PDA

View Full Version : எனக்குப் பின்னே பெண்கள்.



ஆதவா
22-11-2007, 02:55 PM
எனக்குப் பின்னே பெண்கள்.

மாதராய் பிறந்திடவே நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்று பாரதி அன்றே சொன்னார். எனக்கு உரைத்ததும் அவர் சொன்னதைப் படித்த பிறகே!

நான் ஒரு வெற்றியாளன் அல்ல. அதேசமயம் தோல்வியில் உருளும் சோம்பேறியும் அல்ல. எனக்கு இட்ட பாதை தெளிவில்லாதது. அதைத் தெளிவாக்கிக் கொள்ள முயற்சிக்கும் சாதாரண மனிதன். அத்தகைய மனிதனுக்குப் பின்னே ஒளிந்துகொண்டிருக்கும் பெண்கள் எத்தனை பேர்... விரல் விட்டு எண்ணி விடலாம். ஒவ்வொரு சமயத்திலும் என்னைத் தூக்கிவிடும் அத்தகையோரைப் பற்றிய கட்டுரையே இது.

அன்றெல்லாம் பெண்களை, பெண்களாக நான் மதித்ததில்லை. கறுப்பாய், குள்ளமாய், அசிங்கமாய் இருப்பவர்களைக் கண்டால் அவ்வளவாக எனக்குப் பிடிக்காது. புறத்தோற்றத்தை வைத்தே அவர்களைப் பிரித்து வைத்திருந்தேன். சிவப்புத் தோல் மனைவிதான் வரவேண்டுமென்ற கற்பனைக் கோட்டைகள் அன்றைய தினத்தில் கட்டப்பட்டன. பெண்களின் குரல் எனக்கு அன்றிலிருந்து இன்றுவரை பிடித்தமானது. அதிலும் கட்டைக் குரல் என்று அழைக்கப்படும் கடும் குரல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானது. பொதுவாக பெண்கள் மென்மையானவர்களாக இருக்கவேண்டும் என்ற முடிவை நான் மாற்றிக்கொண்டேன். பெண்கள் எல்லா வகையிலும் ஆண்களுக்கு நிகராகவே இருக்கவேண்டும் என்பது என் அவா.


நான் கண்ட முதல் பெண், என் தாய். சுலோச்சனா தேவி. கண்டிப்புக்குப் பெயர் போனவர். பெயரில் உள்ள சுலோ" இருந்தாலும் எந்த விசயத்திற்கும் அடங்கிப் போகமாட்டார். சிலர் சொல்லுவார்களே, தாயைப் போலவே குணமுள்ள மனைவி வேண்டுமென்று, எனக்கு அமைந்தால் நான் அப்படியே வேண்டுவேன். அதிகம் படிப்பின்மை அங்கங்கே தெரிந்தாலும், வெளிப்படுத்தத் தெரியாத பாசம் வைத்திருப்பார். சில மைனஸ்கள், சில ப்ளஸ்கள்... ப்ளஸ்களை மட்டும் கணக்கில் கொண்டு என் வாழ்வு நடையில் மாற்றம் கொண்டுவந்தவர் என்றால் அது என் அம்மா மட்டுமே... என் தாயிடமிருந்து நான் கற்றுக் கொண்டது, கண்டிப்பு, கோபமும், வழிதவறாமையும்


அம்மாவுக்கு அடுத்ததாக எனக்குப் பின்னே இருந்த பெண், எனது முதல் காதலி. எனது முதல் நண்பி, ரோசா" வான குணம் கொண்டவள்.. சில பேருக்குத்தான் சிறுவயதில் ஞானம் முளைக்கும். அத்தகைய ஞானம் நிறைந்த இந்திப் பெண் அவள். காதலிப்பதாக சொன்ன அடுத்த நிமிடமே, படிப்பை முடி, வேலைக்குப் போ, கை நிறைய சம்பாதி, அதுவரை நான் காத்திருக்கிறேன், ஆனால் இன்று உன் மீது எனக்கு காதல் இல்லை என்று உபதேசம் செய்தவள். இன்று நினைத்தாலும், அவளா அந்த வயதில் பேசியவள்? என்று வியக்கவைப்பவள். என் வாழ்க்கைப் போக்கில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தவள். அவள் முகம் ஞாபகம் இல்லையென்றாலும் அன்று சொன்ன வார்த்தைகள் நெஞ்சில் இன்னும் பதிந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் தாரக மந்திரம் என்றே கூட சொல்லுவேன். ஒருவேளை புத்திமாறி, ஓகே சொல்லியிருந்தால் ? இன்று ஆதவன் "அதோ அவன்" ஆகியிருப்பான்.. அவளிடமிருந்து நான் கற்றுக் கொண்டது பொறுமையும், திறமையும்.


நீண்ட காலங்களுக்குப் பிறகு என் சகோதரிகள் என் பின்னே நிறைந்து நின்றார்கள், நிற்கிறார்கள். ஒவ்வொரு முறையும் மனம் துன்பப் படும் வேளைகளில் அந்த துன்பங்களை இவர்களிடம் தான் கொட்டுவேன். சொந்த நாட்டு அகதியாக ஒவ்வொரு இரவும் கழியும் போது, அயல்நாட்டு உறவினராய் கைகொடுத்தவர்கள் இவர்கள். ஓரிருவர் மட்டுமே பலமாக என் பின்னே நிற்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றியும் கூட... இவர்கள் எனக்கு பாசத்தைக் கற்றுக் கொடுத்தார்கள், குறிப்பாக, பெண் நட்பு என்றால் என்ன என்பதையும், கற்றுக் கொடுத்தார்கள்.


இவர்களுக்கெல்லாம் பிறகு, எனக்குக் காதலைக் கற்றுக் கொடுத்தவள்... அந்தக் காதல் முறிந்தால் அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைக் கற்றுக் கொடுத்தவள் என் ஆருயிர்த் தோழி. மன்றத்தில் அடிபடும் அந்தப் பெயருடையவள். முதன் முதலாய் காதலா நட்பா என்று தெரியாமல் முழிக்க வைத்தவள்.. இதுவும் ஒருவகையில் நல்ல அனுபவமே..


இன்னும் சிலருண்டு... சொல்ல இயலாத காரணங்களுமுண்டு. திறமைகளை ஒருங்கே பெற்ற பெண்களின் குரல்கள் இன்னும் பக்கமாய், பலமாய் காதினுள் நுழையவேண்டும் என்பது ஆசை.


இன்று இந்த அனுபவங்கள், என்னை ஒவ்வொரு விதத்திலும் உயர்த்தி விட்டவர்களால் பெண்கள் யாவருமே உயர்ந்தவர்கள், அவர்களுள் உயரம், நிறம், அழகு ஆகியவகை வெறும் புற அழகுகளே என்பதையும் உணர்ந்து கொண்டேன். முன்பே நான் சொன்னது போல, நானொரு வெற்றியாளன் அல்ல. ஆயினும் எனது ஓட்டங்களுக்கு பக்கபலமாக இருப்பது இவர்களைப் போன்ற சிலரே!!!

நன்றி பெண்களே!

பிகு :

ஒருவனின் வெற்றிக்குப் பின்னே ஒரு பெண் இருப்பாள்.... இது பலர் சொன்னது

எல்லா ஆண்களின் வாழ்க்கைக்குப் பின்னேயும் பல பெண்கள் இருப்பார்கள்.. இது நான் சொல்கிறேன்.

ஓவியன்
22-11-2007, 03:18 PM
ஆதவா..!!

பெண்மை என்றால் எனக்கு எப்பவுமே தாய்மை தான் நினைவுக்கு வரும், அம்மாவிடமிருந்து மட்டுமல்ல நான் சந்தித்த ஒவ்வொரு பெண்களிடமும் அதனை கண்டிருக்கின்றேன். தன்னலனிலும் நம் நலன் பேணும் உயர் பண்பது...!!

நல்ல பெண்களின் நட்பு, அருகாமை, ஆலோசனை, அன்பு கிடைப்பவன் பாக்கியசாலி...

என் நண்பன் அத்தகைய பாக்கியசாலியானதில் எனக்கும் கொள்ளை மகிழ்சி..!! :)

சிவா.ஜி
23-11-2007, 04:15 AM
தான் ஆராதிக்கும்,தன்னை விரும்பும்,தன்னை வழிநடத்தும் பெண்களைப் பற்றி ஆதவா சொல்லியிருப்பது அழகாக இருக்கிறது.ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இப்படிப்பட்டப் பெண்களை ஒரு ஆண் சந்தித்தே அல்லது அடைந்தே ஆக வேண்டும்.பொதுவாகவே பெண்கள் ஆண்களைவிட அதிகமான சிந்தனையாளர்கள்.அமைதியானவர்கள்.அவர்களின் வழிகாட்டுதல்கள் பெரும்பாலான நேரங்களில் நிச்சய வெற்றியைத் தரும்.உதாரானம் நானும் என் மனைவியும்.பகிர்தல் அருமை ஆதவா.

தங்கவேல்
23-11-2007, 04:50 AM
ஆதவா உண்மை தான் பெண்கள் இல்லையேல் உலகம் இல்லை. பெண்தான் வாழ்வின் ஜீவன்.

அக்னி
23-11-2007, 04:51 AM
பெண்கள் இல்லாத உலகம்... நரகம்...
ஆதவாவின் மீள்பார்வையா, முன்னேற்றப்பாதையா?
எதுவாக இருந்தாலும் பெண்களின் முக்கியத்துவம் உணர்த்தும் பதிவு...
முற்றும் துறந்த துறவியானாலும், பிறந்ததே பெண்ணிடம் கருவாகித்தான்...

எந்த ஆண்களின் வெறிக்கும் பெண்கள் ஆளாகாதவரை,
எல்லா ஆண்களின் வெற்றிக்குப் பின்னாலும் பெண்கள் இருப்பார்கள்...

அருமையான பதிவு...
சுருக்கமாக தந்ததால், பல சிறப்புக்கள் வெளிப்படவில்லையோ என்ற ஆதங்கம் எழுகிறது...

lolluvathiyar
23-11-2007, 05:44 AM
பென்னின் பெருமைய எடுத்து உரைத்த ஆதவாவுக்கு நன்றி. அனைவரின் வாழ்கையில் பின்னால் பென்கள் இருப்பார்கள். எத்தனை பேர் இருக்கார்களோ இல்லையோ கட்டாயம் தாய் இருப்பாள்.

அது மேட்டர் அல்ல ஆனால் தனக்கு பின்னால் இருக்கும் பென்னுக்கு நன்றி சொல்லியது மிகவும் பாராட்டகூடிய செயல்.

(காதலில் மாட்டி திருமனம் செய்யும் வரை இது போன்ற வசனங்கள் தான் வரும் என்று கிபி 1700 லேயே திருலொள்ளுவர் லொள்ளுவாத்தியார் லொள்ளத்துபாலில் சொல்லி இருகிறார்)

பென்ஸ்
23-11-2007, 06:35 AM
நண்பர்: நீ இன்று இருக்கும் பென்ஸாக இருக்க முக்கிய காரணம் யார்??
பென்ஸ்: என் அம்மா..
நண்பர்: அவர் உன் வாழ்வில் இல்லாமல் இருந்திருந்தால் நீ என்னவாக இருந்திருப்பாய்...
பென்ஸ்: அனேகமாக ஒரு கிருமினலாய்...


நன்றி ஆதவா... நன்றி சொல்லுவது ஒரு அன்பை வேளிபடுத்துமானால் இந்த வாய்பை எடுத்து கொள்ளுகிறென்... கடன் அடைக்க அல்ல....
என் வாழ்வில் இருந்த, இருக்கிற, வரப்போகும் எல்லா பெண்களுக்கும் என் நன்றிகள்...

இளசு
23-11-2007, 06:52 AM
முதலில் மதிப்பு..
மதிப்பின் மேல் கட்டப்பட்ட அன்பு..
அன்புக்கு நன்றியாய் இன்னும் அன்பு..
அன்பு காட்டும் வகைகள்/வழிகள் மாறினாலும்
மதிப்பும் மரியாதையும் எப்போதும்...

இது எல்லா மனிதனும் சக மனிதனுக்குத் தர/பெற வேண்டிய
பண்டமாற்று!

தந்தை,தாய், சகோதர - சகோதரிகள், நண்பர்கள். காதலர்-காதலியர், சகப்பணியாளர்,
பழகுவோர், அறிந்தோர், கேள்விப்பட்டோர், இன்னும் பார்க்காதவர்..
எங்கும் முதல் ஊடும் உணர்வு -
பரஸ்பர மரியாதையாய் இருக்கவேண்டும்!

மதிக்கப்படுதல் - சுவாசம்
அங்கீகாரம் - நீர்
அன்பு - உணவு



இந்த மரியாதையுடன் கூடிய அன்பையும் நன்றியையும்
ஆண்கள் பெண்களுக்கும்; பெண்கள் ஆண்களுக்கும்
அளிக்கும்போது -
உலகம் ஏனோ இன்னும் அழகாகிறது!

அழகாக்கும் ஆதவனுக்கு வாழ்த்துகள்!

அமரன்
23-11-2007, 08:26 AM
ஆதவா. உங்களை புடம்போட்ட பாசிட்டிவான பெண்களைப் பற்றிய பதிவு. குறிப்பிட்ட வயதெல்லையை தொட்ட அநேகர் இந்த இடங்களில் காலடைத்தடங்களை பதித்து இருப்பார்கள்.

ஆணோ பெண்ணோ.. ஒருவரிடம் எப்படிப்பழகவேண்டும் பழக்கூடாது என்பதைக்கூட கற்றுத்தருவார்கள். உங்களைப்போன்ற பெண்களில் அம்மாவையும், தோழியையும் சந்தித்த நான் காதலெனும்போது எதிர்மறையானோரையே சந்தித்தேன். அவர்கள் செயல்கள் எனக்கு நன்மை பயப்பதாகவே இருந்தது. பலவற்றை கற்க வழிவகை செய்தவர்கள் அவர்கள். அதற்காகவே சில இடங்களில் அவர்களால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் மேல் மதிப்பு இருப்பதுக்கு நீங்கள் கூறிய வகைப்பெண்களே காரணம்.

தரமான கட்டுரை, தரமான கருத்துகள்.. நன்றி அனைவருக்கும்

மயூ
14-01-2008, 09:21 AM
ஆதவா ஒரே டச்சிங்கா இருந்திச்சு.. ரொம்ப நன்றி.. அருமையான கட்டுரை...!!!
அம்மா சகோதரிகள் பற்றி நீசொன்னதை நான் ஏற்றுக்கொள்கின்றேன், காதலி அனுபவம் இது வரை இல்லை... அதனால் அது பற்றிச் சொல்ல முடியாது...!!!!
எல்லார் வாழ்க்கையிலும் பல பெண்கள் இருப்பார்கள் என்று நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்!!!

சுகந்தப்ரீதன்
17-01-2008, 09:05 AM
எல்லா ஆண்களின் வாழ்க்கைக்குப் பின்னேயும் பல பெண்கள் இருப்பார்கள்.. இது நான் சொல்கிறேன்.
மிக மிக உண்மை ஆதவா..! உங்களுக்கு பின்னேதான் பெண்கள்..! ஆனால் எனக்கு முன்னேயும் பெண்கள் உண்டு பின்னேயும் பெண்கள் உண்டு..! ஆனால் எப்போதும் ஒரு இடைவெளி எனக்கும் அவர்களுக்கும் இருந்ததுண்டு இருப்பதுமுண்டு..! பெண்ணின் அவசியமும் அதன் தேவையையும் அழகாக் வெளிபடுத்திய ஆதவனுக்கு எனது வாழ்த்துக்கள்..! எங்கே போய்ட நீ இப்பல்லாம் அதிகம் வரதேயில்ல இந்த பக்கம்..? ஓ பட்டியல்ல அடுத்த பெண்ண சேர்க்க முயற்சிக்கிறியாக்கும்..?! ப்லே ப்லே பாண்டியா.. இல்ல இல்ல ஆதவா..!

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதட..?
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா..?

சூரியன்
17-01-2008, 09:13 AM
ஆழமான உண்மையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
பெண்கள் எப்போதுமே உயர்ந்தவர்கள் தான்