PDA

View Full Version : மனிதனை விட உயரமான கடல் தேள்



mgandhi
23-11-2007, 06:00 PM
மனிதனை விட உயரமான கடல் தேள்

லண்டன்: எட்டு அடி நீளமுள்ள பிரமாண்டமான கடல் தேள் இந்த பூமியில் ஒரு காலத்தில் வாழ்ந்துள்ளது. அதற்கான ஆதாரமாக, அந்த தேளின் கொடுக்கின் புதை படிவம் கிடைத்துள்ளது. பிரிட்டனில் உள்ள பிரிஸ்டோல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் சிமோன் பிராடி என்பவர் கூறியதாவது: ஜெர்மனியில் பிரம் என்ற இடத்தில் உள்ள சுரங்கத்தில் பிரமாண்டமான தேளின் கொடுக்கின் புதை படிவம் கிடைத்துள்ளது. கொடுக்கின் நீளம் மட்டும் 40 செ.மீ., கொண்டது. இதையடுத்து அந்த தேள் எட்டு அடி உயரம் கொண்டதாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வகை தேள்கள் கடலில் வாழ்பவை. 39 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை. டைனோசரஸ் காலத்துக்கு முந்தையவை.
நன்றி தினமலர்

பூமகள்
23-11-2007, 06:17 PM
ஆஹா.. எனக்கு டைனோசர் பற்றிய ஆராய்ச்சி என்றாலே மிக்க பிடிக்கும். இங்கு அந்த மாதிரியே ராட்சஸ தேளா?
கடவுளே..!!
நல்ல வேளை கடலுக்குள் இருந்தது. நிலத்தில் இருந்தால்.. மனிதர் நிலை??? ஐயகோ....!!

நல்ல தகவல். பகிர்ந்த காந்தி அண்ணாவுக்கு நன்றிகள். :)

அக்னி
23-11-2007, 06:24 PM
நல்ல வேளை கடலுக்குள் இருந்தது. நிலத்தில் இருந்தால்.. மனிதர் நிலை??? ஐயகோ....!!
இருந்தா... பூவுக்கு பரிசா தேள்குட்டி ஒன்று அனுப்பி வைப்போம் எல்லாருமாகச் சேர்ந்து...

பகிர்தலுக்கு நன்றி காந்திஜி...

பூமகள்
23-11-2007, 06:38 PM
இருந்தா... பூவுக்கு பரிசா தேள்குட்டி ஒன்று அனுப்பி வைப்போம் எல்லாருமாகச் சேர்ந்து...
அனுப்புங்க.. அனுப்புங்க..!

அந்த தேள் குட்டியை உங்க சட்டைப்பையில் வைத்து உங்களுக்கே தெரியாம வழித்துணைக்கு கூட அனுப்புறேன்..! :icon_b:

நேசம்
23-11-2007, 06:51 PM
ஆச்சர்யமுட்டும் விசயமாக இருக்கிறது.இதை வச்சு படம் வருமா!

அக்னி
23-11-2007, 07:03 PM
அந்த தேள் குட்டியை உங்க சட்டைப்பையில் வைத்து உங்களுக்கே தெரியாம வழித்துணைக்கு கூட அனுப்புறேன்..! :icon_b:
அதான் பெரிய தேள் குட்டி என்று சொல்லீட்டமில்ல...
அப்புறம் எப்பிடி நம்ம பையில...
ஹி ஹி... நடக்கிற கதையா சொல்லுங்க...

அன்புரசிகன்
23-11-2007, 07:15 PM
நடக்கிற கதையா சொல்லுங்க...

கதை நடக்குமா???

பூ... அப்டீன்னா ஓடுற படுக்கும் சாப்பிடும் இப்படியான கதைகள் எல்லாம் மருவாதயா சொல்லுங்க...

பூமகள்
23-11-2007, 07:18 PM
அதான் பெரிய தேள் குட்டி என்று சொல்லீட்டமில்ல...
அப்புறம் எப்பிடி நம்ம பையில...
ஹி ஹி... நடக்கிற கதையா சொல்லுங்க...
நீங்க தேளு குட்டின்னு தானே சொன்னீங்க..!:icon_b:
அது நிச்சயம் உங்க சட்டைப் பையின் அளவுக்கு சரியா தான் இருக்கும்..!
ஹி ஹி..!!:lachen001:

பூமகள்
23-11-2007, 07:19 PM
கதை நடக்குமா???
பூ... அப்டீன்னா ஓடுற படுக்கும் சாப்பிடும் இப்படியான கதைகள் எல்லாம் மருவாதயா சொல்லுங்க...
ம்.... நடக்கும்... ஓடும்... படுக்கும்...சாப்பிடும்.... :mini023:
இப்படியே அன்பு அண்ணா கேள்வி கேட்டா... கடிக்கவும் செய்யும்...!!:sauer028:
:rolleyes: :lachen001:

நேசம்
23-11-2007, 07:19 PM
ஓடுற படுக்கும் சாப்பிடும் கதைகள் மருவாதயா சொல்லுங்க...

எல்லாம் சேர்ந்தது தான் கதை.இல்லையா அக்னி(?)

அன்புரசிகன்
23-11-2007, 07:20 PM
எல்லாம் சேர்ந்தது தான் கதை.இல்லையா அக்னி(?)

இதென்ன :icon_rollout: தனமாக இருக்கு....

நேசம்
23-11-2007, 07:25 PM
இதென்ன :icon_rollout: தனமாக இருக்கு....
இது தான் நல்ல கதையா இருக்கு !:lachen001:

தாமரை
23-11-2007, 08:47 PM
ஆஹா.. எனக்கு டைனோசர் பற்றிய ஆராய்ச்சி என்றாலே மிக்க பிடிக்கும். இங்கு அந்த மாதிரியே ராட்சஸ தேளா?
கடவுளே..!!
நல்ல வேளை கடலுக்குள் இருந்தது. நிலத்தில் இருந்தால்.. மனிதர் நிலை??? ஐயகோ....!!

நல்ல தகவல். பகிர்ந்த காந்தி அண்ணாவுக்கு நன்றிகள். :)


மனிதன் உண்டானதே 4 லிருந்து 6 லட்சம் ஆண்டுகளுக்குள் தான்.. டைனோசார் காலத்தில் மனிதன் கிடையாது.. ஆரம்ப கால பாலூட்டிகள் மட்டுமே உண்டு...

அதனால டை நோ சார்.

ஓவியன்
23-11-2007, 11:35 PM
தகவலுக்கு நன்றி காந்தி அண்ணா!!

செல்வன் அண்ணா..!!

டை நோ சார்னு பெயரை வைச்ச டனோசார் எப்படி சார் அழிஞ்சு போச்சு..??

அக்னி
24-11-2007, 12:23 AM
டை நோ சார்னு பெயரை வைச்ச டனோசார் எப்படி சார் அழிஞ்சு போச்சு..??
DYE NO சா(ர்)
ஒருவேளை தமிழைக் கடைப்பிடித்ததால் சலுகை கொடுத்திருப்பார்களோ...

அமரன்
24-11-2007, 06:32 AM
தகவலுக்கு நன்றி காந்தி அண்ணா!!

செல்வன் அண்ணா..!!

டை நோ சார்னு பெயரை வைச்ச டனோசார் எப்படி சார் அழிஞ்சு போச்சு..??
டை நோவை சார்ந்ததால் டை மூர்க்கத்துடன் அரவணைத்து இருக்குமோ?

ஓவியன்
24-11-2007, 06:39 AM
டை நோவை சார்ந்ததால் டை மூர்க்கத்துடன் அரவணைத்து இருக்குமோ?

அரவம் அணைத்தால்
டை மூர்க்கமாகும் தானே...!!

அமரன்
24-11-2007, 06:41 AM
அரவம் அணைத்தால்
டை மூர்க்கமாகும் தானே...!!
அரவண்டை ஆனால் என்ன ஆகும்?

lolluvathiyar
24-11-2007, 07:34 AM
நல்ல வேளை கடலுக்குள் இருந்தது. நிலத்தில் இருந்தால்.. மனிதர் நிலை??? ஐயகோ....!!
[/COLOR]

அப்ப மனிதன் இனம் இல்ல, இருந்திருந்தா கூட அதுகல அழிச்சிருப்பாங்க
இந்த பெரிய தேளின் கறி சூப்பரா இருக்குமோ.
, 20000 ஆண்டுகளுக்கு முன் சைபீரியா பகுதியில் வாழ்ந்த மம்மூத் என்ற யானை இனத்தை மனிதர்கள் அடியோடு அழித்து விட்டார்கள் அல்லவா.

mgandhi
24-11-2007, 07:36 AM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/fpn05-1.jpg
மனிதனை விட உயரமான கடல் தேள் : உயிர் வாழ்ந்ததற்கான ஆதாரம் கிடைத்தது


பழங்காலத்தில் ராட்சத உருவம் கொண்ட பூரான், தேள், கரப்பான்பூச்சி, தட்டார பூச்சி போன்றவை வாழ்ந்து இருக்க கூடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. ஆனால், முதல் முறையாக அதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. தற்போதுள்ள சாரசரி மனிதனை விட, பழமையான தேள் மிகவும் உயரமானது. பிரமாண்டமான தேள் கொடுக்கின் புதை படிவத்தை மார்கஸ் போஸ்மான் என்ற ஆய்வாளர் உட்பட சிலர் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வகை தேள்கள் சூகேனிபல்ஸ்' என்ற சொந்த இனத்தையே தின்னும் உயிரினத்தை சேர்ந்தவை. பல கோடி ஆண்டுகளுக்கு முன் வளி மண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு அதிகமாக இருந்து இருக்கும். அது இதுபோன்ற உயிரினங்கள் பிரமாண்டமாக வளர வழி வகை செய்து இருக்கும். அல்லது தங்களின் எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி கொள்ள தேவையான உடல் உறுப்புகளை காலப்போக்கில் அவை பெற்று இருக்கும். இது கூட பிரமாண்டமான தேள்கள் உருவெடுக்க காரணமாக இருந்திருக்க கூடும். பிரமாண்டமான தேள்கள் உருவாக என்ன காரணம் என்பதில் விஞ்ஞானிகளிடம் இது போன்ற இருவேறு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இன்னும் தெளிவான கருத்து கிடைக்கவில்லை.இவ்வாறு சிமோன் பிராடி கூறினார்.

மாதவர்
02-12-2007, 09:28 AM
பயமாக இருக்கிறது