PDA

View Full Version : இம்சையானவளே...!



யாழ்_அகத்தியன்
23-11-2007, 02:29 PM
உனக்காக காத்திருக்கையில்
என்னைக் கடப்பவர்கள் மட்டும்
ராசியானவர்கள் உன் முகத்தை
அவர்களில் தேடுகிறேனே

*

அந்த சூரியனுக்கு
யார் என்னைக்
காட்டிக்கொடுத்தது

பாருங்கள்
நிலாவுக்காக
காத்திருக்கிறேன்
என்ற கோவத்தில்
என்னை கறுப்பாக்கி
கொண்டிருக்கிறது

*
உனக்காய் காத்திருந்த
இடத்தில் கொஞ்ச நேரம்
நி
ன்
று
பார்

உன்னைப் பெற
என்னை நான்
இழந்த வலி புரியும்

*

தாமதமாய் வருவதையே
பழக்கமாய் கொண்டவள் நீ
தெரிந்தும் உனக்காய் காத்திருக்க
பழக்கப்பட்டவன் நான்

*

" நிலா" என்று யார்
உனக்கு பெயர் வைத்தது
உனக்காய் என்னை தேய
வைத்துக் கொண்டிருக்கிறாய்


-யாழ்_அகத்தியன்

அமரன்
23-11-2007, 03:06 PM
இம்சையானவளே என்னும் தலைப்பை பார்த்ததும் "இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி" திரைப்படம் நினைவில் வந்தது. சித்திரத்தை ரசித்து முடித்ததும் பாரம் குறைந்த உணர்வு ஏற்படுமல்லவா? அதேபோலத்தான் இவையும்.. ஆனந்த அவஸ்தைகள்.

உனக்காக காத்திருக்கும்
கோபத்தில் கத்திரி வெயில்
ஆண்டியானது மலைவானில்...

உனைத்தேடி
வெட்கப்பட்ட முகிலாடைகள்...

உன்நிழல்கண்டதும்
ஆதவன்
ஆடைகளால் மூடப்பட
குளிர்ச்சி பரவியது..
என்னுள்ளும் புறமும்....



" நிலா" என்று யார்
உனக்கு பெயர் வைத்தது
உனக்காய் என்னை தேய
வைத்துக் கொண்டிருக்கிறாய்


ஏங்க அகத்தியரே..! காதலிக்கவில்லை என்றீர்கள்.. அப்புறம் எப்படி இக்கவிதை?:confused::confused:

அக்னி
23-11-2007, 03:32 PM
உனக்காக காத்திருக்கையில்
என்னைக் கடப்பவர்கள் மட்டும்
ராசியானவர்கள் உன் முகத்தை
அவர்களில் தேடுகிறேனே
ஆனால்,
அவர்களுக்கு என் முகம்..???
அதனால்தானோ,
உன்னைப்போலவே,
முகம் திருப்பிக் கொள்(ல்)கின்றார்கள்..?


அந்த சூரியனுக்கு
யார் என்னைக்
காட்டிக்கொடுத்தது

பாருங்கள்
நிலாவுக்காக
காத்திருக்கிறேன்
என்ற கோவத்தில்
என்னை கறுப்பாக்கி
கொண்டிருக்கிறது
ஆனாலும்,
நிலா உன் குளிர்மைக்காக,
உன் வருடலுக்காக,
கருகும்வரை எரியத்தயார்...


உனக்காய் காத்திருந்த
இடத்தில் கொஞ்ச நேரம்
நி
ன்
று
பார்

உன்னைப் பெற
என்னை நான்
இழந்த வலி புரியும்
ஆனாலும்,
உனக்குப் புரியும் நிகழ்தகவு,
மிகக் குறைவே...
ஏனென்றால்,
உன்னைக் காக்க வைக்க
நான் தயாரில்லை...


தாமதமாய் வருவதையே
பழக்கமாய் கொண்டவள் நீ
தெரிந்தும் உனக்காய் காத்திருக்க
பழக்கப்பட்டவன் நான்
எனது மரண நாளிலாவது,
உன் வருகை தாமதிக்காது இருக்கட்டும்...
துர்மணம் உன்னை அண்டுவதைக்கூட,
என்னால் எண்ண முடியவில்லை...


" நிலா" என்று யார்
உனக்கு பெயர் வைத்தது
உனக்காய் என்னை தேய
வைத்துக் கொண்டிருக்கிறாய்
உன் உலா வரும் போது,
என் தேய்வுகள்,
வினாடியில் நிரவுகின்றதே...

பாராட்டுக்கள் யாழ்_அகத்தியன்...

ஆதி
24-11-2007, 02:03 AM
உனக்காக காத்திருக்கையில்
என்னைக் கடப்பவர்கள் மட்டும்
ராசியானவர்கள் உன் முகத்தை
அவர்களில் தேடுகிறேனே



தெரியாத தெருக்களிலும் மனிதரிலும்
உன்னைத் தேடுகிறேன்..

நீ வரப் போவதில்லையென
அறிந்தும்
அலையும்
என் நப்பாசைகளை
என்ன சொல்லி வைய்ய
*


அந்த சூரியனுக்கு
யார் என்னைக்
காட்டிக்கொடுத்தது

பாருங்கள்
நிலாவுக்காக
காத்திருக்கிறேன்
என்ற கோவத்தில்
என்னை கறுப்பாக்கி
கொண்டிருக்கிறது



ஞாயிறுக்கு
என்னிடம் சினம்
உன்னிடம் வெட்கம்
என்னைக் கண்டால் எரிக்கிறான்
உன்னைக் கண்டால்
மெல்கி வழிகிறான் மழையாய்

*


உனக்காய் காத்திருந்த
இடத்தில் கொஞ்ச நேரம்
நி
ன்
று
பார்

உன்னைப் பெற
என்னை நான்
இழந்த வலி புரியும்



ஆவல்களை அடைக்காக்கிற
ஆற்றாமைகளின் பார்வையில்
உன்னைக் காணாத தாகங்கள்

*


தாமதமாய் வருவதையே
பழக்கமாய் கொண்டவள் நீ
தெரிந்தும் உனக்காய் காத்திருக்க
பழக்கப்பட்டவன் நான்


காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்..

- வைரமுத்து - காதலித்துப்பார் - இத்தப் பூக்கள் விற்பனைக்கு அல்ல


உன்
தாமதங்களை தட்டிக்கேட்காத
தகிப்புகள்
தனக்குள் காரணங்கள் சொல்லிக்கொள்ளும்
உனக்கு சாதகமாய்


*


" நிலா" என்று யார்
உனக்கு பெயர் வைத்தது
உனக்காய் என்னை தேய
வைத்துக் கொண்டிருக்கிறாய்



உன்
தேய் பிறை நான்
என்
வளர் பிறை நீ


அகதியம் எழுதினார்
அகதிய முனி
அகத்து இயம் எழுதும்
அகதியன் நீ

காவிரியை அடக்கியது
அவன் கமண்டலம்..
காதலை அடக்கியது
உம் கவி மண்டலம்

வாழ்த்துக்கள்...

-ஆதி

யாழ்_அகத்தியன்
30-11-2007, 02:50 PM
இம்சையானவளே என்னும் தலைப்பை பார்த்ததும் "இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி" திரைப்படம் நினைவில் வந்தது. சித்திரத்தை ரசித்து முடித்ததும் பாரம் குறைந்த உணர்வு ஏற்படுமல்லவா? அதேபோலத்தான் இவையும்.. ஆனந்த அவஸ்தைகள்.

உனக்காக காத்திருக்கும்
கோபத்தில் கத்திரி வெயில்
ஆண்டியானது மலைவானில்...

உனைத்தேடி
வெட்கப்பட்ட முகிலாடைகள்...

உன்நிழல்கண்டதும்
ஆதவன்
ஆடைகளால் மூடப்பட
குளிர்ச்சி பரவியது..
என்னுள்ளும் புறமும்....



ஏங்க அகத்தியரே..! காதலிக்கவில்லை என்றீர்கள்.. அப்புறம் எப்படி இக்கவிதை?:confused::confused:


அது அது வந்து
ச்சீ போங்க வெக்கமா இருக்கு

மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கு

யாழ்_அகத்தியன்
30-11-2007, 02:51 PM
ஆனால்,
அவர்களுக்கு என் முகம்..???
அதனால்தானோ,
உன்னைப்போலவே,
முகம் திருப்பிக் கொள்(ல்)கின்றார்கள்..?


ஆனாலும்,
நிலா உன் குளிர்மைக்காக,
உன் வருடலுக்காக,
கருகும்வரை எரியத்தயார்...


ஆனாலும்,
உனக்குப் புரியும் நிகழ்தகவு,
மிகக் குறைவே...
ஏனென்றால்,
உன்னைக் காக்க வைக்க
நான் தயாரில்லை...


எனது மரண நாளிலாவது,
உன் வருகை தாமதிக்காது இருக்கட்டும்...
துர்மணம் உன்னை அண்டுவதைக்கூட,
என்னால் எண்ண முடியவில்லை...


உன் உலா வரும் போது,
என் தேய்வுகள்,
வினாடியில் நிரவுகின்றதே...

பாராட்டுக்கள் யாழ்_அகத்தியன்...


உங்க அசத்தலான வாழ்த்துக்கு
மிக்க நன்றி

யாழ்_அகத்தியன்
30-11-2007, 02:52 PM
தெரியாத தெருக்களிலும் மனிதரிலும்
உன்னைத் தேடுகிறேன்..

நீ வரப் போவதில்லையென
அறிந்தும்
அலையும்
என் நப்பாசைகளை
என்ன சொல்லி வைய்ய
*



ஞாயிறுக்கு
என்னிடம் சினம்
உன்னிடம் வெட்கம்
என்னைக் கண்டால் எரிக்கிறான்
உன்னைக் கண்டால்
மெல்கி வழிகிறான் மழையாய்

*



ஆவல்களை அடைக்காக்கிற
ஆற்றாமைகளின் பார்வையில்
உன்னைக் காணாத தாகங்கள்

*


காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்..

- வைரமுத்து - காதலித்துப்பார் - இத்தப் பூக்கள் விற்பனைக்கு அல்ல


உன்
தாமதங்களை தட்டிக்கேட்காத
தகிப்புகள்
தனக்குள் காரணங்கள் சொல்லிக்கொள்ளும்
உனக்கு சாதகமாய்


*



உன்
தேய் பிறை நான்
என்
வளர் பிறை நீ


அகதியம் எழுதினார்
அகதிய முனி
அகத்து இயம் எழுதும்
அகதியன் நீ

காவிரியை அடக்கியது
அவன் கமண்டலம்..
காதலை அடக்கியது
உம் கவி மண்டலம்

வாழ்த்துக்கள்...

-ஆதி

ஆகா ஆகா உங்க வாழ்த்தல்லவா
கவிதை மிக்க நன்றி