PDA

View Full Version : விமான நிலையமும் பூவகமகிழ்வும்..!பூமகள்
23-11-2007, 04:04 PM
விமான நிலையமும் பூவகமகிழ்வும்..!


நாள்: 17-11-2007
இடம்: பூமகள் இல்லம்

விமான நிலையத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தார் என் உடன்பிறப்பு. எங்களின் தீபாவளியை சிறப்பிக்க அழைத்து வரப்பட்டிருந்த எனது 70 வயது கடந்த அன்பு அப்புச்சி*. காது கேட்கும் திறன் கொஞ்சம் கொஞ்சமாய் அவரை விட்டுப் போய் வெகுநாட்கள் ஆகியும் எங்களின் உதட்டசைவை பார்த்து புரிந்து கொள்ளும் "நவீன கண்டுபிடிப்பாளி" என் தாத்தா.

என் தாத்தாவையும் விமான நிலையத்துக்கு அண்ணாவை வழி அனுப்ப அழைத்துப் போகனும் என்பது எனது அப்பாவின் விருப்பம். அம்மாவோ, அவர் நடப்பதே சிரமம். எப்படி அங்கு வந்து நடக்க முடியும் என்று கூறி வேண்டாம் என்றாலும், விடாப்பிடியாய் என் தந்தை, "நான் பார்த்துக் கொள்கிறேன். அவரால் முடியும். வந்து தன் பேரனைப் பார்த்து சந்தோசமா இருக்கட்டும்." என்றும், இதைக் கட்டாயம் நாம் செய்ய வேண்டுமென்றும் சொல்லி சம்மதிக்க வைத்தார்.

"கார் வரும், கிளம்புங்க!" என்று சொன்னதும், அவரது முகத்தில் கலவரம். ஊருக்கா திருப்பி அனுப்புகிறார்கள் என்பது போல் நினைத்தது அவர் உள்ளம். கேட்டது அவரது இதயம் வாய்மொழியாய்.. "ஊருக்கா??!!" என்று அதிர்ச்சியாய்..! அவருக்கு புரிய வைக்க அதிக சிரமம் எடுக்க வேண்டியிருந்தது. அதை விட அந்த தவறான கருத்தை மாற்றி அவரை மகிழ்விக்கும் பொறுப்பு எனக்கு கூடுதலாக இருந்தது. ஆகவே, ஒருவழியாய் "விமான நிலையத்துக்கு எல்லோரும் செல்கிறோம்" என்று புரியவைத்த பின் தான் நிம்மதி அடைந்தேன்.

அவர் நடக்கும் அழகே அலாதி. மழலை தத்தி தத்தி முதன்முதலில் நடை பழக அடி எடுத்து வைப்பதைப் போல் இருக்கும். மீண்டும் மழலைப் பருவத்துக்கே போய்விட்டாரோ என்று நினைக்கத்தோன்றும். அந்த தள்ளாத வயதிலும் அவருள் இருக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் எங்களுக்கு சொல்லிக் கற்றுத்தராமல் வாழ்ந்து கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று உணரத் தோன்றும்.

ஒருவழியாய், காரில் ஏறி, என் தாத்தா, அப்பா, அண்ணா, மற்றும் உறவினர் உடன் விமானநிலையம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தோம். விமான நிலையம் சென்று சேர்ந்ததும், என் பிரிய அப்புச்சி, மெல்ல இறங்கி தத்தித் தத்தி நடக்க, என் கைகள் அவரது வலது கரத்தையும் என் உறவினர் அவரது இடது கரத்தையும் மெல்ல பிடித்து குழந்தையை அழைத்துச் செல்வது போல் அழைத்துச் சென்றோம். தந்தை அண்ணவோடு பயணத்து சுமைகளைச் தள்ளியபடி முன்னே சென்று கொண்டிருந்தார்.

வெகு நேரம் வெளியில் நின்ற எங்களை, ஒரு விமான அதிகாரி அணுகி, (ஒரு சில மாதங்கள் முன்பு வரை, பாதுகாப்பு கருதி, உள்ளே அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.) உள்ளே செல்லவும் அனுமதி உண்டென்றும், மேலே சென்று விமானம் புறப்படுவதையும் காணலாம் என்றும் சொல்லி கடவுச்சீட்டு தலைக்கு முப்பது ரூபாய் என்று சொல்லிச் சென்றார்.

எல்லோருக்கும் கடவுச் சீட்டு வாங்கிக் கொண்டு மெல்ல உள்ளே நுழைந்தோம். அந்த விமான நிலையத்திலேயே மூத்த வயோதிகர் என் அப்புச்சியாகத்தான் இருக்க வேண்டும். வந்திருந்த ஒன்றிரண்டு வெளிநாட்டுகாரர்களும், வட இந்திய கன்னிகளும் சீன்ஸ் டீஷர்ட் சகிதமாய் உலவும் மேல் தட்டு அரிதாரம் பூசிய அழகுகளும் ஓரக் கண்ணாலும் வியந்த விழியாலும் என் தாத்தாவை பார்த்தது என் கண்களில் பட்டது. (எப்படி அவங்க பார்த்தது உனக்கு தெரிஞ்சது பூவுன்னு கேட்காதீங்க..!!:aetsch013:;))

நம் தமிழ் மண்ணின் கலாச்சாரத்தை, மாண்பை பறைசாற்றும் செயலாக எங்களின் செயலைப் புரிந்து அந்த கண நேரத்தில் அவர்கள் நினைத்திருந்தால், அது நம் தமிழ் மண்ணுக்கு நான் செய்த சிறு தொண்டாகக் கருதுவேன்.

சிறிது நேரம் எல்லாவிடமும் அமர்ந்தபடியே பார்த்து, தனது அன்பு பேரனோடு கேள்விகள் கேட்டு, அவர் செல்லும் பயணச் சீட்டை வாங்கிப் பார்த்து பூரித்து முகம் மலர்ந்து இருந்த என் அப்புச்சியைப் பார்க்க கண்கள் பனித்தது.

விமானம் கிளம்ப அரைமணி நேரமே உள்ள நிலையில் என் சகோதரர் உள்ளே செல்ல, நாங்கள் மேல் சென்று அவர் செல்லும் விமானம் பார்க்க விழைந்தோம். கிட்டத்தட்ட இரு மாடி உயரம் இருந்த அந்த பார்வையர் கூடத்துக்கு, வேடிக்கைப் பார்க்க, மெல்ல அவரை கைத்தாங்களாய் பயத்துடனே அழைத்துச் சென்றோம்.

அங்கு அமர்ந்திருந்த ஒரு கடவுச் சீட்டு ஆய்வாளர், வியப்புடன் பார்த்து சிரித்தார். என் தாத்தாவினை அன்போடும் ஆதரவோடும் மெல்ல அழைத்து ஒவ்வொரு படியாய் அவரே ஏறி வரும்படி மெதுவாக மேல்தளத்துக்கு வந்தோம். கூட்டம் இல்லாததால் நெரிசல் இன்றி
அந்த குறுகிய படிகளில் சங்கடமின்றி ஏற முடிந்தது நிம்மதி அளித்தது.

அங்கு சென்றால், சர்கஸ் கூட்டம் போல் அலைமோதும் கூட்டம். விமான வழி அனுப்புபவர்களை விட, சனிக்கிழமை ஆதலால் விமான நிலையத்தை தன் குழந்தைகளுக்கு சுற்றிக் காட்ட ஏராளமானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். சரியான இடம் தேடி, அதே சமயம் என் அண்ணா புறப்படும் விமானத்தை என் அப்புச்சி பார்க்கும் வண்ணம் தகுந்த இடத்தில் அமரச் செய்தோம்.

சுட்டிக் காட்டி, விமானத்தினை அடையாளப்படுத்தி என் தாத்தாவுக்குப் புரியவைத்தேன். அவர் கேட்ட கேள்வி, "நேரே அண்ணா இருக்கும் நாட்டிற்கே த்தூவாக இது போகுமா?" சிறு குழந்தை கேட்பது போல் இருந்தாலும், அன்புடன் பதிலளித்தேன். வயதானவர்கள் குழந்தைகள் போல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று எங்கோ படித்தது எவ்வளவு உண்மை என்று நிதர்சனத்தில் புரிந்தது.

விமானம் கிளம்பியதும், மீண்டும் கைத்தாங்களாய் பிடித்து மெல்ல கீழே படிகளில் இறங்க வைத்தோம். அவரும் மனத்தின் தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வந்தார். கிராமத்திலிருந்து வந்திருக்கும் என் தாத்தாவுக்கு இது வரை அவர் வாழ்வில் வந்திராத ஒரு சந்தோசமான நிகழ்வு இது.

மெல்ல படிகளினைக் கடந்து முகப்பிற்கு வருகையில், 50 வயது மதிக்கத்தக்க கடவுச் சீட்டு சோதனையாளர் கேட்டது தான் கோபமும் ஆத்திரமும் வரவழைத்தது.

"இவர்களை எல்லாம் ஏன் அழைத்து வருகிறீர்கள்? வீட்டிலேயே விட்டுவிட்டு வர வேண்டுயது தானே?" என்று என் தந்தையைப் பார்த்துக் கேட்டார்.(என்னவோ இவரை நாங்கள் ரொம்பவே தொந்தரவு செய்தது போல்) என் தந்தைக்கு ஆத்திரம் வந்தாலும் பொறுத்துக் கொண்டு வந்தார். இந்த செய்தி எனக்கு அங்கு நடந்ததே தெரியவில்லை. என்னிடமும் அந்த நபர், "உங்க தாத்தாவுக்கு ஒரு 100 வயது இருக்குமா?" என்று கேட்டாரே பார்க்கனும், நான் அவரது வயதுக்கு மரியாதை கொடுத்து, "அதை விட கம்மி தாங்க" என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அங்கிருந்த முக்கால் வாசிப் பேர்களின் கண்கள், அழகிய பெரிய கண்களும், ஒரு வாரம் சவரம் செய்யாத வெண் தாடி மீசையும், சிவந்த மேனியும், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, பச்சை வண்ண துண்டு சகிதமான ஒரு கிராமத்து மங்களகரமான தேஜஸ் நிறைந்த தோற்றமும் கொண்ட என் தாத்தாவின் மேல் தான் இருந்தது.

வெளிநாட்டுகாரர்கள் வியப்போடு எங்களின் செயலைப் பார்த்து அன்புடன் வழிவிட்டு நின்றனர்.

வீட்டிற்கு அழைத்து வந்ததும் என் அம்மாவிடம் சொல்லி அவரது முகம் பரவசமடைந்த நிலை பார்க்கனுமே,....!! மகிழ்ச்சியில் அவரது முகத்தின் தேஜசும், ஜொலிஜொலிப்பும் காண கண்கள் கோடி வேண்டும்...!:)

இந்த... இந்த... இந்த... மகிழ்ச்சிக்காகத்தான் அழைத்துச் சென்றேன் என்று தந்தை கூறி பெருத்த சந்தோசமடைந்தார். விமான நிலையத்தில் அந்த நபர்களின் கேள்விகள் பற்றி என்னிடம் அப்போது தான் விளக்கினார். யாருடைய துணையையும் கேட்காமல், நாங்களே அன்போடு அழைத்து சென்ற போதே இப்படி கேட்கும் மனித மனம் புரியாதவர்கள் பற்றி என்னவென்று சொல்ல??

அவர்களுக்கும் வயோதிகம் வரும்.. நடை தளரும்.. அன்று அவர்கள் என்ன விரும்புவார்கள் என்று அவர்கள் உள்ளம் நினைத்துப் பார்க்கட்டும்..! :frown:"முதியவர்களுக்குப் பிடித்ததைக் கேட்டுச் செய்வதை விட, அவர்களின் மனத்தின் ஆழத்தில் இருக்கும் ஆசைகளை குறிப்பறிந்து செய்து விட்டால் அவர்கள் மகிழ்ச்சியுடன் நீண்ட ஆயுளோடு வாழ முடியும்"

என்று இதன் மூலம் என் தந்தை சொல்லிக் கொடுக்காமல் செய்தே காட்டி எங்களுக்கு வழிகாட்டி, என் மனத்தில் ஓர் உயர்ந்த இடத்தில் வீற்றிருக்கிறார்..!

குறிப்பு:
அப்புச்சி* - அம்மாவின் தந்தை

அக்னி
23-11-2007, 04:16 PM
முதலில் எல்லாரையும்விட உங்கள் தந்தைமேல் மதிப்பு அதிகரிக்கின்றது.
பெற்றவர்களையே உதாசீனம் செய்யும் இக்காலத்தில்,
தனது மாமனாரின் ஆழ்மனக் குறிப்பறிந்து மகிழ்விக்க நினைத்துச் செயற்படுத்தும்,
உயர்ந்த மனதுக்குச் சொந்தக்காரர் உங்கள் தந்தை என்று பெருமைபட்டுக்கொள்ளுங்கள்.

அந்த தள்ளாத வயதிலும் அவருள் இருக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் எங்களுக்கு சொல்லிக் கற்றுத்தராமல் வாழ்ந்து கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று உணரத் தோன்றும்.

உடல் தளர்ந்தபோதும் தளராத உறுதி கொண்ட மனநிலை.
எதிர்பார்க்காது, செயலில் வாழ்ந்து காட்டும் உறுதி...
பல்லாண்டு, மகிழ்வாக, சுகதேகியாக வாழ இறைவன் ஆசிகள் என்றும் அவரில் நிறைந்திருக்கட்டும்....

அடுத்து, பூமகளின் மென்மனது...
பாராட்டுகின்றேன். சிறந்த நல்வாழ்வு கிடைக்க பிரார்த்திக்கின்றேன். வாழ்த்துகின்றேன்.

"காவோலை விழக் குருத்தோலை சிரிக்கும்"
என்பார்கள்.
குருத்தோலையில் உணராதவர்கள், காவோலையாக வீழும்போது நிச்சயம் இன்னொரு குருத்தோலையினால் உணர்த்தப்படுவார்கள்.

அழகிய அனுபவப் பகிர்வுக்கு நன்றி...

நுரையீரல்
23-11-2007, 04:25 PM
ஆகா, பூவா கொக்கா?

பெரியவர்களை மதிப்பது மட்டும் அவர்களுக்குப் போதாது. அவர்களுக்கும் ஆயிரத்தெதெட்டு ஆசைகள் இருக்கும், ஆசைகளையும் சிறியவர்களிடம் சொல்லமாட்டார்கள். எங்கே சிறியவர்களுக்கு சிரமமாகிவிடுமோ என்ற சிறு தயக்கம் (பெருந்தன்மை) தான் காரணம். அதைப் புரிந்து கொண்டு நாம் தான் அதைச் செய்ய வேண்டும்.

ஏதேதோ விஷயங்களையெல்லாம் எழுதி நீத்தி சொல்லும் இந்தப் பகுதியில், முதியவர்களின் ஆசையை அறிந்து அதை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லித்தந்த பூவுக்கு நன்றிகள்.

ஒவ்வொரு செயலுக்கும் பலன் உண்டு என்று சொல்லித்தந்தது தான் நம் சமூகம். அந்தவகையில், அப்புச்சியின் ஆசையை நிறைவேற்றிய பூவு - தன் முதிர்ச்சியடையும் காலம் வரை நோய் நொடியின்றி வாழவும், அப்போது பூவின் பேராண்டி பூவின் கையைப் பிடித்து நிலவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல வாழ்த்துகிறேன்.

பாரதி
23-11-2007, 04:33 PM
கோவை விமான நிலையம் திருச்சி விமான நிலையத்தைக் காட்டிலும் சிறப்பாகத்தான் இருக்கும். அருமையாய் எழுதி, அப்புச்சியை மகிழ வைத்த நிகழ்வை தந்த பூவை அகமகிழ பாராட்டுகிறேன். "கண்ணிருந்தும் குருடராய் இருக்கும்" நபர்கள் என்றைக்குத்தான் திருந்துவார்களோ..?

பூமகள்
23-11-2007, 04:50 PM
பெற்றவர்களையே உதாசீனம் செய்யும் இக்காலத்தில்,
தனது மாமனாரின் ஆழ்மனக் குறிப்பறிந்து மகிழ்விக்க நினைத்துச் செயற்படுத்தும்,
உயர்ந்த மனதுக்குச் சொந்தக்காரர் உங்கள் தந்தை என்று பெருமைபட்டுக்கொள்ளுங்கள்.
உண்மை தான் அக்னி அண்ணா. பணிவோடு ஒப்புக் கொள்கிறேன். அவர் தந்தையாக கிடைக்க மாதவம் செய்திருக்கனும் என்று தோன்றுகிறது. :)


உடல் தளர்ந்தபோதும் தளராத உறுதி கொண்ட மனநிலை.
எதிர்பார்க்காது, செயலில் வாழ்ந்து காட்டும் உறுதி...
பல்லாண்டு, மகிழ்வாக, சுகதேகியாக வாழ இறைவன் ஆசிகள் என்றும் அவரில் நிறைந்திருக்கட்டும்....

அடுத்து, பூமகளின் மென்மனது...
பாராட்டுகின்றேன். சிறந்த நல்வாழ்வு கிடைக்க பிரார்த்திக்கின்றேன். வாழ்த்துகின்றேன்.
மிக்க நன்றிகள் அண்ணா. நல்லவர்களின் பிராத்தனைகள் பொய்ப்பதில்லை.:icon_rollout:

"காவோலை விழக் குருத்தோலை சிரிக்கும்"
என்பார்கள்.
குருத்தோலையில் உணராதவர்கள், காவோலையாக வீழும்போது நிச்சயம் இன்னொரு குருத்தோலையினால் உணர்த்தப்படுவார்கள்.
அழகிய அனுபவப் பகிர்வுக்கு நன்றி...
நிச்சயம் அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்பது திண்ணம். ஆனால், அவர்களுக்கு எந்த துயரும் வரக்கூடாது. புரிந்துமட்டும் விட்டால் போதும் என்றே இறைவனை வேண்டுகிறேன்.

உங்களின் ஊக்கமான முதல் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றிகள் அக்னி அண்ணா.

பூமகள்
23-11-2007, 05:01 PM
பெரியவர்களை மதிப்பது மட்டும் அவர்களுக்குப் போதாது. அவர்களுக்கும் ஆயிரத்தெதெட்டு ஆசைகள் இருக்கும், ஆசைகளையும் சிறியவர்களிடம் சொல்லமாட்டார்கள். எங்கே சிறியவர்களுக்கு சிரமமாகிவிடுமோ என்ற சிறு தயக்கம் (பெருந்தன்மை) தான் காரணம். அதைப் புரிந்து கொண்டு நாம் தான் அதைச் செய்ய வேண்டும்.
உண்மை தான் ராஜா அண்ணா.

பெரியவர்கள் பல சமயங்களில் தாங்கள் சொன்னது போல் தான் இருப்பார்கள்.

உதாரணமாக,
எங்கள் வீட்டின் தொலைக்காட்சியில் போகோ சேனல் பார்த்துக் கொண்டிருந்தால், என் தாத்தாவுக்கு தமிழ் அலைவரிசையில் நிகழ்ச்சியினை குறிப்பாக இரவு 9 மணிக்கு கோலங்கள் பார்க்க வேண்டும். (காது கேட்காட்டியும் காது மெசின் வைத்து சிறிது நேரம் பார்ப்பார்.) அவர் மணியைப் பார்ப்பார்.. 9 ஆனாலே நானே அவருக்காக அலைவரிசையை மாற்றிவிட்டு பார்க்க வைப்பேன்.

அவர் கேட்காட்டியும், நானே அவர் குறிப்பறிந்து பல முறை இப்படி தமிழ் அலைவரிசைகளில் வரும் பழைய படங்களையும் அவர் விரும்பிப் பார்க்கும் காரணத்தால் போட்டுவிடுவேன்.

ஒவ்வொரு செயலுக்கும் பலன் உண்டு என்று சொல்லித்தந்தது தான் நம் சமூகம். அந்தவகையில், அப்புச்சியின் ஆசையை நிறைவேற்றிய பூவு - தன் முதிர்ச்சியடையும் காலம் வரை நோய் நொடியின்றி வாழவும், அப்போது பூவின் பேராண்டி பூவின் கையைப் பிடித்து நிலவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல வாழ்த்துகிறேன்.
ஹா ஹா ஹா...! மிக்க சந்தோசம் அண்ணா.:icon_rollout:
அப்போ....... எனக்கு முன்னால் ராஜா அண்ணா தன் பேரன் பேத்திகளோடு நிலாவில் இருப்பார் இந்த அன்புத்தங்கை பூவை வரவேற்க..!!:icon_b:

பூமகள்
23-11-2007, 05:04 PM
கோவை விமான நிலையம் திருச்சி விமான நிலையத்தைக் காட்டிலும் சிறப்பாகத்தான் இருக்கும். அருமையாய் எழுதி, அப்புச்சியை மகிழ வைத்த நிகழ்வை தந்த பூவை அகமகிழ பாராட்டுகிறேன். "கண்ணிருந்தும் குருடராய் இருக்கும்" நபர்கள் என்றைக்குத்தான் திருந்துவார்களோ..?
எனக்கு திருச்சி விமான நிலையம் பற்றித் தெரியாது. தாங்கள் சொன்னதால் ஓரளவு புரிகிறது.

உங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் கோடி பாரதி அண்ணா. :)

அன்புரசிகன்
23-11-2007, 06:50 PM
மூத்தவர்களின் ஏக்கங்களும் பரிதவிப்பும் உங்கள் எழுத்தில் தெரிந்தன... எனது அம்மம்மாவிற்கு வீட்டில் அனைவரும் வந்தால் அவரின் குதூகலத்திற்கு அளவே கிடையாது. படுக்கையாக கிடப்பவர் எழுந்து சமையல் செய்து தருவார். இதுவரை நான் ஒடியல் கூழ் குடித்தது என்றால் அவர் கையால் தான்.

பாராட்டுக்கள் பூமகள்...

திருச்சி விமான நிலையம் சென்னை விமான நிலையம் ... எது சிறந்தது??? மிகுதியை நான் ஊகித்துக்கொள்கிறேன். :D


உள்ளே செல்லவும் அனுமதி உண்டென்றும், மேலே சென்று விமானம் புறப்படுவதையும் காணலாம் என்றும் சொல்லி கடவுச்சீட்டு தலைக்கு முப்பது ரூபாய் என்று சொல்லிச் சென்றார்.

எல்லோருக்கும் கடவுச் சீட்டு வாங்கிக் கொண்டு மெல்ல உள்ளே நுழைந்தோம்.

30 ரூபாவிற்கு கடவுச்சீட்டா....... :D :D :D கடவுச்சீட்டு என்பது PASSPORT அல்லவா... நான் நினைக்கிறேன்.... நீங்கள் கூறவந்தது அனுமதிச்சீட்டு... (Entrance Ticket)

அக்னி
23-11-2007, 06:54 PM
30 ரூபாவிற்கு கடவுச்சீட்டா....... :D :D :D கடவுச்சீட்டு என்பது PASSPORT அல்லவா... நான் நினைக்கிறேன்.... நீங்கள் கூறவந்தது அனுமதிச்சீட்டு... (Entrance Ticket)
ஆமா ரசிகரே...
நீங்க சொல்வது சரிதான்...

நேசம்
23-11-2007, 06:57 PM
இரண்டாம் முறையாக குழந்தையா மாறுவது வயதான காலத்தில் தான்.வாழ்க்கையில் எதையோ தேடியே காலத்தை கடந்து,முதியவர்கள் ஸ்தானத்தை அடைந்ததும்,அது வரை அவர்களது மனதில் புதைந்து கிடந்த அவர்களது ஆசைகள் வெளிப்படும்.மேலும் தனிமையும் அவர்களை நோகடிக்கும்.அதனால் அவர்களது உணர்வுகளை புரிந்து,மேலும் அவர்கள் தனிமை உணராது அவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.நாளை நாமும் முதியவர்கள் என்று உணர்ந்து ..!

தாமரை
23-11-2007, 07:19 PM
பூமகளே
நீ மலரின் மகளா
பூமியின் மகளா
இத்தனைப் புதையல்கள்
உன்னிடம்

இளசு
23-11-2007, 07:36 PM
"முதியவர்களுக்குப் பிடித்ததைக் கேட்டுச் செய்வதை விட, அவர்களின் மனத்தின் ஆழத்தில் இருக்கும் ஆசைகளை குறிப்பறிந்து செய்து விட்டால் அவர்கள் மகிழ்ச்சியுடன் நீண்ட ஆயுளோடு வாழ முடியும்"

என் தந்தை சொல்லிக் கொடுக்காமல் செய்தே காட்டி எங்களுக்கு வழிகாட்டி, என் மனத்தில் ஓர் உயர்ந்த இடத்தில் வீற்றிருக்கிறார்..!


ஊனமுற்றவர்களை வயோதிகர்களை
பொதுவாய் சகமனிதனை..
எப்போது மதித்து ஒரு சமூகம் நடத்துகிறதோ -
அப்போது மட்டுமே அது ''வளர்ந்த'' சமூகம் ஆக முடியும்..

இதை ஊனமுற்றவரை பூட்ஸ் காலால் போலீஸ்காரர் மிதிக்கும்
படப்பதிவை (அளித்தவர்: இதயம்) பார்த்தபோதே சொன்னேன்..

இங்கே அந்த இருவர் சொட்டிய விஷத்துளிகளால்
பால்நிகழ்வு பாழ்படாமல் பாதுகாத்த அப்பா - வந்தனைக்குரியவர்!

இந்த நெகி(நிக)ழ்வை அழகாய் வீடியோ படப்பதிவு போல்
நேர்த்தியாய்ப் பதிந்த பாமகளுக்கு அன்புப் பாராட்டுகள்!

முதியோர் மனவியலை ஒரு வரியில் மிக அழகாகச் சொன்ன
பாமகளுக்குப் பரிசாய் மயூ-வின் இந்தசகதைச்சுட்டியும்...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8171

வட்டியாய் ஆயிரம் இ-காசுகளும்!

வாழ்க அப்பாவும் அப்புச்சியும் -
அவர்களைப்போல் நல்லவர்கள் எல்லாரும்!

பூமகள்
23-11-2007, 07:45 PM
ஊனமுற்றவர்களை வயோதிகர்களை
பொதுவாய் சகமனிதனை..
எப்போது மதித்து ஒரு சமூகம் நடத்துகிறதோ -
அப்போது மட்டுமே அது ''வளர்ந்த'' சமூகம் ஆக முடியும்..
இந்த நெகி(நிக)ழ்வை அழகாய் வீடியோ படப்பதிவு போல்
நேர்த்தியாய்ப் பதிந்த பாமகளுக்கு அன்புப் பாராட்டுகள்!
வட்டியாய் ஆயிரம் இ-காசுகளும்!
வாழ்க அப்பாவும் அப்புச்சியும் -
அவர்களைப்போல் நல்லவர்கள் எல்லாரும்!
சமூகம் சார்ந்த அழகான கண்ணோட்டம் இளசு அண்ணா.
நிச்சயம் மயூவின் கதையைப் படிப்பேன் அண்ணா.

உங்களின் பின்னூட்டத்துக்காக தவம் இருந்தது இப்பதிவு. கிடைத்தது கண்டு அளவில்லா மகிழ்வு..! :icon_rollout:
உங்களின் அன்பு பாராட்டுதலுக்கும் ஆயிரம் இ-காசு பரிசளிப்பிற்கும் நன்றிகள் கோடி..!

பூமகள்
23-11-2007, 07:47 PM
பூமகளே
நீ மலரின் மகளா
பூமியின் மகளா
இத்தனைப் புதையல்கள்
உன்னிடம்
பூமகளினைச் சுற்றி
மணக்கும் பூவாசம்...!
அதை பகிர்கையில்
தெரிகிறது உங்கள்
நேசம்..!!!

நன்றிகள் கோடி தாமரை அண்ணா. :)

மதி
24-11-2007, 02:12 AM
மிகவும் நெகிழ்ச்சியான ஒரு விஷயம். வயதில் மூத்தவரிடத்தில் அன்பும் மரியாதையும் அவரின் விருப்பங்களையும் அவாவையும் குறிப்பறிந்து நடந்து கொள்ளும் உங்கள் குடும்பத்தாரின் பாங்கு மெச்சத் தக்கது.

தமக்கும் வயதாகும் என்றறியாமல் சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களைப் பற்றி நாம் கவலைப் படுவானேன். காலம் பதில் சொல்லும். இதில் தன் மாமனாரின் சந்தோஷத்தை பெரிதாய் கொண்டு அதற்கான முயற்சி மேற்கொண்ட உங்கள் தந்தை மிகச் சிறந்தவர். இத்தகைய மருமகன் கிடைக்க உங்கள் அப்புச்சி உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்.

நுரையீரல்
24-11-2007, 03:37 AM
இரண்டாம் முறையாக குழந்தையா மாறுவது வயதான காலத்தில் தான்.வாழ்க்கையில் எதையோ தேடியே காலத்தை கடந்து,முதியவர்கள் ஸ்தானத்தை அடைந்ததும்,அது வரை அவர்களது மனதில் புதைந்து கிடந்த அவர்களது ஆசைகள் வெளிப்படும்.மேலும் தனிமையும் அவர்களை நோகடிக்கும்.அதனால் அவர்களது உணர்வுகளை புரிந்து,மேலும் அவர்கள் தனிமை உணராது அவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.நாளை நாமும் முதியவர்கள் என்று உணர்ந்து ..!
அதுக்காக நீங்கள் இரண்டாம் முறை குழந்தை ஆனதை இப்படியா புட்டு வை(வி)ப்பது.

இனிமேல் நான் உங்களை கிண்டல், கேளி எல்லாம் செய்யமாட்டேன். எல்லாம் வயதான உங்கள் (பெருசு) மேல் உள்ள மரியாதை தான்.

நுரையீரல்
24-11-2007, 03:40 AM
ஹா ஹா ஹா...! மிக்க சந்தோசம் அண்ணா.:icon_rollout:
அப்போ....... எனக்கு முன்னால் ராஜா அண்ணா தன் பேரன் பேத்திகளோடு நிலாவில் இருப்பார் இந்த அன்புத்தங்கை பூவை வரவேற்க..!!:icon_b:
அது என்னமோ தெரியல பூவு... எனக்கு என்னமோ வாழ்க்கையில் ஒரு தடவையாவது நிலவுக்கு போகவேண்டுமென்று ஆசை.

சிவா.ஜி
24-11-2007, 03:41 AM
காலச்சுழலில் மீண்டும் பிள்ளைபிராயத்துக்கு வந்துவிட்ட பெருமகனை குழந்தையாய் பாவித்து மகிழ்வூட்டியது மனதுக்கு மிகவும் நெகிழ்வூட்டியது.
எதுவுமே செய்யவில்லையாயினும் எரிச்சலுக்கு ஒன்றும் குறைவைக்காத அந்த கையாலாகாத அதிகாரியை நினைத்தால் அருவெறுப்பாய் இருக்கிறது.பூமகள் உங்கள் தந்தை நடத்திக்காட்டிய வாழ்வியல் பாடத்தால் பயனடைந்தோம் நாங்களெல்லாம்.அவருக்கு என் வந்தனங்கள்.குறிப்பறிந்து,மழலையான மனம் அறிந்து நடந்துகொண்ட உன் செயல்கள் மனம் நிறைக்கின்றன.வாழ்த்துகள் தங்கையே.

நேசம்
24-11-2007, 03:48 AM
உங்கள் மேல் உள்ள மரியாதை தான்.

பல் செட் இல்லமால் சாப்பிட்ட:wuerg019: கஷ்டமா இருக்குன்னு சொன்னிங்க்லே ? புதுசு வாங்கியச்சா

mukilan
24-11-2007, 03:49 AM
தலைமுறை இடைவெளி என்பது இன்று மிகவும் அதிகமாகி விட்டது. இன்றைய நமது தலைமுறையின் பார்வையும் நேற்றைய தலைமுறையின் பார்வையும் வேறு வேறாக இருப்பது உண்மை. ஆனால் நேற்றைய அந்த தலைமுறை மீண்டும் குழந்தைப் பருவத்திற்கு சென்று விடுவதால் ஒரு குழந்தையை அணுகுவது போலத்தான் அணுக வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் நிகழ்வு இது. பாராட்டுக்கள் பூமகள்.

lolluvathiyar
24-11-2007, 07:28 AM
அருமையான செயல் உங்கள் தந்தை செய்தது, பூமகள் பெரிசுக அப்படி ஒன்னும் பெரிசா ஆசைபாடுதக, அவுங்களுக்கு இருக்கரது சின்ன சின்ன ஆசைகள் அதை பூர்த்தி பன்னரது அப்படி ஒன்னும் கஸ்டமான காரியம் அல்ல. அவுங்க சந்தோசபடர மாதிரி நடந்து கிட்டம்னா அந்த சந்தோசத்த பாத்து நமக்கு சந்தோசமா இருக்கும்.
ராஜா சொன்ன மாதிரி பூமகளின் பேரனோ பேத்தியோ பூமகள நிலாவுக்கு கூட்டீட்டு போவாங்க. எப்படி இருந்தாலும் புள்ளி ராஜாவுட ரவுசுக்கு அவருடைய பேரன் அவர எங்க கூட்டீட்டு போவானு சொல்ல முடியாது

சுகந்தப்ரீதன்
24-11-2007, 08:54 AM
வாழ்த்துக்கள் பூமகள் தங்களின் செயல்களுக்கு.. நிஜமாலுமே மகிழ்ச்சி அளிக்கிறது நீங்கள் தாத்தாவை குழந்தையாக பாவிப்பது..! எந்த ஒரு விசயமும் ஆரம்பித்த இடத்திலேயே வந்துமுடிவதுதான் இயற்கை...இதில் மனிதன் மட்டும் விதிவிலக்கா என்ன..? குழந்தையாக ஆரம்பித்து குழந்தையாக மாறி மடிவதுதான் முழுமையான வாழ்வாகும்.. அந்த வாழ்வை பூரண அன்புடன் பெற்றவர்கள் பெரும் பாக்கியசாலிகள்..அந்த விதத்தில் உங்களுடைய அப்புச்சி கொடுத்து வைத்த குழந்தைதான்...!இன்றைய சூழலில் காணக்கிடைக்காத காட்சியை காணப்பெற்றதால்தான் அத்தனை பேரும் உங்களையே உற்று நோக்கியிருக்கிறார்கள்.. தங்களின் தந்தையைத்தான் போற்றவேண்டும்..!

அமரன்
24-11-2007, 09:02 AM
யார் சொன்னது
தலைமுறை இடைவெளி
அதிகமென்று...

மூன்றாம் தலைமுறைக்கும்
முதலாம் தலைமுறைக்கும்
எத்தனைப் பொருத்தப்பாடு..

அவர்கள் இரண்டாவது
தலைமுறையால் இரண்டாவது
நடைமுறை நிகழ்தகவில்..
இருந்தாலும்
பூவின் மூன்றுதலைமுறையும்
ஒருங்கமைத்த வாசத்தை
பரப்புவது ஏது ஆச்சரியம்..

இதயம்
24-11-2007, 09:39 AM
இங்கு படிக்கும் சம்பவங்கள் நான் உணர்ந்த அனுபவங்களோடு அற்புதமாக பொருந்தி, என் நினைவலைகளை கிளறிவிட்டால் அதற்கு நான் பின்னூட்டம் இடுவதை என்னாலேயே கட்டுப்படுத்த முடியாது. அப்படி என்னை பின்னூட்டம் எழுத தூண்டியது தங்கை பூவினுடைய இந்த பதிவு. கால மாற்றம் பழைய நாகரீகங்களை மீண்டும் கொண்டு வந்து, புதிய நாகரீகமாக அவதாரம் எடுக்க வைப்பது போல் குழந்தையாக இருக்கும் மனிதன் மீண்டும் (மனதால்) குழந்தையாவது முதுமையில்.! அதனால் தான் குழந்தைகளுக்கு முதியவர்களையும், முதியவர்களுக்கு குழந்தைகளையும் வெகுவாக பிடிக்கிறது. குழந்தை பருவத்தில் மனிதனின் எதிர்கால அவன் வளர்ச்சி, அவனால் பெறப்போகும் பயன்கள், அவன் செய்யப்போகும் சாதனைகள் என்ற எதிர்பார்ப்பில் வெகு அக்கறை எடுத்து பார்த்துக்கொள்ளும் பெற்றோரும், மற்றோரும் முதுமைப்பருவம் எத்தகைய பயனும், எதிர்பார்ப்பும் அற்றது என்பதாலேயே முதியவர்களை புறக்கணித்து விடுகிறார்கள். இந்த வயோதிகத்தால் முதியவர்களுக்கு ஏற்படும் உடல் அசௌரிகரியங்கள் கொடுக்கும் வலியை விட அவர்களுக்கு அதிக வலி கொடுப்பது மனிதர்களின் புறக்கணிப்பு.!

இந்த முதுமை என்பது எல்லோருக்கும் விதிக்கப்பட்டது என்பதும், ஒரு நேரத்தில் அனைவருக்கும் அது வந்தே தீரும் என்பதும், அந்த வயோதிக காலத்தில் தான் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றை ஒவ்வொருவரும் உணர்ந்தால் முதியவர்களை நிச்சயம் யாரும் புறக்கணிக்க மாட்டார்கள். நான் ஏற்கனவே சொன்னது போல் என் தாத்தாவின் இழப்பு எனக்கு என்றைக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு. என் திறமையின் மேல் நம்பிக்கை வைத்து நான் ஜெயிப்பேன் என்று சொன்னவர், எங்கள் காதலை ஆதரித்து, நாங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வோம் என்று கணித்தவர் அவர். இன்று அவர் கணிப்புகள் எல்லாம் உண்மையானது. ஆனால் அதை காண தான் அவர் இன்றில்லை. அவர் இருக்கும் போது அவரைப்பற்றி கவலைப்படாதவர்கள் இன்று மனம் கலங்கி வருந்துவது வெய்யிலின் அருமை நிழலில் தெரியும் என்ற பழமொழியை தான் நினைவூட்டுகிறது. இருந்தும் காலம் கடந்த ஞானம் வந்து என்ன பயன்..?

இந்த பதிவை படித்தவுடன் என் தாத்தாவின் மறு பிரதிபலிப்பாகத்தான் பூவின் தாத்தாவை காண்கிறேன். என்னுடைய இடத்தில் பூவை வைத்துப்பார்த்து சந்தோஷம் அடைந்தேன். முதியவர்கள் நம் குழந்தையை போன்றவர்கள். தன் தேவை தெரியப்படுத்த முடியாதவர்கள், தீர்த்துக்கொள்ள வழியறியாதவர்கள். அவர்களை ஒரு கைக்குழந்தையை போல் கண்ணும், கருத்துமாக கவனிப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை. ஊரைப்பற்றி கவலைப்படாதவர்கள் கூட, தன் உழைப்பால் நம் குடும்பத்தை உருவாக்கி, வளர்த்த முதியவர்களை அரவணைப்பது மிக, மிக அவசியம். அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது பணமோ, சொத்தோ, ஆடம்பர வசதிகளோ அல்ல..! மரணத்தின் வாசலுக்கு மிக அருகில் வந்துவிட்ட அவர்களுக்கு தேவையானது நம் அன்பும், அரவணைப்பும் தான். அவர்களின் தேவையை நிறைவேற்றி எந்த ஒரு துன்பமும் இல்லாமல் நிம்மதியாக வழி அனுப்பி வைக்க வேண்டியது நம் கடமை. அந்த புண்ணியம் தான் நம்முடைய வாழ்க்கைப்பாதையிலும், மரணத்தை நோக்கிய பாதையிலும் பூக்களை நிரப்பும். அவர்களை நிராகரித்தால் முட்களாலும், கற்களாலும் நாம் இரணகளமாக்கப்பட்டு கடும் சித்திரவதையுடன் கூடிய பயணமாக நம் மரணம் இருக்கும்..!!

பூவின் இந்த உன்னத செயலுக்காக என் மனமார்ந்த பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறென். அப்புச்சியின் மீதான பாசத்தால் பூவின் வாழ்க்கைப்பாதை பூக்களாலேயே நிரப்பப்படுகிறது..!! வாழ்த்துக்கள் பூ..!!

பூமகள்
24-11-2007, 10:07 AM
பாராட்டுக்கள் பூமகள்..
30 ரூபாவிற்கு கடவுச்சீட்டா....... :D :D :D கடவுச்சீட்டு என்பது PASSPORT அல்லவா... நான் நினைக்கிறேன்.... நீங்கள் கூறவந்தது அனுமதிச்சீட்டு... (Entrance Ticket)
மிக்க நன்றிகள் அன்பு அண்ணா. :)
அனுமதிச் சீட்டு, நுழைவுச் சீட்டு என்று பல வார்த்தைகள் இருக்கு அண்ணா.
தூய தமிழாக இருக்கட்டுமே என்று கடவுச் சீட்டு என்றேன்.
தவறா சரியா என்று தெரியவில்லை.. தெரிந்தவர் சொல்லுங்களேன். :confused:

இதயம்
24-11-2007, 10:13 AM
மிக்க நன்றிகள் அன்பு அண்ணா. :)
அனுமதிச் சீட்டு, நுழைவுச் சீட்டு என்று பல வார்த்தைகள் இருக்கு அண்ணா.
தூய தமிழாக இருக்கட்டுமே என்று கடவுச் சீட்டு என்றேன்.
தவறா சரியா என்று தெரியவில்லை.. தெரிந்தவர் சொல்லுங்களேன். :confused:

நானும் சொல்ல நினைத்தது இது. ஆனால், அதை முற்றிலும் மறுக்கும் அளவுக்கு அதில் தவறில்லை என்று உணர்ந்ததால் நான் சொல்லவில்லை. கடவுச்சீட்டு என்பதும் இன்னொரு தேசம் செல்ல கொடுக்கப்படும் அனுமதிச்சீட்டு தானே..? நாம் அதை தேசம் தொடர்பான வகையில் பார்த்ததாலேயே அது தேசத்திற்கு தொடர்புடையது மட்டும் என்பது போல் ஆகிவிட்டது. ஆனால், உண்மை என்னவென்றால் இரண்டுமே உள்நுழைய உதவும் ஒரு ஆதாரம்..!!

இலங்கையர்கள் பாஸ்போர்ட் என்பதை கடவுச்சீட்டு என்று புழக்கத்தில் சொல்வதாலேயே அன்பும் அதை கெட்டியாக பிடித்துக்கொண்டுவிட்டார் (இலங்கை பாஸ்போர்ட்டில் தமிழில் கடவுச்சீட்டு என்று தான் இருக்கும். அதாவது எல்லை கடக்க அனுமதிக்கும் சீட்டு..!!)

பூமகள்
24-11-2007, 10:15 AM
இரண்டாம் முறையாக குழந்தையா மாறுவது வயதான காலத்தில் தான்.அதனால் அவர்களது உணர்வுகளை புரிந்து,மேலும் அவர்கள் தனிமை உணராது அவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.நாளை நாமும் முதியவர்கள் என்று உணர்ந்து..!
நிதர்சனமான வாக்கு நேசம் அண்ணா. :)
வயதானவர்களை எப்படி கவனிப்பது என்று நம் குழந்தைகள் நம்மைப் பார்த்துத்தான் கற்றுக் கொள்கிறார்கள். நாளை அப்படியே தான் நம்மையும் கவனிப்பார்கள்.
பின்னூட்டத்துக்கு நன்றிகள் அண்ணா.

மிகவும் நெகிழ்ச்சியான ஒரு விஷயம். இதில் தன் மாமனாரின் சந்தோஷத்தை பெரிதாய் கொண்டு அதற்கான முயற்சி மேற்கொண்ட உங்கள் தந்தை மிகச் சிறந்தவர். இத்தகைய மருமகன் கிடைக்க உங்கள் அப்புச்சி உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்.
உண்மை தான் அண்ணா. என் தாத்தா மிக மிக உன்னதமான ஒரு உழைப்பாளி. தனக்கு தள்ளாமை வரும் வரை உழைத்துக் கொண்டே இருந்தவர். அந்த அற்புதமான மனிதருக்கு நிச்சயம் மரியாதை செய்வது எங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.
மிக்க நன்றிகள் மதி அண்ணா.

அக்னி
24-11-2007, 10:20 AM
தூய தமிழாக இருக்கட்டுமே என்று கடவுச் சீட்டு என்றேன்.
தவறா சரியா என்று தெரியவில்லை.. தெரிந்தவர் சொல்லுங்களேன். :confused:
கடவுச்சீட்டு என்றால் அன்புரசிகன் சொன்னதுபோல் Passport.
(முதலே சொல்லி இருக்கமில்ல...)

பூமகள்
24-11-2007, 10:21 AM
அது என்னமோ தெரியல பூவு... எனக்கு என்னமோ வாழ்க்கையில் ஒரு தடவையாவது நிலவுக்கு போகவேண்டுமென்று ஆசை.
கண்டிப்பா உங்க ஆசை விரைவில் நிறைவேறும் அண்ணா. :)
வாழ்த்துகள்..!! :icon_b:

பூமகள் உங்கள் தந்தை நடத்திக்காட்டிய வாழ்வியல் பாடத்தால் பயனடைந்தோம் நாங்களெல்லாம்.அவருக்கு என் வந்தனங்கள்.குறிப்பறிந்து,மழலையான மனம் அறிந்து நடந்துகொண்ட உன் செயல்கள் மனம் நிறைக்கின்றன.வாழ்த்துகள் தங்கையே.
மிக்க நன்றிகள் சிவா அண்ணா. இந்தப் பூவுக்கான பாராட்டுகள் அனைத்தும் எனது கடமையை புரியவைத்து வளர்த்த என் பெற்றோரையே சாரும்.
மனம் நிறைந்த நன்றிகள்..

பூமகள்
24-11-2007, 10:27 AM
நேற்றைய அந்த தலைமுறை மீண்டும் குழந்தைப் பருவத்திற்கு சென்று விடுவதால் ஒரு குழந்தையை அணுகுவது போலத்தான் அணுக வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் நிகழ்வு இது. பாராட்டுக்கள் பூமகள்.
உண்மை தான் அண்ணா. ஆனால், இடைவெளிகள் அன்பினால் நிரப்பப்பட்டால் வாழ்வு இனிமையாகும். அதை வலியுறுத்தவே இந்தப் பதிவு.
நன்றிகள் கோடி முகிலன் அண்ணா. :)

அருமையான செயல் உங்கள் தந்தை செய்தது,அவுங்களுக்கு இருக்கரது சின்ன சின்ன ஆசைகள் அதை பூர்த்தி பன்னரது அப்படி ஒன்னும் கஸ்டமான காரியம் அல்ல. அவுங்க சந்தோசபடர மாதிரி நடந்து கிட்டம்னா அந்த சந்தோசத்த பாத்து நமக்கு சந்தோசமா இருக்கும்.
உண்மை தான் வாத்தியார் அண்ணா. நிச்சயம், அவர்களது சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றினாலே பெரிய சந்தோசத்தை அவர்கள் அடைவதைப் பலமுறை கண்டிருக்கிறேன்.
மிக்க நன்றிகள் அண்ணா.

பூமகள்
24-11-2007, 10:31 AM
எந்த ஒரு விசயமும் ஆரம்பித்த இடத்திலேயே வந்துமுடிவதுதான் இயற்கை...இதில் மனிதன் மட்டும் விதிவிலக்கா என்ன..? குழந்தையாக ஆரம்பித்து குழந்தையாக மாறி மடிவதுதான் முழுமையான வாழ்வாகும்.. அந்த வாழ்வை பூரண அன்புடன் பெற்றவர்கள் பெரும் பாக்கியசாலிகள்..அந்த விதத்தில் உங்களுடைய அப்புச்சி கொடுத்து வைத்த குழந்தைதான்...!இன்றைய சூழலில் காணக்கிடைக்காத காட்சியை காணப்பெற்றதால்தான் அத்தனை பேரும் உங்களையே உற்று நோக்கியிருக்கிறார்கள்.. தங்களின் தந்தையைத்தான் போற்றவேண்டும்..!
நிஜமான வாக்கு. வாழ்வின் எதார்த்தத்தை அப்படியே சொல்லிவிட்டீர்கள்.
மிக்க நன்றிகள் ப்ரீதன். :)

மூன்றாம் தலைமுறைக்கும்
முதலாம் தலைமுறைக்கும்
எத்தனைப் பொருத்தப்பாடு..
அவர்கள் இரண்டாவது
தலைமுறையால் இரண்டாவது
நடைமுறை நிகழ்தகவில்..
இருந்தாலும்
பூவின் மூன்றுதலைமுறையும்
ஒருங்கமைத்த வாசத்தை
பரப்புவது ஏது ஆச்சரியம்..
மிக மிகச் சரியான கணிப்பு..! :icon_b:
அன்பென்னும் தொடர்பினால்
எத்தனை தலைமுறைகள்
இடைப்பட்டாலும்
இடைவெளி உருவாகாது..!
மிகுந்த நன்றிகள் அமரன் அண்ணா. :)

பூமகள்
24-11-2007, 10:36 AM
என்னுடைய இடத்தில் பூவை வைத்துப்பார்த்து சந்தோஷம் அடைந்தேன். பூவின் இந்த உன்னத செயலுக்காக என் மனமார்ந்த பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறென். அப்புச்சியின் மீதான பாசத்தால் பூவின் வாழ்க்கைப்பாதை பூக்களாலேயே நிரப்பப்படுகிறது..!! வாழ்த்துக்கள் பூ..!!
உங்களின் இடத்தில் பூவை வைத்துப் பார்த்து மகிழ்ந்ததற்கு மிக்க நன்றிகள் இதயம் அண்ணா..
உங்களின் மனபாரத்தை இறக்கி வைத்துவிட்டீர்கள்.
என் வாழ்வு வண்ணப்பூக்களால் அலங்கரிக்க விரைவில் வசந்தம் வர வேண்டிய உங்களின் இதயத்துக்கு எப்படி நன்றிகள் சொல்வேன்..எவ்வண்ணம் சொல்வேன்..??:icon_ush:
உங்களைப் போன்ற பல நல்லுள்ளங்களின் அன்பு இருக்கையில் நிச்சயம் வாழ்வில் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை வருகிறது இதயம் அண்ணா.

யவனிகா
25-11-2007, 12:04 PM
எப்போதும் பூவின் பதிவுகளுக்கு உடனுக்குடன் பின்னூட்டம் இட்டு விடுவேன்.இந்த முறை காலதேவன் சதித்து விட்டான்.மன்னிக்கவும்.
இன்றைய தலைமுறையில் இது போன்ற பெண்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பெற்ற பிள்ளைகளின் ஸ்பரிசத்திற்காக வருடக்கணக்கில் காத்திருக்கும் பெற்றோர் இன்னும் இருக்கிறார்கள்.நம்மில் எத்தனை பேர் நம் தாத்தா பாட்டியைக் கட்டி அணைத்து நம் அன்பைத் தெரிவித்து இருப்போம். அவர்களின் உடலின் ஒவ்வொரு செல்லும் தன் உறவின் ஸ்பரிசத்திற்காக ஏங்குமாம்.சிறு சிறு தொடுதல்கள்,அணைப்புகள் அவர்களுக்குக் கட்டாயத்தேவை என்று மருத்துவம் நிரூபித்து உள்ளது.

விடுமுறையில் நான் கோவை செல்லும் போது...தலைக்கு குளிக்கும் போதெல்லாம் என் பாட்டியிடம் முன் பதிவு செய்து விட்டுத் தான் செல்லுவேன்.குளித்து வெளியே வரும் போது மைகோதியுடன் தயாராக இருப்பார்கள் எனக்குத் தலை கோதிவிட. அவர்களின் அந்த ஸ்பரிசம் படும் போது அப்படியே மீண்டும் குழந்தையாவது போல இருக்கும்.

அவரவர் பாட்டி தாத்தாக்களை நினைவுக்குக் கொண்டு வரும் இந்தப் பதிவைப் பதித்தற்கு பூவுக்குக் கட்டாயம் நன்றி சொல்ல வேண்டும்.

பூமகள்
25-11-2007, 04:39 PM
யவனிகா அக்கா,
உங்களின் பதிவு காணவில்லையே என்று ஏங்கியது உண்மை. ஆயினும், உங்களின் பணி பற்றி நான் நன்கு அறிந்ததால், கட்டாயம் தாமதமாகவாவது வந்து பின்னூட்டமிடுவீர்கள் என்று நம்பினேன்.
உங்களை நன்கு புரிந்தபடியால், எந்த வருத்தமும் இல்லை அக்கா.

நிற்க,
உங்களின் அழகான பின்னூட்டத்துக்கு நன்றிகள். அதிலும் ஒரு மருத்துவ உண்மையை சொல்லி, கண்களை திறந்துவிட்டீர்கள்..!

மிக்க நன்றிகள் யவனி அக்கா. :)

மலர்
26-11-2007, 10:01 PM
பூ,,, சாரிம்மா...
ரொம்ப லேட்டுல்ல நான்..
மன்னிச்சிக்கோ தாயே...

பூமகள் அக்கா.. உங்க தாத்தா உண்மையில் கொடுத்துவைத்தவர் தான்... :D:D
உங்கள் தாத்தாவுக்கு ஒரு நல்ல மருமகன்.. ம்ம் பூவோட அப்பாவை இந்த நேரத்தில் நிச்சயம்
பாராட்டியே ஆகணும்..
வர வர நம்ம பூமகள் அக்கா என்னமா எழுத ஆரம்பிச்சிட்டா..
ம்ம் பாராட்டுக்கள் அக்கா...

அக்கா இத படிக்கும் போது எனக்கு எங்க தாத்தா பாட்டி ஞாபகம்....
ரெண்டு தாத்தாவுமே (அம்மாவோட அப்பா.. அப்பாவோட அப்பா) நான் பார்த்த நினைவு அவ்வளவாய் இல்லை... ஆனா எனக்கு என்னோட பாட்டி ரொம்ப பிடிக்கும்.. அவங்க தான் எனக்கு பேர் வச்சது.. நிறைய கதை சொல்லி வளத்தது ...
நான் ஸ்கூல் படிக்கும் போது அடிக்கடி சொல்லுவாங்க..நான் நல்லா படிச்சி வேலைக்கு போகணும்.. என்னோட சம்பளத்துல கார் வாங்கி எங்க பாட்டியை அழைச்சிட்டு போகணும்ன்னு..
ஆனா இந்த காலதேவனுக்கும் எனக்கும் எப்பவும் ஆகாது... சீக்கிரமே அந்த பாசத்தை உடைச்சிட்டான்...

நுரையீரல்
27-11-2007, 03:04 AM
வர வர நம்ம பூமகள் அக்கா என்னமா எழுத ஆரம்பிச்சிட்டா..
ம்ம் பாராட்டுக்கள் அக்கா...

அப்ப இதுக்கு முன்னாடி பூவு நல்லா எழுதலையா...

மலரு வர வர நீயும் ரவுசு பண்ண ஆரம்பிச்சுட்டயே....

அறிஞர்
29-11-2007, 10:25 PM
சுவையான தகவலுக்கு நன்றி.... அன்பரே....

சிறு பிள்ளைகளுக்கு பொம்மை வாங்கி கொடுத்து சந்தோசப்படுவது போல்.. வயதானவர்களுக்கு இது மாதிரி.. சிறு சிறு சம்பங்களே.... பூரண சந்தோசத்தை தரும்.....

வயதானவர்களின் சந்தோசத்தில் குடும்பத்திற்கே மகிழ்ச்சி...

இந்த மகிழ்ச்சி.. அனைவரிடமும் பரவட்டும்..

பூமகள்
05-12-2007, 11:02 AM
அப்ப இதுக்கு முன்னாடி பூவு நல்லா எழுதலையா...
மலரு வர வர நீயும் ரவுசு பண்ண ஆரம்பிச்சுட்டயே....
ராஜா அண்ணாவுக்கு என் மேல் எத்தனை பாசம்??:sprachlos020::rolleyes::D:D
இதுல உள் கூத்து ஏதும் இல்லையே அண்ணா? நிஜமாவே சப்போர்ட் தான் பண்றீங்களா??!! :icon_ush::icon_ush::confused::confused:

பூமகள்
05-12-2007, 11:03 AM
சுவையான தகவலுக்கு நன்றி.... அன்பரே....
வயதானவர்களின் சந்தோசத்தில் குடும்பத்திற்கே மகிழ்ச்சி...
இந்த மகிழ்ச்சி.. அனைவரிடமும் பரவட்டும்..
நல்லதொரு கருத்து சொன்னீர்கள்.
மிக்க நன்றிகள் அறிஞர் அண்ணா.:)

நேசம்
05-12-2007, 02:13 PM
இதுல உள் கூத்து ஏதும் இல்லையே அண்ணா? :icon_ush::icon_ush::confused::confused:

இவ்வளவுக்கு அப்பாவியா இருப்பிங்கான்னு நினைக்கலெ பூமகள்

பூமகள்
12-12-2007, 11:54 AM
இவ்வளவுக்கு அப்பாவியா இருப்பிங்கான்னு நினைக்கலெ பூமகள்
:icon_ush::icon_ush::icon_ush: