PDA

View Full Version : நிரஞ்சனுக்கு பிடித்த கவிதைகள்.



நிரன்
24-11-2007, 04:45 AM
சில கவிதைளும் சிலரின் கவிதைளும் என்னை கவர்ந்தது அதில் நித்தியா அக்காவின் கவி எனக்கு மிகவும் பிடித்தது அது உங்களுக்காக தமிழ் மன்றத்தில் சமர்ப்பிக்கிறேன் இதில் ஒலிவடிவம் என்னை மிகவும் கவர்ந்தது இதை பார்த்துத்தான் எனக்கும் ஒலிவடிவில் அமைக்கும் ஆசை வந்தது.......

http://bp0.blogger.com/_RDQ7R-gL4lI/Ri491tNGMPI/AAAAAAAAAA8/RtlzfzCBSzM/s320/love(7).jpg

ஒலிவடிவில்.. (http://www.acidplanet.com/components/embedfile.asp?asset=972719&T=4574)

என் போர்வைக்குள் - ஒரு
வெப்பம் இருந்தது.
தேகம் அசைவின்மையால்
செயலிழந்து கிடந்தது.

முழுநிலச் சந்திரனாய் அவன்
என் கண்கள் பார்த்து
காதல் செய்து கொண்டிருந்தான்.


பிஞ்சு விரல்களில் நுழைந்து -என்
எடை எண்ணிக் கொண்டிருந்தான்.

அவன் கரம் பட்ட
என் கன்னக்குழி
நாணத்தில் மெளனமாய் இருந்தது.

மரியாதைக்குரியவனின்
மலர்முகம் பார்க்குமுன்
கலைந்து போயிற்று என் கனவு...!

வெற்றுக் காகிதமும்
எழுதுகோலும் மாத்திரமே - என்
அருகாமையில் இருந்தது...!

புரிகிறது!

காய்ச்சலின் பிரதிபலிப்பு - என்
போர்வையின் வெப்பம் என்பதும்..
தலையின் அமுக்கம் -என்
தேகத்தின் செயலிழப்பு என்பதும்..

ம்..

என் சுகவீனம் கூட
காதல்வைத்துக் காத்திருக்கிறது.
நான் வருடிய மயிலிறகு என்னையும்
ஒரு நாள் வருடுமென்று...

ஒலிவடிவில்.. (http://www.acidplanet.com/components/embedfile.asp?asset=972719&T=4574)

நன்றி அக்கா..........................என்றும் நிரஞ்சன்

நிரன்
24-11-2007, 04:52 AM
http://photos1.blogger.com/blogger/4236/1731/320/ince.jpg

ஒலிவடிவில் (http://www.acidplanet.com/components/embedfile.asp?asset=801859&T=1895)

அந்த நாட்கள்
அதிகாலைச் சூரியனும்
அழகுநிலவும்
அணைத்துக் கொண்ட நாட்கள்

பசுமை தேடிய புற்களுக்கு
பால் வடித்த கண்ணீர்
மழையாகி உயிர்
நனைத்த நாட்கள்

வழி தொலைத்த பறவைகள்
கூடிக்களிப்படைந்து
வெறுமையான நாட்களுக்கு
இதயப் பூக்களால்
அர்ச்சனை புரிந்த நாட்கள்

சிதறி உடைந்த கண்ணாடித்
துண்டுகளிலே சிக்கிய
விம்பங்கள் போலே
அவன் வடித்த புன்னகைகளில்
என் முகம் புதைந்துபோன
நாட்கள் அவை

சந்தித்தபோதேல்லாம்
பேசமொழி மறந்து
விழிமொழி பேசியதுண்டு
அவ்வப்போது மெளனம்
துணைக்கு வந்துபோனதுண்டு..

ஏழு ஜென்ம வாழ்க்கை
அந்த நாட்களுடன்
ஐக்கியமானதுண்டு..

திசைமாறும் பறவைகள்தான்
எனினும் இதயத்தின்
பரிபாசைகளில்
இணைந்து போயின

உணர்வுகள் சிதைந்து
போனாலும்
சபலத்தால் தசை
பிசிங்கிப்போனாலும்
உயிர் மரித்து உடல்
வற்றிப்போனாலும்

காதல் கரைந்த
அந்த நாட்களின்
நினைவுகள்
காலத்தின் கைகளில்
என்றென்றும்
பசுமையாய் வாழும்.

ஒலிவடிவில் (http://www.acidplanet.com/components/embedfile.asp?asset=801859&T=1895)

நன்றி அக்கா............ என்றும் நிரஞ்சன்

நிரன்
24-11-2007, 05:06 AM
http://bp1.blogger.com/_RDQ7R-gL4lI/RkRLTSAmyBI/AAAAAAAAABU/UM5TXhiGALQ/s320/unbenanntgh.bmp

ஒலிவடிவில்.. (http://www.acidplanet.com/components/embedfile.asp?asset=975322&T=5917)

சொந்தம்...
பந்தம் - ஏன்
காதல்கூட தகுதி
பார்த்துத்தான் கனிகிறது..

மனசு மட்டும்
போதும் என்று தான்
நானும் கருதினேன்..
மயக்கும் அழகுதான்
நேசிக்கப்படுகிறது
என்பதைப் புரிந்து
கொண்டேன்..

அழகில்லைத்தான் - ஆனால்
நேசிக்கும் மனசுண்டு

ம்..
இதயம் இருட்டறையில்
இருப்பதால்தான் என்னவே..
காதலும் இருளையே
நேசிக்கிறது..
ஒலிவடிவில்.. (http://www.acidplanet.com/components/embedfile.asp?asset=975322&T=5917)

நன்றி அக்கா

இருட்டில் இறுக்கும் இதயங்கள் இருளையே
தேடுகின்றன காதலும் இதையே நாடுகிறது
ஆனால் சில காதல் மட்டும் ஒளியில்
வெளியாய் இறுக்கிறது ...............

அன்புடன் நிரஞ்சன்..

அமரன்
24-11-2007, 06:55 AM
சின்ன ஒரு துரும்பு
ஆழ்மனதை தூர்வாரும்போது
கவியூற்று பிறக்கிறது...

யாரும் தன்னுடன்
காதலை பகிர்ந்துகொள்ளவில்லையே
என்ற ஆற்றாமைத் துரும்பு
இக்கவியின் காரணம் போல்...

அழகோ அந்தஸ்த்ததோ
காதலை கட்டுப்படுத்தாது
நிரஞ்சன்...!

இது உங்கள் சொந்தக்கவிதை இல்லை ஆதலால் இலக்கியங்கள் புத்தகங்கள் பகுதிக்கு மாற்றுகின்றேன்.

பிந்தியபதிவு: நிரஞ்சனுக்கு பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் உங்கள் மூன்று கவிதைகளையும் ஒருங்கே இணைத்துள்ளேன்.

ஜெயாஸ்தா
24-11-2007, 06:57 AM
ஒலி வடிவில் கவிதை கேட்கும் போது ரசிக்கும்படி உள்ளது. காதல் அழகு பார்த்துதான் வருகிறது என்பதை வலியுறுத்தும் கவிதை.

ஓவியன்
25-11-2007, 08:31 PM
நிரஞ்சனுக்குப் பிடித்தவை...
நமக்கும் பிடிக்கிறது...
பகிர்தலுக்கு நன்றி நண்பரே..!!

நிரஞ்சன்...
கவி வரிகளுக்கு/குரலுக்கு சொந்தக்காரரான
உங்கள் அக்காவிற்கும்
நம் மன்றை அறிமுகப் படுத்தலாமே....