PDA

View Full Version : கமலின் கவிதை! மனித வணக்கம்!!



உதயசூரியன்
22-11-2007, 04:20 PM
எனக்கு கமலின் இந்த கவிதை வரிகள் ஆச்சரிய பட வைத்தது...
தமிழை மறக்காமல்.. கவிதைகளை படைக்கும்.. கமலுக்கு வாழ்த்துக்கள்


இதோ...



கடந்த சில தினங்களுக்கு முன் கவிஞர் புவியரசுக்கு பாராட்டு விழா நடத்தினார் கமல். அப்போது, தான் எழுதிய கவிதை ஒன்றை மேடையில் வாசித்தார். பலரையும் பரவசப்படுத்திய கமலின் அந்த கவிதை இதுதான்!

மனித வணக்கம்

தாயே, என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீகச் சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு

தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடி போனாயோ?

மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.

மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண சௌகர்யமே, வாழ்!

மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல..
எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை,
காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தியுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.

மதமென்றும், குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத்தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.

ஆம்,
நாளை உன் வரியில் நான் தெரிவேன்.

அன்பன்
-கமல்ஹாசன்

நன்றி. தமிழ் சினிமா

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

mgandhi
22-11-2007, 04:34 PM
தகவலுக்கு நன்றி

lolluvathiyar
23-11-2007, 05:48 AM
நன்றாக இருந்தது. ஆனால் சில வார்த்தைகள் புரிவதற்க்கு தடுமாறுகிறது. ( எனக்கு கமல் பிடிக்கும்)

Narathar
23-11-2007, 08:34 AM
[COLOR=navy]மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண சௌகர்யமே, வாழ்!

கமலுக்கு மகனா???
இல்லை கவிதைக்கு கற்பனையா?
நாராயணா!!!

எனக்கும் கமல் பிடிக்கும் ( நடிப்பை )

மன்மதன்
23-11-2007, 08:40 AM
பகிர்தலுக்கு நன்றி உதயசூரியன்..