PDA

View Full Version : ஐந்து ரூபாய்க்கு ரெண்டு...யவனிகா
23-11-2007, 09:22 PM
விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அதுவும் வருடத்திற்கு ஒரு முறை, வாராது வந்த மாமணியாய் ...அந்த வருடம் கூடுதலாகவே இரண்டு மாதம் கிடைத்து. என் 4வயது மகனுடன் கோவை சென்று இறங்கினேன். அம்மா வீட்டில் தங்கை குடும்பம் மற்றும் அம்மாவுடன் ஜாகை. முதல் வாரம் பிரயாணக் களைப்பும்..பார்க்க வரும் உறவினர்களுக்கான விருந்தோம்பலுமாகக் கழிந்தது.

இரண்டாவது வாரம் சற்றே ஆசுவாசமாக இருந்தது. வழக்கம் போல, நானும் என் தங்கையும், திண்ணையில் உட்கார்ந்து வம்பளக்க ஆரம்பித்தோம். வீட்டின் முன் பக்கம் கதவின் இரு பக்கமும் உள்ள குதிரைத் திண்டில்...நாங்கள் அமர்ந்து விட்டோமென்றால், தெருவே களை கட்டப் போகிறது என்று அர்த்தம்.அந்தத் தெரு ஒரு கட் ரோடு. வசிக்கும் குடும்பங்கள் எல்லாருமே நல்ல பழக்கம். எனவே போக வருவோரை இழுத்து வைத்துப் ஊர்க்கதை பேசுவது. பூ, காய்கறிக் காரர்களிடம் பேரம் பேசி வாங்குவது என்று நேரம் போவதே தெரியாது.

காலை 10 மணி வாக்கில், ஒரு சைக்கிள்காரன் தெருவில் நுழைந்தான்.பெரிய தட்டிக் கூடை சைக்கிள் கேரியரில் கட்டப்பட்டிருந்தது. அவன் பின்னால் ஜோவென்று சிறுவர் கூட்டம். அருகில் அவன் வந்தவுடன் கூடைக்குள் என்னவென்று ஆச்சர்யம் தாளாமல் எட்டிப் பார்த்தோம்.

குட்டிக் குட்டியாய், பஞ்சடைத்த கலர் பந்துகள் போலக் கோழிக்குஞ்சுகள். கலர்க் கலராய்.., பொறித்து ஓரிரு நாட்கள் தான் ஆயிருக்கும் போல. மிளகுக் கண்ணும், கீச் கீச்சென்று சத்தமுமாக நெருக்கி அடித்துக் கொண்டிருந்தன. அத்தனை அழகு.

என் மகன் ஆரம்பித்தான். "அம்மா கோழிக்குஞ்செல்லாம் ஏன் கூடைக்குள்ள இருக்கு?"

"உன்னை மாதிரியே குறும்பு செஞ்சிருக்கும். புடிச்சி அடச்சி வெச்சிருப்பாங்க" என் தங்கை சொன்னாள்.

"போ சித்தி...நீ பொய் சொல்ற..எல்லாரும் விளையாட வாங்கறாங்க பாரு...எனக்கும் வாங்கிக் குடு"

இதற்குள் எதிர் வீட்டு பிரவீன் பச்சை ஒண்றும் சிவப்பு ஒன்றுமாக ரெண்டு கோழிகளை வாங்கி விட்டான். ஐந்து ரூபாய்க்கு ரெண்டு.

என் தங்கையின் இரண்டு வயது மகளும் அனத்த ஆரம்பித்தாள். "பெரிம்மா எனக்கும் கோழி வாந்திக் குது"

நான் சொன்னேன் ...�முதல்ல உங்கம்மாவை உன்ன நல்லா மேய்க்கச் சொல்லு...அப்புறம் கோழிய மேய்க்கலாம்.

"என்னை ஏண்டி இழுக்கற?" என்றாள் என் தங்கை.

இதற்குள் அண்ணன், தங்கை இருவரும் பாட்டியைப் பிடித்து, பணத்துடன் வெளியே இழுத்து வந்து விட்டார்கள்.
அம்மாவும், "பசங்க கேட்டா வாங்கிக் குடுக்க வேண்டியது தானே" என்று சொல்லிக் கொண்டே ஆளுக்கு இரண்டாய் கோழிக் குஞ்சுகளையும் வாங்கிக் குடுத்தும் விட்டார்கள். சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்ச் என்று கலர் கலராய் திசையொன்றுக்கு ஓடின கோழிகள்.

குழந்தைகள் முகம் சந்தோசத்தில் பொங்கியது.

"எதுக்கு பெரிம்மா கோழி வாங்கிருக்கோம்?"என்றாள் தங்கை மகள்.

"ஆமா...நீ முட்டையா சாப்பிடறயல்ல அது தான் பெரிம்மா கோழி வாங்கி விட்டிருக்கா.. சுகுணா பிராய்லர்ஸ் மாதிரி பெரிய பண்ணையே ஆரம்பிக்கப் போறா பாரு, இந்த நாளு கோழிய வெச்சு..நீயும் கணக்கில்லாம முட்டை சாப்பிடலாம்." என்றாள் என் தங்கை.

"ஏகத்தாளம் பேசாதடி..கோழிய நல்லாப் பாத்துக்கோ...எங்காவது ஓடப் போகுது...அப்புறம் நாம பெத்த முத்துக ரெண்டும் கத்தித் தொலைக்கும்." என்றேன்.

"அம்மா கோழி கீச்சுக் கீச்சுன்னு கத்திட்டே இருக்கே...பசிக்குதாம்மா கோழிக்கு" கரிசனத்துடன் என் மகன்.

�அடடே கோழிக்கு என்ன குடுக்க சாப்பிட?� முன்னப் பின்ன கோழி வளத்தாத் தான தெரியும்.

அம்மா வேற, கோழி வாங்கிக் குடுத்த கையோட...ஸ்கூலுக்கு கிளம்பிப் போயிட்டாங்க, நான் வந்ததை காரணம் சொல்லி ஒரு மாதம் லீவ் போடுவதாக உத்தேசம். போயிட்டு சாயந்திரம் தான் வருவேன்னு வேற சொல்லிட்டுப் போனாங்க. அதுவரை கோழிய பட்டினி போடுவதா?

"ஏண்டி, அரிசி போடலாமா கோழிக்கு...?" என்றேன் நான்.

"அரிசி சாப்பிட்டா காமாலை வராது, போன வாரம் பக்கத்துத் தெருவில ஒரு ஆடு அரிசி சாப்பிட்டு செத்துப் போயிடுச்சாம்." என்றாள் எனதருமை தங்கை.

இதெல்லாம் நல்லாத் தெரிஞ்சு வெச்சுக்கோ...ஆட்டுக்குத் தானடி காமாலை வந்திச்சு...கோழிக்கும் வருமா? " விசனத்துடன் நான்.

"ஏண்டி நேத்துப் பண்ண கோழி பிரியாணி ஃப்ரிஜ்ஜில இருக்கே அதை எடுத்துப் போடுவமா?" என் புத்திசாலித் தங்கை.

"உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா? கோழி பிரியாணிய கோழிக்கே போடுறது பாவமில்ல, எப்பிடிடி உனக்கு மட்டும் இப்படியெல்லாம் யோசிக்கத் தோணுது... இரு..இரு... கோழிக்கு மோரில வெங்காயத்தை வெட்டிப் போட்டுக் குடுத்தா நல்லதுன்னு படிச்ச ஞாபகம்" இது நான்.

"நீ மனுசங்களுக்கான சாப்பாடு பத்தித்தான படிச்ச...கோழிக்கெல்லாம் எப்பப் படிச்ச?" எகத்தாளத்துடன் அவள்.

"எருமமாடே.. எல்லாத்துக்கும் நக்கல் பண்ணிட்டிருந்தேன்னா கோழிமாச்சு..நீயுமாச்சுன்னு போயிட்டே இருப்பேன்... நீ பிரியாணியே போட்டுக்கோ..." கோபத்துடன் நான்.

"சரி...இரு வெங்காயத்தை நறுக்கிட்டு வர்றேன்...சின்ன வெங்காயமா...பெரிய வெங்காயமா...வீட்டில சின்ன வெங்காயம் தான் இருக்கு. " வெங்காயத்துடன் வந்தாள் என் தங்கை.

வெங்காயத்தைக் கோழிக்குப் போட்டதும் கோழிகள் கொத்தித் தின்ன ஆரம்பித்தன.

�வெங்காயம் காரமடிக்காதா சித்தி கோழிக்கு" என்றான் என் மகன்.

"அதுக்கு தான் சித்தி பக்கத்துல ஒரு கிண்ணத்தில சக்கரை வெச்சிருக்கேன்...காரமடிச்சா சக்கரை சாப்பிட்டா சரியாப் போயிடும்.
எப்படி சித்தியோட அறிவு?" பெருமையுடன் என் தங்கை.

"இதற்கிடையில் என் பாட்டி வந்தார்கள்.

கோழி..வெங்காயம்.. எல்லாம் பாத்து பல்செட் வாயால் சிரித்து விட்டு... என்ன புள்ளைங்க நீங்க கோழிக்கு இத்தூண்டு குறுனையப் போடுவாங்களா? அத விட்டுட்டு தயிரு வெங்காயம்ன்னு வெட்டி வேலை பண்ணிட்டு இருக்கீங்க. அப்படியே செடி செத்தை பக்கத்தில மேய விட்டா அது பாட்டுக்கு புழு பூச்சியெல்லாம் கொத்தித் திங்கப் போகுது...வேண்டாத வேலை புள்ளைங்களா நீங்க பண்றது" என்றபடி தொடர்ந்தார்.

"ஆளுக்கொண்ணாப் புள்ளையும் பெத்துப் போட்டாச்சி...அப்பவும் புத்தியில்லைன்னா எப்பத் தான் உங்க ரெண்டு பேருக்கும் புத்தி வரும்?அக்காக்காரியும் தங்கச்சியும் அப்படியே ஆத்தாவக் கொண்டிருக்கு..ஒண்ணாவது எம்மவன மாதிரி அறிவா இருக்கா....அவனுக்கென்ன விட்டுட்டுப் போயிட்டானே...தங்கமா பேரப்புள்ளைங்களப் பாக்கக் குடுப்பின இல்லையே...கிழவி, நான் இன்னும் இருக்கனே."அறிவுரையுடன் ஒப்பாரி வேற எப்பவும் போல இலவச இணைப்பு.

"மேய விட்டா பூனை புடிக்காதா? இந்த வீதில தான் நெறையப் பூனை இருக்கே?" முன்னெச்சரிக்கை முத்தம்மாவாக என் தங்கை.

"கண் பார்வையிலேயே மேய விடுங்க...புள்ளைங்களை பக்கத்திலிலேயே இருக்கச் சொல்லுங்க" இது பாட்டி.

நாங்களும் கோழிக்குஞ்சுகளை மேய விட்டு...தண்ணி காட்டி...என்று அவற்றின் பின்னாலேயே திரிந்து கொண்டிருந்தோம்.

கோழிகளுக்கு சாப்பாடு போடும் மும்முரத்தில் எங்கள் பிள்ளைகளுக்குக் கூட வயிற்றுக்குத் தரவில்லை. ஒருவழியாக கோழிகளுக்கான சாப்பாட்டுப் பிரச்சினை முடிந்தாகி விட்டது.

இப்போது தங்குமிடம். எங்கே அடைத்து வைப்பது...இதற்கும் பாட்டியைத்தான் நாடினோம்.

"அட்டாலில பஞ்சாரமிருக்குது. சாயந்திரமா யாராவது பசங்களை விட்டு எடுக்கலாம். இப்போதைக்கு அட்டைப் பெட்டில போட்டு வைங்க." என்றார்.

மிக்சி வாங்கிய போது வாங்கிய அட்டைப் பெட்டியை எடுத்து அதற்குள் பேப்பர் விரித்து கோழிகளை விட்டு மூடினோம்.

"அம்மா...மூடி வெச்சா கோழிக்கு மூச்சு முட்டாதா?" என் மகன்.

"அடடா இது நமக்குத் தோணலையே...தெறந்து வெச்சா பூனை வந்து புடிக்குமே" இல்லாத மூளையைக் கசக்கி யோசித்தாள் என் தங்கை.

சரிடி. ஜன்னல் வெச்சாப் போச்சி. பெட்டியில் ஒரு ஓட்டை போட்டு ஈர்க்கங் குச்சிகளைச் செருகினாள் ஆர்க்கிடெக்டாக என் தங்கை.

இதற்குள் என் அம்மா வந்தார்கள். வந்தவுடன் அவர்களது கைப்பையைப் பிடுங்காக் குறையாய் வாங்கினோம். எப்போது வெளியே போனாலும் எங்களுக்கு எதாவது கொறிக்க வாங்கி வருவது அம்மாவின் வழக்கம். சூடாக உருளைக் கிழங்கு சிப்ஸ் இருந்தது கைப்பையில்.

அக்காவும் தங்கையும் பிச்சுப் பிடுங்காத குறையாய் சாப்பிட்டு முடித்தோம். இடையிடையே கோழிக்குஞ்சுகளின் பராமரிப்பையும் சாப்பாட்டையும் பற்றிக் கூறியவாறு.

மாலை மயங்கியாகி விட்டது. மதியம், குட்டித் தூக்கம் போட்டு எழுந்த எங்கள் பிள்ளைச் செல்வங்கள்...எழுந்தவுடன் கோழியை வெளியே எடுக்கச் சொல்லி அடம் பிடித்தார்கள். வெளியே எடுத்தவுடன் தெறித்து ஓடின கோழிகள்...சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில்.

கோழிக் குஞ்சுகளை கையில் பிடித்து விளையாடுவதும், தலையில் வைத்து, அவை கால்களால் பிறாண்டும் போது எற்படும் குறு குரு உணர்வை ரசிப்பதுமாக பொழுது ஓடியது. கோழிகளுக்கு பேரும் வைத்தாயிற்று. என் கோழியின் பெயர் செரின் , என் தங்கை கோழியின் பெயர் டயானா, என் மகனின் கோழியின் பெயர் சச்சின், என் தங்கை மகளின் கோழி பிங்க்கி.

பெயர் சூட்டி, ஆளாளுக்கு கத்திக்கத்தி அவரவர் கோழியின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிட்ட படி இருந்தோம். இதில் "உங்கோழி சோம்பேறி...போடி உங்கோழி தான் திண்ணிப் பண்டாரம்.."என்றெல்லாம் சண்டை வேறு. இரவும் வந்தாகி விட்டது. பிள்ளைகள் உறங்கி விட எனக்கும் தூக்கம் கண்ணைச் சுழற்ற அம்மாவின் பொறுப்பில் கோழிகளை விட்டு விட்டு அப்படியே உறங்கி விட்டேன்.

அடுத்த நாள் கண்விழிக்கும் போதே வீட்டில் பேச்சுக் குரல். யாரோ வந்திருக்கிறார்கள் போல என்று நினைத்தபடியே அறையிலிருந்து வெளியே வந்தேன். அம்மா கொல்லையில் நின்றிருந்தார்கள். அம்மா காப்பி என்ற படியே அருகில் போனேன்.

காற்றில் பறந்த படி, தரையெல்லாம் பச்சையும் சிவப்புமாய் இறகுகள். இரத்த தீற்றல்களுடன் கோழிக்குஞ்சுகளின் கால்கள் மட்டும் கிடந்தன. பார்க்கும் போதே என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிந்தது.

"எல்லா அந்த நாசமாப் போற பூன பண்ணின வேலை. அட்டைப் பெட்டிய பெரட்டித்தள்ளி கோழிய எல்லாத்தையும் கொன்னு தின்னுட்டு, கால மட்டும் போட்டுட்டு போயிருச்சு...வரட்டும் சனியன்.. வெச்சுக்கறேன் அதுக்கு" இறக்கையை கூட்டி வாரிய படி அம்மா புலம்பிக் கொண்டிருந்தார்கள். என் தங்கை இன்னும் விழிக்கவில்லை போல.

சச்சின்...சச்சின்� என் மகன் தூக்கம் விலகாத கண்களுடன் சச்சினை பார்க்கும் ஆவலுடன் எழுந்து வந்து கொண்டிருந்தான்.

தாமரை
23-11-2007, 09:36 PM
ஓவியாவின் கல் நெஞ்சமடி உனக்கு (ஜிஞ்ஜர்) கதை நினைவிற்கு வருகிறது. செல்லப் பிராணிகளை வளர்க்கத் தெரியாமல் செல்ல அப்பிராணிகள் எதையெதையோ முயற்சி செய்வதும்.. கடைசியில் வரும் சோகங்களும் மனதில் ஆழமாய் எதையோ விட்டுச் சென்றுவிடுகின்றன..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8976

அக்னி
23-11-2007, 09:45 PM
சிறியதொரு நிகழ்விற்கு ஆரம்பம் கொடுத்து, மகிழ்வை இணைத்து, கலாய்ப்பு, சீண்டல், கோர்த்து, பிள்ளைகளோடு பிள்ளைகளாகி விளையாடி, ஆராய்ச்சி செய்து, பயந்து, கொஞ்சி, மகிழ்ந்து, விறுவிறுப்பைச் சேர்த்து, எதிர்பார்ப்பைக் கூட்டி, சோகமான ஒரு முடிவைக் காட்டுகையில், வாசிக்கும் மனங்களும் வேதனையில் ஆழவைக்கும் ஆழ்ந்த, எழுத்துநடை...

உங்கள் சின்னச் சின்னச் சம்பவங்களின் மீளும் நினைவுகள் தொடரட்டும்...

பாரதி
24-11-2007, 12:28 AM
அருமை யவனி! எத்தனை கனத்துடன் இதை எழுதியிருப்பீர்கள் என யூகிக்க முடிகிறது. எத்துனை ரூபாய் என்பது முக்கியமல்ல; எத்துனை அன்பு என்பதுதான் முக்கியம். நூற்றுக்கணக்கில் செலவழித்து வாங்கிய பொருட்களை விட சில ரூபாய்களில் வாங்கிய பொருட்கள் குழந்தைகளை எவ்வளவு தூரம் ஈர்க்கும் என்பதை நானும் அறிந்திருக்கிறேன். வெங்காயத்துண்டுகளை கோழிக்குஞ்சுகள் சாப்பிடவில்லை என்றெண்ணி அதை ஊட்டி விட்ட சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது. மகனின் உள்ளம் புண்படுமே என்ற தாயின் வேதனையும் புரிகிறது.

மதி
24-11-2007, 02:55 AM
முடிவு உண்மையிலேயே மனத்தை கனத்துப் போக செய்கிறது.. கேலி கிண்டலுடன் ஆரம்பித்து கோழிக்குஞ்சுகளை வளர்க்கத் தெரியாமல்வாங்கி.அதற்கு நீங்க உணவளிக்க மேற்கொண்ட முயற்சிகள் சிரிப்பை வரவழைத்தது.

நேசம்
24-11-2007, 03:06 AM
கோழி குஞ்சுவை வைத்தே குடும்பத்தின் கலகலப்பை காட்டி,முடிவில் மகனின் மனம் கஷ்டப்படுமோ என்று தாயின் கவலையுடன் முடித்து இருப்பது அருமை.நினைவுகளை கொண்டு செல்லும் விதமே படிப்பதற்கு இனிமையாக இருக்கிறது.வாழ்த்துக்கள்

mukilan
24-11-2007, 04:39 AM
சிறுவயதில் செல்லப்பிராணிகளின் மேல் ஈர்ப்பு வருவது இயல்பான விசயம்தான். குழந்தைகள் அறிந்து கொள்ள ஆர்வமாயிருப்பார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகட்கு பதில் சொல்லி மாளாது. அந்தக் குழந்தைகளின் அந்த வயது ஆசைகளை கூடுமானவரை நிறைவேற்றி விட வேண்டும். அவ்வகையில் உங்கள் மகன் கொடுத்து வைத்தவர்தான். முடிந்தால் அக்குஞ்சுகளின் தாய் வந்து அழைத்துச் சென்று விட்டதாக பொய் சொல்லிப் பாருங்கள்.


செல்லப் பிராணிகள் வளர்ப்பதால் மன அழுத்தம் குறைவதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். கோழிக்குஞ்சு மட்டுமல்ல, புறா, நாய், பூனை, மைனா, கிளி, மீன், முயல் என்று நான் வளர்த்த செல்லப் பிராணிகளின் வரிசை நீண்டு கொண்டே இருக்கும். கடைசியாக நான் வளர்த்தது காதல் குருவிகள் (ஃபட்ஜிஸ்). கூண்டில் வைத்திருக்கும் பானைக்குள் ஒவ்வொரு ஜோடியும் அழகாகக் குடும்பம் நடத்தி குட்டையிட்டு குஞ்சு பொறித்தன. இரண்டு ஜோடிகளாக வாங்கி வந்தது பத்து ஜோடிகளாகப் பல்கிப் பெருகின. நான் கனடா வந்த பிறகும் என் பெற்றோர்கள் அதைப் பேணி வந்தனர்.ஆனால் ஒரு நாள் அதிகமான குருவிகளின் எண்ணிக்கையால் கூண்டில் நெருக்கம் ஏற்பட்டு ஒன்றோடொன்று சண்டையிட்டு மடிந்த சோகக் கதையைக் கேட்டு கவலையில் ஆழ்ந்த சோகமும் நிகழ்ந்தது. அதன் பின்னர் இனி எந்தப் பிராணியையும் (மனிதப் பிராணியைத் தவிர்த்து ஹி!ஹி!!) வளர்க்கப் போவதில்லை என முடிவெடுத்திருக்கிறேன்.

சிவா.ஜி
24-11-2007, 04:51 AM
ஆஹா என்னவொரு எழுத்து வண்மை.படிக்கும்போதே அந்த கீச் கீச் சத்தம் காதில் கேட்கிறது. ஒரு கைப்பிடி குருனையை நாமும் அள்ளிப் போடலாமென்று கை பரபரக்கிறது.சின்ன பிள்ளைகளின் சின்னச் சின்ன சந்தோஷங்கள்,அதில் பெரியவர்களின் ஈடுபாடு,முதுமகளின் அனுபவ ஆலோசனை,அதிர்ச்சிதரும் சோக முடிவாக சம்பவத்தொகுப்பு சுவைக்கிறது.யவனிகாவின் எழுத்தைப் பற்றி சொல்லவேண்டியதேயில்லை.அதிலும் அவரின் தங்கை வெங்காயத்தின் கூடவே சர்க்கரை வைத்த செயல் உண்மையிலேயே புன்முறுவலை வரவழைத்து விட்டது.மிகவும் அருமையான ஒரு அனுபவக் கட்டுரை.வாழ்த்துக்கள் தங்கையே.

நுரையீரல்
24-11-2007, 04:53 AM
நகைச்சுவையில் ஆரம்பித்து சோகத்தில் முடித்திருக்கிறீர்கள். டைரக்டர் பாலா போன்றவர்களின் ஆசீர்வாதமோ. கதை நல்லா இருக்கு.

எப்படியோ உங்க வீட்டுக்காரருக்கு பத்து ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திவிட்டீர்கள். காசக்குடுத்து கோழிக்குஞ்சை வளர்த்து, அதை பூனை தின்று, அதனால் நமக்கு சோகம் வருவதற்குப் பதில், ரோட்டில் இலவசமாக கிடைக்கும் பூனைக் குட்டிகளை வாங்கி வளர்த்தால் இன்னும் நல்லா இருக்குமே யவனிகா.

நேசம்
24-11-2007, 04:58 AM
உங்க வீட்டுக்காரருக்கு பத்து ரூபாய் நஷ்டம்
உங்களுக்கு வயதி விட்டதா ? அதனால் கொஞ்சம் மழுங்கி போச்சு.கோழி குஞ்சு வாங்கி கொடுத்தது யவனிகாவுடைய அம்மா(பிள்ளைகளின் பாட்டி)

நுரையீரல்
24-11-2007, 05:00 AM
இனி எந்தப் பிராணியையும் (மனிதப் பிராணியைத் தவிர்த்து ஹி!ஹி!!) வளர்க்கப் போவதில்லை என முடிவெடுத்திருக்கிறேன்.
மனிதப் பிராணியைத் தான் உங்கள் பெற்றோர் வளர்த்துவிட்டார்களே. அந்த மனிதப் பிராணியை வளர்த்து, வாலிபமாக்கி கடைசியில் கனடாவில் போய் செட்டிலாகி இருப்பது அவர்களுக்கு எவ்வளவு மனவருத்தைத் தரும் தெரியுமா? (கூண்டை விட்டு பறந்து போன கிளியைப் போன்றதொரு உணர்வு)

என்ன செய்வது முகிலன், சில சமயம் கூண்டுக் கிளிகள் இரை தேடி தோலை தூரம் பறக்க வேண்டியிருக்கிறது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? இரை தேடி தோலை தூரம் சென்ற கூண்டுக் கிளிகளின் குஞ்சுக் கிளிகளுக்கு, கிராமத்தில் இருக்கும் தாத்தா, பாட்டி கிளிகளின் உறைவிடம் தான் சொர்க்கலோகம். மனிதன் என்றுமே எதையுமே சரியாகப் புரிந்து கொள்வதில்லை (நானும் தான்).

யவனிகா
24-11-2007, 05:46 AM
பின்னூட்டம் இட்ட அத்துனை நெஞ்சங்களுக்கும் நன்றி. உண்மையில் கோழ்க்குஞ்சுகள் இறந்த அன்றைக்கு நாங்கள் பட்ட மனவேதனை சொல்லி மாளாது, அதன் பின் எத்தனையோ முறை கோழிக்குஞ்சுகள் விற்பவன் தெருவிற்கு வந்த போதும், என் மகன் வாங்கித் தரச் சொல்லி அழுதான். கண்டிப்பாக மறுத்து விட்டேன்.

ராஜா உங்க ரவுசுக்கு அளவேயியில்லையா? சரி சரி என்ன செய்ய?

இதயம்
24-11-2007, 06:22 AM
யவனிகாவின் வாழ்வில் சுவையான சம்பவங்களுக்கு பஞ்சமில்லை போலிருக்கிறது. பலருக்கும் இப்படி நிறைய இரசனையான, நெகிழ வைக்கும் அனுபவங்கள் நிகழ்ந்திருக்கும். ஆனால், யவனிகா போன்றவர்களுக்கு தான் அதை சுவையுடன் மற்றவர்களிடம் அளிக்கத்தெரிந்திருக்கிறது. எனக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு. அந்த ஆசை என் தங்கையின் மகள்(!), நாய், பொன்வண்டு, கிளி, புறா, லவ் பேர்ட்ஸ், மைனா என்று பட்டியல் நீள்கிறது. நான் வளர்த்தவற்றில் பெரும்பாலும் பறவையினங்கள் தான் அதிகம். நான் வளர்த்த எந்த பறவையும் தன் ஆயுளை கடைசி வரை கழித்ததாக வரலாறு இல்லை. காரணம், என் அன்புத்தொல்லையால் தான் அவைகள் வெகு சீக்கிரம் தங்கள் ஆயுளை முடித்துக்கொண்டன என்பதை இப்போது தான் உணர்கிறேன். பிறகு என்னவாம்..?, ஒரு பறவைக்கு ஒரே நாளில் பல முறை உணவூட்டலும், நீர் கொடுத்தலும் நிகழ்ந்தால் பாவம் அது என்ன செய்யும்..? உன் சித்திரவதைக்கு பதில் செத்துப்போவதே மேல் என்று இறந்தது மிகப்பெரும் சோகம். அவை ஒவ்வொரு முறை இறக்கும் போதும் அவை எனக்கு கொடுக்கும் சோகம் அளவிடமுடியாதவை..! ஒவ்வொரு முறையும் அவற்றை ராணுவ மரியாதையோடு அடக்கம் செய்து, அடிக்கடி அங்கு போய் அஞ்சலி(!) செலுத்துவதும் நடந்திருக்கிறது..! பகுத்தறிவு வேலை செய்ய ஆரம்பித்த பிறகு நம்மால் எந்த உயிரும் துன்பப்பட கூடாது என்ற நல்லெண்ணத்தில் மனிதர்களை தவிர மற்றவற்றை துன்புறுத்துவதை விட்டுவிட்டேன்..!!!


கோழிக்குஞ்சின் இறப்பு என்பது நம்மைப்போன்றவர்களுக்கு உப்புப்பெறாத விஷயம். ஆனால், யவனிகா மகனின் பார்வையில் அது ஈடு செய்ய முடியாத இழப்பு. அந்த இழப்பிற்கான பிரதிபலிப்பை தன் மகன் காட்டுவதற்கு முன்பே யவனிகா கதையை முடித்துக்கொண்டது அதன் பின் ஒளிந்திருக்கும் மிகப்பெரும் சோகத்தை சொல்லாமல் சொல்லிவிட்டது. காரணம், அதை எழுத்தில் சொல்ல முடியாது என்பதும், சொன்னால் அது இழப்பின் சோகத்தை முழுமையாக்காது என்பதும் யவனிகாவின் எண்ணம் என்பது என் கருத்து. பிள்ளைகளின் உலகம் என்பது தனி. அவர்களின் கேள்விகளுக்கு பல நேரங்களில் உலகம் கற்றுத்தேர்ந்த நம்மிடம் பதில் இருக்காது. அப்படித்தான், இந்த சோகமும் அத்தனை முழுமையாய் நமக்கு புரியவே புரியாது. அது புரிய வேண்டுமானால் நாம் குழந்தையாக வேண்டும். ஒரு சிறு சம்பவத்தை மனம் நெகிழும் வகையில் கொடுத்த யவனிகாவிற்கு பாராட்டுக்கள், கோழிக்குஞ்சை பறிகொடுத்த அவர் மகனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..!


மரண வீட்டில் எல்லோரும் அழுது கொண்டிருக்கையில் ஒரு சிலர் மட்டும் சாவுக்கு வந்த இளசுகளை சைட் அடித்துக்க்கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு ரவுசு பார்ட்டி தான் நம் ராஜா.! அவர் வழி என்றும் தனி வழி தான்.! ஆனா, ரொம்ப ஆபத்தான வழி..!! இல்லாவிட்டால் உயிரின் இழப்பை பற்றி பேசி வேதனைப்படும் போது யவனிகா கணவரின் 10 ரூபாய் நஷ்டத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்..! யவனிகாவின் திருவாளர் அதிஷ்டசாலி..! ராஜாவின் திருமதி துரதிருஷ்டசாலி..!! புரிந்தால் சரி தான்..!!!

நுரையீரல்
24-11-2007, 07:14 AM
மரண வீட்டில் எல்லோரும் அழுது கொண்டிருக்கையில் ஒரு சிலர் மட்டும் சாவுக்கு வந்த இளசுகளை சைட் அடித்துக்க்கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு ரவுசு பார்ட்டி தான் நம் ராஜா.! அவர் வழி என்றும் தனி வழி தான்.!
சாவு வீட்டில் போய் அழுவதால், இறந்த ஒருவர் உயிர் மீட்டெழுந்து வரப் போவதில்லை. ஒருவேளை, செத்த ஒருவரின் ஆன்மா, தன் பூத உடலையே சுற்றி, சுற்றி வந்து கொண்டிருந்தால் (இதுவரை நிருபிக்கப் படவில்லை) சுற்றி நிற்பவர் அழுவதைப் பார்த்தால், இறந்தவரின் ஆன்மாவுக்கும் அழுகை வரும்.

மாறாக, என்னைப் போன்றவர்கள் செய்யும் சில்மிஷத்தைப் பார்த்தால் சிரிக்கக் கூடும் (சிந்திக்க இதயமே)

எந்த ஒரு விஷயத்தையும் நகைச்சுவையால் எளிதாக புரிய வைத்துவிடலாம். அது ஆபத்தான வழி என்று சொல்வது....... (?)

என்னுடைய ஆசையே என்ன தெரியுமா?
நான் செத்தால் பட்டாசுகளும், தப்பு தாளங்களும், அதற்காக மப்பு பார்ட்டிகள் வேட்டியை மடித்துக் கட்டி அண்ட்ராயரோட ஆடும் ஆட்டத்துடனும் எனது இறுதி ஊர்வலம் இருக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், துரதிருஷ்டம் என் சொந்தங்கள் அப்படிச் செய்யமாட்டார்கள்.

என் கேரக்டரையே புறிஞ்சுக்க மாட்டேன்குறீங்களே மச்சான்.

lolluvathiyar
24-11-2007, 08:02 AM
யவனிகாவின் கோழி குஞ்சு கதையில் அவை இறந்த சம்பவத்தை எழுதி இருந்தார். காரனம் அந்த சம்பவம் அவர் மனதில் அந்த மாதிரி இடம் பிடித்ததனால். இதே போல சென்பக மரத்தையும் விரும்பிருந்தார். வளர்ப்பு பிரானிகள் இறந்தால் அதிகமாக வருத்தபடுவது குழந்தைகள்தான்.
நான் கிராமத்தில் வளர்ந்தவன் என்றாலும் கூட யவனிக்காவின் மனவருத்தம் புரிந்தது. நான் நிரைய வளர்த்தி இழந்திருகிறேன். கோழி எங்களுக்கு வளர்ப்பு பிரானி அல்ல, அது வளர்ந்தவுடன் அடித்து சாபிட்டு விடுவோம். ராஜா சொன்னது போல எங்களுக்கு மாடு கோழிகள் இறப்படு பன இழப்பாகதான் தெரியும். ஒரு முரை நான் வளர்த்த கொஞ்ச பெரிதான் 15 கோழிகளை நாய் கடித்து இறந்து விட்டது.

சரி யவனிகா கலர் குஞ்சு மேட்டருக்கு வருகிறேன். இந்த குஞ்சுகள் வன்ன சாயத்தில் முக்கி எடுத்து கொண்டுவருவார்கள். பூனை பிடிக்காவிட்டாலும் அவை நீண்ட நாள் வாழ முடியாது. காரனம் இவை கோழிபன்னைகளில் வளர்க்க முடியாது என்று கருதி கழித்தவை. புல்லட் குஞ்சுகள் என்று சொல்வார்கள். வளர்ந்தாலும் வீக்காக இருக்கும் அசை இருக்காது.
கோழி குஞ்சுகளுக்கு ஆரம்பத்தில் என்ன உனவு தரலாம். பொட்டு உழுந்துப்வாங்கி அதை கழிந்து அந்த பொட்டுகளை காய வைத்து அதை உனவாக தந்தால் சத்தும் உண்டு சீரனமும் ஆகும். 15 நாள் கழித்து கம்பு ராய் வாங்கி போடலாம், என்னை கடைகளிலும் கூட உழுந்து பொட்டுகள் கிடைக்கும். நகரங்களில் இருக்கும் மக்கள் முடிந்த வரையில் கோழி குஞ்சு வாங்குவதை தவித்து விட வேண்டும்.
காரனம் அவை வீட்டை அசுத்த படுத்தி விடும். அப்புரம் நோய் பிரச்சனைகள் ஏற்படும்.

பூமகள்
24-11-2007, 10:42 AM
யவனி அக்காவின் இந்தப் பதிவு என்னை என் மழலைப் பருவத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது.
அந்தக் கற்பனைகளில் மிதந்து வந்து மீண்டும் இங்கு அவற்றைப் பதிக்க கால தாமதமாகிவிட்டது யவனி அக்கா.
என்னை மன்னிக்கவும்.

என் மழலைப் பிராயத்தில் இதே போல் கலர் கலராய் கோழிக் குஞ்சுகளை வாங்கி, கூடை கொண்டு அடைத்து அதனோடே உறங்கி, அதனோடே உண்டு இப்படியான விடுமுறை காலங்கள்
எங்கள் பாட்டியோடு கிராமத்தில் கழித்தது இன்னும் கண் முன் நிழலாடுகிறது. ஆனால், எல்லா கோழிக் குஞ்சுகளுக்கும் ஒரே வில்லன் பூனை. இங்கு யவனி அக்கா சொன்ன துயரமே எனக்கும்
நிகழ்ந்தது.

மழலைப் பிராயத்தில் அந்த கோழிக் குஞ்சு இறப்புக்காய் பல நாட்கள் துக்கமும் அனுசரித்தேன். வண்ண வண்ண கோழிக் குஞ்சுகளை இன்று பார்த்தாலும் வளர்க்கனும் என்ற எண்ணம் துள்ளிக் கொண்டு வரும்.
வில்லன் பூனையை நினைத்து ஆசையை மூட்டைக் கட்ட வேண்டிய துர்ப்பாக்கியம். இப்போது எல்லாம் கோழி குஞ்சு வளர்க்க இடமேது....!!

யவனி அக்காவின் எழுத்து வன்மையைப் பறைசாற்றும் மற்றுமொரு நெஞ்சைத் தொடும் பகிர்வு. உங்களின் எழுத்துகளுக்கு என்றுமே ரசிகை நான் அக்கா.

இதே போல் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் பூ வீட்டிலும் நடந்தது. அதைப் பதிவாக்கும் முயற்சியில் இருக்கையில், யவனி அக்காவின் இப்படியொரு பகிர்வு. ஒத்த சிந்தனை உள்ளவர்கள் ஒரே போல் தான் எண்ணுவார்களோ??

அந்த நிகழ்வை விரைவில் பதிவாக்கி இங்கு பதிக்கிறேன்.

ஐந்து ரூபாய்க்கு ரெண்டு உயிர்... ஆனால், பறிகொடுத்தப்பின்....... பலகோடிகளுக்கு ஒப்பாகுமா மழலை மனத்தில் இருக்கும் அன்பு கோழிக் குஞ்சுகளின் உயிர்??:frown:

இன்னும் இன்னும் அற்புதமான நிகழ்வுகளைக் கொடுங்கள் யவனி அக்கா. உங்களின் எழுத்துகள் எங்களுக்குப் பாடமாக அமையட்டும்.

யவனிகா
24-11-2007, 11:34 AM
எபோதும் போல இதயம் அண்ணாவின் அருமையான பின்னூட்டம். பூவின் அன்பான பின்னூட்டம். மகிழ்ச்சி. நேரமின்மை தான் காரணம் உங்கள் பின்னூட்டங்களுக்கு விரிவாகக் கூட நன்றி கூற முடியவில்லை.நன்றி இதயம்,லொல்லு வாத்தியாரண்ணா, தங்கை பூமகள்.

இதயம் அண்ணா புள்ளி ராஜாகிட்ட மோதாதீங்க...எல்லாத்துக்கும் பதில் வெச்சிருப்பார் அவரு...ஆனா சரியா தப்பான்னு மட்டும் அவருக்கே தெரியாது.

அன்புரசிகன்
25-11-2007, 05:13 AM
உங்கள் கதை மூலம் எனது 3-5 வயதுக்காலங்களை மீட்டெடுத்துவிட்டீர்கள். ஆனால் அந்தக்காலங்களில் வீட்டுப்பக்கம் பூனை எட்டிக்கூடப்பார்க்காது. பார்த்தால் கல்லுத்தான் அவர்களுக்கு அழைப்பு உபசாரமாக இருக்கும். நமக்கு வில்லனாக இருப்பது மரநாய் தான்...

ராஜா சார்...... 10 ரூபாய்க்கு கணக்கு நஷ்டம்வைத்ததை பார்க்குறீர்களே... (அதுவும் அவரின் கணவனுக்கு அல்ல. அது வேறு) அவரது கணவன் ஒரு நாளைக்கு சிகரட் எனும் போர்வையில் எத்தனை கோழிக்குஞ்சுகளை தின்றுமுழுங்கியிருப்பார்? :D :D :D (இன்னொரு கதையில் யவனிகாவின் கணவர் புகைப்பிடிப்பவர் என்று அறிந்திருக்கிறுன்...வைத்தியசாலை தொழிலாளி - கடன்)

இதயம்
25-11-2007, 05:19 AM
ராஜா சார்...... 10 ரூபாய்க்கு கணக்கு நஷ்டம்வைத்ததை பார்க்குறீர்களே... (அதுவும் அவரின் கணவனுக்கு அல்ல. அது வேறு) அவரது கணவன் ஒரு நாளைக்கு சிகரட் எனும் போர்வையில் எத்தனை கோழிக்குஞ்சுகளை தின்றுமுழுங்கியிருப்பார்? :D :D :D (இன்னொரு கதையில் யவனிகாவின் கணவர் புகைப்பிடிப்பவர் என்று அறிந்திருக்கிறுன்...வைத்தியசாலை தொழிலாளி - கடன்)

அடப்பாவமே..! அன்பு.. எத்தனை நாளைக்கு தான் என்னை மாதிரியே நீங்களும் இப்படி ஒண்ணும் தெரியாத அப்பாவியா இருக்கப்போறீங்க..?? இன்னும் தொடர்ந்து செக் பண்ணா அப்பாவிகள் லிஸ்ட் அதிகமாகும் போலிருக்கே..!

ஒண்ணுமே புரியலே.. உலகத்துலே..! என்னவோ நடக்குது.. மர்மமா இருக்குது...!!

அன்புரசிகன்
25-11-2007, 05:29 AM
இதயம்... பயப்படாதீங்க.. நீங்களும் நானும் தான் அந்த லிஸ்டில் இருப்போம்... :D :D :D

சுகந்தப்ரீதன்
25-11-2007, 06:23 AM
எதார்த்தமான உரைநடையில எல்லோரையும் கவருது உங்களோட எழுத்து..வாழ்த்துக்கள் யவனி அக்காவிற்க்கு.. உங்க கதையில வர பூனைமாதிரி நம்ப பொழப்பு.. யாருக்கும் தெரியாம அப்பப்ப மன்றத்துல நுழைய வேண்டியிருக்கு.. எவனாவ்து பாத்துட்டு மேலாளருகிட்ட போட்டுகுடுத்துடுவானோங்கிற படபடப்புல..விரிவான பின்னூட்டம் அளிக்க முடியறது இல்ல.. அதான் கொடுத்தா நல்ல பின்னூட்டமா கொடுக்கனும் இல்லண்னா கொடுக்ககூடாதுங்கிர எண்ணத்துலதான்.. உங்க எழுத்த படிச்சுட்டு மட்டும் போயிடுவேன்.. பின்னூட்டம் கொடுக்காம..அதற்கு தம்பிய மன்னிச்சுடு அக்கா... சமயம் கிடைக்கிறப்ப நான் உங்க எழுத்த விமர்சிப்பேன் ..சரியா..?

நுரையீரல்
25-11-2007, 08:06 AM
பாவம் யவனிகாவின் கணவர். இதயமும், அன்புரசிகனும் சேர்ந்து அவர இப்படி ஓட்டுறீங்களே...

அவர் புலம்பினா, இப்படி புலம்புவார்... "யவனிகா கிட்ட மாட்டிட்டு முழிக்கறது பத்தாதுனு, அன்புகிட்டயும், இதயத்துகிட்டயுமானு". பாவங்க உங்க மச்சான் (யவனிகாவின் அ(ட)ப்பாவி கணவர்) விட்டுறுங்க... இல்லேனா அஸை தீர கொட்டிட்டு விட்டுறுங்க..

அன்புரசிகன்
25-11-2007, 08:18 AM
யவனிகா கிட்ட மாட்டிட்டு முழிக்கறது பத்தாதுனு, அன்புகிட்டயும், இதயத்துகிட்டயுமானு". பாவங்க உங்க மச்சான் (யவனிகாவின் அ(ட)ப்பாவி கணவர்) விட்டுறுங்க... இல்லேனா அஸை தீர கொட்டிட்டு விட்டுறுங்க..

தோடா.... மச்சி பொலம்புறாரு................

ஓவியன்
25-11-2007, 08:44 AM
யவனிகா!

உங்கள் வரிகளைப் படித்துக் கொண்டிருக்கையில் சில வாசகங்களை ஞாபகப்படுத்திக் கொண்டு வந்தேன், பின்னூட்டத்தில் மேற்கோளிட்டு கலாய்ப்பதற்காக. ஆனால் முடிவினைப் பார்த்ததும் மனம் பதறிவிட்டது...

இவ்வளவு அழகாக சென்ற கதை இப்படியா முடிய வேண்டும், பூனையையும் திட்டுவதிலும் பலனில்லை. பூனையை முதலாம் படி நுகரியாக படைக்காமல் இரண்டாம் படி நுகரியாக படைத்த ஆண்டவனை வேண்டுமென்றால் திட்டலாம். ஆம் இறை படைப்பின் தன்மை அத்தகையது. அதனை நாம் கடினமென்றாலும் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

இதனைப் படித்த போது என் வீட்டில் நடந்த ஒரு சம்பவம் என் ஞாபகத்திற்குள் சிக்கியது. ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டென நினைக்கின்றேன். அப்போது நாம் ஈழத்து இராணுவ நடவடிக்கையால் நம் வீடு விட்டு இடம் பெயர்ந்து நம் ஊரிலிருந்து தொலைவிலுள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தோம். அந்த வீடு எனக்கு நிரம்பவே பிடித்திருந்தது. அதற்கு பிரதான காரணம் அந்த வீட்டினைச் சூழ்ந்திருந்த தோட்டமும் அங்கு வாழ்ந்து வந்து சிறு பறவைகள் உயிரினங்களுமே. இப்படியாக நாள் கழிந்து கொண்டிருக்கையில் அந்த வீட்டில் எனகென ஒதுக்கப் பட்ட அறையின் கூரை முகட்டில் ஒரு சிறு பறவைக் கூடு முளைத்தது. அது என்ன பறவையென ஆராய்ட்சி செய்ததில் அவை ஒரு ஜோடி அழகிய "மணிப்புறா" வின் தங்ககமென அறிந்தேன். நாட்கள் செல்ல அங்கு இரண்டு முட்டைகளை அவை அடை காத்து வந்ததும் தெரிந்தது. நாட் செல்ல நாட் செல்ல அந்த புறாக்கள் என்னுடன் பழகிவிட்டன, நான் அங்குள்ள மேசையில் பரவும் தானியங்களை கீழே பறந்து வந்து கொத்திப் போகும் அவை. அவற்றின் மகிழ்சியில் திளைத்திருக்கையில் ஒரு நாள் நான் வீட்டின் வெளியே நின்றிருந்தேன் (இன்றும் நான் என்னைக் கடிந்து கொள்வதுண்டு, அன்று நான் ஏன் வீட்டின் வெளியே நின்றேன் என). அந்த அறையினுள் சட, சட எனவென ஒரு பறைஅவை இறக்கையடிக்கும் சத்தம் கேட்டது. என்ன எதுவென பதறி வீட்டினுள் நுளைந்தால் எனக்கு முன்னால் நம் வீட்டு நாய் (அது நம்முடையதல்ல, அந்த வாடகை வீட்டில் உதிரியாக கிடைத்தது) அந்த அறையினுள் புகுந்து அங்கிருந்த கட்டிலுக்கு கீழே புந்தது. அப்போது தான் எனக்கு விபரீதம் உறைத்தது. அந்த மணிப்புறாக்களில் ஒன்று கட்டிலுக்கு கீழே எப்படியோ சிக்கி சிறகடித்திருக்கின்றதெனவும் அதனை நான் பார்க்கும் முன் நம் நாய் பார்த்து விட்டதெனவும் உணர்ந்தேன்.

ஆனால் என்ன கொடுமை நான் விளைவின் விபரீதம் உணர்ந்து நாயினை தடுப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டிருந்தது. வாயில் கெளவிய புறாவுடன அந்த நாய் வெளியே ஓடி நாளியாயிருந்து. அறையெல்லாம் பஞ்சு, பஞ்சாக இறக்கை மயம்.....
நாய் ஓடிய பாதையில் துளித் துளியாய் இரத்த புள்ளிகள்....

தொடர்ந்த நாட்களில் ஜோடியை இழந்த ஒற்றைப் புறா கதறி, கதறி காணாமல் போய்விட்டது (இறந்து விட்டதென நினைக்கிறேன்). அந்த முட்டைகளும் பொரிக்காமலேயே வீணாகிவிட்டன......

அக்னி
25-11-2007, 09:09 AM
ஓவியன்...
நினைவுப் பேழையைக் கிளறினால், எல்லோருக்கும் இதுபோல நிகழ்வுகள் நிச்சயம் நிகழ்ந்திருக்கும்.
சின்னச் சின்னச் வலிகள்...

இதயம்
25-11-2007, 09:20 AM
பாவம் யவனிகாவின் கணவர். இதயமும், அன்புரசிகனும் சேர்ந்து அவர இப்படி ஓட்டுறீங்களே...

அவர் புலம்பினா, இப்படி புலம்புவார்... \\\"யவனிகா கிட்ட மாட்டிட்டு முழிக்கறது பத்தாதுனு, அன்புகிட்டயும், இதயத்துகிட்டயுமானு\\\". பாவங்க உங்க மச்சான் (யவனிகாவின் அ(ட)ப்பாவி கணவர்) விட்டுறுங்க... இல்லேனா அஸை தீர கொட்டிட்டு விட்டுறுங்க..

அப்படியெல்லாம் அத்தனை சுலபமா அந்தாளை விட்ர முடியாது ராஜா..! (என்னது அந்தாளையா..?-ன்னு வாய பொளக்காதீங்க..! அவருக்கு இதுவே அதிகம்..!!). பின்ன என்னவாம்..? ஊருக்கெல்லாம் ஆரோக்கியம் சொல்லிக்கொடுக்கிற புனித பணி செய்யற யவனிகாவுக்கு கணவரா அவர் இருந்துகிட்டு, கொஞ்சம் கூட புத்தியில்லாம(!) பாக்கெட், பாக்கெட்டா தம்மடிக்கிறது எப்படிப்பட்ட அக்கிரமம்.?? அது மட்டுமா..? என்னை மாதிரியே(!) கொடுத்து, கொடுத்து சிவந்த கரங்களை கொண்ட ( இது தான் நேரம்னு இடையிலேயே நம்மளும் கொஞ்சம் விட்டுக்கணும்..!!) யவனிகா, (பங்கள்தேஷி) கமல் மாதிரி காதல் இளவரசர்களுக்கு காதலை வளர்க்கச்சொல்லி லோன் கொடுத்தா அதை அவர் பாராட்டாம திட்டுறது எந்த வகையில் நியாயம்..? அட... இதெல்லாம் பரவாயில்லைங்க.. அவரு...வேணாம்.. இதுவே போதும்னு நினைக்கிறேன். இதுக்கு மேலேயும் என்னை பேச விடாம அவர் உடனடியா திருந்துறது எனக்கு, அவருக்கு, யவனிகாவுக்கு, மன்றத்துக்கு, ஏன் இந்த உலகத்துக்கே நல்லது..!! இல்ல.. மவனே.. !! போனா போகுதுன்னு யவனிகாவுக்காக பார்க்க வேண்டியிருக்கு...!!

ஏன் ராஜா.. ரொம்ப அமைதியான எனக்கே இவ்ளோ கோபம் வருதுன்னா... எதுக்கெடுத்தாலும் எகிறி, ரவுசு பண்ணுற உங்களுக்கு அவர் மேல எவ்ளோ கோபம் வரும்..?!!!

அன்புரசிகன்
25-11-2007, 09:28 AM
மவனே.. !! போனா போகுதுன்னு யவனிகாவுக்காக பார்க்க வேண்டியிருக்கு...!!

ஏன் ராஜா.. ரொம்ப அமைதியான எனக்கே இவ்ளோ கோபம் வருதுன்னா... எதுக்கெடுத்தாலும் எகிறி, ரவுசு பண்ணுற உங்களுக்கு அவர் மேல எவ்ளோ கோபம் வரும்..?!!!

அதுதானே....

அந்த மனுசன் புகைய இழுத்து வெளியில விட்டிருவாரு... பாதிக்கப்படப்போவது நம்ம மருமவப்புள்ளகதானே....

இல்லயா இதயமே..............

பூமகள்
25-11-2007, 09:34 AM
ஏன் ராஜா.. ரொம்ப அமைதியான எனக்கே இவ்ளோ கோபம் வருதுன்னா... எதுக்கெடுத்தாலும் எகிறி, ரவுசு பண்ணுற உங்களுக்கு அவர் மேல எவ்ளோ கோபம் வரும்..?!!!
இதயம் அண்ணா,
எங்கயோ போயிட்டீங்க...!! ;):rolleyes::icon_b:

ராஜா அண்ணாவுக்கு கோபமா...! :sprachlos020::eek:
அங்கு ஒரு எரிமலையே பொங்கிட்டு இருக்கு...!! :icon_ush::aetsch013:
அணல் இங்கு அடிக்குது பாருங்க...!! :lachen001:

இதயம்
25-11-2007, 09:38 AM
அதுதானே....

அந்த மனுசன் புகைய இழுத்து வெளியில விட்டிருவாரு... பாதிக்கப்படப்போவது நம்ம மருமவப்புள்ளகதானே....

இல்லயா இதயமே..............

அதெல்லாம் தெரிஞ்சா அவர் ஏன் இப்படி செய்றாரு...! நான் நம்ம புள்ளி ராஜாவோடு ஆலோசனை செஞ்சி, மாப்ளையின் இந்த கெட்டப்பழக்கத்துக்கு ஆப்பும், கொஞ்சம் அதிர்ச்சி வைத்தியமும் கொடுக்கலாம்னு பார்த்தா தங்கச்சி யவனிகா தாலிய கையில பிடிச்சி வச்சிக்கிட்டு எங்களைப்பார்த்து கெஞ்சறாங்க..!! தங்கச்சி சென்டிமெண்ட் எங்களை தகராறு பண்ணவிடாம தடுக்குது அன்பு..!! என்ன செய்யறது..?!!

அன்புரசிகன்
25-11-2007, 09:48 AM
தங்கச்சி யவனிகா தாலிய கையில பிடிச்சி வச்சிக்கிட்டு எங்களைப்பார்த்து கெஞ்சறாங்க..!! தங்கச்சி சென்டிமெண்ட் எங்களை தகராறு பண்ணவிடாம தடுக்குது அன்பு..!! என்ன செய்யறது..?!!

இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான்...........

சரி சரி... இதுக்கு மேலயும் சிங்கன் 5 ரூபா கணக்கு பார்ப்பாரு எங்குறீங்களா????

இதயம்
25-11-2007, 09:58 AM
இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான்...........

சரி சரி... இதுக்கு மேலயும் சிங்கன் 5 ரூபா கணக்கு பார்ப்பாரு எங்குறீங்களா????
அவரு நாம சொல்றதை கேக்க மாட்டார்னு தான் தோணுது. அதான் அவருக்கு ஆப்படிக்க ஆளெடுத்திட்டிருக்கோம். உங்களுக்கும் இந்த சேவையில் பங்கெடுத்துக்கணும்னு ஆசை இருந்தா அப்ளிகேஷனை ஃபில்-அப் பண்ணி கொடுத்து, நம்ம ஆப்படிப்போர் சங்கத்துல அங்கத்தினராயிடுங்க..!:D:D

சங்கத்துக்கு தலைவர் நம் மதிப்பிற்கும், மரியாதைக்குமுரிய நம்ம புள்ளி ராஜா தான்..!:icon_rollout::icon_rollout:

யவனிகா
25-11-2007, 10:05 AM
ஒரு விசயத்தை ரகசியமா வெச்சுக்கணும்னுனா நம்ம இதயம்..அன்பு கிட்ட தான் முதல்ல சொல்லணும். ஊரறிந்த ரகசியம் செய்திருவாங்க.வாய்க்கு அவல் போட்ட புண்ணியம் எஸ்.ராஜாவுக்கு.

நேசம்
25-11-2007, 10:15 AM
சங்கத்துக்கு தலைவர் நம் மதிப்பிற்கும், மரியாதைக்குமுரிய நம்ம புள்ளி ராஜா தான்..!:icon_rollout::icon_rollout:

ஒருத்த*ருக்கு அறிவுரை கூற*,அத*ற்கு அறிவுரை கூறுப*வ*ருக்கு அந்த* த*குதி இருக்க* வேண்டும்.அது இருந்து புள்ளி ராஜாவை த*லைவ*ராக* ஆக்கி இருந்தால் ச*ரிதான்

ஓவியன்
25-11-2007, 10:35 AM
ஏதோ ஒரு ராஜாவின் பேச்சுக்காக சும்மா சிவெனே என்று இருக்கிற யவனிகாவின் கணவருடன் ஏனப்பா வம்புக்கு போறீங்க இதயம் மற்றும் அன்பு....??

யவனிகாவின் கணவர் இதுபற்றி மூச்சு விடுவாறென்று நினைக்கிறீங்களா, அந்த மனுஷாள் அநியாத்திற்கு நல்லவர் என்று கேள்வி...!! :D:):D

யவனிகா
25-11-2007, 10:42 AM
ஏதோ ஒரு ராஜாவின் பேச்சுக்காக சும்மா சிவெனே என்று இருக்கிற யவனிகாவின் கணவருடன் ஏனப்பா வம்புக்கு போறீங்க இதயம் மற்றும் அன்பு....??

யவனிகாவின் கணவர் இதுபற்றி மூச்சு விடுவாறென்று நினைக்கிறீங்களா, அந்த மனுஷாள் அநியாத்திற்கு நல்லவர் என்று கேள்வி...!! :D:):D

ரொம்ம்ம்ப நல்லவரு...வாயில வெரல வெச்சாலும் கடிக்கத்தெரியாத அப்பாவி. அவர ஏங்க இப்படி கூட்டுச் சேந்து வாரறீங்க?இன்னைக்குப் பாத்து ஜமால சேர முடியாத அளவு வேலை வேற பெண்டு வாங்குது எனக்கு...

இதயம்
25-11-2007, 10:49 AM
ஒரு விசயத்தை ரகசியமா வெச்சுக்கணும்னுனா நம்ம இதயம்..அன்பு கிட்ட தான் முதல்ல சொல்லணும்.

எங்களை ரொம்ப புகழாதீங்க.. எங்க ரெண்டு பேருக்குமே புகழ்ச்சின்னா பிடிக்கவே பிடிக்காது..! என்ன அன்பு..??!!

நுரையீரல்
25-11-2007, 10:50 AM
இதயத்துக்கு கொழை(லை)வெறி இருக்குமோனு சந்தேகந்தான் பட்டேன். ஆனா அது இப்போ கன்ஃபர்ம் ஆயிடுச்சு.

இது தெரியாமா நேசமும், அன்பும் அவர் பின்னாடி கூட்டணி சேர்றது சரியில்ல. அருவா புடிக்கிற கை முன்னாடியும், பின்னாடியும் வெட்டும்.

நேசம் கூட்டணியா சேர்ற கூட்டணி, இருடி புள்ள என் மருமகன்கிட்ட சொல்லி லெஃப்ட், ரைட் வாங்குறேன்.

இதயம்
25-11-2007, 10:52 AM
ஒருத்த*ருக்கு அறிவுரை கூற*,அத*ற்கு அறிவுரை கூறுப*வ*ருக்கு அந்த* த*குதி இருக்க* வேண்டும்.அது இருந்து புள்ளி ராஜாவை த*லைவ*ராக* ஆக்கி இருந்தால் ச*ரிதான்

இதற்கு எங்கள் த(ச)ங்கத்தின் தங்கம், எழுச்சி வேந்தன், மக்கள் நாயகன் ராமரா....அடச்சே... (புள்ளி)ராஜா தக்க ஆதாரங்களுடன் பதிலடி கொடுப்பார்..!!

எல்லாம் ஜோரா ஒரு தடவை கைய தட்டுங்க..!!

நேசம்
25-11-2007, 10:54 AM
என் மருமகன்கிட்ட சொல்லி லெஃப்ட், ரைட் வாங்குறேன்.
அப்புறம் வாங்கமா என்ன செய்விங்க.இப்படி இருந்தா !

இதயம்
25-11-2007, 10:59 AM
இதயத்துக்கு கொழை(லை)வெறி இருக்குமோனு சந்தேகந்தான் பட்டேன். ஆனா அது இப்போ கன்ஃபர்ம் ஆயிடுச்சு.

இது தெரியாமா நேசமும், அன்பும் அவர் பின்னாடி கூட்டணி சேர்றது சரியில்ல. அருவா புடிக்கிற கை முன்னாடியும், பின்னாடியும் வெட்டும்.

நேசம் கூட்டணியா சேர்ற கூட்டணி, இருடி புள்ள என் மருமகன்கிட்ட சொல்லி லெஃப்ட், ரைட் வாங்குறேன்.

(கஞ்சா கருப்பு ஸ்டைலில் படிக்கவும்..)
http://www.webulagam.com/cinema/vip/0610/14/images/img1061014002_1_1.gif

யண்ணே..! என்னண்ணே இப்புடி சொல்லிப்புட்டிய..? தங்கச்சி யவனிய; அவர் வூட்டுக்காரர் பண்ற கொடுமைய கேள்விபட்டு கண்ல தண்ணி வந்துடிச்சி..! அதான் என்ன ஏதுன்னு உங்களைக்கூட்டிக்கிட்டு போய் கேக்கலாம்னு நெனச்ச என்னைப்போயி... என்னைப்போயி... இப்படி சொல்லிப்புட்டியளே..!! இது அந்த ஆண்டவனுக்கே அடுக்குமா..??

அன்புரசிகன்
25-11-2007, 11:08 AM
எங்களை ரொம்ப புகழாதீங்க.. எங்க ரெண்டு பேருக்குமே புகழ்ச்சின்னா பிடிக்கவே பிடிக்காது..! என்ன அன்பு..??!!

சாரி... ராங் நம்பர்.... :lachen001:
ஆமா... யாரு நீங்க...??? :icon_rollout:


(கஞ்சா கருப்பு ஸ்டைலில் படிக்கவும்..)
யண்ணே..! என்னண்ணே இப்புடி சொல்லிப்புட்டிய..? தங்கச்சி யவனிய; அவர் வூட்டுக்காரர் பண்ற கொடுமைய கேள்விபட்டு கண்ல தண்ணி வந்துடிச்சி..! அதான் என்ன ஏதுன்னு உங்களைக்கூட்டிக்கிட்டு போய் கேக்கலாம்னு நெனச்ச என்னைப்போயி... என்னைப்போயி... இப்படி சொல்லிப்புட்டியளே..!! இது அந்த ஆண்டவனுக்கே அடுக்குமா..??

அப்படியே தாமிரபரணி படத்தில் மண்பிள்ளையார்மேல சத்தியம் பண்ற காட்சி கண்முன்னே வந்தது.....

ஓவியன்
25-11-2007, 11:25 AM
யண்ணே..! என்னண்ணே இப்புடி சொல்லிப்புட்டிய..? தங்கச்சி யவனிய; அவர் வூட்டுக்காரர் பண்ற கொடுமைய கேள்விபட்டு கண்ல தண்ணி வந்துடிச்சி..! அதான் என்ன ஏதுன்னு உங்களைக்கூட்டிக்கிட்டு போய் கேக்கலாம்னு நெனச்ச என்னைப்போயி... என்னைப்போயி... இப்படி சொல்லிப்புட்டியளே..!! இது அந்த ஆண்டவனுக்கே அடுக்குமா..??

எப்படி முடியுது உங்களாலே இதயம்...!!

அப்படியே கஞ்சா கறுப்பு கண் முன்னே வந்திட்டார்....

அசத்திட்டீங்க, போங்க..!! :)

யவனிகா
25-11-2007, 11:35 AM
[QUOTE=இதயம்;302511 தங்கச்சி யவனிய; அவர் வூட்டுக்காரர் பண்ற கொடுமைய கேள்விபட்டு கண்ல தண்ணி வந்துடிச்சி..! அதான் என்ன ஏதுன்னு உங்களைக்கூட்டிக்கிட்டு போய் கேக்கலாம்னு நெனச்ச என்னைப்போயி... என்னைப்போயி... இப்படி சொல்லிப்புட்டியளே..!! இது அந்த ஆண்டவனுக்கே அடுக்குமா..??[/QUOTE]

கொஞ்ச நேரம் இப்படியே போச்சின்னா புள்ளி ராஜா கண்ல தான் தண்ணி வரும். போனாப் போகுது...எதோ தெரியாம துண்டக்குடுத்தாரு...அதான்..துப்பட்டியாத் திருப்பிக் குடுத்தாச்சல்ல...அடங்குங்க அன்பு அண்ணங்களா...

இதயம்
25-11-2007, 11:42 AM
அப்படியே கஞ்சா கறுப்பு கண் முன்னே வந்திட்டார்....வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்..

http://www.webulagam.com/cinema/cinenews/0610/28/images/img1061028005_1_1.gif

என்னது... கஞ்சா கருப்பு அங்க இருக்கா..? குடுத்த காசை வாங்கி ஆட்டய போட்டுட்டு போனவனை ஆளைக்காணோம்னு ஷூட்டிங்கெல்லாம் ஸ்தம்பிச்சி போய் ஆளாளுக்கு இங்க தேடிக்கிட்டிருக்கோம்.. அங்க ஓமன்ல வந்து என்ன பண்ணுது.? பயபுள்ளைய உடனே ப்ளைட் புடிச்சி மெட்ராஸ் வரச்சொல்லுப்பா..! சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு..!!

ஓவியன்
25-11-2007, 12:14 PM
வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்.

என்னது... கஞ்சா கருப்பு அங்க இருக்கா..? குடுத்த காசை வாங்கி ஆட்டய போட்டுட்டு போனவனை ஆளைக்காணோம்னு ஷூட்டிங்கெல்லாம் ஸ்தம்பிச்சி போய் ஆளாளுக்கு இங்க தேடிக்கிட்டிருக்கோம்.. அங்க ஓமன்ல வந்து என்ன பண்ணுது.? பயபுள்ளைய உடனே ப்ளைட் புடிச்சி மெட்ராஸ் வரச்சொல்லுப்பா..! சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு..!!

முடியலை இதயம்...!!
வடிவேலு கஞ்சா கருப்பைத் தேடிட்டு இருக்க அவர் சொல்றாரு...

சில்வண்டுதான் சிக்கும் சிறுத்தை சிக்காதிலே"னு..........

ஆதி
25-11-2007, 03:52 PM
ரயில் கடந்த பின்பும்
அதிர்ந்து கொண்டிருக்கும்
தண்டவாளமாய்..

இந்த பதிப்பும்
ஒரு கணத்த சொட்டை
மனதுக்குள் உகுத்து விட்டது..

சிறுவயதில் வளர்த்த
கோழிக்குஞ்சுகளும்..
உள்ளங்கையில் அவை
இரை கொத்தி தின்னுகையில்
ஏற்படும் கூச்சமும்..

சின்னக் காலெடுது
தலை கோதுவதும்
சிலுப்பி சிறகுதறுவதும்
சிறு சிறு இறகுகள்
உதிர்வதும்..

குறுவாய் திறந்து
'குய்' 'குய்' என
குயிலினும் இனியதாய் எழுப்பும்
குரலும்..

கரிய பனித்துளிப் போன்ற
கண்களும்..

எல்லாம் எல்லாம்
இன்னும்
இதயத்தின் இமைக் கடக்காத
நினைவுகளாய்..

பிள்ளைப் பருவத்தின்
அடிமண் அள்ளி..
ஈரமாய் இரைத்துவிட்டது
இந்த பதிப்பு..

எப்படி சிந்தித்தாலும்
பத்து ரூப்பாயில்
நான்கு மரணம்
என்பதை ஏற்க முடியவில்லை
என்னால்..

எப்போதும் போல்
இப்போதும் உள்ளுக்குள்
இருப்பவன்
எழுந்து..

"கறிக் கடைப் போட்டு
பிழைக்கிற மனிதர்கள் இருக்கும் போது
பூனைக்கள் கோழி தின்பது தவறா ?" என
வினவி விட்டு..
மீண்டும் அமர்ந்து
கிறுக்க ஆரம்பிக்கிறான்
என் மன தரைகளில்..

சகோதிரி யவனிகா
கணம் குழைத்து
கண்ணீர் குழைத்து..
பதிக்க பட்ட
பாரமான படைப்பு இது..

படித்த எல்லா மனங்களின்
ஆழம் வரைச் சென்று
ஈரம் எடுத்து வரும்
இந்த பதிப்பு
என்பதில் சந்தேகமில்லை..

வாழ்த்துக்கள்..

-ஆதி

யவனிகா
25-11-2007, 04:07 PM
அடடா...அழகான பின்னூட்டக் கவிதை ஆதி.
சில நேரங்களின் தேர்ந்த பின்னூட்டங்களுக்காகவே படைப்புகள் படைக்கலாம் போல.உள்வாங்கி,உணர்ந்து,உள்ளம் கசிந்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றி சகோதரரே.

எல்லோருக்குமே வளர்ப்புப் பிராணிகளின் இழப்பு வடுவாகத் தங்கி விடுகிறது. நான் எழுதிய சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் ஆகி விட்டது, இப்போது என் மகனுக்கு 8 வயது. ஆனாலும் கோழியை எங்கு பார்த்தாலும்..."நம்ம கோழிக்குஞ்சை பூனை தின்னுச்சல்லமா?" என்பான். கடைசியாக அவன் கேட்ட அன்றுதான் இதைப் பதிக்கத் தோன்றியது.

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதி.

ஆதி
25-11-2007, 04:25 PM
எல்லோருக்குமே வளர்ப்புப் பிராணிகளின் இழப்பு வடுவாகத் தங்கி விடுகிறது. நான் எழுதிய சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் ஆகி விட்டது, இப்போது என் மகனுக்கு 8 வயது. ஆனாலும் கோழியை எங்கு பார்த்தாலும்..."நம்ம கோழிக்குஞ்சை பூனை தின்னுச்சல்லமா?" என்பான். கடைசியாக அவன் கேட்ட அன்றுதான் இதைப் பதிக்கத் தோன்றியது.


உங்கள்
பிள்ளைத் தமிழால் ("நம்ம கோழிக்குஞ்சை பூனை தின்னுச்சல்லமா?")
பிறந்த
நான்கு வயது படைப்பு

இத்தனை ஆண்டுக்கு பிறகும்
வலிகளின் ஈரம் காயாமல்
வார்த்தைகளில் புகுதிவிட
உங்களால் இயன்றிருக்கிறது..

அதுவே இப்படைப்பின் பெரு வெற்றிக்கு பெரும் காரணம்..

-ஆதி

mukilan
25-11-2007, 05:15 PM
நீண்ட நாட்கள் மன்றம் வராததால் எனக்கு நிறைய நண்பர்களைத் தெரியவில்லை. என் தவறுதான். மன்னிக்க என்று சொல்லவும் என் மனம் ஒப்பவில்லை. ஒரு தவறுக்கு மன்னிப்புக் கேட்பவன் இனி அத்தவறைச் செய்யக் கூடாது என்ற எண்ணம் (கொள்கையெல்லாம் பெரிய வார்த்தைங்க!!!) உடையவன் நான். இனிமேலும் தொய்வில்லாமல் மன்றம் வர இயலுமா என்பது இன்னமும் உறுதியாகத் தெரியாததால்.

இந்த இட (டை)வெளியில் மன்றத்தில் வந்திருக்கும் எத்தனையோ படைப்பாளிகளை அறியாமல் விட்டேனே என்ற பரிதவிப்பு. ஆதியின் அற்புதமான பின்னூட்டத்தை எப்படிப் பாராட்டுவது? பென்ஸ் இளசு அண்ணா போன்றவர்கள் இப்படித்தான் படைப்பை அலசி ஆராய்ந்து பின்னூட்டமிடுவார்கள். யவனிகாவின் சில படைப்புக்களை மட்டுமே படித்துள்ளேன். நான் படித்தவரை நல்ல தெளிவான நடை, எழுத்து வன்மை என பாராட்ட பல விசயங்கள் இருக்கின்றன. அன்புரசிகன், ஓவியன், சிவாஜி, இதயம், ஷீ-நிசி(நானறியாத நிறையப் படைப்புக்கள் இன்னமும் இருப்பதால் இப்போதைக்கு இவர்கள் மட்டும்) என புதிய படைப்பாளிகளால் மன்றம் மன மகிழ்ந்து போயிருக்கிறது. எல்லோரையும் தனித் தனியே வாழ்த்த வாய்ப்பில்லாததால் வாழ்த்துகள் மன்றத்துச் சொந்தங்களே!

பூமகள்
25-11-2007, 05:43 PM
இந்த இட (டை)வெளியில் மன்றத்தில் வந்திருக்கும் எத்தனையோ படைப்பாளிகளை அறியாமல் விட்டேனே என்ற பரிதவிப்பு. ஆதியின் அற்புதமான பின்னூட்டத்தை எப்படிப் பாராட்டுவது? பென்ஸ் இளசு அண்ணா போன்றவர்கள் இப்படித்தான் படைப்பை அலசி ஆராய்ந்து பின்னூட்டமிடுவார்கள். யவனிகாவின் சில படைப்புக்களை மட்டுமே படித்துள்ளேன். நான் படித்தவரை நல்ல தெளிவான நடை, எழுத்து வன்மை என பாராட்ட பல விசயங்கள் இருக்கின்றன. அன்புரசிகன், ஓவியன், சிவாஜி, இதயம், ஷீ-நிசி(நானறியாத நிறையப் படைப்புக்கள் இன்னமும் இருப்பதால் இப்போதைக்கு இவர்கள் மட்டும்) என புதிய படைப்பாளிகளால் மன்றம் மன மகிழ்ந்து போயிருக்கிறது. எல்லோரையும் தனித் தனியே வாழ்த்த வாய்ப்பில்லாததால் வாழ்த்துகள் மன்றத்துச் சொந்தங்களே!
என்னை விட்டுட்டீங்களே...!! :frown::frown:

mukilan
25-11-2007, 05:55 PM
என்னை விட்டுட்டீங்களே...!! :frown::frown:

மன்னித்துக்கொள் சகோதரி! ஆம் நம் பாமகளின் படைப்புகளும்!:D

பூமகள்
25-11-2007, 05:58 PM
மன்னித்துக்கொள் சகோதரி! ஆம் நம் பாமகளின் படைப்புகளும்!:D
இப்பதான் பூ மலர்ந்து சிரிக்கிறது. :)
மிக்க நன்றிகள் முகிலன் அண்ணா. :D:D

அமரன்
25-11-2007, 06:18 PM
சொல்ல நினைத்ததை எல்லாரும் சொல்லிவிட்டார்கள். உசுப்பலில் பழையநினைவுகள் எழுந்துவிட அவற்றினுள் புகுந்து காணாமல் போகின்றேன்.

யவனிகா
25-11-2007, 07:57 PM
நல்லது முகிலன்...நீங்கள் பழைய தலையா? நான் புதியவரோன்னு ராகிங் செய்யப் புறப்பட்டு இருப்பேன். முன்னாலே சொல்லிட்டீங்க. அது சரி பூவ ஏன் லிஸ்டில சேக்காம விட்டீங்க. பாருங்க கோச்சிட்டு ராத்திரி சாப்பிடாமக் கொள்ளாமப் படுக்கப் போயிடுச்சு.

நேசம்
25-11-2007, 08:00 PM
ராத்திரி சாப்பிடாமக் கொள்ளாமப் படுக்கப் போயிடுச்சு.
ஒருவேளை பூ சமையலோ இருக்குமோ...?அதான் சும்மாவே படுத்துடுச்சு.

யவனிகா
25-11-2007, 08:00 PM
சொல்ல நினைத்ததை எல்லாரும் சொல்லிவிட்டார்கள். உசுப்பலில் பழையநினைவுகள் எழுந்துவிட அவற்றினுள் புகுந்து காணாமல் போகின்றேன்.

இப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது அமரன். ஆத்தா ஆடு வளத்தா...கோழி வளத்தா...எல்லாத்தையும் அமரு பிரியாணி போட்டு சாப்பிட்டுட்டு...அப்புறமா பிரிவுத்துயர் தாங்காம கண்ணீர் விட்ட கதை எதுவும் உங்ககிட்ட இல்லையா? கடேசிக்கு காக்கா கூட வளக்கலையா நீங்க....?

அமரன்
25-11-2007, 08:19 PM
இப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது அமரன். ஆத்தா ஆடு வளத்தா...கோழி வளத்தா...எல்லாத்தையும் அமரு பிரியாணி போட்டு சாப்பிட்டுட்டு...அப்புறமா பிரிவுத்துயர் தாங்காம கண்ணீர் விட்ட கதை எதுவும் உங்ககிட்ட இல்லையா? கடேசிக்கு காக்கா கூட வளக்கலையா நீங்க....?
இல்லாமலா...
காலங்காத்தால எழும்பி, பல்துலக்கமுதல் குட்மார்னிங்க் சொல்லி, பள்ளிக்கு தயாராகியதும்... தான்குடிச்ச மிச்சப்பாலை எனக்குத்தரும் வெள்ளாட்டுக்குட்டிக்கு. மாலை பள்ளியால் வந்ததும் பக்கத்துவீட்டுக்காரன் வேலியில் இருந்த கிளுவை மரக்கிளையை களவாடி, காலையில தந்த பாலுக்கு பரிசாகக் கொடுத்து........

இப்படி இருந்த உறவுக்கு வேட்டு வைத்தது ஒரு ஜோசியக்காரன். தோராயமாக அவன் சொன்னதை கேட்டு, எனக்கு ஏதும் ஆகிடக்கூடாதுன்னு என்மேல் உள்ள பிரியத்தில், எனது பிரியத்துக்குரிய ஆக்குட்டிக்கு சாவுக்கு தேதிகுறித்தார் தாத்தா. ஆட்டுக்குட்டிக்கே தேரியாத அதன் சாவுத்தேதி எனக்குத்தெரிந்து மருகி, வீட்டில் ரகளைபண்ணி ஆறுமாதத்துக்கு பின்னர் தோல்வி கண்டதை தட்டி எழுப்பி விட்டீங்களே யவனிகா.

ஆதி
25-11-2007, 08:40 PM
இல்லாமலா...
காலங்காத்தால எழும்பி, பல்துலக்கமுதல் குட்மார்னிங்க் சொல்லி, பள்ளிக்கு தயாராகியதும்... தான்குடிச்ச மிச்சப்பாலை எனக்குத்தரும் வெள்ளாட்டுக்குட்டிக்கு. மாலை பள்ளியால் வந்ததும் பக்கத்துவீட்டுக்காரன் வேலியில் இருந்த கிளுவை மரக்கிளையை களவாடி, காலையில தந்த பாலுக்கு பரிசாகக் கொடுத்து........

இப்படி இருந்த உறவுக்கும் வேட்டு வைத்தது ஒரு ஜோசியக்காரன். தோராயமாக அவன் சொன்னதை கேட்டு, எனக்கு ஏதும் ஆகிடக்கூடாதுன்னு என்மேல் உள்ள பிரியத்தில், எனது பிரியத்துக்குரிய ஆக்குட்டிக்கு சாவுக்கு தேதிகுறித்தார் தாத்தா. ஆட்டுக்குட்டிக்கே தேரியாத அதன் சாவுத்தேதி எனக்குத்தெரிந்து மருகி, வீட்டில் ரகளைபண்ணி ஆறுமாதத்துக்கு பின்னர் தோல்வி கண்டதை தட்டி எழுப்பி விட்டீங்களே யவனிகா.

உங்கள் துயரை உணரமுடிகிறது அமரன்..

நடக்குமென்பார் நடக்காது
நடக்காத்தென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காது என்பார் கிடைத்துவிடும்

- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இந்த கணிதர்களைத்தான் இன்னும் உலகம் நம்புகிறது..

பூமியும்தன் ரேகைப்பார்த்து சுற்று துவங்கினால் உயிரினம் உயிர் வாழுமா ?

பெரியார் 60-அகவையில் இறப்பார் என கணிதர்கள் கணித்தனர் 96 அகவைவரை உயிர் வாழ்ந்தார் இன்னும் பகுத்தறிவு செம்மலாய் நம் மனங்களில் வாழ்கிறார்

சினிமா துறைக்கும் உனக்கும் ராசி இல்லை என சினிமாவுக்கும் வரும் முன் தான் பார்த்த எல்லா கணிதர்களும் தடுத்து துறைக்குள் புகுந்து இன்றைக்கும் அவரைவிட சிறந்த திரைக்கதையாசிரியர் இந்தியாவிலேயே இல்லை எனும் பெயரும்.. இயக்குனர் இமயம் பாரதிராஜா : என்னிடம் இருந்த 'writer'களிலேயே சிறந்த writer-னா அது அவந்தான், writer-னா பாக்கியராஜ்தான் என பாராட்டப்பட்டவரும்.. புரட்சி தலைவர் எம்.ஜி.யார்-ஆல் தன் திரைவுலக வாரிசாக அறிவிக்கப்பட்டவரும் திரு.பாக்கியராஜ் அவர்கள்.. தன்னிடம் இருந்த எல்லா (-)களையும் (+)களாக மாற்றியவர் வென்றவர்..

நன்றி ஆதி

மலர்
26-11-2007, 10:46 PM
யவனியக்கா..
தாமதமான பின்னூட்டத்திற்கு வருந்துகிறேன்..
இனிமே கண்டிப்பா எல்லாபக்கமும் தினமும் போணுன்னு முடிவெடுத்துருக்கேன்....

செண்பகாவிலும் சரி இதுலேயும் சரி உங்க எதார்த்தமான எழுத்துநடை சூப்பர்...

நம்மைவிட சின்னகுழந்தைங்க எப்பவும் நாய் கோழி கிளின்னு அதுங்க மேல ரொம்ப பாசமா இருப்பாங்க...
குட்டீஸை எப்படிக்கா சமாளிச்சிங்க....

அப்புறம் நீங்களும் உங்கள் தங்கையையும் சேர்ந்து லூட்டி அடித்து பேசும் போது என் அக்காவோட பேசியது போல நினைவுகள்.. நானும் என் அக்காவும் இருந்தா வீடே கொஞ்சம் அதிர்ந்து போய் தான் இருக்கும்....

மலர்
26-11-2007, 10:47 PM
நேசம் கூட்டணியா சேர்ற கூட்டணி, இருடி புள்ள என் மருமகன்கிட்ட சொல்லி லெஃப்ட், ரைட் வாங்குறேன்.

ஹீ...சுகந்த ப்ரீத்தனிடமா..
இதுக்கெல்லாம் எங்க நேசம் கொஞ்சமும் அசர மாட்டார்...
அப்படித்தானே அண்ணா...

நுரையீரல்
27-11-2007, 03:57 AM
அப்புறம் நீங்களும் உங்கள் தங்கையையும் சேர்ந்து லூட்டி அடித்து பேசும் போது என் அக்காவோட பேசியது போல நினைவுகள்.. ....
எல்லார் வீட்டிலயும் வாயாடிக்கூட்டம் இருக்குதா...


நானும் என் அக்காவும் இருந்தா வீடே கொஞ்சம் அதிர்ந்து போய் தான் இருக்கும்....
ரெண்டு பேரும் அந்த அளவுக்கு Weight....ஆஆஆஆஆஆஆஆ............ மன்றமெல்லாம் அதிராதில்ல.....

நேசம்
27-11-2007, 07:31 AM
அந்த அளவுக்கு Weight....ஆஆஆஆஆஆஆஆ............ மன்றமெல்லாம் அதிராதில்ல.....

நான் குர*ல் தான் அவ்வ*ள*வு இனிமையா இருக்கும் என்று நினைத்தேன்.ராஜா சொல்லி தான் தெரியுது ஆஆஆஆஆஆஆஆ............

mukilan
28-11-2007, 04:12 AM
நல்லது முகிலன்...நீங்கள் பழைய தலையா? நான் புதியவரோன்னு ராகிங் செய்யப் புறப்பட்டு இருப்பேன். முன்னாலே சொல்லிட்டீங்க. அது சரி பூவ ஏன் லிஸ்டில சேக்காம விட்டீங்க. பாருங்க கோச்சிட்டு ராத்திரி சாப்பிடாமக் கொள்ளாமப் படுக்கப் போயிடுச்சு.

பழைய தலையா! நம் மன்றத்தில் பழைய பல தலைகள் இருந்தாலும் (நானெல்லாம் புதுசு! கண்ணா புதுசு ரேஞ்ச்) என்றும் மணியான ஒரே தலை ஒருவர்தான். வேண்டுமானால் அறிஞரிடம் கேட்டுப் பாருங்கள். :D:D