PDA

View Full Version : செம்மலர்கள்



ஆதி
24-11-2007, 08:24 AM
உவற்பு நறுமணத்துடன்
பூக்கிற இந்த மலர்கள்தான்
உலகத்தின் மணிமுடிகள்...

சிப்பிக்குள் வளராத
இந்த முத்துக்களை நூற்றுக்கொண்டு
எண்ணற்ற பேரரசுகள்
ஆட்சி அமைக்கின்றன.

இறுகிய பாறைகளையும்
பிளக்கிற வலிமை இந்த
உளிகளுக்கு இருந்தும்
பொருளாதார மண்சுவர்களை
உரசுகையில் வளைநதே போகின்றன.

காரணம்..
வறுமைக்கோட்டு
அச்சில்தான் இன்றும் பல
ஆட்சி சக்கரங்கள் சுழல்கின்றன..

கதிரவனை கறுக்கிவிடும்
நெருப்பு பிழம்புகளை
உள் வைத்திருப்பதால்தான்
வறுமை இமைகளால் இவர்
நெற்றிக் கண்கள் மூடப்படுகின்றன..

மழை முகூர்த்தங்களின்
கலப்பை கலவியில்
வேர்வைக் கருவூலங்களால்
தாய்மையாகிறாள் பூமிப்பெண்.

சாகுபடி பயிர்களின்
குருத்துக்களைக்
கட்புலனாகாத பூச்சிகள்
கொரித்து விடுதல் போல்
மகசூல்களை
மாமூல்கள் அரித்து விடுகின்றன.

சிலந்தி கூடுகளை
சமூகக் கூரைகளில்
துப்புரவு செய்கிற சமயங்களில்
ஒட்டைக் குச்சிகளாலும்
வரலாறு மாற்றம் பெற்றிருப்பதை
ஞாபகத்தில் வையுங்கள்.

உயிருள்ள ஏடுகளே!
குறித்துக்கொள்ளுங்கள்..

என்புக் கூடுகளில்
பல்குத்திக் கொள்கிற
வணிக சந்தைகளில்
வியர்வை புரட்சித் தோன்றும்
வாக்குகளுக்காகவே
ஞாபகம் வைத்திருந்த பெயர்கள்
வரலாற்றின் திருப்பு முனைகளில்
எழுதப்படும் அப்பொழுது..

-ஆதி

அமரன்
24-11-2007, 09:22 AM
மனச்சஞ்சலத்தில்
உங்கள் அடுக்கில் சஞ்சரிப்பதில்
மெல்லிழை சிக்கல்..

வரப்புயரவா...
உழைப்பூ மலரவா?

ஏரோடிப் பார்க்க
நேரம் இடைஞ்சலாக..
மீண்டும் வருகின்றேன்..
காலத்தை களவாடிக்கொண்டு.

தாமரை
24-11-2007, 10:25 AM
காயம் ஆறியதும்
வெம்மை குறைந்ததும்
சிவப்பு மலர்கள்
கறுக்கத் தொடங்கி விடுகிறதே
-உறைந்த மலர்கள்

ஆதி
25-11-2007, 08:49 AM
மனச்சஞ்சலத்தில்
உங்கள் அடுக்கில் சசஞ்சரிப்பதில்
மெல்லிழை சிக்கல்..

வரப்புயரவா...
உழைப்பூ மலரவா?

ஏரோடிப் பார்க்க
நேரம் இடைஞ்சலாக..
மீண்டும் வருகின்றேன்..
நேரத்தைக் களவாடிக்கொண்டு.

உங்கள் சஞ்சலமெலாம் தீர்ந்த உடன் படித்துவிட்டு பின்னூட்டம் தாருங்கள் அமர்.. உங்கள் உள்ள உறல்வு தீர என் பிராத்தனைக்கள்..

-ஆதி

ஆதி
25-11-2007, 09:00 AM
காயம் ஆறியதும்
வெம்மை குறைந்ததும்
சிவப்பு மலர்கள்
கறுக்கத் தொடங்கி விடுகிறதே
-உறைந்த மலர்கள்

வெளிரி நிறமிலக்களாம்
கறுத்த பாறையாகளாம்...
குமுறி மீண்டும்
விழியும் திறக்கையில்
வெம்மை இன்னும்
வன்மையாய் இருக்கும்..

பின்னூட்ட பாடலுக்கு நன்றி
-ஆதி

ஆதவா
06-12-2007, 02:37 PM
வறுமைக்கோட்டு
அச்சில்தான் இன்றும் பல
ஆட்சி சக்கரங்கள் சுழல்கின்றன..

காரணங்கள் விளைவதில்லை,. ஆக்கப்படுகின்றன. வறுமை ஒழிக்கப்பட்டிருக்கலாம் எப்போதோ, ஆட்சி சக்கரங்களுக்கு அடியில் சிக்கித் தவிப்பதுதான் இந்த வறுமை.

வறுமைக் கோட்டிற்கும்
வறுமை
மிக ஒல்லியாக..

கட்புலனாகாத பூச்சிகள்
கொரித்து விடுதல் போல்
மகசூல்களை
மாமூல்கள் அரித்து விடுகின்றன.

இங்கே இருக்கிறதே வறுமையின் முடிச்சு. அரிக்காமல் இருங்கள் அல்லது அழிந்து போங்கள்.

ஆதி, மொத்தமாக சொன்னால் வரலாறு நம்மால் படைக்கப் பட்டிருக்கிறது. அது நம் அசைவுக்கு ஏற்றபடி.
கவிதை எந்த அளவுக்கு வீரியம் சொல்கிறதோ அதே அளவு வார்த்தைகளும் வீரியம். நல்ல கவிதை ஆதி.

தொடருங்கள்..

ஆதி
06-12-2007, 04:57 PM
வறுமைக்கோட்டு
அச்சில்தான் இன்றும் பல
ஆட்சி சக்கரங்கள் சுழல்கின்றன..

காரணங்கள் விளைவதில்லை,. ஆக்கப்படுகின்றன. வறுமை ஒழிக்கப்பட்டிருக்கலாம் எப்போதோ, ஆட்சி சக்கரங்களுக்கு அடியில் சிக்கித் தவிப்பதுதான் இந்த வறுமை.

வறுமைக் கோட்டிற்கும்
வறுமை
மிக ஒல்லியாக..

கட்புலனாகாத பூச்சிகள்
கொரித்து விடுதல் போல்
மகசூல்களை
மாமூல்கள் அரித்து விடுகின்றன.

இங்கே இருக்கிறதே வறுமையின் முடிச்சு. அரிக்காமல் இருங்கள் அல்லது அழிந்து போங்கள்.

ஆதி, மொத்தமாக சொன்னால் வரலாறு நம்மால் படைக்கப் பட்டிருக்கிறது. அது நம் அசைவுக்கு ஏற்றபடி.
கவிதை எந்த அளவுக்கு வீரியம் சொல்கிறதோ அதே அளவு வார்த்தைகளும் வீரியம். நல்ல கவிதை ஆதி.

தொடருங்கள்..

நன்றி ஆதவா, நிச்சயமாய் இதுப்போல் கவிதைகள் நிறைய எழுதுகிறேன்.

-ஆதி