்த துண்டுக்கவிதையின் பின்னால் சிறியதொரு கதையுண்டு, சுவாரஷ்யம் கருதி இங்கு தருகின்றேன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18/11/2007) என் நண்பர் ஒருவருடன் கடலுக்குச்சென்றிருந்தேன், அவர் ஒரு வைத்தியர், இருவருக்கும் சுமாராக நீச்சல் தெரியும், கடலில் நீந்திக்கொண்டிருக்கின்ற பொழுது, அவர் கடல் பற்றி வியப்பான தகவல்களை சொல்லத்தொடங்கினார், அதில் ஒன்றுதான் கடலில்தான் முதல் உயிர் தோன்றியது என்பது, சற்று நேரம் கழியத்தொடங்கியது, இருவரும் கரைக்கு வருவேம் என்று நினைத்து ஒரு நிமிடம் கூட இல்லை, இராட்சத அலையொன்று கடலில் தோன்றியது, இருவரையும் மிகவேகமாக கரைநோக்கி அள்ளிச்சென்று வீசியது, அப்பொழுது அந்த வைத்தியர் சொன்னார், கடலிடம் நாம் அடிக்கடி தோற்றுப்போகிறோம்: அப்பொழுது எழுந்த கவிதையிது......
ஐஐ

M.Jagadeesan
19-01-2013, 06:53 AM
மனிதன்
தோற்றுப்போன
முதல் இடம்
உயிர் தோன்றிப்போன
முதல் இடம்
கடல்




மனிதன் தோற்றுப்போன முதல் இடம் , கடல் அல்ல; காதலியிடம்.

கும்பகோணத்துப்பிள்ளை
19-01-2013, 06:11 PM
மனிதன் தோற்றுப்போன முதல் இடம் , கடல் அல்ல; காதலியிடம்.

காதலியின் இதயம்
கடலைவிட ஆழமானது என்பதாலா!