PDA

View Full Version : இப்படியும் ஒரு வாழ்க்கைசிவா.ஜி
25-11-2007, 09:45 AM
மார்க்கெட் பக்கம் புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்குமந்த கடைக்கு அருகில் கூட்டமாக இருந்தது.கடைக்குப் போனவன் என்னவாகஇருக்குமென்ற ஆவலில் கூட்டத்தில் நுழைந்து பார்த்தேன்.முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணை நான்கைந்துபேர்
அடித்துக்கொண்டிருந்தார்கள்.அவர்களைப் பார்த்தால் கட்டிடவேலை செய்பவர்கள்போல இருந்தார்கள்.வழக்கம்போல விலக்கிவிட
நான்குபேர்.விலக்கிவிட யாராவது இருக்கும்போதுதான் அடிப்பவர்களுக்கு வீரம் பொங்கிக்கொண்டு வரும்.அவர்களும் அப்படியேதான் சின்னச் சின்ன இடைவெளிவிட்டு எகிறிக்கொண்டிருந்தார்கள்.அடிபடுபவன் முகத்தில் வழியும் ரத்தத்துடன் பரிதாபமாக இருந்தான்.சிறிது கறுப்பாக,மெலிதான சோகம் முகத்தில் தெரிய நம்ம ஊர் ஆளைப்போல இல்லாமல் இருந்தான்.
பொறுக்க முடியாமல் அருகில் சென்று அடிப்பவர்களைத் தடுத்து\"ஏன்யா இந்த ஆளை அடிக்கிறீங்க ஏதாவது திருடிட்டானா?\" என்று கேட்டதற்கு அந்த ஆட்கள்\"எங்க பொழப்பையே திருடுறானுங்க இவனுங்க\"என்றதும் புரியாமல்\"என்னயா சொல்ற?\"
\"ஆமா சார் இவனுங்க இலங்கை அகதிங்க.இங்க இருக்கற முகாம்லதான் தங்கியிருக்கானுங்க...நாங்கல்லாம் கட்டடவேலை
செய்றவங்க.பாருங்க இந்த கடை கட்ற இடத்துலயும் நாங்கதான் வேலை செஞ்சிக்கிட்டிருந்தோம்..இப்ப அந்த மேஸ்திரி எங்களை
வேனான்னு சொல்லிட்டு இவன் கூட இன்னும் மூணுபேர வெச்சிக்கிட்டாரு...கேட்டா உங்களவிட கூலி குறைவாக் கேக்குறாங்க
நல்லாவும் வேலை செய்றாங்க அதனால இவங்களே போதும்ன்னு சொல்லிட்டாரு. இவங்க இப்படி கொறஞ்ச கூலிக்கு வேலை செஞ்சாநாங்கல்லாம் என்ன பன்றது?\"ஆத்திரமா கேட்டவனை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல்,\"சரி
விடுங்கய்யா...பாவம் சொந்த பந்தங்களையெல்லால் பறிகுடுத்துட்டு அவங்களே ஆதரவில்லாம் இங்கே வந்து பொழைக்குறாங்க
அவங்களைபோய் அடிக்கிறீங்களே..நான் பேசிக்கிறேன்\" என்று சொல்லிவிட்டு அந்த அடிபட்ட ஆளை தனியாக கூட்டிக்கொண்டு
வந்தேன்.அதே மார்க்கெட்டில் எனக்கும் நான்கு கடைகள் சொந்தமாக இருப்பதால் அவர்களுக்கு என்மேல் மரியாதை இருந்தது.அதனால் ஒன்றும்சொல்லாமல் போய்விட்டார்கள்.பிரச்சனை பெரியதுதான்.என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு அந்த ஆளைக் கூட்டிக்கொண்டுமுதலில் மருத்துவரிடம் சென்று முதலுதவி செய்துகொண்டு அவர்கள் தங்கியிருக்கும் முகாமுக்கு அவரை அழைத்துச் சென்றேன்.

அந்த முகாம் இதற்கு முன்பு அரசாங்க பண்டகசாலையாக இருந்தது.அங்கிருக்கும் பாதாம் மரங்களில் ஏறி சிவப்பாய் பால் வழியும்
அந்த பாதாம் காய்களைப் பறித்து கல்லால் அதை உடைத்து பருப்பை சுவைப்பது என்னுடைய சின்ன வயது பொழுதுபோக்குகளில்
ஒன்று.நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த இடத்துக்கு வந்ததும் மிகப் பெரிய மாற்றம் தெரிந்தது.மூன்று நீண்ட பெரிய ஹால் போன்ற
அந்தக் கட்டிடங்களில் இலங்கை அகதிகள் தங்க வைக்கப்ப்ட்டிருந்தனர்.சிலர் குடும்பத்துடன் இருந்தனர்.சிலர் தனியாக.அங்கு
அவர்களின் நிலையைப் பார்த்ததும் மனம் சங்கடப்பட்டது.எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஒரே ஹாலில் இவ்வளவு
பேரையும் அடைத்து வைத்திருந்தார்கள்.

ஒரு பாயும் அழுக்கான ஒரு தலையணையும் தரையில் இடப்பட்டு அதனருகே அவர்கள் நாடுவிட்டு வந்தபோது அவசரத்தில் கையோடுகொண்டுவந்திருந்த ட்ரங்குப் பெட்டிகளும் சில பாத்திரங்களும் வைக்கப்பட்டிருந்தது.அந்தப் பாயும் அதனருகில் இருந்த அவர்களின்உடமைகளும் வைக்கப்பட்டிருந்த பகுதி ஒரு குடும்பத்துக்கு என்றவிகிதத்தில் நிறைய குடும்பங்கள் இருந்தார்கள்.
இதில் எத்தனை செல்வந்தர்கள் இருப்பார்கள்..எத்தனை குழந்தைகள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு
வந்திருப்பார்கள்...எத்தனைப் பெண்கள் இதுநாள்வரை வீட்டைவிட்டே அதிகம் வெளியில் போகாமல் சந்தோஷமாக
இருந்திருப்பார்கள்..அனைவரும் இப்போது இந்த தேசத்தில்,ஆதரவுக்கு யாருமில்லாமல் அவர்களுக்கு அவர்கள்தான் சொந்தங்கள் என்ற நிலையில் அரசாங்கம் அளித்திருந்த அந்த தாற்காலிக தங்குமிடத்தில் துக்கத்தை சுமந்து கொண்டு வாழ்கிறார்கள்.
அவன் பேசத் தொடங்கினான்.சமீபத்தில் தெனாலி படம் பார்த்திருந்ததால் அந்த தமிழ் நன்றாகவே புரிந்தது.புரியாத சொற்களையும்
அனுமானித்துக்கொண்டேன்.\"எங்க தேசத்தில்...இப்ப அப்படி சொல்றதுக்கு அங்கே என்ன இருக்கு?\" என்று அவனை அவனே
கேட்டுக்கொண்டு தொடர்ந்தான்...\"நல்ல வாழ்க்கைதான் வாழ்ந்துக்கிட்டிருந்தோம்.முதல் முறை யுத்தம் நடந்தபோதுகூட எங்கள்
பகுதியில் அவ்வளவா பாதிப்பு இல்லை.ஆனால் இந்தமுறை சிங்களப் படைகளோட அக்கிரமம் ரொம்பவும் அதிகமாகிவிட்டது.இதோ
இங்கே நிக்கற என்னோட மகள் இவ ஒருத்திதான் இப்ப எனக்குன்னு சொல்ல ஒரே சொந்தம்.அருகிலிருந்த எட்டுவயது சிறுமியை
அனைத்துக்கொண்டே,என் மனைவி...\"என்று சொன்னவன்...அந்த நிகழ்வின் பாதிப்பு நினைவில் தோன்ற கண்கள் கலங்க சிறிது நேரம்அமைதி காத்து மகளையும் பார்த்தவாறே\"என்னன்னு சொல்றதுங்க...இந்த பிஞ்சு குழந்தையோட முன்னாலயே அத்தனையும்
நிகழ்ந்தது.எல்லாத்தையும் இழந்துட்டு இனி அங்கே எனக்கு வாழ்க்கையில்லைங்கறதால அங்கேருந்து கிளம்பினவங்களோட நானும்
என் மகளைக் கூட்டிக்கிட்டு கிளம்பிட்டேன்.அதுலருந்து கொஞ்ச பேரை இந்த ஊருல இருக்கிற இந்த முகாமுக்கு
கொண்டுவந்தாங்க.வந்ததிலிலருந்து அரசாங்கம் கொடுக்கிற உதவியிலதான் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருந்தோம்.பிள்ளைங்களெல்லாம்
நல்ல சோறுக்கு ஆசைப் பட்டதுங்க. படிக்கனுன்னு சொல்லுதுங்க.ஆனா அது முடியுமோ என்னவோ..நல்ல சோறாவது
கொடுக்கலாமேங்கறதால வெளி வேலைக்குப் போக அனுமதி வாங்கிக்கிட்டு போக ஆரம்பிச்சோம்.எவ்வளவு கூலின்னாலும்
பரவாயில்லை,வேலை எவ்வளவு கஷ்டமின்னாலும் பரவாயில்லைன்னு நெனைச்சுகிட்டு கிடைச்ச வேலையை
செஞ்சுகிட்டிருக்கும்போதுதான் இன்னைக்கு என்னை அடிச்சவங்க தொடர்ந்து ரெண்டு மூனு நாளா ஓடிப் போய்டுங்கன்னு மிரட்டிகிட்டேஇருந்தாங்க.நாங்க சொல்றது அவங்களுக்குப் புரியல.எங்க வேதனையையும் அவங்க புரிஞ்சிக்கல.அதுவுமில்லாம இன்னைக்கு காலையில அவங்க வேலைக்கு வந்தபோது மேஸ்திரி அவங்களை வேண்டான்னு சொன்னப்ப ஆத்திரப்பட்டு என்னை
அடிச்சிட்டாங்க.பாவம் அவங்களுக்கும் அவங்களோட வேலையைப் பத்தின பயம் வந்திருக்கும்.அவங்களை நான் குறை
சொல்லல...எங்க விதியை நினைச்சுத்தான் நான் வேதனைப் படறேன்.\"தொண்டை அடைக்க கடைசியாய் சொன்ன சொற்கள் உடைந்து மெல்லியதாக விசும்பத் தொடங்கினார்.நல்ல குடும்பத்தை சேர்ந்தவர் என்பது அந்த நாகரீகமான அழுகையில் தெரிந்தது.அவர்மேல் எனக்குப் பரிதாபமும்,மரியாதையும் ஒருங்கே வந்தது.

அந்த கூடத்தில் இருந்த பெரும்பாலோர் எங்களை கூடியிருந்தனர்.நான் ஏதோ அரசாங்க அதிகாரி என்று நினைத்துவிட்டனர்.ஆனால்
எங்கள் பேச்சைக் கேட்டதும் அவர்களின் சோகம் கேட்கும் ஒரு சாதாரன உள்ளூர்க்காரனென்று விளங்கிக்கொண்டு அவரவர்
வேலையைப் பார்க்கப் போய்விட்டனர்.எத்தனைப் பேரிடம் அவர்களின் சோகத்தை இறக்கிவைத்திருப்பார்களோ...இப்போது ஒருவித
சலிப்பு மனநிலைக்கு வந்து விட்டிருந்தனர்.

இந்தப் பிரச்சனையை என்னால் தீர்க்க முடியாது.ஆனால் எங்கள் இரண்டு பேரையுமே மாறி மாறி புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த
அந்த சின்னப் பெண்ணுக்காவது ஏதாவது செய்யவேண்டுமென்று நினைத்துக்கொண்டு.\"உங்க மகளை வேணுன்னா பள்ளிக்கூடத்துல
சேர்க்கமுடியுமான்னு பாக்கலாமா?\"நான் கேட்டதும் எங்கிருந்துதான் அந்த ஒளி வந்ததோ அவருடைய கண்களில்...மிகப் பிரகாசமாகி ஒருவித பரபரப்புடன்\"உங்களால முடியுமாய்யா.?\'என்று கேட்டார்.
\"முயற்சி செய்யலாம்.முதல்ல நான் தாசில்தார்கிட்ட பேசறேன்.அகதிகளுக்கு ஏதாவது அரசாங்க சட்டம் இருக்கும்.அதைப் பற்றி
தெளிவாக தெரிந்துகொண்டு ஆக வேண்டியதைப் பார்ப்போம்\" என்று சொல்லிவிட்டு விடைபெறும்போது தயக்கத்துடனே நான் கொடுத்தபணத்தை வாங்க மறுத்துவிட்டார்.

அன்றே தாசில்தாரை சந்தித்து விவரம் சொன்னபோது அவர் என்னைப் பார்த்த பார்வையில் உங்களுக்கு ஏன் சார் இந்த வேண்டாத
வேலை என்று நினைப்பது புரிந்தது.அதை சொல்லவும் செய்தார்.\'சார் இவனுங்களுக்கெல்லாம் சொந்தக்காரங்க கனடா,இத்தாலின்னு
வெளிநாட்டுல இருக்காங்க,அதுல யாராவது ஒருத்தங்க கூட்டிகிட்டுப் போய்டுவாங்க..அப்புறம் நீங்க இவ்வளவு செஞ்சதெல்லாம்
வீணாயிடும்\"என்று சொன்னவரிடம்.\"பரவாயில்லை சார்..அட்லீஸ்ட் இங்க இருக்கறவரைக்குமாவது
படிச்சிக்கிட்டிருக்கட்டுமே\"என்றேன்.\"சரி உங்க இஷ்டம்.லோக்கல் கார்டியனா நீங்க கையெழுத்துப் போட்டு ஒரு விண்ணப்பம் குடுங்கபாக்கலாம்\"வேண்டாவெறுப்பாய் சொன்னவருக்கு நன்றி சொல்லிவிட்டு விண்ணப்பத்தைக் கொடுத்தேன்.நகரத்தில் ஒரு முக்கியமான நபர் என்பதால் அவராலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.கையெழுத்துப் போட்டுவிட்டு அந்த துறை ஊழியர்களிடம் கொடுத்து ஆவன செய்யும்படி சொல்லிவிட்டார்.

நகராட்சிபள்ளியில் சேர்த்துக்கொண்டார்கள்.புத்தகப்பையுடன் பள்ளிக்கு கிளம்பிய அந்த பிஞ்சு முகத்தில் சந்தோஷமும் பயமும்
கலந்து தெரிந்தது.பள்ளியில் சேர்த்துவிட்டு கொஞ்ச நாள் என்னுடைய வேலையில் மூழ்கிவிட்டதால் அவர்களைச் சந்திக்க
முடியவில்லை.20 நாட்களுக்குப் பிறகு அந்த முகாமுக்குப் போனபோது அந்த சிறுமி கட்டையில் தீக்குச்சி
அடுக்கிக்கொண்டிருந்தாள்.அவளுடைய தந்தை நைந்துபோன ஒரு கைலியை உடுத்திக்கொண்டு அவரும் அதே வேலையில்
ஈடுபட்டிருந்தார்.அதிர்ச்சியாய் இருந்தது.
\"நிரஞசன் ஏன் நிஷாந்தி ஸ்கூலுக்குப் போகலையா?நீங்க ஏன் இந்த வேலையை செஞ்சிக்கிட்டிருக்கீங்க.\" என்று கேட்டதும்.அவசரமாய் எழுந்து என் அருகே வந்தவர்,மிகுந்த தயக்கத்துடனும்,லேசான குற்றவுணர்வுடனும்\"சார் இவ கதைக்கறது அந்த பள்ளிக்கூடத்துல இருக்கற பசங்களுக்குப் புரியலையாம்..அதிகமா கிண்டல் பண்ணியிருக்காங்க...பாவம் சின்னப் பிள்ளை பயந்துட்டா.பள்ளிக்கூடம் போக மாட்டேன்னு அடம் பிடிக்கறா...எனக்கும் வெளியில வேலைக்குப் போனா நிறைய பிரச்சனை அதனாலத்தான் இங்கே இருந்து செய்யறமாதிரி இந்த வேலையை செஞ்சிக்கிட்டிருக்கோம்.இப்ப கொஞ்சம் நல்ல சாப்பாடு சாப்பிட முடியுது.பார்க்கலாம் ஆண்டவன் இன்னும் எத்தனை நாளைக்கு எங்களை சோதிக்கறான்னு.நல்லநேரம்ன்னு ஒண்ணு வராமலா போய்டும்..?\"

அந்தக் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை...ஆனால் அவருடைய எதிர்பார்ப்புகள் நிஜமாகவேண்டுமென்றும் அந்த நல்லநேரம் விரைவில்வரவேண்டுமென்றும் மனம் விரும்பியது.

பூமகள்
25-11-2007, 10:21 AM
எதார்த்தமான விவரிப்பு அண்ணா.
இதே மாதிரியான முகாம்களை நானும் நேரில் பார்த்திருக்கிறேன்.
எங்களது பள்ளியில் அவர்களை இலங்கை அகதிகள் என்று அரசே தங்கவைத்திருந்தது. சிறு வயதில் பார்த்த நியாபகம், அப்படியே பசுமரத்தாணி போல் பதிந்த ஒன்று. நீங்கள் விவரித்த அதே நிலையில் தான் நானும் பார்த்து வருந்தியிருக்கிறேன்.
கதையோட்டமும், விவரிப்பும் வாழ்வின் எதார்த்த பிரச்சனையை முன் வைத்திருந்தது.
பாராட்டுகள் சிவா அண்ணா.

சிவா.ஜி
25-11-2007, 10:24 AM
நன்றி பூமகள்.இந்தப் பிரச்சனை பெரிதாக நிகழ்ந்துகொண்டிருந்தபோது கவனித்திருக்கிறேன்.அதை எழுதினேன்.ஆனாலும் பூரணமாய் முடியவில்லை.

நேசம்
25-11-2007, 11:05 AM
எங்கள் ஊரில் நிறைய குடும்பங்கள் இலங்கையிலிருந்து அகதியாக வந்தவர்கள் என்று தெரிய வந்த போது,ஆச்சர்யமாவும்,மகிழ்ச்சியாவும் இருந்தது.அவர்களில் சிலர் என் நண்பர்கள்.எங்களோடு கலந்து,தங்களது தேவைகளை நிறைவேற்றுபவர்களாகும்,சிலர் வசதியானவர்களாகும் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களது பேச்சு வழக்கு மறைந்து விட்டது.அதனால் பழைய ஆட்கள் சொல்லிதான் தெரிந்தது.
இதை கொண்டு சென்ற விதம்,தமிழகம் அரவணைக்கும் என்று நம்பிக்கையில் வரும் நம் சகோதரர்கள் படும் பிரச்சனைகளை புரிய வைத்தது. நன்றியும்- பாரட்டுகளும் சிவா அண்ணா.

lolluvathiyar
25-11-2007, 11:28 AM
கன்னீரை வரவழைக்க வைத்த பதிப்பு, பாவம் இருபக்கமும் பிரச்சனை இருகிறது. அவர்களை அடித்த கூலிகாரர்களும் கூட ஒரு வேலை சோத்துக்கு லாட்டரி அடிப்பவர்கள்தான். குரைந்த கூலி என்று இவர்களுக்கு வேலை கொடுத்தால் பிரச்சனைஆகிறது. மாறாக நம்மூர்காரர்களுக்கும் இலங்கை அகதிகளுக்கும் ஒரே கூலி கொடுத்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது.

நான் சின்ன வயசாக இருக்கும் போது எனக்கு தெரிந்த அனைத்து பள்ளிகளிலும் இலங்கை அகதிகளை தங்க வைத்திருந்தார்கள் (எம் ஜி ஆர் காலம்). அப்ப எங்கப்பா தோடத்துல இருந்து காய்கறிகளை வெங்காய மூட்டை கட்டி என்னை அங்கு கூட்டி சென்றார். (இப்பொழுது அதிக முகாமகள் இல்லை).

அகதி முகாமில் இருப்பவர்களுக்கு உதவி மட்டும் செய்யாமல் அரசாங்கம் தற்காலிக வேலை போட்டு தரலாம். அல்லது தனியார் நிறுவங்களில் வேலை செய்ய ஏற்பாடு செய்து தரலாம். நிரைய பேர் வெளியில வேலை தேட தயங்கராங்க.

யவனிகா
25-11-2007, 11:49 AM
மனதைத் தொடும் சம்பவம். நேரில் பார்ப்பது போன்ற எழுத்து நடை.
மனதார உதவ முயன்றிருக்கிறீர்கள் அண்ணா, என்ன செய்வது...சில விசயங்களுக்கு யாரை நோவது?
கோயமுத்தூரிலும் பூளுவாம்பட்டியில் ஒரு காட்டுக்குள் இதே போன்ற அகதி முகாமைப் பார்த்து அவர்களுடன் பேசியிருக்கிறேன்.ஏண்டா இங்க வந்தோம் என்று அலுத்துக் கொண்டார்கள்.உங்களின் இந்தப் பதிப்பைப் படிக்கும் போது அவர்களின் நினைவு தான் வருகிறது அண்ணா.

சிவா.ஜி
25-11-2007, 11:50 AM
ஆனால் அவர்களது பேச்சு வழக்கு மறைந்து விட்டது.அதனால் பழைய ஆட்கள் சொல்லிதான் தெரிந்தது.
இதை கொண்டு சென்ற விதம்,தமிழகம் அரவணைக்கும் என்று நம்பிக்கையில் வரும் நம் சகோதரர்கள் படும் பிரச்சனைகளை புரிய வைத்தது. நன்றியும்- பாரட்டுகளும் சிவா அண்ணா.

சரிதான் நேசம்.இன்று அவர்கள் நம்மைப்போல பேச தொடங்கிவிட்டார்கள்.ஆனால் இந்த கூலிப் பிரச்சனை பெரிதாக இருந்ததென்னவோ உண்மைதான்.நாளடைவில் அவர்களும் பல்வேறு தொழில் தொடங்கி சகஜமாய் வாழத்தொடங்கிவிட்டார்கள்.

சிவா.ஜி
25-11-2007, 11:55 AM
பாவம் இருபக்கமும் பிரச்சனை இருகிறது. அவர்களை அடித்த கூலிகாரர்களும் கூட ஒரு வேலை சோத்துக்கு லாட்டரி அடிப்பவர்கள்தான். குரைந்த கூலி என்று இவர்களுக்கு வேலை கொடுத்தால் பிரச்சனைஆகிறது. மாறாக நம்மூர்காரர்களுக்கும் இலங்கை அகதிகளுக்கும் ஒரே கூலி கொடுத்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது.

அகதி முகாமில் இருப்பவர்களுக்கு உதவி மட்டும் செய்யாமல் அரசாங்கம் தற்காலிக வேலை போட்டு தரலாம். அல்லது தனியார் நிறுவங்களில் வேலை செய்ய ஏற்பாடு செய்து தரலாம். நிரைய பேர் வெளியில வேலை தேட தயங்கராங்க.
அதேதான் வாத்தியார்.கூலிப்பிரச்சனை இருவருக்கும்தான்.ஒரே கூலி கொடுத்திருந்தால் பிரச்சனையே இல்லை. ஆனால் இப்போது மாறிவிட்டது.முகாமும் இல்லை, அகதிகளும் இல்லை.அரசாங்கம் எதுவும் பெரிதாஅகச் செய்வதாகத் தெரியவில்லை.அவர்களாகவே தங்களின் தொலைத்த வாழ்வை மீட்க முயற்சித்து வெற்றியடைந்து வருகிறார்கள்.

சிவா.ஜி
25-11-2007, 12:05 PM
மனதைத் தொடும் சம்பவம். நேரில் பார்ப்பது போன்ற எழுத்து நடை.
ஏண்டா இங்க வந்தோம் என்று அலுத்துக் கொண்டார்கள்.உங்களின் இந்தப் பதிப்பைப் படிக்கும் போது அவர்களின் நினைவு தான் வருகிறது அண்ணா.

என்ன செய்வது யவனிகா..அதுவரை வாழ்ந்த வாழ்க்கை கண்முன்னே காணாமல் போய்விட்டபிறகு கிடைத்ததை ஏற்றுக்கொள்லவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்களானாலும்,தங்களின் பழைய வாழ்க்கையின் தாக்கம் இல்லாமல் இருக்குமா.அதை நினைத்துதான் வருந்துவார்கள்.

இதயம்
25-11-2007, 12:41 PM
படித்ததில் மனம் கனத்துப்போனது. தனக்கு உணவில்லை என்றாலும் நம்மிடம் அடைக்கலம் வந்தவர்களை உபசரித்து பாதுகாப்பது நம் குணம் என்று சொல்லிக்கொள்ளும் நம் தமிழகத்தில் இப்படி நடப்பது வேதனை தான். சிவா இதை கதையாக எழுதியிருந்தாலும் அவர் நேரில் உணர்ந்தவற்றின் பிரதிபலிப்பாக தான் இந்த கதையின் பெரும்பான்மையான சம்பவங்கள் தெரிகின்றன. தமிழகத்திற்கு அகதிகளாக வரும் இலங்கையர்களின் எல்லோரின் நிலையும் இப்படி இருப்பதில்லை என்பதை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன்.

அதற்கு சாட்சியாக என் ஊரை சொல்லலாம். எங்கள் ஊர் கடற்கரையை ஒட்டிய ஊர் என்பதால் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த போரில் அகதிகளாக வந்தவர்களில் முஸ்லீம்கள் மட்டும் பிரிந்து வந்து, நாங்கள் வாழும் பகுதிகளிலேயே கிடைத்த இடங்களில் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு வாழத்தொடங்கினார்கள். சில ஆண்டுகளில் அவர்கள் எங்களோடு உறவுகளோடு உறவுகளாக கலந்து வாழும் நிலை வெகு இயல்பாக ஏற்பட்டது. அகதிகளாக வந்த முஸ்லீம்கள் உள்ளூர் முஸ்லீம்களுடன் திருமண தொடர்பும் வைத்துக்கொண்டனர். அந்த உறவு படர்ந்து வளர்ந்ததன் மூலம் வியாபாரம், வெளிநாடு போன்ற பொருளீட்டும் பணிகளிலும் ஈடுபட்டனர்.

இன்று இலங்கை முஸ்லீம்கள் உறவிலும், செல்வத்திலும் எந்த குறையுமில்லாமல் மிகவும் சந்தோஷத்துடன் எங்கள் ஊரில் வசித்துவருகிறார்கள். அவர்களின் பேச்சு வழக்கு இங்கு வந்த பிறகு என்ன தான் மாறினாலும் ஒரு சில சொற்கள் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதை சரியாக காட்டி விடும் (உதா: பேசுதல்-கதைத்தல், கெதி-வேகம் போன்றவை). அவர்களை நாங்கள் கொழும்புகாரர்கள் வீடு என்று தான் அழைப்போம். இதில் பெரும் வேதனை என்னவென்றால் இவர்களோடு ஒன்றாக வந்த மற்ற மதத்தவர் உள்ளூர் இந்துக்களுடன் ஒன்றமுடியாமல் அல்லது புறக்கணிக்கப்பட்டு ஒரு தனித்தீவாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இன்றும் வறுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

இப்போது இலங்கையை பொறுத்தவரை அரசுடன் முஸ்லீம்களுக்கான பிரச்சினை குறைவென்றாலும் அப்படி வந்தால் ஏற்று அவர்களுடன் சங்கமிக்கும் நிலை முஸ்லீம்களிடம் இருக்கிறது. இது ஏன் மற்றவர்களிடம் இல்லை என்பது விடை தெரியா வினா..! அதே போல் இந்துக்களையும் மற்றவர்களை போல் ஏற்று அரவணைக்கும் நிலை முஸ்லீம்களிடம் இல்லாததும் கசக்கும் உண்மை. தமிழ் என்றும் தமிழன் என்று வாய் கிழிய பேசினால் மட்டும் போதாது. அந்த உணர்வை மனதில் இருத்தி அவர்கள் நல்வாழ்விற்கு அனைவரும் உதவவேண்டும் என்பது தான் என் ஆதங்கம்..!!

சுகந்தப்ரீதன்
25-11-2007, 12:51 PM
வாழ்த்துக்கள் சிவா அண்ணா..அருமையான தங்களின் பதிவிற்க்கு..!சில நிகழ்வுகளை படிக்கையில் தமிழன் என்று பெருமைபடக்கூட முடிவதில்லை என்னால்..!அப்படிதான் உங்கள் பதிவை பார்த்தாலும் எனக்குள்..! அம்மா அடித்ததென்று அப்பாவிடம் செல்லும் குழந்தையை அப்பாவும் அடித்தால் அந்த பிஞ்சு குழந்தை என்னவாகும் வேதனையால் வெம்பிபோகும்... அப்படிதான் இருக்கிறது அகதியாய் அயல்தேசத்துக்கு வந்து அவதிபடும் அப்பாவிகளின் நிலை...! ஆண்களின் நிலையையும் குழந்தைகளின் நிலையையும் கூறிவிட்டீர்கள்..அகதியாய் வரும் பெண்களின் நிலை இதைவிட மோசமாக இருக்கிறது நம் தமிழ்நாட்டில்..! அவர்களின் வறுமையையும் இயலாமையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சமூக அவலங்கள் இயல்பாக நடக்கின்றன..ஒருவனுக்கு ஒருத்தி என்று பொய்யான தமிழ் பண்பாடுடைய இதே தமிழ்நாட்டில்..! ரமேஸ்வரம் மண்டபம் முகாம்களில் இந்த நிகழ்வுகள் எளிதாக காணக்கிடைப்பவை..! நன்றாக வாழ்ந்தவர்கள்தான்...என்னபாவம் செய்தார்கள்..இப்படிபட்ட கொடுமைகளை அனுபவிக்க வேண்டியிருக்கு இவர்களுக்கு...?வீட்டிற்க்கு அழைத்து விருந்து வைக்காவிட்டாலும் விரட்டியடிக்காமலாவது இருக்கலாம் அல்லவா...! யாரை குறை சொல்வதென்று தெரியவில்லை..யார்மீது கோவப்படுவதென்றும் புரியவில்லை..!வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் தமிழகம்..தன் தமயனை பற்றி மட்டும் இன்னும் சிந்திக்காமால் இருப்பது ஏனோ..? கூடியவிரைவில் எல்லாவற்றிர்க்கும் நல்லமுடிவு கிடைத்தால் நலம்..!

அன்புரசிகன்
25-11-2007, 01:04 PM
உருக்கமாக இருந்தது. அடித்தவர்களை பிழைகூற முடியாது. காரணம் அன்றாடம் கூலிவாங்குபவர்களுக்கு ஒருநாள் இல்லை என்றாலும் வீடில் அடுப்பு எரியாது....

இந்த விடையத்தில் எக்காரணத்திலும் இந்திய அரசை பிழைகூறிவிடமுடியாது... ஒரு முறை இந்தியா டுடே இல் வாசித்தது. ஒரு நாளுக்கு 10 20 என்ற கூலிக்கு செல்லும் இந்திய தமிழன் இருக்க ஒரு நாளுக்கு ஒரு குடும்பத்திற்கு அரிசி மற்றும் உணவுகளுடன் 50 ரூபா பணமும் வழங்குகிறது தமிழக அரசு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.... பசிக்கும் போது அது இந்தியன் இலங்கயன் என்று அந்த பசி பார்க்காதே....

சில உறவுகள் அங்கு உள்ளனர். தம் பிள்ளைகளை சென்னைப்பகுதியில் ஆங்கில மொழிமூலக்கல்வியில் விட்டிருக்கிறார்கள். பிள்ளைகளுக்கு பிரச்சனை இல்லை. இப்போது அவர்கள் கூட என் பேச்சை வினோதமாக பார்க்கிறார்கள் என்றால் பாருங்களேன். (1995 ல் அவர்களை வன்னியில் கண்டிருக்கிறேன் 12 வருடத்தில் எத்தனை மாற்றம்)

இந்த திரியுடன் சம்பந்தம் அற்றது. இருந்தாலும் எனக்கு தெரிந்ததை கூறுகிறேன்.

இதயம்....

இலங்கை முஸ்லீம்களுக்கு இலங்கை அரசால் பிரச்சனை இல்லை என்று கூறிவிட முடியவே முடியாது. ஆனால் மூடிமறைக்கப்படுகிறது. தம் அரசியல் நோக்கிற்காய் அரசுடன் சேர்ந்து நாடகம் ஆடும் சில முஸ்லீம் அமைச்சர்களால் தான் இந்த நிலை. தவிர கிழக்குமாகாண கிராமப்புற நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள். புரியும்......

தமிழர்களிலும் இவ்வகையான அமைச்சர்கள் உண்டு. ஆனால் அவர்களின் பருப்பு வேகவில்லை....

சிவா.ஜி
25-11-2007, 01:38 PM
சிவா இதை கதையாக எழுதியிருந்தாலும் அவர் நேரில் உணர்ந்தவற்றின் பிரதிபலிப்பாக தான் இந்த கதையின் பெரும்பான்மையான சம்பவங்கள் தெரிகின்றன. தமிழகத்திற்கு அகதிகளாக வரும் இலங்கையர்களின் எல்லோரின் நிலையும் இப்படி இருப்பதில்லை என்பதை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன்.


மிகச்சரிதான் இதயம் பெரும்பான்மை இப்படி இருந்துவிட்டால் அது கதையாகாது.தனிப்பட்ட சம்பவம்தான் கதையாகிறது.அந்த வகையில் என்னை பாதித்த சம்பவத்தைதான் கதையாக்கியிருக்கிறேன்.அதே சமயம் எங்கள் பகுதிக்கு வந்தவர்களில் யாருமே இஸ்லாமியர் இல்லை எல்லோரும் இந்துக்களே.இப்போது அவர்கள் நிலை மாறிவிட்டது.அனைவரோடும் கலந்து வாழத்தொடங்கிவிட்டார்கள்.முகாமும் இல்லை.ஆனாலும் அரசாங்கத்தின் அதிகாரிகள்தான் எந்த துரும்பையும் கிள்ளிப் போட மறுக்கிறார்கள்.

சிவா.ஜி
25-11-2007, 01:44 PM
..என்னபாவம் செய்தார்கள்..இப்படிபட்ட கொடுமைகளை அனுபவிக்க வேண்டியிருக்கு இவர்களுக்கு...?வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் தமிழகம்..தன் தமயனை பற்றி மட்டும் இன்னும் சிந்திக்காமால் இருப்பது ஏனோ..? கூடியவிரைவில் எல்லாவற்றிர்க்கும் நல்லமுடிவு கிடைத்தால் நலம்..!
உங்கள் கேள்விக்கான பதில்தான் இந்தக்கதையில் வரும் பிரச்சனை சுகந்த்.வாத்தியார் சொன்னதைப் போல அன்றாடக் கூலிக்காரன் அவன் வயிற்றுக்கு பிரச்சனை வரும்போது சொந்த சகோதரனையே காப்பாற்ற முடியாது.அதே சமயம் தனக்கு இவர்களால் பாதிப்பில்லை என்று தெரிந்து கொண்டால் நிச்சயம் நன்றாக பழகுவார்கள்.இது நான் கண்டது.இருப்பினும் நம் சகோதரர்களின் கண்ணீர் துடைக்கப்படவேண்டுமென காத்திருக்காமல் நிறுத்தப்படவேண்டுமென முயல வேண்டும்.

சிவா.ஜி
25-11-2007, 01:47 PM
இந்த விடையத்தில் எக்காரணத்திலும் இந்திய அரசை பிழைகூறிவிடமுடியாது...
.[/COLOR]

இது இந்திய அரசின் பிழையில்லை அன்பு.இங்கிருக்கும்சில அரசு அதிகாரிகளின் அலட்சியப்போக்கு மற்றும் எதிலும் ஆதாயம் தேடும் அவர்களின் குணம்.இதனால் அனைவருமே பாதிக்கப்படுகிறார்கள்.

ஓவியன்
25-11-2007, 02:54 PM
சிவா!

நல்ல நடை எழுத்துக் கேர்வை சம்பவங்களை மனக் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது மனதாரப் பாராட்டுகிறேன் சிவா..!!. ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்தக் கதையின் கரு வலிமையானதாகத் தோன்றவில்லை. மற்றவர்கள் கிண்டலடிப்பது நிஜமாயிருந்தாலும் படிக்க என்று துடிப்புள்ள எந்த சிறுவர்களும் அவர் பெற்றோர்களும் அதனை ஒரு பெரிய விடயமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள், அப்படி எடுத்துக் கொள்ளவும் கூடாது. மாறாக அதனை ஒரு சவாலகவே எடுப்பார்கள், எடுக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை வளப்படும், வசப்படும்.

"அகதி" என்ற வலி நன்கு உணர்ந்தவன் நான், வேற்று நாட்டினுள் அகதியாக செல்லாவிட்டாலும் சொந்த நாட்டிலேயே அகதி என்ற பெயரில் அல்லற்பட்டவன், அப்படி அல்லற்பட்டவர்களை பார்த்துள்ளேன், பராமரித்துள்ளேன். சொந்த இடத்தை, சொந்தங்களை, சொத்துக்களை தொலைத்து உயிரை மட்டும் கையிலே பிடித்துக் கொண்டு உயிருக்காக இடம் பெயர்வது கொடுமையிலும் கொடுமை. அந்த துன்பத்தை உணர்ந்து வரிகளில் கொணர்ந்து மனம் வருந்திய சிவா.ஜிக்கு நன்றிகள் கோடி......

அமரன்
25-11-2007, 03:04 PM
சிவா... உங்கள் தமிழில் காட்சிகளை கண்முன் கொண்டுவருவதை விஞ்சி நிகழ்விடங்களுக்கு எம்மை அழைத்துச்செல்லும் வகையில் அமைந்த சரளமான நடை. உங்கள் எழுத்து திறமை பற்றி அதிகம் பேசத்தேவை இல்லை. நன்கறிந்த ஒன்றுக்கு எதற்கு விளக்கமும் விளம்பரமும். அதனால் கருவை மட்டும் கொஞ்சம் அலசுகின்றேன்..

ஈழத்தமிழ் தெனாலி திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டதா என்றால் இல்லை என்றே சொல்வேன். ஈழத்தின் வானொலி நாடகங்கள், மேடை நாடகங்களில் பயன்படுத்தப்பட்டதே தெனாலித்தமிழ். பேச்சுவழக்கில் அந்ததமிழை நான் பயன்படுத்துவதில்லை.. யார் பயன்படுத்தியும் நான் கேட்டதுமில்லை. ரேடியோ சிலோன் கேட்ட அன்பர்களுக்கு அது வெட்ட வெளிச்சமாகி இருக்கும்.. ஏன் அப்படத்திற்கு உதவி செய்த அப்துல்ஹமீட் பேசும்போது அப்படியா பேசுகின்றார். திரைப்படம் என்னும்போது நாடகத்தில் சாயல் நுழைக்கப்பட்டுவிட்டது. சுருக்கமாகச் சொன்னால்...கறுப்புவெள்ளைப் படங்களுக்கும் தற்போதைய படங்களும் உரையாடலில் எத்துணை வேறுபாடு. தெனாலியில் ஈழத்தமிழ் கறுப்புவெள்ளை காலத்துக்குரியது..

இந்திய முகாம்களில் ஈழத்தமிழ் ஏதிலிகள் நிலை, இரண்டும் கெட்டான் நிலை. அங்கே இரு வகையானவர்கள் வாழ்கின்றனர். பெரும்பான்மை முகாம்வாசிகளில் உறவினர்கள் வெளிநாடுகளில் இருப்பதில்லை. வெளிநாட்டு உறவினர்களை கொண்டவர்களே முகாமை விட்டு வெளியேறி வீடுகளில் வசிக்கின்றனர். அதிலிம் பலர் காவல்துறையினருக்கு அஞ்சியே காலத்தை ஓட்டுகின்றனர். விசாப்பிரச்சினை அதற்கான முக்கியகாரணி. குடியகழ்வு, குடிவரவு சட்டங்களுக்கமைய ஒருவர் தஞ்சமடைந்த முகாமைவிட்டு வெளியேற வேண்டுமாயின் நீங்கள் சொன்னதுபோல உள்ளூர்வாசி (கொஞ்சம் பிரபல்யமானவர்) பொறுப்புக்கையெழுத்து கொடுக்கவேண்டும்..

முகாமில் இருப்போருக்கு பல்வேறுபட்ட பிரச்சினைகள். ஆண்களுக்கு வேலைப்பிரச்சினை. அங்குள்ள ஆண்களுக்கு காவல்துறையினரால் பிரச்சினை. அங்குள்ள ஆண்களால் அங்குள்ள பெண்களுக்கு சில சிக்கல்கள். அவர்களுக்கு சற்றும் சளைக்காது காவல்துறையினரும் பெண்களுடன் சில்மிஷங்கள் புரிவதுண்டு. எல்லாரும் என்று நான் சொல்லவில்லை. குழந்தைகளின் மருத்துவ வசதிகள், இதர தேவைகளுக்காக இவைகளை மனமொப்பாதே அனுசரித்துப்போகும் குடும்பத்தலைவர்கள், குடும்பத்தலைவிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அனுசரித்து என்பதை விட உள்ளக்கிடைக்கைகளை வெளிக்காட்டாது உள்ளுக்குள் மருகுகின்றனர். அவர்களின் ஒரே நம்பிக்கை தேசத்தின் விடியல்.

"இங்கிருந்து படுவதை விட ஊரிலில் போய் சவதுமேலென சிலர் தாயகம் போகிறார்களே.. நீங்கள் ஏன் அப்படி நினைக்கவில்லை என்று கேட்ட எனக்கு கிடைத்த பதில் என்னை பெருமிதப்படவைத்தது.. " எங்கட மண்ணில எங்களால நிம்மதியாய் இருக்க ஏலாமல் போட்டுது. எங்கட பிள்ளையள் இருக்கவேண்மெண்டு நாங்கள் ஆசைப்படுறம். அவைக்காகத்தான் இஞ்சை இருக்கிறம்" என்ன ஒரு நம்பிக்கை. தேசத்தின் வைகறையின் அக்கறைமுகிதியால் வானொலியே கதியென இருப்போர் எத்தனைபேர்..

பாராட்டுக்கள் சிவா.. எல்லாத்துக்கும்

சிவா.ஜி
26-11-2007, 04:23 AM
நன்றி ஓவியன்.சிறுகுழந்தைகளின் மனதில் ஒரு விடயம் பதிந்து விட்டால் அதை மாற்றுவது மிக்கக் கடினம்.நான் அனுபவத்தில் கண்டது.என்னுடைய உறவில் ஒருவருடைய மகள் முதலில் சேர்ந்த பள்ளியின் ஆசிரியையின் கண்டிப்போ அல்லது அவரையோ அவளுக்கு பிடிக்காதக் காரணத்தால் அந்தப் பள்ளிக்கு போகவே முடியாது என மறுத்துவிட்டாள்.கட்டாயப்படுத்தி அனுப்பியபோது காய்ச்சல் வந்துவிட்டது.பிறகு வேறு வழியில்லாமல் வேறு பள்ளியில் சேர்த்தார்கள். இந்தக் கதையில் அவர்களுக்கு வேறு பள்ளியில் சேர இயலாத காரணத்தால் பள்ளிக்குப் போவது நிறுத்தப்பட்டது.ஆனால் நீங்கள் சொல்வதைப்போல படிக்கவேண்டுமென்ற தாகம் உள்ளவர்கள் கண்டிப்பாக அதைத் தொடரவே செய்வார்கள்.அதேபோல இந்த நிஷாந்தியும் தொடர்ந்திருக்கலாம்.இந்த நிகழ்வு அந்த சமயத்துக்கானது.மீண்டும் நன்றி ஓவியன்.

சிவா.ஜி
26-11-2007, 04:34 AM
மிகத் தெளிவான அலசலலுடன் உங்கள் ஆதங்கமும் சேர்ந்த பின்னூட்டத்திற்கு மனம் நிறைந்த நன்றி அமரன்.அந்த சமயத்தில் இலங்கைத் தமிழென்பது தெனாலியில் மட்டுமே காட்டப்பட்டிருந்தது.அதனால்தான் அதைக் குறிப்பிட்டிருந்தேன்.சில சொற்பதங்கள் புன்னகைமன்னன் திரைப்படத்திலும் பயன் படுத்தப்பட்டிருந்தது.ஆனால் ஓரளவுக்கு சரியான உரையாடல்கள் மணிரத்னம் தன்னுடைய கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் உபயோகப்படுத்தபட்டிருந்தது.ஆனால் தெனாலியின் தமிழ் நாடகத்தமிழ் என்பது நீங்கள் எனக்குத்தந்த புதிய செய்தி.நன்றி அமரன்.
முகாமில் வசிப்போரில் பலருக்கு வெளிநாட்டு உறவுகள் இல்லையென்றாலும் அடிக்கடி நிறைய பேருக்கு வெளிநாட்டிலிருந்து பார்சல்கள் வரும்.பார்த்திருக்கிறேன்.அதேபோல பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை நான் தொடவில்லை.அதைச் சொல்லி சங்கடப்படுத்த விரும்பவில்லை.ஆனால் அதை உணர்ந்தவன்,கண்ணால் பார்த்தவன் என்ற வகையில் வேதனை படுகிறேன்.மனதுக்கு ஆறுதல் தரும் செய்தியென்றால்...தற்சமயம் இலங்கை சகோதரர்கள் தங்கள் அகதியென்ற அவலத்தை விடுத்து எங்களோடு ஒருவராக வாழ்ந்து வருகிறார்களென்பதுதான்.

இதயம்
26-11-2007, 04:41 AM
ஈழத்தமிழ் தெனாலி திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டதா என்றால் இல்லை என்றே சொல்வேன். ஈழத்தின் வானொலி நாடகங்கள், மேடை நாடகங்களில் பயன்படுத்தப்பட்டதே தெனாலித்தமிழ். பேச்சுவழக்கில் அந்ததமிழை நான் பயன்படுத்துவதில்லை.. யார் பயன்படுத்தியும் நான் கேட்டதுமில்லை. ரேடியோ சிலோன் கேட்ட அன்பர்களுக்கு அது வெட்ட வெளிச்சமாகி இருக்கும்.. ஏன் அப்படத்திற்கு உதவி செய்த அப்துல்ஹமீட் பேசும்போது அப்படியா பேசுகின்றார். திரைப்படம் என்னும்போது நாடகத்தில் சாயல் நுழைக்கப்பட்டுவிட்டது. சுருக்கமாகச் சொன்னால்...கறுப்புவெள்ளைப் படங்களுக்கும் தற்போதைய படங்களும் உரையாடலில் எத்துணை வேறுபாடு. தெனாலியில் ஈழத்தமிழ் கறுப்புவெள்ளை காலத்துக்குரியது..


நீங்கள் சொல்வது உண்மை என்றே உணர்கிறேன் அமரன். இந்த கருத்தை என்னுடைய பெரும்பாலான இலங்கை நண்பர்களும் என்னிடம் பிரதிபலித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் நான் கண்டவரை அவர்களிடமும் தெனாலி கமலின் பேச்சு சாயல் கொஞ்சமும் தெரியவில்லை. அப்துல் ஹமீது இலங்கைத்தமிழின் சாயலை கொஞ்சமும் வெளிப்படுத்தாத ஒரு அறிவிப்பாளர். அவரின் ஆலோசனையின் பெயரில் தான் அப்படத்தின் வசனம் எழுதப்பட்டு கமல் நடித்தார். இதில் இலங்கை (பேச்சுத்)தமிழை கமல் வெளிப்படுத்துகிறார் என்ற கோணத்தில் பார்க்காமல், கமலுக்கு இலங்கை (பேச்சுத்)தமிழ் என்ற பெயரில் நாடகத்தமிழை இப்படியெல்லாம் வித்தியாசமாக பேசத்தெரியும் என்று அவர் திறமையை நிரூபிக்கும் முயற்சி என்றே அதை பார்க்கிறேன். அதில் கமல் சிறப்பாக வெற்றியும் பெற்றிருந்தார் (இல்லாததை உண்மை போல் காட்டுவது தான் உண்மையான சினிமா). அவ்வை சண்முகியில் அவர் நினைத்திருந்தால் ஒரு சாதாரண பெண்ணைப்போல் வேடம் பூண்டிருக்கலாம். ஆனால், அதில் ஒரு வயதான அய்யராத்து பட்டு (நன்றி: யவனிகா) மாமியைப்போன்ற தோற்றம் காட்ட காரணம் அவரின் அபார நடிப்புத்திறனுக்கு தீனி போட குரல் மாற்றம், தோற்ற மாற்றம், மொழி நடை மாற்றம், உடல் மொழி மாற்றம் ஆகியவை தேவைப்பட்டது. அதனால், அதை அவர் விரும்பி ஏற்றார். அப்படித்தான் தெனாலி கமலும். இன்றைய காலகட்டத்தில் இங்கிருக்கும் இலங்கை நண்பர்களை அவர் மொழி கொண்டு அடையாளம் காணுவது மிகவும் கடினமாக இருக்கிறது. அவர்களின் கனிவான பேச்சும், தமிழகத்தைச்சேர்ந்தவர்களைப்போன்ற தோற்றமும் தான் நமக்கு ஆவலை ஏற்படுத்தி, கேட்டு உறுதிபடுத்தச்சொல்கிறது.

நேசம்
26-11-2007, 05:07 AM
எங்கள் ஊரில் நிறைய குடும்பங்கள் இலங்கையிலிருந்து அகதியாக வந்தவர்கள் .

எங்கள் ஊரில் இருக்கும் குடும்பங்களில் ஒரு குடும்பம் கூட முஸ்லிம் இல்லை.பலவேறு தளங்களில் அவர்கள தங்களை வளர்த்து கொண்டாலும் உறவு முறையில் பிண்தங்கியுள்ளனர்.அதுதான் நிதர்சன உண்மை

ஆதி
26-11-2007, 06:46 AM
சிவா.ஜி, ஒரு கணமான கதையை லேசாக சொல்லி இருக்குறீர் பாரம் குறையாமல்.. என் மனதுக்குள் ஒரு சின்ன நெருடல் உண்டு.. சங்க வளர்த்த மதுரையிலேயோ.. என் மக்கள் அல்லலுறும் ஈழத்திலேயோ பிறக்காது போய்விட்டேனே என.. இப்பொழுது நான் ஈழத்தில் பிறந்திருக்க வேண்டியவனல்லவா ? என்கிற பெருங்கேள்விதான் எனக்குள் எதிரொலிக்கிறது.. நானும் என் மக்களுக்காக எதாவது செய்திருப்பேன்.. ஈழப்போரில் இறந்தவர் பட்டியலிலாவது என் பெயர்வந்திருக்கும்..

கதையில் /என் மனைவி/ என்று சொன்னவன்.. என்ற இடத்தில் கலங்கிவிட்டேன்..

என் நண்பர்கள் சொல்லுவார்கள் நான் கோபக்காரனென

என் அம்மா சொல்லுவார் நான் முரடனென.

என் உடன்பிறவா தங்கையர் சொல்லுவர் அண்ணன் "Sentimental type" என..

என் மனதுக்குள் இருப்பவன் சொல்லுவான் நீ கோழையென..

காரணம் தனிமையில் யாரும் அறியாமல் அழுவது எனக்கும் அவனுக்கும்தானே தெரியும்..

இந்த கதை மீண்டும் என் மனதுக்குள் இருப்பவனால் என்னை கோழை என வர்ணிக்க வைத்துவிட்டது.. அப்படி அழுதேன்..

இந்த மாதிரியான இலக்கியங்கள்தான் காலகாலங்களையும் கடந்து வாழும் இலக்கியங்கள்.. இந்த கதையும் அதில் ஒன்று என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை..

வாழ்த்துக்கள்...

-ஆதி

சிவா.ஜி
26-11-2007, 07:11 AM
எத்தனை மென்மை உங்கள் உள்ளத்தில் ஆதி?பெருமையாக இருக்கிறது.எல்லோரும் அல்லலுறும் நம் சகோதர்களுக்கு இங்கிருக்கும் நாம் ஏதாவது செய்யவேண்டுமென்றுதான் நினைப்பார்கள்.ஆனால் நீங்களோ....பிரமிப்பாய் இருக்கிறது உங்களின் மேன்மையான எண்ணம் கண்டு.அவர்களோடொருவராய் பிறக்காமல் போனோமே என்ற உங்கள் வருத்தம் கண்டு கண்கள் கலங்குகின்றன.கவலை வேண்டாம் ஆதி நிச்சயம் நம் சகோதரர்களுக்கு ஒரு விடியல் வரும்.சந்தோஷம் மீளும்.நம்பிக்கையோடு காத்திருப்போம்.நன்றி ஆதி.

lolluvathiyar
26-11-2007, 09:25 AM
முஸ்லீம்கள் மட்டும் பிரிந்து வந்து, நாங்கள் வாழும் பகுதிகளிலேயே கிடைத்த இடங்களில் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு வாழத்தொடங்கினார்கள்
உள்ளூர் முஸ்லீம்களுடன் திருமண தொடர்பும் வைத்துக்கொண்டனர்.

இதில் பெரும் வேதனை என்னவென்றால் இவர்களோடு ஒன்றாக வந்த மற்ற மதத்தவர் உள்ளூர் இந்துக்களுடன் ஒன்றமுடியாமல் அல்லது புறக்கணிக்கப்பட்டு ஒரு தனித்தீவாக வாழ்ந்து வருகிறார்கள்.


நன்பரே நான் சொல்வதை தவறாக நினைக்க வேண்டாம். மதத்தை தாக்குவதாக நினைக்கவேண்டாம். இலங்கையிலிருன்து வந்த அகதிகளுடன் திருமன உறவுகள் வைத்து கொள்ளும் அளவுக்கு பரன்த மனபான்மை உன்மையில் பாராட்ட கூடியதுதான். ஆனால் அது ஏன் ஹிந்து மதத்தினருக்கு இல்லை என்று சொல்ல வேண்டாம்.

ஹிந்துகள் அவ்வாறு திருமன செய்து கொள்ளவில்லை என்பதால் அவர்கள் பெருந்தன்மை இல்லாதவர்கள் என்று கருத முடியாது.

ஒவ்வொரு இனங்களுக்கு ஒரு வகை குணம் உண்டு இது தான் சிறந்த குணம் என்று சொல்லமுடியாது. இங்கு சாதி என்று ஒன்று இருகிறது. மேலும் இலங்கை தமிழர்கள் தமிழர்கள் என்ற பாசம் அனுதாபம் நம் மக்களிடையே இருக்கும், அதற்க்கு உதவி செய்யலாம், திருமனம் என்று வரும்போது ஒரே மொழியானாலும் நாடு வேறு அல்லவா? ஒரே நாட்டில் மதம் சாதி மொழி என்று பிரிந்து இருக்கும் போது மொழி ஒற்றுமைக்கா வேறு நாட்டு பிரஜைகளை எப்படி திருமனம் செய்ய முடியும்?

இஸ்லாமியர்கள் கொள்கை வேறு, முஸ்லீம் அடையாளம் முதல் பிறகுதான் நாட்டு அடையாளம். அதில் தவறு இல்லை, ஆனால் ஹிந்துகள் செய்வது தவறு இல்லை. இது விருப்பம் பொருத்து அமைவது. இ ந்த செயலை குற்றும் சொல்வது சரியல்லஅதே போல் இந்துக்களையும் மற்றவர்களை போல் ஏற்று அரவணைக்கும் நிலை முஸ்லீம்களிடம் இல்லாததும் கசக்கும் உண்மை.இதுவும் தவறல்ல, ஒருவருக்கு நாம் உதவி செய்யும் போது அதை வைத்து அவரை திருமனம் உறவுக்கு அழைக்கலாமா? அவர்கள் மறுக்க முடியாத சங்கடத்தை ஏற்படுத்த கூடாது.தமிழ் என்றும் தமிழன் என்று வாய் கிழிய பேசினால் மட்டும் போதாது.


இலங்கை மட்டுமல்ல வங்கதேசம் நேப்பாளில் நாடுகளிருந்து வருடா வருடாம் ஏழ்மை பட்டினி பொருக்காமல் நிரைய பேர் அகதிகளாக இந்தியாவுக்கு வருகிறார்கள். நாளை பாக்கிஸ்தானிலிருந்து ஏதோ காரனத்தினால் முஸ்லீம் மக்கள் அகதிகளாக கூட நாம் உதவிகள் செய்ய வேண்டும்.
அதற்காக திருமன உறவு செய்தால் தான் மனிதாபிமானம் உனர்ச்சி என்று கூறுவது ஏற்கதக்கது அல்ல. அது அவரவர் விருப்பு வெருப்பு

உதவி வேறு வாழ்கை முழுவது சேர்ந்து வாழ்வது வேறு இரண்டையும் தொடர்பு படுத்த கூடாது. புரிந்திருக்கும் என்று நினைகிறேன்.

நேசம்
26-11-2007, 09:48 AM
வாத்தியார் சொல்வது போல் சாதி கட்டமைப்பு தான் இந்துக்கள் இலங்கை அகதிகளிடமிருந்து திருமண உறவு வைத்து கொள்ள தடுக்கிறது.இது தப்பா சொல்ல முடியாது.முஸ்லிமகள் கூட உடனடியாக வைத்து கொள்வதில்லை.அவர்கள் உறவு வைத்து கொள்ள பல வருடங்கள் எடுக்கும் என்பது தான் உண்மை.

சிவா.ஜி
26-11-2007, 12:15 PM
வாத்தியார் சொல்வது போல் சாதி கட்டமைப்பு தான் இந்துக்கள் இலங்கை அகதிகளிடமிருந்து திருமண உறவு வைத்து கொள்ள தடுக்கிறது.இது தப்பா சொல்ல முடியாது.முஸ்லிமகள் கூட உடனடியாக வைத்து கொள்வதில்லை.அவர்கள் உறவு வைத்து கொள்ள பல வருடங்கள் எடுக்கும் என்பது தான் உண்மை.

ஆரம்பக் காலங்களில்தான் நேசம் அப்படி இருந்தது.இப்போது நிறைய மாறிவிட்டது.எனக்குத் தெரிந்தே நிறைய திருமணங்கள் நடந்திருக்கின்றன.சந்தோஷமாகவே இருக்கிறார்கள்.இதில் காதல் திருமணங்களும் உண்டு.

நேசம்
26-11-2007, 07:46 PM
.இதில் காதல் திருமணங்களும் உண்டு.

காதலுக்கு ஏது தடையா இருக்கும்.அதனாலே தானெ இதயம் முதல் நிங்கள் உள்பட எல்லோரும் காதலுக்கு ஒ போடுறிங்க

மலர்
26-11-2007, 08:54 PM
காதலுக்கு ஏது தடையா இருக்கும்.
ஹீ...
ஜாதி இருக்குமுங்கோ...

மலர்
26-11-2007, 09:13 PM
சிவா அண்ணா..
உங்களின் பதிவு படிக்கும் போது வேதனையாயிருக்கு அண்ணா....
உண்மையை சொன்னால்
இதுவரை நான் முகாமை பார்த்ததே இல்லை..

அங்குள்ள நம் சொந்தங்கள்..
எத்தனை கனவுகளோடு ஆசையோடு தம் சொந்த மண்ணில் வாழ்ந்திருப்பார்கள்...
என்ன பாவம் செய்தார்கள்.. இப்படியான கொடுமைகளை கஷ்டங்களை அனுபவிக்க...

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்..
நம் சகோதரர்களுக்கும் அழகான விடியல் உண்டு...

அமரன்
26-11-2007, 09:20 PM
கமல் ஒரு உன்னதமான நடிகன். சற்றும் மிகையாகாது இழையளவு குறையாது பாத்திரங்களுக்கு உயிரூட்டுபவர். யதார்த்தங்களை திடைப்படத்தில் உள்ளடக்கி சினிமாவை கலையாக்க நினைப்பவர்களில் ஒருவர். அவர் ஈழத்தமிழை அழகாக பேசியது, அதிலும் நீளமான காட்சி ஒன்றில் சரளமாக பேசியது வியப்பில் ஆழ்த்தியது..

இந்தியாவில் இருந்த இருமாதங்களில் இந்திய வியாபாரந்லையங்களில் எனது சக உறவினர்களை நீங்கள் கேரளாவா என கேட்டனர். கேரளா மக்கள் பேசும் தமிழின் சாயலில் அவர்கள் தமிழ் இருந்துச்சாம்.. எனது தமிழைக் கேட்கவேண்டாம்.. கூடுதலான நேரம் என்னுடன் அளவளாவியவர்களுக்கு தெரியும் எனது தமிழ்.. இதை ஏன் சொல்கின்றேன் என்றால் ஈழத்து தமிழ் பேச்சின்முடிவில் நீட்டம் குறைவாக இருக்கும். ஓபோட்டு முடியும். சில சொற்கள் வேறுபடும்..

சரி விடுங்க..எப்படின்னாலும் தமிழ் தமிழ்தானே.. அதன் இனிமையில் குறைவில்லையே..

மலர்
26-11-2007, 09:26 PM
ஈழத்து தமிழ் பேச்சின்முடிவில் நீட்டம் குறைவாக இருக்கும். ஓபோட்டு முடியும். சில சொற்கள் வேறுபடும்..
ம்ம் உண்மைதான்..
நான் முதலில் இனியாவோட பேசும் போது அழகான தமிழ் நிறைய புரியலை.. என்னிடம் பேசியதை விட எனக்காக அவங்க மொழிபெயர்த்தது தான் அதிகம்...சரி விடுங்க..எப்படின்னாலும் தமிழ் தமிழ்தானே.. அதன் இனிமையில் குறைவில்லையே..

இது ஓக்கே.... :icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

அமரன்
26-11-2007, 09:29 PM
ம்ம் உண்மைதான்..
நான் முதலில் இனியாவோட பேசும் போது அழகான தமிழ் நிறைய புரியலை.. என்னிடம் பேசியதை விட எனக்காக அவங்க மொழிபெயர்த்தது தான் அதிகம்...

ஹி...ஹி...உனக்கு யார் பேசுவதுதான் புரியும்.. அதை விடு..மற்ற நண்பர்கள் பேசும்போது புரிந்தது.. நீ பேசும்போது எனக்குப்புரியலையே ஏன்..

மலர்
26-11-2007, 09:38 PM
ஹி...ஹி...உனக்கு யார் பேசுவதுதான் புரியும்.. அதை விடு..மற்ற நண்பர்கள் பேசும்போது புரிந்தது.. நீ பேசும்போது எனக்குப்புரியலையே ஏன்..

இன்னாது.. புரியலைய்யா...
யாருக்கின..
தோ பாரு அண்ணாத்தே
சொல்லுதத ஒழுங்கா காதுல வாங்கலன்னா
அப்பாலே பேஜாரா போயிரும்..
இன்னாம கீது நம்ம தமிழு,,,
அத போயி புரியலைங்கிய நைனா...

நேசம்
27-11-2007, 02:54 AM
ஹீ...
ஜாதி இருக்குமுங்கோ...

காதலுக்கு தடை நிறைய உண்டு.ஆனால் காதலிப்பவர்களுக்கு...!

சிவா.ஜி
27-11-2007, 04:22 AM
சரி விடுங்க..எப்படின்னாலும் தமிழ் தமிழ்தானே.. அதன் இனிமையில் குறைவில்லையே..

அதேதான் அமரன்.தமிழ் தமிழ்தான்.அதை யார் பேசக்கேட்டாலும் செவிக்கு இனிமையாக இருக்கிறது.சென்னையில் ஒரு நேர்முகத்தேர்வில்,ஒரு அமெரிக்கர் அழகான தமிழில் வணக்கம் சொல்லி,நலம் விசாரித்ததைக் கேட்டதும் சொல்லவொண்ணா மகிழ்ச்சி ஏற்பட்டது.

சிவா.ஜி
27-11-2007, 04:24 AM
சிவா அண்ணா..
உங்களின் பதிவு படிக்கும் போது வேதனையாயிருக்கு அண்ணா....
என்ன பாவம் செய்தார்கள்.. இப்படியான கொடுமைகளை கஷ்டங்களை அனுபவிக்க...
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்..
நம் சகோதரர்களுக்கும் அழகான விடியல் உண்டு...

வேதனை தற்காலிகமானது என்று நினைத்துக்கொள்வோம்.சாதனையில் நாளை நல்ல பொழுது புலருமென்று உறுதியோடிருப்போம்.
நன்றி மலர்.

mukilan
30-06-2008, 09:37 PM
இவ்வளவு நாளாக மன்றம் வராமல் போனதில் நான் படிக்காமல் போன முத்துக்கள் எத்தனையோ. புலம்பெயர்ந்த வாழ்வென்பதில் கொஞ்சமேனும் சோகம் இருக்கிறதென்பதுதான் நிஜம். என் பெற்றோரையும் உற்ற என் நண்பர்களையும் விட்டு விட்டு பணம் செய்வதற்காக நான் இங்கே இருக்கிரேன் என்றால் நான் அதற்கு கொடுக்கும் விலை அது. ஆனால் விருப்பமேயில்லாமல் ஆனிவேர் விட்டிருக்கும் ஒரு மரத்தைப் பெயர்த்து நடுவதில் உள்ள சோகம் அனுபவித்தவர்கட்குத்தான் புரியும். அதிலும் வேற்று நாட்டில் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கி வாழந்து வருவது என்பது இன்னமும் சோகமானது. மனதில் வலியை ஏற்படுத்திய பதிவு அண்ணா.

முதன்முதலில் கனடாவிற்கு சென்னையில் இருந்து கொழும்பு வழியாகப் பயணிக்கிறேன். லண்டன் விமான நிலையத்தில் இறங்கி 5 மணி நேரக் காத்திருப்பிற்குப் பின் எனது பயணம். அப்பொழுது ஈழத்திலிருந்தே கனடா வரும் ஒரு குடும்பமும். பார்க்கிறேன். சினேகமுடன் வார்த்தைப் பறிமாற்றங்கள். கனடா இறங்கிய பின்னர் அடுத்த நாள் காலையில்தான் பல்கலைக்கழகம் செல்லும் விமானம். என்ன செய்வது என்று தெரியாமல் விமான நிலையத்திலேயே இருந்துவிடலாமா என எண்ணுகிறேன். புரியாத அந்த ஊரில் நான் தமிழன் என்ற ஒரே காரணத்தினால் அந்த சகோதரரும் சகோதரியும் டொரண்ட்டோவில் அவரகள் வீட்டிற்கு அழைக்கிறார்கள். அடுத்தநாள் அதிகாலையில் விமானம் என்பதால் அன்போடு மறுத்து விட்டேன். தொலைபேசி எண் கொடுத்து உதவி வேண்டுமானால் தொடரவும் என்று கூறிச்சென்றார். இன்னமும் அந்தக்குடும்பத்துடனான என் உறவு தொடர்கிறது.

தமிழால் உள்ளங்களை இணைக்க முடியும். நம் சகோதரர்களை வன்முறை உணர்வோடு தாக்குவது எனக்கு எந்த விதத்திலும் சரியெனத் தெரியவில்லை. அப்படியாயின் ராஜ்தாக்கரே நம்மை மும்பை நகரில் தாக்குவது நியாயமா? ஆதரவு என்று நம்மைத்தேடி வரும் நம் ஈழத்துச் சொந்தங்களுக்கு நாம்தான் வசதி செய்து தரவேண்டும்.

கண்முன்னே அந்த வலியைக் காட்டிய உங்கள் படைப்பிற்கு மிக்க நன்றி அண்ணா. சமீபத்தில் ஒரு வலைப்பதிவில் கண்டேன். அகதியாய் வாழ்ந்து பாருங்கள் அந்த வலி புரியுமென. அப்படி ஒரு வலியினை வாழாமலே புரிய வைத்து விட்டீர்கள் அண்ணா.

aren
01-07-2008, 04:33 AM
நல்ல ஆழமான கதை. ஆனால் முடிவு என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதது. படிப்பு என்பது மிகவும் முக்கியம். பள்ளியில் சக மாணவிகள் கேலி செய்கிறார்கள் என்று பள்ளிக்கு அனுப்பாமல் .......

இது மனதில் ஒட்டவில்லை.

மறத்தமிழன்
01-07-2008, 04:50 AM
நல்ல ஆழமான கதை. ஆனால் முடிவு என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதது. படிப்பு என்பது மிகவும் முக்கியம். பள்ளியில் சக மாணவிகள் கேலி செய்கிறார்கள் என்று பள்ளிக்கு அனுப்பாமல் .......

இது மனதில் ஒட்டவில்லை.
உங்கள் மனதில் ஒட்டவேண்டுமென்பதற்காக முடிவை மாற்ற அது கற்பனைக் கதையில்லையே. நிஜமே அதுதானே...!

மறத்தமிழன்
01-07-2008, 04:53 AM
அருமையான கதை.
அனைவரது கருத்து பகிர்விற்கும் நன்றிகள் கோடான கோடி,
சென்ற வருடம் முழுமையாக மூன்று மாதங்களை தமிழத்தில் கழித்தவன் என்கிற முறையில் சொல்லுகிறேன்,தமிழகம் எனக்கு தந்தது வலிகளை அல்ல,வடுக்களை.
வேண்டாம் விட்டுவிடுவோம், சில விடயங்கள் கதைத்தால் விரிசல்தான் வரும்.
வசதியோடும்,விசாவோடும் வந்த எனக்கே இவ்வளவென்றால், நினைத்துப் பார்க்கவே முடியாமலிருக்கிறது முகாம் வாழ்க்கையை.
உண்மையாக,சத்தியமாகச் சொல்கிறேன் ஈழத்திலிருந்து செத்தாலும் சாவேனே தவிர, அகதியாய் தமிழகம் வரேன்.

இது என் கருத்துக்கள் அல்ல, காயங்கள்,

அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள்...!

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நல்ல வரிகள் சிவா.

அப்படி என்னதான் வடு? உதாரணத்திற்கு சிலதை சொல்லுங்களேன். சொல்லாமல் ஊகத்திற்கு விடுவது உங்கள் நம்பகத்தன்மைக்கு நல்லதல்ல.

சிவா.ஜி
01-07-2008, 12:31 PM
கண்முன்னே அந்த வலியைக் காட்டிய உங்கள் படைப்பிற்கு மிக்க நன்றி அண்ணா. சமீபத்தில் ஒரு வலைப்பதிவில் கண்டேன். அகதியாய் வாழ்ந்து பாருங்கள் அந்த வலி புரியுமென. அப்படி ஒரு வலியினை வாழாமலே புரிய வைத்து விட்டீர்கள் அண்ணா.

மிக உணர்ச்சிகரமான பின்னூட்டம் முகிலன். நிலத்தால் பிரிந்திருந்தாலும் உளத்தால் ஒன்று பட்ட சகோதரர்கள் அல்லவா. நீங்கள் சொன்னதைப்போல முடிந்தவரை ஒவ்வொருவரும் உதவ முயற்சிக்க வேண்டும்.
நன்றி முகிலன்..

சிவா.ஜி
01-07-2008, 12:35 PM
நல்ல ஆழமான கதை. ஆனால் முடிவு என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதது. படிப்பு என்பது மிகவும் முக்கியம். பள்ளியில் சக மாணவிகள் கேலி செய்கிறார்கள் என்று பள்ளிக்கு அனுப்பாமல் .......

இது மனதில் ஒட்டவில்லை.

இல்லை ஆரென்...குழந்தைகளின் உலகம் வேறு. அந்த பெண்குழந்தையின் அப்போதைய சூழல் குழப்பமானதாக இருந்தது. அன்னையும் இல்லை...தந்தையும் தானும் அகதிகளாய்....உடனே மொழியை மாற்றிக்கொள்ளும் பக்குவம் இல்லை...அதனால்தான் சற்றே மிரண்டுவிட்டாள். அத்தனை ஆசையாய் படிக்கப்போன குழந்தை நின்று விடுகிறேன் என்று சொல்கிறாளென்றால்...அத்தனைக்கு அவள் மனம் குழம்பிப்போயிருக்கும்.

பின்னூட்டத்திற்கு நன்றி ஆரென்.

சிவா.ஜி
01-07-2008, 12:51 PM
சென்ற வருடம் முழுமையாக மூன்று மாதங்களை தமிழத்தில் கழித்தவன் என்கிற முறையில் சொல்லுகிறேன்,தமிழகம் எனக்கு தந்தது வலிகளை அல்ல,வடுக்களை.

உண்மையாக,சத்தியமாகச் சொல்கிறேன் ஈழத்திலிருந்து செத்தாலும் சாவேனே தவிர, அகதியாய் தமிழகம் வரேன்.வடுக்களைத் தந்தது உண்மையாக இருக்கலாம் கிஷோர். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால்...எங்குதான் இந்த வடுக்கள் நமக்குப் பரிசாகக் கிடைப்பதில்லை சொல்லுங்கள்? இந்தியர், இலங்கையர், நேபாளி, பங்களாதேஷி...இந்த நாட்டினர் அனைவருக்கும் மிக அதிக நாடுகளில் அளிக்கப்படும் வலிகள் எத்தனை தெரியுமா? வெளிச்சொல்லாமல் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருப்பவர்கள்தான் அதிகம்.

நீங்கள் சொல்லலாம் அதெல்லாம் வேற்று மொழி வேறு இனமுள்ள நாடுகள் என்று. தமிழருக்கு தமிழகத்திலேயே இத்தனை வேதனையா என்று கேட்பீர்கள். அரசாங்கத்திலேயே ஸ்திரமில்லாத கொள்கை வைத்திருக்கிறார்கள் இலங்கை உரிமைப் போரைப்பற்றி. தினசரி செய்திகளில் உண்மை குறைவாகவும் பொய்களை அதிகமாகவும் பரப்பி நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறார்கள்.

நான் இங்கே காட்டியிருக்கும் நிகழ்வு நடந்து 15 வருடங்கள் ஆகிறது. தற்சமயம் அங்கு முகாமுமில்லை யாரும் அகதிகளாகவும் இல்லை. எங்களோடு ஒருவராய் நிம்மதியாய் வாழ்ந்து வருகிறார்கள். அங்கிருக்கும் குடும்பங்களிலேயே சம்பந்தம் வைத்துக்கொண்டு சந்தோஷமாய் இருக்கிறார்கள். வாத்தியார் சொன்னதைப்போல அன்றாடங்காய்ச்சிகளுக்கு ஆதரவே தினமும் கிடைக்கும் கூலிதான்...அதைப் பறிக்க வந்தவர்கள் என்று தவறாக நினைத்ததன் விளைவுதான் அந்த ஆத்திர சண்டைக்குக் காரணம்.

இலங்கை சகோதரர்களுக்கு...ஏதோ கிடைப்பது கிடைக்கட்டும்...அதிகப்படியான சிரமம் என்றாலும் அதைப் பார்க்காமல் வேலை செய்வோம் என்ற எண்ணம். அவர்கள் வரை அப்படி நினைத்தது நியாயம். ஆனால் அவர்களால் வேலையை இழந்தவர்கள் ஆத்திரப்படுவதும் நியாயம்தானே?

எது எப்படியோ...நிச்சயம் இன்றைய நிலைமை வெகுவாக மாறி இருக்கிறது. நீங்கள் அங்கு அகதியாய் இருந்தீர்களா...இல்லை சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தீர்களா தெரியாது. அப்படிச் சுற்றிப் பார்க்கச் சென்றவர் என்றால் அத்தனைக் கொடுமைக்கு ஆளாகி இருக்க மாட்டீர்கள். ஏனென்றால் நம் மன்ற சகோதரர்களும் அங்கு சென்று இருந்து வந்திருக்கிறார்கள்.

அகதியாய் இருந்து அந்த வலிகளைப் பெற்றீர்கள் என்றால்...அப்படிச் செய்த அவர்களுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

இளசு
11-07-2008, 01:27 PM
அன்பு சிவா

இந்தக்கதை இரு நாட்களுக்குமுன் ஒரே மூச்சில் வாசித்தேன் -
அமரன், அன்பு, ஓவியன்,ஆதி உள்ளிட்டோரின் ஆழமான பின்னூட்டங்களுடன்..

உடனே தூங்கிவிட்டேன் .

(துக்கம், சோகம், இயலாமையில் வரும் மனபாரம் - அழுத்தினால்
உடனே தூங்கிவிடுவது என் தற்காப்பு வரம்..)


நேற்று பொங்கிப் பொங்கி பலவரி பின்னூட்டம் தட்டச்சினேன்.
லாக்-அவுட் ஆகி அழிபட்டது..

இதோ மீண்டும் என் பதிவு முயற்சி -

சொந்தத் தம்பி -தங்கைகளுடன் சொத்துக்கு மல்லு கட்டுவதும்
பங்காளியை வரப்புக்கு வெட்டும் வன்ம மனமும்
இயலாதவனை கொத்தடிமையாய் அடக்கும் மிருக குணமும்
பெண்ணை சமமாய் மதிக்கத் தயங்கும் கீழ் எண்ணமும்

என்ன பெருமைப் பட இருக்கிறது எனக்குள்ளே???

வாழவந்த சகோதர-சகோதரிகளை இப்படி நாம் நடத்துவதில் என்ன ஆச்சரியம்?

சமத்தேநீர் விருந்து வைக்கும் அவலம் இன்றும் நம்மிடம்..

என்ன சொல்ல?

கருவில் குற்றம் - நம் சமூகத்தில்..

மனிதர் அனைவரும் மிருகம் - நிஜத்தில்..

நிஜம் பீரீடும்போதெல்லாம் சாயம் கலைந்து துடிக்கிறேன்..

சிவா.ஜி
12-07-2008, 12:46 PM
உங்கள் வரிகளில் தெரியும் வலியை உணர்கிறேன் இளசு. யார்பக்கம் நியாயம் என்று பார்க்காமல், அனைத்தையும் இழந்து வந்தவர்களை அன்போடு பார்த்தாலே போதும். மற்ற இடங்களில் எப்படி என எனக்குத் தெரியாது. ஆனால் எங்கள் பகுதியில் தற்சமயம் அகதியாய் வந்தவர்களெல்லாம் எங்களில் ஒருவராய் இணைந்துவிட்டார்கள்.

நன்றி இளசு.

MURALINITHISH
26-08-2008, 09:57 AM
சில நேரங்களில் நமக்கே சரியான பாதுகாப்பு இல்லாத போது அகதிகளுக்கு பாதுகாப்பா என்ற எண்ணம் தோன்றும் ஆனால் அவர்களின் நிலைமையை படிக்கும்போது (பார்த்தது இல்லை) மனம் கனக்கிறது சிறு பிஞ்சு படிக்கு கூட முடியாத நிலையை படிக்கும் போது மனம் பதறுகிறது

vynrael
04-11-2020, 01:01 PM
сайт (http://audiobookkeeper.ru)сайт (http://cottagenet.ru)сайт (http://eyesvision.ru)сайт (http://eyesvisions.com)сайт (http://factoringfee.ru)сайт (http://filmzones.ru)сайт (http://gadwall.ru)сайт (http://gaffertape.ru)сайт (http://gageboard.ru)сайт (http://gagrule.ru)сайт (http://gallduct.ru)сайт (http://galvanometric.ru)сайт (http://gangforeman.ru)сайт (http://gangwayplatform.ru)сайт (http://garbagechute.ru)сайт (http://gardeningleave.ru)сайт (http://gascautery.ru)сайт (http://gashbucket.ru)сайт (http://gasreturn.ru)сайт (http://gatedsweep.ru)
сайт (http://gaugemodel.ru)сайт (http://gaussianfilter.ru)сайт (http://gearpitchdiameter.ru)сайт (http://geartreating.ru)сайт (http://generalizedanalysis.ru)сайт (http://generalprovisions.ru)сайт (http://geophysicalprobe.ru)сайт (http://geriatricnurse.ru)сайт (http://getintoaflap.ru)сайт (http://getthebounce.ru)сайт (http://habeascorpus.ru)сайт (http://habituate.ru)сайт (http://hackedbolt.ru)сайт (http://hackworker.ru)сайт (http://hadronicannihilation.ru)сайт (http://haemagglutinin.ru)сайт (http://hailsquall.ru)сайт (http://hairysphere.ru)сайт (http://halforderfringe.ru)сайт (http://halfsiblings.ru)
сайт (http://hallofresidence.ru)сайт (http://haltstate.ru)сайт (http://handcoding.ru)сайт (http://handportedhead.ru)сайт (http://handradar.ru)сайт (http://handsfreetelephone.ru)сайт (http://hangonpart.ru)сайт (http://haphazardwinding.ru)сайт (http://hardalloyteeth.ru)сайт (http://hardasiron.ru)сайт (http://hardenedconcrete.ru)сайт (http://harmonicinteraction.ru)сайт (http://hartlaubgoose.ru)сайт (http://hatchholddown.ru)сайт (http://haveafinetime.ru)сайт (http://hazardousatmosphere.ru)сайт (http://headregulator.ru)сайт (http://heartofgold.ru)сайт (http://heatageingresistance.ru)сайт (http://heatinggas.ru)
сайт (http://heavydutymetalcutting.ru)сайт (http://jacketedwall.ru)сайт (http://japanesecedar.ru)сайт (http://jibtypecrane.ru)сайт (http://jobabandonment.ru)сайт (http://jobstress.ru)сайт (http://jogformation.ru)сайт (http://jointcapsule.ru)сайт (http://jointsealingmaterial.ru)сайт (http://journallubricator.ru)сайт (http://juicecatcher.ru)сайт (http://junctionofchannels.ru)сайт (http://justiciablehomicide.ru)сайт (http://juxtapositiontwin.ru)сайт (http://kaposidisease.ru)сайт (http://keepagoodoffing.ru)сайт (http://keepsmthinhand.ru)сайт (http://kentishglory.ru)сайт (http://kerbweight.ru)сайт (http://kerrrotation.ru)
сайт (http://keymanassurance.ru)сайт (http://keyserum.ru)сайт (http://kickplate.ru)сайт (http://killthefattedcalf.ru)сайт (http://kilowattsecond.ru)сайт (http://kingweakfish.ru)сайт (http://kinozones.ru)сайт (http://kleinbottle.ru)сайт (http://kneejoint.ru)сайт (http://knifesethouse.ru)сайт (http://knockonatom.ru)сайт (http://knowledgestate.ru)сайт (http://kondoferromagnet.ru)сайт (http://labeledgraph.ru)сайт (http://laborracket.ru)сайт (http://labourearnings.ru)сайт (http://labourleasing.ru)сайт (http://laburnumtree.ru)сайт (http://lacingcourse.ru)сайт (http://lacrimalpoint.ru)
сайт (http://lactogenicfactor.ru)сайт (http://lacunarycoefficient.ru)сайт (http://ladletreatediron.ru)сайт (http://laggingload.ru)сайт (http://laissezaller.ru)сайт (http://lambdatransition.ru)сайт (http://laminatedmaterial.ru)сайт (http://lammasshoot.ru)сайт (http://lamphouse.ru)сайт (http://lancecorporal.ru)сайт (http://lancingdie.ru)сайт (http://landingdoor.ru)сайт (http://landmarksensor.ru)сайт (http://landreform.ru)сайт (http://landuseratio.ru)сайт (http://languagelaboratory.ru)сайт (http://largeheart.ru)сайт (http://lasercalibration.ru)сайт (http://laserlens.ru)сайт (http://laserpulse.ru)
сайт (http://laterevent.ru)сайт (http://latrinesergeant.ru)сайт (http://layabout.ru)сайт (http://leadcoating.ru)сайт (http://leadingfirm.ru)сайт (http://learningcurve.ru)сайт (http://leaveword.ru)сайт (http://machinesensible.ru)сайт (http://magneticequator.ru)сайт (http://magnetotelluricfield.ru)сайт (http://mailinghouse.ru)сайт (http://majorconcern.ru)сайт (http://mammasdarling.ru)сайт (http://managerialstaff.ru)сайт (http://manipulatinghand.ru)сайт (http://manualchoke.ru)сайт (http://medinfobooks.ru)сайт (http://mp3lists.ru)сайт (http://nameresolution.ru)сайт (http://naphtheneseries.ru)
сайт (http://narrowmouthed.ru)сайт (http://nationalcensus.ru)сайт (http://naturalfunctor.ru)сайт (http://navelseed.ru)сайт (http://neatplaster.ru)сайт (http://necroticcaries.ru)сайт (http://negativefibration.ru)сайт (http://neighbouringrights.ru)сайт (http://objectmodule.ru)сайт (http://observationballoon.ru)сайт (http://obstructivepatent.ru)сайт (http://oceanmining.ru)сайт (http://octupolephonon.ru)сайт (http://offlinesystem.ru)сайт (http://offsetholder.ru)сайт (http://olibanumresinoid.ru)сайт (http://onesticket.ru)сайт (http://packedspheres.ru)сайт (http://pagingterminal.ru)сайт (http://palatinebones.ru)
сайт (http://palmberry.ru)сайт (http://papercoating.ru)сайт (http://paraconvexgroup.ru)сайт (http://parasolmonoplane.ru)сайт (http://parkingbrake.ru)сайт (http://partfamily.ru)сайт (http://partialmajorant.ru)сайт (http://quadrupleworm.ru)сайт (http://qualitybooster.ru)сайт (http://quasimoney.ru)сайт (http://quenchedspark.ru)сайт (http://quodrecuperet.ru)сайт (http://rabbetledge.ru)сайт (http://radialchaser.ru)сайт (http://radiationestimator.ru)сайт (http://railwaybridge.ru)сайт (http://randomcoloration.ru)сайт (http://rapidgrowth.ru)сайт (http://rattlesnakemaster.ru)сайт (http://reachthroughregion.ru)
сайт (http://readingmagnifier.ru)сайт (http://rearchain.ru)сайт (http://recessioncone.ru)сайт (http://recordedassignment.ru)сайт (http://rectifiersubstation.ru)сайт (http://redemptionvalue.ru)сайт (http://reducingflange.ru)сайт (http://referenceantigen.ru)сайт (http://regeneratedprotein.ru)сайт (http://reinvestmentplan.ru)сайт (http://safedrilling.ru)сайт (http://sagprofile.ru)сайт (http://salestypelease.ru)сайт (http://samplinginterval.ru)сайт (http://satellitehydrology.ru)сайт (http://scarcecommodity.ru)сайт (http://scrapermat.ru)сайт (http://screwingunit.ru)сайт (http://seawaterpump.ru)сайт (http://secondaryblock.ru)
сайт (http://secularclergy.ru)сайт (http://seismicefficiency.ru)сайт (http://selectivediffuser.ru)сайт (http://semiasphalticflux.ru)сайт (http://semifinishmachining.ru)сайт (http://spicetrade.ru)сайт (http://spysale.ru)сайт (http://stungun.ru)сайт (http://tacticaldiameter.ru)сайт (http://tailstockcenter.ru)сайт (http://tamecurve.ru)сайт (http://tapecorrection.ru)сайт (http://tappingchuck.ru)сайт (http://taskreasoning.ru)сайт (http://technicalgrade.ru)сайт (http://telangiectaticlipoma.ru)сайт (http://telescopicdamper.ru)сайт (http://temperateclimate.ru)сайт (http://temperedmeasure.ru)сайт (http://tenementbuilding.ru)
tuchkas (http://tuchkas.ru/)сайт (http://ultramaficrock.ru)сайт (http://ultraviolettesting.ru)