PDA

View Full Version : எப்போது வருவாய் நீ?



rocky
24-11-2007, 08:51 AM
எப்போது வருவாய் நீ?
என் மனக் காயங்களின் மருந்தாக!
என் இதயத் தீயில் மழையாக!
என் தனிமைச் சிறையின் துணையாக!
என் தடுமாறும் அறிவின் தூணாக!
என் இருண்ட வானில் நிலவாக!
என் புதிய பிறப்பின் தாயாக!
என்னைப் புரிந்து நடக்கும் தாரமாக!
எப்போது வருவாய் நீ?
உன் வருகை உறுதியெண்பதை நானறிவேன், ஆனால்
அதன் தாமதத்தை தாங்கமுடியேன்.
வருபவளையென்னி கனவு கானும்
நிலையில் நானில்லை இப்பொழுது
சென்றவளையென்னி மனம் வாடும்
நிலையில் தானிருக்கிறேன், ஆகையால்
சீக்கிரம் வந்துவிடு, தொலைந்த
என் சிரிப்பைத் தேடிக்கொடு.

ஆதி
24-11-2007, 09:00 AM
குறிஞ்சி - தலைவன் கூற்று

காலையும், பகலும், கையறு மாலையும்,
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப்
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்
மா என மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றுலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே.


இக்குறுந்தொகைப் பாடல் போற் உளது இக்கவியும்

வாழ்த்துக்கள் ராக்கி..

-ஆதி

சிவா.ஜி
25-11-2007, 04:44 AM
நீண்டநாள் மன்றம் வராதது இந்தக் கவலையினால்தானா..கவலைவேண்டாம் சகோதரா நிச்சயம் வருவாள்...நீ நினைத்தை தருவாள்.அழகான கவிதை.வாழ்த்துகள் ராக்கி.

ஓவியன்
25-11-2007, 08:50 PM
எண்ணம் எப்போது சீராக இருந்தால் நினைப்பது ஈடேறிடும் விரைவாக. ஆகவே ஆக்கத்துடன் எதிர்பார்த்திருங்கள் உங்கள் காயங்கள் ஆற்றவென தென்றலென வருவாள் பூங்கொடியாள்....

கவி வரிகளுக்கு என் வாழ்த்துக்கள், இன்னும் இன்னும் எழுதுங்க ராக்கி..!!

rocky
26-11-2007, 03:00 PM
குறிஞ்சி - தலைவன் கூற்று

காலையும், பகலும், கையறு மாலையும்,
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப்
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்
மா என மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றுலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே.


இக்குறுந்தொகைப் பாடல் போற் உளது இக்கவியும்

வாழ்த்துக்கள் ராக்கி..

-ஆதி

மிகக நன்றி நண்பரே. நான் கிறுக்கியதற்கு நீங்கள் எடுத்துக்காட்டிய குருந்தொகைப் பாடல் மிகவும் அருமையாக இருந்தது. உங்கள் வாழ்த்துக்களுக்கு மீண்டும் ஒருமுறை மிக்கநன்றி ஆதி அவர்களே.

rocky
26-11-2007, 03:01 PM
நீண்டநாள் மன்றம் வராதது இந்தக் கவலையினால்தானா..கவலைவேண்டாம் சகோதரா நிச்சயம் வருவாள்...நீ நினைத்தை தருவாள்.அழகான கவிதை.வாழ்த்துகள் ராக்கி.

மிகக நன்றி நண்பரே, நான் அதிக நாட்கள் மன்றத்திற்கு வராமல் இருந்த்தில்லை சிவா.ஜி அவர்களே, நிச்சயமாக தினமும் வருவேன், குறைந்த்து இரு நாட்களுக்கு ஒருமுறையாவது வருவேன். நான் பதிவுகளை இட்டுத்தான் அதிக நாட்களாகிவிட்டது. உங்களின் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

rocky
26-11-2007, 03:02 PM
எண்ணம் எப்போது சீராக இருந்தால் நினைப்பது ஈடேறிடும் விரைவாக. ஆகவே ஆக்கத்துடன் எதிர்பார்த்திருங்கள் உங்கள் காயங்கள் ஆற்றவென தென்றலென வருவாள் பூங்கொடியாள்....

கவி வரிகளுக்கு என் வாழ்த்துக்கள், இன்னும் இன்னும் எழுதுங்க ராக்கி..!!

ஓவியன் அவர்களின் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்களின் வாழ்த்து நிறைவேரட்டும். இன்னும் எழுத நிச்சயம் முயற்ச்சிக்கிறேன்.

பூமகள்
26-11-2007, 04:14 PM
ராக்கி..!
நீண்ட நாளுக்கு பின் உங்களின் கவி தரிசனம் கிடைத்திருக்கிறது.
விரைவில் மனம் போல் வாழ்வு அமைய வாழ்த்துகள்.

கவிதை அருமை. பாராட்டுகள். :)

ஆதவா
06-12-2007, 02:29 PM
எப்போது வருவாய் நீ?
என் மனக் காயங்களின் மருந்தாக!
என் இதயத் தீயில் மழையாக!
என் தனிமைச் சிறையின் துணையாக!
என் தடுமாறும் அறிவின் தூணாக!
என் இருண்ட வானில் நிலவாக!
என் புதிய பிறப்பின் தாயாக!
என்னைப் புரிந்து நடக்கும் தாரமாக!
எப்போது வருவாய் நீ?
உன் வருகை உறுதியெண்பதை நானறிவேன், ஆனால்
அதன் தாமதத்தை தாங்கமுடியேன்.
வருபவளையென்னி கனவு கானும்
நிலையில் நானில்லை இப்பொழுது
சென்றவளையென்னி மனம் வாடும்
நிலையில் தானிருக்கிறேன், ஆகையால்
சீக்கிரம் வந்துவிடு, தொலைந்த
என் சிரிப்பைத் தேடிக்கொடு.
ராக்கி,
கவிதை எழுதுவதில் நன்றாக முன்னேற்றம் உனக்கு. வாழ்த்துகள்.
ஒவ்வொரு காதலனும் நேரத்தைத் தின்றுகொண்டு காத்திருப்பது காதலில் ஒரு பகுதி. அந்தவகையில் இந்தக் கவிதையும்..
காத்திருத்தலில் அவசரத்தைக் காட்டுகிறது கவி.
முன்பை விட பல முன்னேற்றம் அடைந்துவிட்ட உமக்கு மீண்டும் வாழ்த்துகள்.