PDA

View Full Version : மனிதன் பாதி மிருகம் பாதி



lolluvathiyar
23-11-2007, 02:50 PM
மனிதன் பாதி மிருகம் பாதி

தமிழ்மன்ற மக்களே, சில சமயம் லொள்ளுவாத்தியாருக்கு புத்தி கெட்டு போய் வேண்டாத ஆராய்சிகள் (படிக்கரதுதான்) செய்து கொண்டிருப்பேன். அதனுடை ரிசல்ட் தான் இந்த மனிதன் பாதி மிருகம் பாதி. (ஏப்பா லொள்ளுவாத்தியார் உன்னால லொள்ளுபன்னாம இருக்க முடியாதா- கேக்குது)

அதென்ன மனிதன் பாதி மிருகம் பாதி ஒரு வேல மனிதனுக்கு பிறந்த மிருகமோ, இல்ல மிருகத்துக்கு பிறந்த மனிதனோ, இல்ல மிருக குணம் கொண்ட மனிதனோ. எனக்கு தெரியாதுங்க. நான் சொல்ல வரத உலக காவியங்களில் மிருகங்களால வளர்க்க பட்ட மனிதர்கள் பற்றி.

நம்ம சினிமா படங்கல்ல பாத்திருப்பமே மிருகங்களால வளர்க்க படுகிற மனிதர்கள் பிற்காலங்களில் மன்னர்கள் கூட ஆவாங்ல. (தங்க மலை ரகசியம் - யானையால வளர்க்க படும் சிவாஜி கனெசன் நடிச்ச பழைய கருப்பு வெள்ளை திரைபடம். அதுல ஒரு பாட்டு கூட வருமே சூப்பரா இருக்கும்

அமுதை பொழியும் நிழவே
நீ அருகில் வராததேனோ

அதுபோல உலக காவியங்களில் அப்படி வளர்க்க பட்ட மனிதர்கள் பட்டியல் இது (நன்றி விக்கிபிடியா). அதை ஆங்கிலத்தில் பெரொல் குழந்தைகள் (Feral children) என்பார்கள். அந்த கதாபாத்திரங்களை பற்றிதான் நான் தரபோகிறேன்.

அது யாரப்பா, படிக்கரதுகுள்ள பயனுள்ள தகவல் நு பின்னூட்டம் போடரது, ஓ சுட்டியா முழுசா படிசிட்டு போடுங்கப்பா, இல்லினா தூக்கி யாழ்பானத்துக்கே வீசிடுவேன்.

என்கிடு - ஈராக் - மெசப்படோமின் நம்பிக்கைகளில் சொல்லபடுகிறார், பல மிருகங்களால் வளர்க்க பட்டு பிறகு மிருகங்களின் பாதுகாவலனாக வாழ்கிறார், பிற்காலத்தில் கில்கமேஸ் என்ற அரசன் சமாட் என்ற பென்னை அனுப்பி என்கிட்டை மயக்கி காதல் வலையில் சிக்க வைத்து விடுகின்றனர். அதனால் மிருகங்கள் அவனை ஒதுக்க ஆரம்பித்து விட்டன. என்கிடு நாகரீகம் கற்று கில்கமேஸ் அரசனோடு சேர்ந்து விடுகிறான், அரசனுடைய எதிரிகளை வெல்கிறான். இதில் அவர்கள் இரைவனுடன் மன்னரோடு சேர்ந்து சண்டையிட்டு விடுகிறான், கடவுளின் சாபத்தில் இருந்து மன்னரை காப்பாற்ற தன்னை மட்டும் சாபத்துக்கு பலி கொடுத்து இறந்து விடுகிறான்.

ஐயோ அம்மா, ஏனுங்க இதயம் இந்த அடி அடிகறீங்க, பகுத்தறிவுக்கு பொருந்தாத கட்டுகதைகளை ஏண்டா போடரீனு கேக்கரீங்களா, ஹிஹி திடீர்னு புத்தி மிருகம் பாதியா வேல செய்யுது நான் என்னங்க செய்யரது.

ரோமுலஸ் ரோம் நாட்டை தோற்றுவித்த மன்னர். இவர் பிறப்பதற்க்கு முன் இவருடைய சித்தப்பா இவரின் தந்தையை கொன்று விடுகிறார், தாயை சிரையில் அடைகிறார், ரோமுலஸ் தம்பி ரீமஸ் பிறந்தவுடன் குழந்தைகளை ஆற்றில் வீசிவிட உத்தரவிடுகிறான் சித்தப்பன். பிறகு குழந்தைகளை கூடையில் வைத்து ஆற்றில் விட்டு விடுகின்றனர். அது ஒரு கரையில் ஒதுங்கி விடுகிறது. அதை கவனித்த ஓநாய் ஒன்று குழந்தைகளுக்கு பால் தந்து வளர்கிறது. காக்கைகள் சோற் ஊட்டி வளர்கிறது. பிறகு இவர்கள் ஒரு விவசாயி மூலம் வளர்க்க பட்டு சித்தப்பனிடமிருந்து நாட்டை மீட்டு விடுகின்றனர். பிற்காலத்தில் சகோதர சண்டையால் ரோமுலஸ் தனது தம்பி ரிமஸை கொன்று ஏகபோக மன்னன் ஆகிறான். அவன்பெயரில் தான் ரோம் என்று நாட்டுக்கு பெயர் ஏற்பட்டது. அவர்கள் ஓநாயை தெய்வமாக வனங்கி வந்தனர், ஓநாய் குழந்தைக்கு பால் தருவது போல் சிற்பங்களும் இருந்ததாம்.

இந்த ரொமுலஸ் கதை வெறும் கட்டுகதை என்று இதுவரை நினைத்து கொண்டிருந்தனர், இந்த வருடம் (2007) அந்த பால் கொடுக்கும் சிலையையும் ரோமுல்ஸில் சமாதியையும் கண்டு பிடித்து விட்டனர் ரோம் நாட்டு தொல்பொருள் ஆராய்சியாளர்கள். (இன்று தான் அதை ஹிந்து பேப்பரில் லொள்ளுவாத்தியா படித்தார், அதனால் தான் இதபத்தி விக்கிபிடியாவுல ரூட் பிடிச்சு படிச்சு கலந்து எழுதிய பதிப்பு)

வேண்டாங்க அறிஞரே, ஐயோ சொன்னா கேளுங்க பாருங்க அறிஞர் இந்த முயற்சிய பாராட்டி 5000 இபணம் தரேங்கரராரு. பரவாலீங்க வேண்டாங்க. சரி உங்க ஆசையை கெடுப்பானேன் சும்மா ஒரு 2000 இபணம் தந்தா போதும்.

மௌக்லி - இவரும் ஓ நாயால் வளர்க்க பட்டவர். இவன் இந்திய காடுகளில் பெற்றோரல் தொலைக்க பட்ட குழந்தை. பிறகு ஓநாயால் வளர்க்க பட்டவன். பிறகு மௌக்லி காடுகளில் ராஜாவாக விளங்கினான் பாலு என்ற கரடியும் பகீரா என்ற கரும்புலியும் இவனுக்கு நன்பர்களாக இருந்தன. பிற்காலத்தில் இவன் தன் தாயை கண்டுபிடித்து விடுகிறான், பிறகு தாயுடன் வாழ்ந்து நாகரீகம் கற்று கொள்கிறான். ஆனால் மௌக்லி வனவிலங்குகளை கட்டுபடுத்த தெரிந்தவன். பிரிட்டிஸ் அரசாங்க வனவிலங்கு அதிகாரி ஒருவர் இந்த மௌக்லி சிறுவனை கண்டுபிடித்தார். அவர் இவனை பற்றி செய்திகள் சேகரித்து தி ஜங்கில் புக் (The Jungle Book) என்ற நாவலை எழுதினார் இது மிகவும் பிரபலம். மௌக்லி என்றா தவளை என்று அர்த்தம்.

சாஸ்தா - மௌக்லி போன்ற அமெரிக்காவில் சாஸ்தா என்ற கதை உள்ளது. ஓல்ப் பெக்கர் எழுதியது. சாஸ்தா என்ற அமெரிக்க பழங்குடி இனத்தை சேர்ந்த குழந்தை ஓநாயால் வளர்க்க படுகிறது. பிறகு பெற்றோரை கொன்ற இன்னொரு பழங்குடி இனத்தை சாஸ்தா அழித்து மீண்டும் ஓ நாய்களுடனே வாழ சென்றுவிடுகிறார்.

ஏப்பா உனக்கு வேற வேலையே இல்லையானு தங்கவேல் அன்னா கேக்கராரு. என்ன பதில் சொல்ல தொடர்ந்து படியுங்கன்னா சுவாரஸியமா இருக்கும்னு நினைகிறேன்.

டார்ஜன் - (கற்பனை கதாபாத்திரம்) பிரிட்டிஸ் பிரபு ஒருவரின் கப்பல் கவிழ்ந்து ஒரு ஆப்பிரிக்க காடு அருகே ஒதுங்கிவிட்டது. அனைவரும் இறந்து விட டார்ஜன் குழந்தை மட்டும் உயிருடன் இருந்தது. அது மனித குரங்குலால் வளர்க்க பட்டது. பிற்காலத்தில் டார்ஜன் பல கதைகளில் கதாநாயகனாக தோன்ற ஆரம்பித்து இன்றும் ஹீரோகாவே இருகிறார்.

என்ன ஓவியன் சொன்னீங்க, சத்தமா சொல்லுங்க, ஓ ஆதாவா வும் ஒரு டார்ஜனா, சரி அது உங்க ரெண்டு பேரோட பிரச்சனை இல்ல அத ஜெஸிகா பாத்துக்குவாங்க.

பிஸ்பாய் - பிரிட்டிஸ் கதை, தீவில் விட பட்ட பிஸ்பாய் என்ற குழந்தை தன்னீருக்கு அடியில் வாழ்ந்து பழகி விடுகிறது. சுறாமீன்கள் தான் பிஸ்பாய்க்கு நன்பர்கள். இந்த பையனுக்கு இறக்கை போல கைகால்கள் மாறிவிடுகிறதாம். இதே எழுத்தாளர் பச்சோந்தி குழந்தை என்று ஒரு படகதையையும் எழுதினார். ஆப்ரிக்க பாலவனத்தில் ஓனான் பச்சோந்தி பள்ளியால் வளர்க்க படும் குழந்தை. விமான விபத்தில் காட்டில் விழுந்து விடும் குழந்தை தான் பச்சோந்தி குழந்தை, அது பச்சோந்தி போல அவ்வபோது நிறம் மாறி மரைந்து விடும். விமானத்தில் தாய் தந்தையரை கொன்றவரை கண்டுபிடித்து போலீஸிட ஒப்படைத்து மீண்டும் காட்டுக்கெ சென்று விடுமாம்.

ஆ ஐயோ ஏம்மா மலர் இப்படி அடிக்கர எல்லாமே ஆண்கள் பற்றிய கதைதானா கேக்கறீங்களா. பொருமா சொல்லறேன். ஆனா இது மலரோட கதை அல்ல,வேற.

ஷீனா (Sheena) - இந்த பென்னை அனைவருக்கு தெரியும், இவள் அமெரிக்க பென் சம்மந்தபட்ட கதை. ஆனால் இந்த பென் மிருகங்களால் வளர்க்க படவில்லை. இவள் தாய் தந்தையராலே வளர்க்க பட்டு கானகத்தில் தாய் தந்தையர் இறந்து விட இவள் மிருகங்களுடம் பேசும் ஆற்றலை அடைந்து விடுவாள், மிருகங்களை கையாண்டு நிறைய சாதனைகள் படைப்பாள். இவளை லேடி டார்ஜன் என்று சொல்வார்கள். ஆனா ஒரு வருத்தமான செய்தி என்னவென்றால் இந்த ஷீனா கதைகள் பென் படைப்பு என்பதற்க்காக பிரபலமாக மாறாக காட்டில் அரைகுரை ஆடையுடன் சுற்றுவதாகவே வடிவமைக்க பட்டதால், இவள் ஒரு செக்ஸி ஆப்ஜட்டாகவே மக்களிடையே பட்டு விட்டாள். ஷீனா மாடல் கவர்ச்சி ஆடைகள் கூட இருகிறது. அவை பாசன் சோகளில் பயன்படுத்தபடுகிறது. வீரத்து இலக்கனமாக வைத்து எழுதபட்ட ஒரு கதாபாத்திரம் இறுதியில் காமத்துக்கு பயன்படுத்தபடுவது கொஞ்சம் வேதனை அளிக்கு உன்மைகள்.

சரி சரி போதும் என்ன தான் சொல்ல வர்ரீங்கனு நம்ம பெஞ்சமி அன்னா கேக்கராரு.

சரி இதை பற்றி ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள். இது சாத்தியமா இப்படி மிருக குணாதிசியங்களுடன் குழந்தைகள் வாழ முடியுமா. அப்படி வாழ சாத்தியம் இருகிறதா. சில மனிதர்களை அப்படி கண்டு பிடித்திருப்பதாக ஆராய்சியாளர்கள் சொல்கிறார்கள். இளம் வயதில் மனிதர்களை விட்டு பிரிந்து மிருகங்களுடன் ஒட்டி பழகி பிறகு பேசும் மொழியை மறந்த் மிருக பாசைகளை கற்று கொண்டு மனிதனிடம் அண்டாம வாழ்கிறதான் சில குழந்தைகள். பெரும்பாலும் காட்டில் துலைந்த குழந்தைகள் சில இப்படி வாழ பழகிவிடுகிறதாம். சில சமயம் தனிமையில் வளர்க்கபடும் குழந்தைகள் இப்படி மிருக குணங்களை மட்டும் கொண்டு வாழ்ந்து விடுமாம். இந்த குழந்தைகளை வைத்து தான் காவியங்களில் கதைகள் எழுதபட்டிருக்கலாம்.

இந்த மாதிரி குழந்தைகளை கண்டுபிடித்து மீண்டும் நாகரீகம் சொல்லி தரவில்லை. மாறாக ஆராய்சிக்கு பயன்படுத்திவிட்டனர். இவர்கள் விரைவில் இறந்து விடுகின்றனர். இதுபற்றி ஒரே ஆதாரம் தான் இருகிறது அது கல்கட்டா அருகில் உள்ள காட்டி அமலா கமலா என்று இரு சகோதரிகள் ஒரு பாதிரியாரால் 1920 கண்டுபிடிக்க வளர்க்க பட்டார்கள். அந்த குழந்தைகள் ஓநாயால் பராமரிக்க பட்டு வளர்க்க பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள். காரனம் அந்த குழந்தைகளை கண்டுபிடித்த இடம் ஓநாய்கள வாழ்ந்த குகையில். இந்த குழந்தைகளை பிரித்த கோபத்தில் அந்த வளர்பு தாய் ஓநாய் பாதிரியாரை பயங்கரமாக தாக்க வந்ததாம். அந்த பென்கள் அமலா கமலா இருவருக்கு இரவில் தான் கண் தெரியுமாம். நான்கு காலில் தான் நடப்பார்களாம், சமைத்த உனவை சாப்பிடவில்லையாம். யாருடனும் பழகவில்லையாம். மோப்ப சக்தி இருந்ததாம். சமைக்காத கறியை மட்டும் சாப்பிட்டனர். இரவில் ஊளையிடுவார்களாம். இவர்களை திரும்பவும் மனிதராக வளர்க்க பாதிரியார் மிகவும் கஸ்டபட்டார் ஆனால் 10 ஆண்டுகளில் இவர்கள் நோய் தாக்க பட்டு இறந்து விட்டனர். இந்த சம்பவம் உன்மையில் நடந்தது.

ஆ ஏனுங்க மயூ அடிக்கரீங்க, போதும் கடிக்காத ஆள விடுப்பானு சொல்லராருங்க.

சரிங்க நான் விக்கிபீடியாவுல எதையோ படிக்க போய் அனுமார் வால்ல பத்த வச்ச தீ மாதிரி இங்க வந்து நிக்குது. உன்மையில இந்த விக்கிபிடியா இருக்குல்ல அப்ப படிக்க படிக்க போய் கிட்டே இருக்கும். நேரம் கிடைக்கும் போது படியுங்க.

ஏங்கோ நம்ம நாட்டு காவியங்கல்ல இப்படி பட்ட கதாபாத்திரம் இருந்தா கொடுங்க. நம்ம மன்றத்துல என்னவிட மூத்தவங்க தங்கவேல், சிவா ஜி, ராஜா அவர்களே தங்க மலை ரகசிய பட கதை எனக்கு அவ்வளவா நியாபக இல்ல, அந்த பாடலும் பிடிக்கும் அதுவும் நியாபகம் இல்ல உங்களுக்கு தெரிந்தா சொல்லுங்க. ஏன்னா அந்த படத்த மத்த சின்ன பசங்க பாத்திருக்க வாய்பில்லை. நான் பாத்திருகிறேன். ஆனா எங்கப்பா 10 கிளாஸ் படிக்கும் போது எடுத்த படமாம்.

நன்றி

இந்த பகுதியில் நான் இதுவரை அதிகமாக பதிக்கவில்லை என்ற குரையை போக இதை பதித்துவிட்டேன். இது இந்த பகுதி பொருத்தமான பதிப்பாக இல்லாவிட்டால் சரியான பகுதிக்கு மாற்றவும்.

அக்னி
23-11-2007, 03:04 PM
இவர்கள் எல்லாம் தனிமனிதர்கள், அதுவும் மிருகங்களால் வளர்க்கப்பட்டவர்கள். இது என்ன பிரமாதம்..?
இலங்கைச் சிங்களவர்கள், தமது வரலாறு, வம்சம் என்று தாமே பெருமையுடன் கூறிக்கொள்ளுவது,
அவர்கள் சிங்கத்துக்கும் ஒரு பெண்ணுக்கும் பிறந்து வளர்ந்த வம்சம் என்பதையே...
இது சிங்களவர்களின் வரலாற்று நூலாகிய மகாவம்சம் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுவே அவர்களின் பாரம்பரிய வரலாற்றுச் சான்று நூலாக இன்றுவரை பேணப்படுகின்றது.
ஒரு மிருகத்தின் வழி வந்த வம்சமே வாழும்போது, தனிமனிதர்கள் மிருகங்களால் வளர்க்கப்படுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது...???

ஓவியன்
23-11-2007, 03:34 PM
அக்னி கூறியதே இலங்கை வரலாற்று நூலென கருதப் படுபவற்றில் கூறப்பட்டுள்ளது. சிங்கம், சிங்கபாகு பின்னர் சிங்களவராக ஆனதாக....!! :) :)

lolluvathiyar
27-11-2007, 01:29 PM
இலங்கைச் சிங்களவர்கள்,
அவர்கள் சிங்கத்துக்கும் ஒரு பெண்ணுக்கும் பிறந்து வளர்ந்த வம்சம் என்பதையே...


அது என்ன கதை இன்னும் கொஞ்சம் விளக்கமாக தரமுடியுமா?

lolluvathiyar
28-11-2007, 11:57 AM
சிங்கம், சிங்கபாகு பின்னர் சிங்களவராக ஆனதாக....!! :) :)

ஐயோ சிங்கபாகு புத்த மதம் கிடையாதுங்க. நான் கேட்டது மிருகங்களால் வளர்க்க பட்ட மனிதன் கதைகளில் ஏதாவது இருக்கானு கேட்டேன்.

lolluvathiyar
04-12-2007, 01:36 PM
மூனு மனி நேரம் எடுத்து இதை டைப் அடித்து கத்தோ கத்துனு கத்திகிட்டு இருக்கேன். ஒரு சாமார்த்தியாம் யாரும் இத ஏன்னு கேட்காமா போனா எப்படி?

சிவா.ஜி
04-12-2007, 01:45 PM
புது விஷயம் மொதல்ல முழுசா படிக்கனுமே.இவ்ளோ இண்ட்ரெஸ்டிங்கான கட்டுரை எழுதியிருக்கீங்க.....நிஜமாவே மிகவும் அருமையான பதிவு.ரொம்ப சிரமப்பட்டு நிறைய விஷயங்களை தேடிப் பிடிச்சு தந்திருக்கீங்க வாத்தியார்.
அந்த பெண் ஷீனா எப்படி ஷீலாவா மாறிட்டா?

ஜெயாஸ்தா
04-12-2007, 02:49 PM
வாத்தியார் எழுதுன இத்தனைப்பேரில் எனக்கு தெரிந்தது டார்ஜன் மட்டுமே.....! (அது யாருங்க வாத்தி ஷீனாவா... ஷீலாவா..... அவங்களைப்பற்றி எனக்கு சத்தியமாக தெரியாது வாத்தி...!)

lolluvathiyar
16-12-2007, 12:04 PM
அது யாருங்க வாத்தி ஷீனாவா... ஷீலாவா..... அவங்களைப்பற்றி எனக்கு தெரியாது

இதோ அவங்கள பத்தி லிங் தந்திருகிறேன்.

http://en.wikipedia.org/wiki/Sheena%2C_Queen_of_the_Jungle