PDA

View Full Version : உ.பி.யில் தொடர் குண்டுவெடிப்பு



mgandhi
23-11-2007, 04:31 PM
உத்திர பிரதேசத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடிப்பு...* மாநிலம் முழுவதும் பதட்டம்

உத்திர பிரதேசத்தில் இன்று அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடித்ததில் 10 பேர் பலியாகினார்கள் . இதனால் மாநிலம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் லக்னோ கோர்ட்,பைசாபாத் கோர்ட் மற்றும் வாரணாசி கலெக்டர் அலுவலகங்களில் இன்று அடுத்தடுத்து குண்டு வெடித்தது.இக்குண்டுவெடிப்பில் 10 பேர் பலியாகினார்கள் பலர் படுகாயமடைந்தனர்.குண்டு பகல் 1 மணி முதல் 1.30 மணிக்குள் வெடித்தது.3இடங்களில் நடந்த குண்டு்வெடிப்புகளும் சிவில் கோர்ட் அருகில் நடந்துள்ளன. வாரணாசியில் இரண்டு இடங்களில் குண்டுவைக்கப்பட்டிருந்தது.குண்டுவெடிப்பில் பைசாபாத்தில் 5 பேரும், வாரணாசியில் 4 பேரும் பலியானதாக சிட்டி எஸ்.பி., கூறினார்.மேலும் 20 பேர் படுகாயமடைந்ததாள்ளதாகவும் கூறினார்.மாநில போலிஸ் அதிகாரிகள் கூறுகையில் தீவிரவாதிகளின் வழக்குகளில் ஆஜராக வக்கீல்கள் மறுத்ததால் அவர்களை குறிவைத்து குண்டுவெடிப்பு நிகழ்த்தியிருக்கக்கூடும் என்றுகுறினர்,*பைசாபாத்தில் 2 சைக்கிள்களில் குண்டுவைக்கப்பட்டிருந்ததாகவும் கூறினர். வாரணாசியில் குண்டுவெடித்த இடத்தில் இரும்பு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லக்னோவில் கோர்ட் அருகே எ*லெக்டிரி சிட்டி போர்டு அருகே நடந்த குண்டுவெடிப்பு சாதரணமானது என்றும் இதில் எவரும் காயமடையவில்லை என்று மாநில போலீஸ் ஐஜூ ஜெயின் கூறினார். குண்டுவெடிப்பிற்கு தீவிரவாத சதியே காரணமென்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. உத்திர பிரதேசம் பெரிய மாநிலம் அதனால் இத்தகைய அசாமபாதவிங்கள் நடைபெறலாமென்றும், மாநில அமைச்சர் மாநிலத்தின் வளர்ச்சி பொறுக்காமல் பொறாமைப்படும் சிலர் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறினார். குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையடுத்து சிறப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். குண்டுவெடிப்பு நிபுணர்களும் குண்டுவெடித்த இடங்களையும் கோர்ட்டையும் சோதனையிட்டனர்.

அக்னி
23-11-2007, 04:36 PM
அப்பாவிப் பொதுமக்கள் மீதான, ஆயுத வன்முறைகள் என்று தணியுமோ..?
இறந்தவர்களுக்கு ஆத்ம சாந்தியும், அவர்கள் குடும்பத்தினர், மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதலும் கிடைக்கப் பிரார்த்திப்போம்...

lolluvathiyar
24-11-2007, 07:38 AM
அதிக உயிரழப்பு இல்லை. இந்த குண்டு வெடிப்பு வக்கீல்களில் நடவடிகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க காட்டபட்டது. சிறிய ரக குண்டுகளே பயன்படுத்தபட்டது.
இது போன்ற செய்திகள் இந்தியர்களுக்கு பழகி விட்டது.

நேசம்
24-11-2007, 08:00 AM
வாத்தியார் சொல்வது போல் இது போன்ற சம்பவங்கள் வாழ்க்கையில் இந்தியர்களுக்கு பழகிவிட்டது.வழக்கம் போல் அந்த இயக்கம்,இந்த இயக்கம் என்று கூறாமல் விசாரணை நேர்மைய மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கவேண்டும்

நுரையீரல்
24-11-2007, 08:06 AM
வாத்தியார் சொல்வது போல் இது போன்ற சம்பவங்கள் வாழ்க்கையில் இந்தியர்களுக்கு பழகிவிட்டது.வழக்கம் போல் அந்த இயக்கம்,இந்த இயக்கம் என்று கூறாமல் விசாரணை நேர்மைய மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கவேண்டும்
குற்றவாளியை கண்டுபிடித்து தண்டித்தால் மட்டும் இந்த குண்டுபிடிப்புகள் நின்றுவிடுமா?

நேசம்
24-11-2007, 08:37 AM
குற்றவாளியை கண்டுபிடித்து தண்டித்தால் மட்டும் இந்த குண்டுபிடிப்புகள் நின்றுவிடுமா?

இது விவாத* ப*குதி இல்லை ராஜா.நானும் அப்ப*டியும் சொல்ல*வில்லை.இந்தியாவில் ம*ட்டுமில்லை.வேறு எந்த* நாட்டிலும் ந*டைப்பெறும் உரிமை போரட்ட*ங்க*ளாக* இருக்க*ட்டும்,அவ*ற்றை அடுக்குமுறை கொண்டு நிறுத்த* முடியாது.அத*னால் அவை வ*லுப்பெறும் என*ப்து நித*ர்ச*ன* உண்மை.