PDA

View Full Version : யார்?ஆதவா
22-11-2007, 03:29 PM
என் நண்பன் ஒருவனிடமிருந்து பெற்றது இது. யார் எழுதியது என்று கேட்டு ரொம்பவே தொந்தரவு செய்துவிட்டான்.. விடை தெரிந்த பிறகு, அட இவரா என்று வியந்தேன்...

அந்த இவர், யார்?நேற்று ராத்திரி மழையீரத்தை
நக்கிக் குடித்தது சூரியன்
மரத்தோடிறுகிய
கோந்துப் பாளமும்
மனதிளகியதால் தழுதழுத்தது
தொண்டை கனத்த
காகம் ஒன்று
தலையைச் சிலிர்த்து
வானம் பார்க்குது
முருங்கைப் பூவைக்
குடையாய்ப் பிடித்தும்
முதுகு நனைத்ததோர்
கம்பளிப் பூச்சி!
ஆம் நேற்று ராத்திரி
நல்ல மழைதான்
இன்று
நத்தை மீண்டும் நகர்ந்தது.

இந்தக் கவிதைக்கு "மழை" என்று தலைப்பு.. எழுதியவரைக் கண்டுபிடியுங்கோ!!!

ஓவியன்
22-11-2007, 03:37 PM
நம் மன்றத்தைச் சேர்ந்தவரா..??

ஏதாவது க்ளூ தர முடியுமா..?? :)

சிவா.ஜி
23-11-2007, 04:04 AM
மிக அருமையான கவிதை ஆனால் சிரிப்புகள் பகுதியில் இதைப் பதிக்க ஏதேனும் விசேஷக் காரணம் உள்ளதா ஆதவா...?

அக்னி
23-11-2007, 04:13 AM
ஆதவா...
ஒண்ணுமா புரியலையே...

மிக அருமையான கவிதை ஆனால் சிரிப்புகள் பகுதியில் இதைப் பதிக்க ஏதேனும் விசேஷக் காரணம் உள்ளதா ஆதவா...?
சிவா.ஜி...
நீங்க கிண்டலடிக்கல. உண்மையாத்தான் புகழுறீங்க என்று, நான் நம்பீட்டன்.
ஆனா... ஆனா.. ஆதவா நம்பணுமே...

ஆதவா
23-11-2007, 04:21 AM
நம் மன்றத்தைச் சேர்ந்தவர் அல்ல..... ஓவியன்.

சிவா அண்ணா! புதிர், விடுகதை போன்றவற்றை இங்கே பதிப்பது வழக்கமாயிற்றே! அதான் இங்கே கொடுத்தேன்.

ஒரு க்ளு..

இவரை உங்களுக்கு நன்றாகவே தெரியும்.... ரொம்ப நன்றாக... தெரியாத ஆளில்லை..

சிவா.ஜி
23-11-2007, 04:24 AM
இவரை உங்களுக்கு நன்றாகவே தெரியும்.... ரொம்ப நன்றாக... தெரியாத ஆளில்லை..

திரையுலகத்தை சேர்ந்தவர்தானே...?

அக்னி
23-11-2007, 04:56 AM
திரையுலகத்தை சேர்ந்தவர்தானே...?
உலகத்தைச் சேர்ந்தவர்...

அமரன்
23-11-2007, 08:16 AM
புரியவே மாட்டேங்கிறது..நீங்களே சொல்லிடுங்க...

ஆதவா
23-11-2007, 08:30 AM
இவர் பெயர் திரியில் ஒளிக்க, இங்கே இருக்கிறது அமர்..

மதி
23-11-2007, 08:38 AM
ரொம்ப கஷ்டம்...
ஆதவா...சொல்லிடுப்பா..

ஆதவா
23-11-2007, 08:54 AM
ரொம்ப கஷ்டம்...
ஆதவா...சொல்லிடுப்பா..

அவர் பேசினா ரொம்ப குழப்புவார்....

கண்டுபிடிங்கோ பார்ப்போம்.

மன்மதன்
23-11-2007, 09:02 AM
கமல்??

Narathar
23-11-2007, 09:05 AM
விசு???
சோ??

மதி
23-11-2007, 09:06 AM
ஹ்ம்..முடியல..
நான் இந்த விளையாட்டுக்கு வரலை..

ஆதவா
23-11-2007, 09:06 AM
கமல்??

இதுக்குத்தான் நான் க்ளுவெல்லாம் தரதில்லைன்னு சொன்னேன்.....

வாழ்த்துகள். மன்மி.

அக்னி
23-11-2007, 10:48 AM
இதுக்குத்தான் நான் க்ளுவெல்லாம் தரதில்லைன்னு சொன்னேன்.....

வாழ்த்துகள். மன்மி.
தந்தே கண்டுபிடிக்க முடியல. தராவிட்டால்...
ஏற்கனவே உதிருது... இதுக்குள்ள நீங்க வேற...

ஓவியன்
23-11-2007, 11:48 AM
அட மன்றத்தின் கவிதைப் போட்டிக்கு கமலும் "மழை" என்ற தலைப்பில் கவிதை எழுதி இருக்கிறார் போல...!! :)
_______________________________________________________________________________________________________________________
கமல் ஒரு பல் துறை விற்பன்னர் என்பதற்கும் இன்னும் ஒரு எடுத்துக்காட்டு....
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஆதவா..!!

சிவா.ஜி
24-11-2007, 03:26 AM
கமல் அல்லது பார்த்திபன் என்று நினைத்தேன். கமலா...?நல்லாருக்கு.

அக்னி
24-11-2007, 09:58 AM
கமலா...?நல்லாருக்கு.
கமலாவா..?
அண்ணியோட மின்னஞ்சல் முகவரி பிளீஸ்...
அப்பிடியே Quote பண்ணத்தான்...:p

ஓவியன்
25-11-2007, 10:07 AM
கமலாவா..?
அண்ணியோட மின்னஞ்சல் முகவரி பிளீஸ்...
அப்பிடியே Quote பண்ணத்தான்...:p

இல்லை அப்படியே ஒளி நகலெடுத்து(ஸ்கான்) கூரியரில் அனுப்பினால் என்ன அக்னி...??? :)

ஓவியன்
25-11-2007, 10:10 AM
ஹ்ம்..முடியல..
நான் இந்த விளையாட்டுக்கு வரலை..

சரி, சரி கால் மாறியதும் வாங்க விளையாடுவோம்...!!! :D:D:D

மதி
25-11-2007, 10:22 AM
சரி, சரி கால் மாறியதும் வாங்க விளையாடுவோம்...!!! :D:D:D
அட..விடுங்க...
குழந்தைகள் தினதன்று நானும் ஒரு குழந்தைன்னு சொன்னாலும் சொன்னேன்... இப்ப நடைபழகிட்டு இருக்கேன்... :eek:

ஓவியன்
25-11-2007, 10:28 AM
அட..விடுங்க...
குழந்தைகள் தினதன்று நானும் ஒரு குழந்தைன்னு சொன்னாலும் சொன்னேன்... இப்ப நடைபழகிட்டு இருக்கேன்... :eek:

ஹீ,ஹீ!!
தெரியுமே, ரொம்பவே வலிக்கும் மெள்ள நடந்து பழகுங்க..!! :)

மதி
25-11-2007, 10:43 AM
ஹீ,ஹீ!!
தெரியுமே, ரொம்பவே வலிக்கும் மெள்ள நடந்து பழகுங்க..!! :)
தங்கள் எண்ணப்படியே..

மலர்
25-11-2007, 11:18 AM
அட..விடுங்க...
குழந்தைகள் தினதன்று நானும் ஒரு குழந்தைன்னு சொன்னாலும் சொன்னேன்... இப்ப நடைபழகிட்டு இருக்கேன்... :eek:

ஹீ...ஹீ..
இதுக்கு தான் பொய் சொல்லக்கூடாது...

மதி
25-11-2007, 11:28 AM
யார் பொய்னு சொன்னது..?
அதான் உண்மைன்னு ஆச்சே..
தத்தித் தத்தி நடக்கற குழந்தைய பாத்து ஏன் இப்படி கேக்கறீங்க..

ஓவியன்
25-11-2007, 11:48 AM
யார் பொய்னு சொன்னது..?
அதான் உண்மைன்னு ஆச்சே..
தத்தித் தத்தி நடக்கற குழந்தைய பாத்து ஏன் இப்படி கேக்கறீங்க..

தத்தி தத்தி போறதெல்லாம் குழந்தையா...!!!
அப்படினா தவளை.............??? :aetsch013:

மதி
25-11-2007, 11:52 AM
தத்தி தத்தி போறதெல்லாம் குழந்தையா...!!!
அப்படினா தவளை.............??? :aetsch013:

ம்ம்ம்... அது தாவி தாவி போகும்..
அட விடுங்கப்பா....