PDA

View Full Version : மனஅழுத்தத்துக்கு மருந்து



ஆதவா
22-11-2007, 02:51 PM
என்ன மாரி? எப்படி இருக்கே?

நீ வேற சார், வூட்ல பொண்டாட்டி தொல்லை தாங்க முடியலை.

பொண்டாட்டினாலே அப்படித்தான்யா.. என்ன பிரச்சனை

தீவாளிக்கு ட்ரெஸ் எடுத்துக்கொடுக்கலை. அதான் பிர்ச்சனை,

இது பெரும் பிரச்சனை இல்லையா?

என்ன செய்யறது. நேரம் கிடைக்கலை. கடைக்குப் போய் எடுத்துட்டு வர

இந்த வயசில வேலை செய்யறது தப்பில்லை மாரி. அதுக்காக இப்படியா? ரொம்ப கஷ்டப்படாதே, அப்பறம் பின்னாடி ரொம்ப அனுபவிப்பே!

நான் சொல்றதக் கேளு.

அட போ வாத்தியாரே! எல்லாரும் இப்பவே ரொம்ப கஷ்டப்படுன்னு சொல்றாங்க ! நீ என்னடான்னா

மாரி, இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இப்படி ஒரேமுட்டா துன்பத்தையே அனுபவிச்சுட்டு, வேலையே கதின்ன்னு இருந்தா,

அதுக்குப் பேரு வாழ்க்கை இல்லைப்பா, எந்திரத்தன,

நீ டெய்லியும் எத்தனை மணிக்குத் தூங்கற?

நைட் ஒரு மணிக்கு..

அதுதான் தப்பு. உன்னோட மன அழுத்தத்துக்கு அது விதையா அமைஞ்சுடும். நேரமே படுத்து நேரமே எந்திரிக்கணும்.

அப்பறம்?

எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கொஞ்ச நேரமாவது கண்மூடி எதையும் நினைக்காம தியானம் பண்ணனும், இல்லைன்னா மியூசிக்

கேட்கணும்... மனசை எப்பவுமே இதமா வெச்சுக்கணும். நீ எவ்வள கஷ்டமான வேலை செஞ்சாலும் மனசு பாரமில்லாம இருக்கும்..

ஓஹோ!!

வேலையை செய்யும் போது வேலையில மட்டும்தான் கவனம் இருக்கணும், ஒவ்வொரு வேலையும் சரியா திட்டம்போட்டு செய்யனும்,.

வேலைகளை வாங்கி வெச்சுட்டு நெருக்கிட்டு இருக்கக் கூடாது. உன்னால முடியலையா, சில ஆர்டர்களை கேன்சல் பன்றதில தப்பே

இல்லை.. பணம் மட்டுமே வேணும்னு நினைக்கக் கூடாது மாரி, மனமும் வேணும்.

உனக்குப் பிடிச்சவங்க யாராவது இருந்தாங்கன்னா உடனே ஒரு போன் போடு, நல்லா பேசு, அரட்டை அடி, லூட்டி அடி, அந்த சந்தோசம்

கொஞ்சம் நேரமாவது நிலைச்சு இருக்கட்டும். வேலையும் சந்தோசமா போகும்

நீ ஒரு வேலைய வாங்கி வெச்சுட்டு லேட் பண்ணி, இல்லை குறிப்பிட்ட சில வேலையை முடிக்காம திணறினா, உடனே அதுக்குண்டான

உதவியைத் தேடு, அதவிட்டுட்டு மனசுல பாரத்தை ஏத்தி வேலைசெஞ்சா, அது உடல் நலத்துக்குத்தான் கேடு.. உன்னோட தொண்டை

அடைச்சா அது மனசுக்குக் காயம்னு அர்த்தம்..

அடடே!! அப்பறம்...???

உனக்கு இன்னும் கொஞ்சம் டைம் ஒதுக்க முடிஞ்சா நேரா, தமிழ்மன்றம்.காம் போ... நீ எப்பவுமே மனசை காயப்படுத்தமாட்டே!!

ரொம்ப நன்றிப்பா..

இந்த நன்றியை எனக்குச் சொல்லாதே.. எனக்குத் தகவல் கொடுத்த இணையத்துக்குச் சொல்லணும்...

நன்றி தமிழ் இணையமே!

----------------------------------------------

அட, எதுக்கு இந்த திரின்னு பார்க்கறீங்களா? இதுக்கு ரெண்டு காரணம்

1. மருத்துவப் பகுதியில இதுவரைக்கும் நான் திரியே ஆரம்பிக்கலை

2. மன அழுத்தம் போக, தமிழ்மன்றமும் ஒரு வழிமுறைன்னு சொல்ல..

நன்றி நண்பர்களே!

ஓவியன்
22-11-2007, 03:24 PM
விளையாட்டுத் தனமாக இருந்தாலும் மனதில் கொள்ளவேண்டிய விடயங்களை அழகான பேச்சு வழக்கில் தந்த ஆதவனுக்கு நன்றிகள் பல..!! :)


அட, எதுக்கு இந்த திரின்னு பார்க்கறீங்களா? இதுக்கு ரெண்டு காரணம்
1. மருத்துவப் பகுதியில இதுவரைக்கும் நான் திரியே ஆரம்பிக்கலை
அடடே...!!
நானும் இன்னும் ஒரு திரி இங்கே ஆரம்பிக்கவில்லையே...
சரி, சரி...!!
இப்படி ஒரு திரி ஆரம்பித்துவிட வேண்டியது தான்..!! :rolleyes:

நேசம்
22-11-2007, 06:11 PM
நேரடியா சொல்வதை விட இந்த மாதிரி சொல்வது படிப்பவர்கள் ஆர்வத்தையும்,அதன் கருத்தையும் கிரகித்து கொள்வார்கள்.
இதை பகிர்ந்து கொண்ட ஆதாவுக்கு நன்றி

பூமகள்
22-11-2007, 07:13 PM
அழகான பதிவு ஆதவா.
உண்மையும் கூட..!

மிக மிக அத்யாவசிய தீர்வை, மக்கள் எல்லோரும் அலைந்து திரிந்து தேடிக் கொண்டிருக்கும் ஒரு தீர்வை, உனக்கே உரிய சிறந்த எழுத்து நடையில் பெரிய பெரிய கருத்துகளையும் எளிமை புகுத்தி சொன்ன விதம் பாராட்டத்தக்கது.

வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..! :)

சுகந்தப்ரீதன்
24-11-2007, 09:23 AM
உங்களோட இரண்டாவது காரணம் அனுபவரீதியா மிக உண்மை ஆதவரே...!என்னை பொறுத்தவரை தமிழ்மன்றம் மன அழுத்தம் போக்க மட்டுமல்ல...புத்துணர்ச்சி பெருவதற்க்கும் தகுந்த இடமாக இருக்கு..!வாழ்த்துக்கள் ஆதவரே தங்களின் மருத்துவ கட்டுரைக்கு..!