PDA

View Full Version : அவசரகாதல் பாகம் 2 - ஜெஸிகாவின் விபரீத ஆசை.



ஆதவா
22-11-2007, 01:51 PM
" ஹேய் மிஸ்டர், ஏன் என்னையே பார்த்துட்டு இருக்கீங்க? "

" உன்னையே பார்த்தேனா? அப்படின்னு யார் சொன்னா? "

" நான் தான் உங்களையே பார்த்துட்டு இருந்தேனே? "

" நீங்க ஏன் என்னையே பார்க்கறீங்க ? "

" என்ன? என்னை மடக்கறதா நினைப்பா? "

" நீ என்ன பொட்டியா? மடக்கறதுக்கு? வலிய ஒரு பொண்ணு வந்து என்னோட பேசுதுன்னா அதுக்கு காதல்னுதானே அர்த்தம்? "

" யூ ஸ்டுபிட், உன்னைப் போய் எவளாவது லவ் பண்ணுவாளா? "

" அப்பறம் எதுக்கு என்னையே பார்க்கிறீங்க? என்கூட பேசறீங்க? நான் உங்ககிட்ட இதுவரைக்கும் பேசியிருக்கேனா? "

" அப்படீன்னா? "

" அப்படீன்னா இது காதல்தான்!!"

" காதல்னா சினிமா பார்க் பீச் இங்கெல்லாம் போகணும்.. இப்படி பஸ் ஸ்டாப்பில நின்னுட்டு கிண்டல் பண்ற?/ யூ மேன்... எனக்கு பஸ்

வந்துடுச்சு, நாளைக்கு வந்து உன்னை வச்சுக்கறேன். "

" ஏன்? இன்னைக்கே வெச்சுக்க வேண்டியதுதானே? "

" ஸ்டுபிட் "

" தேங்க் யூ "

கதிர் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு ஜெஸியை விடாமல் துரத்தும் பேர்வழி. நக்கல் நாகசுந்தரம் என்று பசங்கள் எல்லாம் கூப்பிடுவார்கள்

அவனை. கதிர் ஒரு ரோமியோ மாதிரி. அப்படின்னு அவனாகவே நினைத்துக் கொள்வான். அவன் முகத்திற்குப் பொருந்தாத மூக்குக்

கண்ணாடி, லிப்ஸ்டிக் வேறு. ஃபேர் அண்ட் ஹேண்ட்ஸம் இவனுக்கான தயாரிப்பு. ஷார்ட் ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட்ஸ். அவ்வளவுதான். தினமும்

நின்று கொண்டு ஜெஸியை சைட் அடிக்காமல் போனால் அன்று அவனுக்கு சோறு இறங்காது.

ஜெஸி இவனுக்கு நேர் மாறு. இருவருமே சோம்பேறிகள் என்பது வேறு விசயம். பார்க்க சுமாராக இருப்பாள். பொண்ணுக்குரிய அத்தனை

லட்சணங்களும் அப்படியே!! குணம் மட்டும் முரட்டு குணம்.

அடுத்தநாள் ஒரு முடிவோடுதான் ஜெஸி கதிரை சந்தித்தாள்.

" ஹேய் மிஸ்டர், நேத்திக்கு மாதிரி நான் பேசமாட்டேன். என்னோட செருப்புதான் பேசும். "

" டெக்னாலஜி அவ்வளவு முன்னேறிடுச்சா? "

" என்ன உளர்ற? "

" செருப்புகூட பேச ஆரம்பிச்சுடுச்சே! அதைத்தான் சொன்னேன். "

" மிஸ்டர்" கோபமாய் பார்த்தாள்.

" இந்த மிஸ்டருக்கு கதிர்" னு பேர் இருக்கு மிஸ் "

" மிஸ்டர் கதிர், என் பேரு மிஸ் இல்லை. ஜெஸிகா னு சொல்லவும் மாட்டேன், "

" சரி ஜெஸி, "

" ஷிட் "

" நேத்திக்கு ஏதோ காதல் கீதல் னு பேசின? இன்னிக்கு என்ன முடிவோட வந்திருக்கே? "

" மிஸ்டர் கதிர், நான் ஒண்ணூம் அந்த மாதிரி பொண்ணு இல்ல./ "

" காதல் பண்ண எதுக்கு ஒரு மாதிரி பொண்ணூ வேணும்? "

" ஹேய், யூ, "

" யெஸ்... மீ... !! "

" சரி, காதல் பண்றதுக்கு உன்கிட்ட அப்படி என்ன தகுதி இருக்கு?"

" என்ன இப்படி கேட்டுட்ட? கண்ணாடி போட்டிருக்கேன்! பாக்கெட்ல பணம் வெச்சுருக்கேன், ஹீரோ ஹாண்டா நிக்குது. நோக்கியாவுல

லேட்டஸ்ட் போன் மாடல் வெச்சுருக்கேன்.... இதெல்லாத்தையும் விட, கிரடிட் கார்ட் இருக்கு. "

" ஓ ஹோ! இதுக்கெல்லாம் நான் மயங்கிடுவேன்னு பார்த்தியா? "

" சே சே! இத்தனை சொல்லியும் அசராம நிக்கிறியே! நீயாவது மயங்கி விழுகிறதாவது?"

" ஓகே! நான் உன்னை காதல் பண்றேன். "

" நன்றி "

" ஆனா, காதலர்கள் சுத்தறமாதிரி, சினிமா, பார்க், பீச் னு கூட்டிட்டு போகணும். அப்பத்தான் நான் ஒத்துக்குவேன். "

" சரி "

இருவரும் அப்போதுதான் சந்தோசமாக சிரித்துப் பேசினார்கள். :D

ஒருநாள் காலை.. கதிர் வீட்டுக்குப் போன்..

செய்தது ஜெஸிகா, போன் எடுத்தது கதிரின் அம்மா.

" ஹலோ, கதிர் இருக்கிறாருங்களா? "

" அப்படி யாரும் இல்லையே! நீங்க யாருங்க மேடம். "

" நான் அவரோட வுட்பி, கதிர் இந்த நம்பர் தான் கொடுத்தார்.. "

" கதிரா? காதரா? சரியா சொல்லுங்க மேடம்.. "

" யாரா இருந்தாலும் பரவாயில்லை கூப்பிட்டுங்க மேடம். "

காதர்................... உனக்குப் போன்...... சொல்லிவிட்டு அம்மா உள்ளே சென்றார்..

" ஹலோ " இது காதர்.

" என்ன ஹலோ? உன் பேரு காதராமே? "

" காதராமே இல்லை. காதர் தான். அதிலென்ன சந்தேகம் ?

" நீ எங்கிட்ட கதிர்னுதானே சொன்னே? "

" நீ அப்படி கேட்டிருப்பே "

" அப்படீன்னா நீ முஸ்லீமா ? "

" இல்லையே! "

" அப்போ? "

" இண்டோ முஸ்லீம் "

" இதென்ன ஆங்கிலோ இண்டியன் மாதிரி இண்டோ முஸ்லீம்? "

" அது இந்து முஸ்லீம் கலவை.. உனக்குப் புரியாது. எதுக்கு போன் பண்ணின ?"

" இன்னிக்கு "அழகிய தமிழ் மகன்னு ஒரு தமிழ் படம் ரிலீஸ் ஆகியிருக்கு "

" அழகிய தமிழ் படம்னு தெலுங்கு படமா ரிலீஸ் ஆகும் ? விசயம் என்ன? "

" ரெண்டு பேரும் போலாமா? "

" யார் ரெண்டு பேர்? "

" மடையா. நாம ரெண்டு பேரும் தான். "

" ஓ. தாராளமா போலாமே! செகண்ட் ஷோவா?

" இல்ல, மேட்னி, நீ உடனே தியேட்டருக்குப் போய் போன் பண்ணி ரெண்டு டிக்கெட் புக் பண்ணு.."

" அதுக்கு எதுக்கு தியேட்டருக்குப் போய் போன் பண்ணனும் ? "

" சரி எப்படியோ போன் பண்ணு "

" காலை கட் பண்ணிடவா? "

" டேய் காதலா...!! உன்னை பார்க் பீச் சினிமான்னு தான் கூட்டிட்டு போகச் சொன்னேன். ஆஸ்பத்திரிக்கில்லை. "

" என்ன உளர்ற மிஸ்? "

" காலை கட் பண்றேன்னு சொன்னியே! "

" அது போன் காலை "

" போனுக்கு ஏது கால்? "

" நீ நேத்திக்கு ஓட்கா அடிச்சியா? "

" எங்கம்மா செருப்பால அடிப்பாங்க. ஒழுங்கா வந்து சேரு. "

டொக்.

நம்ம நக்கல் நாகசுந்தரம் வண்டிய உசுப்பிட்டு நேரா தியேட்டருக்குப் போனான். அங்கே ஜெஸி மாதிரியே ஒரு பொண்ணு நின்னுட்டு

இருந்தது. கிட்ட போய் பார்த்தா, அட .. நம்ம ஜெஸி!!

இங்க எதுக்கு வந்தா?

" ஜெஸி, இங்க எதுக்கு வந்தே ? "

" உன் மேல எனக்கு நம்பிக்கை இல்லாம இருந்தது. அதை செக் பண்ணத்தான் வந்தேன். "

" இப்படி காதலன் மேலயே நம்பிக்கை இல்லாம இருக்கலாமா?

" சரி சரி. சீக்கிரம் போய் டிக்கெட் எடுத்துட்டு வாங்க. ஷோ ஆரம்பிச்சுடுவாங்க. "

" ம்.. சரி..."

ரெண்டு பேரும் சினிமா பார்க்கற படலத்தை முடிச்சுட்டாங்க... அப்பறம்?

" காதிர், உனக்கு சிகரெட் குடிக்கிற பழக்கம் இருக்கா? "

" சுத்தமா இல்லை "

" ஓ காட், எவ்வளவு நல்லவரா இருக்கீங்க. "

" சுத்தமா இல்லைன்னுதானே சொன்னேன், ஆனா அசுத்தமா சிகரெட் குடிப்பேன். "

"சீ "

" என்ன 'சீ? இப்பல்லாம் பொண்ணுங்களே சீக்ரெட்டா சிகரெட் பிடிக்கிறாங்க தெரியுமா? "

" உண்மையாவா ? "

" ஆமா, சிகரெட் பிடிக்கிறாங்க. கையால.. ஆனா அடிக்கறதில்லை. ஹி ஹி "

" ரொம்ப கடிக்காதேடா... நாம கொஞ்சம் மனசு விட்டு பேசலாமா? "

" மனசை விட்டுட்டா, அப்பறம் எப்படி பேசறது...

" அய்யோ!!!!! "




சரி அப்பறமா நான் எழுதறேன். பை..

lolluvathiyar
22-11-2007, 02:04 PM
இது கதையா அல்லது அனுபவமா அல்லது புலம்பலா, எதுவா இருந்தாலும் சரி நன்றாக நகைசுவையாக ரசிக்கும் படி இருந்தது. 007 க்கு வேலை வந்துருச்சு

ஆதவா
22-11-2007, 02:25 PM
இது கதையா அல்லது அனுபவமா அல்லது புலம்பலா, எதுவா இருந்தாலும் சரி நன்றாக நகைசுவையாக ரசிக்கும் படி இருந்தது. 007 க்கு வேலை வந்துருச்சு

எல்லாமே சேர்ந்த கலவை வாத்தியாரே!! :D

ஓவியன்
22-11-2007, 02:28 PM
டேய் ஓவியன் இனி இந்த பக்கம் வருவியா, வருவியா..??

அப்படி மன சாட்சி திட்டினாலும் அடுத்த தடவையும் வருவேன்...!! :D:D:D
ஆதவன், ஜெசி ரொம்பவே பாவம்ங்க...
இப்படி ஒருத்தர் கிட்ட மாட்டி அவஸ்தைப் படுறாங்களே..!! :)

ஆதவா
22-11-2007, 02:45 PM
டேய் ஓவியன் இனி இந்த பக்கம் வருவியா, வருவியா..??

அப்படி மன சாட்சி திட்டினாலும் அடுத்த தடவையும் வருவேன்...!! :D:D:D
ஆதவன், ஜெசி ரொம்பவே பாவம்ங்க...
இப்படி ஒருத்தர் கிட்ட மாட்டி அவஸ்தைப் படுறாங்களே..!! :)

ஹி ஹி..... வாங்க வாங்க... நல்லா எழுதி வைக்கறேன்... படிச்சுட்டு ரத்தம் சொட்ட போங்க..

ஹி ஹி....

மன்மதன்
23-11-2007, 09:27 AM
கதைல வசனம் மட்டுமே இருக்கு.. கதை எங்கே..:D :D

ஆதவா
23-11-2007, 09:50 AM
கதைல வசனம் மட்டுமே இருக்கு.. கதை எங்கே..:D :D

அது இனிமே தாங்க....

(வசனகர்த்தா ஆகும் முயற்சி. :D)

ஓவியன்
23-11-2007, 10:28 AM
ஹி ஹி..... வாங்க வாங்க... நல்லா எழுதி வைக்கறேன்... படிச்சுட்டு ரத்தம் சொட்ட போங்க..
ஹி ஹி....

ஏற்கனவே சொட்டிய இரத்தத்தை ஈடுகட்ட பல மாதங்கள் தேவையாக இருக்கிறதே..!! :D

தாமரை
23-11-2007, 01:29 PM
கதைல வசனம் மட்டுமே இருக்கு.. கதை எங்கே..:D :D

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6369

இந்த ஸ்டைல்தானே ஆதவா..(ஆரம்ப பதிவுகள் மட்டும்) இது 1987 -ல் நான் தொடங்கிய முயற்சி.. வசனத்தில் மட்டுமே கதை சொல்லுவது.. பட்டுகோட்டை பிரபாகர் 90 கள்ளின் ஆரம்பத்தில் ஒரு நாவலே இப்படி எழுதி இருக்கிறார்

பாரதி
23-11-2007, 04:18 PM
அது இனிமே தாங்க....

(வசனகர்த்தா ஆகும் முயற்சி. :D)
மன்மதனுக்கு உதவும் முயற்சியா..? விரைவில் வெற்றி கிட்டட்டும்.
தலைப்பு சரிதானா ஆதவா..?


http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6369

இந்த ஸ்டைல்தானே ஆதவா..(ஆரம்ப பதிவுகள் மட்டும்) இது 1987 -ல் நான் தொடங்கிய முயற்சி.. வசனத்தில் மட்டுமே கதை சொல்லுவது.. பட்டுகோட்டை பிரபாகர் 90 கள்ளின் ஆரம்பத்தில் ஒரு நாவலே இப்படி எழுதி இருக்கிறார்

!! தாமரை..எனது மனதில் பல வருடங்களாகவே இருக்கும் ஒரு எண்ணம் − ஒரு கதை எழுத வேண்டும் − வசனங்கள் மட்டுமே இருக்க வேண்டும் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வதாக மட்டுமே அமைந்திருக்க வேண்டும் − கதாபாத்திரங்களின் பெயரும் கூட இருக்கக்கூடாது. ஒரு வருடத்திற்கு முன்னர் ஒரு கரு உருவானது; ஆனால் எழுதும் போது பிடிபடவில்லை. ஆகவே விட்டு விட்டேன். இங்கு இதைக்கண்டதும் சற்று வியப்புதான். (ஷீ − கவிதை போல!)

அக்னி
23-11-2007, 04:47 PM
அப்போ அறுவை இன்னும் முடியலையா... சரியான மொட்டைக் கத்தி காதர்...
சரி சரி பாப்பம் எங்க போய் முடியுதுன்னு...
உஸ்ஸ்... அப்பாடா... இப்பவே, கண்ணக்கட்டுதே...

மன்மதன்
23-11-2007, 05:09 PM
ஒரு கதை எழுத வேண்டும் − வசனங்கள் மட்டுமே இருக்க வேண்டும் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வதாக மட்டுமே அமைந்திருக்க வேண்டும் − கதாபாத்திரங்களின் பெயரும் கூட இருக்கக்கூடாது. ஒரு வருடத்திற்கு முன்னர் ஒரு கரு உருவானது; ஆனால் எழுதும் போது பிடிபடவில்லை. ஆகவே விட்டு விட்டேன்.


விட்டு விடாதீங்க.. எழுதுங்க பாரதி..

பூமகள்
23-11-2007, 05:15 PM
வசனத்திலேயே கதை..!
வித்தியாசமான நடை..!
இளமை துள்ளுகிறது..!

இக்கதை நிஜமென்றால்,
இடை, அடியிடி விழாமல்
பார்த்துக் கொள்
அன்புத் தம்பி ஆதவா..!

நல்லதொரு முயற்சி. பாராட்டுகள்.
விறுவிறுப்பாய் போகிறது. வாழ்த்துகள்..!!

யவனிகா
23-11-2007, 05:15 PM
அடடா...நகைச்சுவையில் நல்ல முயற்சி. கலக்கலாக, ரசிக்கும் படியாக கடித்தோரணங்கள். தோரணம் கட்டிய விளையாட்டாய் ஒரு காதல். ரசிக்கும் படியாகவே போகிறது கதை. காதலிக்கத் தேவையான தகுதிகளைப் பட்டியல் போட்டு விட்டீர்கள். தினமும் நீங்கள் திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் சகல தகுதிகளுடனும் நிற்பது தெரிகிறது.(சும்மா விளையாட்டுக்கு) தொடருங்கள்.

மதி
24-11-2007, 02:06 AM
ஆதவா...
சீக்கிரம் தொடருங்கள்..
என்னவோ தெரியல காதல்கதை அதுவும் ஜெஸியை வைத்தென்றால் உன் நடையில் துள்ளல் அதிகமாகிவிடுகிறது..

சிவா.ஜி
24-11-2007, 03:59 AM
அட்டகாசமான வசனக்கதை.சூப்பர்ஃபாஸ்ட்-ஆக போகிறது.நிறைய அனுபவமும் எழுத்தில் தெரிகிறது.(ஒண்ணு ரெண்டு மறைக்கப்பட்டிருக்குமோ)
ஆண்கள் லிப்ஸ்டிக்கெல்லாம் போடுவார்களோ?எப்படியிருந்தாலும் அசத்தலான ஒரு முயற்சிக்கு வாழ்த்துகள்(கூடிய சீக்கிரம் மன்மதன் ஆதவாவின் வசனம் பேசி கதாநாயகனாக நடிக்கும் படத்தைப் பார்க்க வேண்டும்)

lolluvathiyar
24-11-2007, 06:35 AM
ஆண்கள் லிப்ஸ்டிக்கெல்லாம் போடுவார்களோ?

காதல் கிறுக்கெடுத்தா ஓ சாரி முத்தி போச்சுனா லிப்ஸ்டிக் மட்டும் பொடமாட்டாங்க நெயில்பாலிஸ் மருதானி எல்லாம் போடுவாங்க. அப்படினு நான் சொல்லல ஆதவா சொல்லுவாரு. சரிதானே ஆதவா

அக்னி
24-11-2007, 10:27 AM
ஆண்கள் லிப்ஸ்டிக்கெல்லாம் போடுவார்களோ?
ஓ... போடுவார்களே... சின்ன மாற்றம் எல்லாம் அல்ல... கையில் இருக்கும் பணத்திற்கேற்ப...
பெண்களுக்காக வாங்கி பையில் போடாமல், கையில் அப்படியேவா கொண்டு செல்வார்கள்..?

சிவா.ஜி
25-11-2007, 04:36 AM
ஓ... போடுவார்களே... சின்ன மாற்றம் எல்லாம் அல்ல... கையில் இருக்கும் பணத்திற்கேற்ப...
பெண்களுக்காக வாங்கி பையில் போடாமல், கையில் அப்படியேவா கொண்டு செல்வார்கள்..?

இந்தப்பக்கம் வரும்போதே வியர்க்குதேன்னுப் பாத்தேன்....அக்னி இப்படி பொசுக்குறீயளே....ஆதவா போட்டுக்கொண்டுன்னுதானே எழுதியிருக்கார்..வாங்கிக்கொண்டுன்னா இருக்கு..? இருந்தாலும் இது ரொம்ப குசும்புதான்.

அக்னி
25-11-2007, 08:00 AM
நீங்க, இப்பிடித்தானே,


Originally Posted by சிவா.ஜி http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=302233#post302233)
ஆண்கள் லிப்ஸ்டிக்கெல்லாம் போடுவார்களோ?


கேட்டீர்கள்..?

ஆதவா போட்டுக்கொண்டுன்னுதானே எழுதியிருக்கார்..வாங்கிக்கொண்டுன்னா இருக்கு..?
வாங்கினாத்தானே போடமுடியும்..? இது என்ன :icon_rollout:தனமான (நன்றி: அன்புரசிகன்) கேள்வி...:D

சிவா.ஜி
25-11-2007, 08:13 AM
நீங்க, இப்பிடித்தானே,

கேட்டீர்கள்..?

வாங்கினாத்தானே போடமுடியும்..? இது என்ன :icon_rollout:தனமான (நன்றி: அன்புரசிகன்) கேள்வி...:D

கடவுளே காப்பாத்து.....முடியல்ல....

மலர்
25-11-2007, 08:16 AM
கடவுளே காப்பாத்து.....முடியல்ல....

சிவா அண்ணா..
அவரை ஏன் டிஸ்டர்ப் பண்ணுறீங்க...

அக்னி
25-11-2007, 08:16 AM
கடவுளே காப்பாத்து.....முடியல்ல....
புரியல சிவா.ஜி...
கடவுளுக்கே கா விடுறீங்களா..?
அல்லது, கடவுளே காத்து முடியல்ல என்று சொல்ல வாறீங்களா..?
அல்லது, வேணாம் இப்போதைக்கு இரண்டு போது...ம்...

மலர்
25-11-2007, 08:18 AM
புரியல சிவா.ஜி...
கடவுளுக்கே கா விடுறீங்களா..?
அல்லது, கடவுளே காத்து முடியல்ல என்று சொல்ல வாறீங்களா..?
அல்லது, வேணாம் இப்போதைக்கு இரண்டு போது...ம்...

சிவா அண்ணாக்கு இப்போ கண்ணை கட்டுமே...
ஸ்...ஸ்...

அக்னி
25-11-2007, 08:21 AM
சிவா அண்ணாக்கு இப்போ கண்ணை கட்டுமே...
ஸ்...ஸ்...
நாக்கு எப்படி கண்ணைக் கட்டும்... நக்கக் கூட முடியாதே (அடுத்தவரோடத பற்றி சொல்லலை)...:D

மலர்
25-11-2007, 08:24 AM
நாக்கு எப்படி கண்ணைக் கட்டும்... நக்கக் கூட முடியாதே (அடுத்தவரோடத பற்றி சொல்லலை)...:D

நீங்க எப்படி நான் குடுத்தத பிரிக்கலாம்...

ஏன்... ஏன் இப்படி..
நேத்து வரைக்கும் நல்லா தானே இருந்தியள்...
பின்ன இப்போ உங்களுக்கு என்ன ஆச்சி...

மலர்
25-11-2007, 08:27 AM
சரி அப்பறமா நான் எழுதறேன். பை..


ஜெஸிகா கோபம் வந்து கணிணியை உடைக்க... பாவம் தமிழ்மன்ற மக்கள்.. பாதிக் கதையைத்தான் அனுபவிக்க முடிந்தது...

இப்படி ஏதாச்சும் போட்டு பாதியிலே விட்டுருவ..
சரியா ஆளு தான் நீ

மலர்
25-11-2007, 08:36 AM
வசனம் சூப்பர் ஆதவன்...
ஆரம்பமே சும்மா அதிருது...
சூப்பர்...


இக்கதை நிஜமென்றால், இடை, அடியிடி விழாமல் பார்த்துக் கொள் அன்புத் தம்பி ஆதவா..!


ஆதவன் நான் உண்மையை சொல்லிடுறேன்... பாவம் இல்ல நம்ம பூவு..

அக்கா... திரூப்பூர் பஸ் ஸ்டாண்டில் நடந்த ஒரு உண்மை சம்பவம் தான் இது....
ஏன்னா ஆதவன் எப்பவும் உண்மை மட்டும் தான் பேசுவாரு அப்புறம் எழுதுவாரு...

மயூ
27-11-2007, 02:55 AM
பாவம் ஜெசிக்கா.. என்ன பாவம் செய்தாளோ??? இவன் கையில மாட்டுப்பட்டு இப்படி அல்லோல கல்லோலப் படுகின்றாள்.

இதைத்தான் குண்டக்கா மண்டக்கா பதில் சொல்வது என்று சொல்வார்களோ? கிரேசி மோகனின் திரைவசனம் கிட்டத்தட்ட இந்தப் பாணியிலேயே இருக்கும் என்ன சரியா? ஆனாலும் இதில் கடி ரொம்பவுமே அதிகம்... தாங்கலப்பா நிறுத்து நிறுத்து...

வயசுப் பையன்கிட்டபோயி இது அனுபவமா என்று கேட்டா எங்கயாவது ஒத்துக்குவானா?? இது அனுபவம்தான் மக்களே... இவன் இல்லீனு சொன்னாலும் நம்பாதீங்க!!!

ஆதவா
28-11-2007, 03:11 PM
எல்லாருக்கும் நன்றி (தனித்தனியே சொல்ல நேரமில்லைங்க.)

அடுத்த பாகம் விரைவில்...

(மயூ! கிரேஸி க்கு இந்த கிரேஸிக்கும் ராக்கெட் விட்டாலும் எட்டாது. )

Ram-Sunda
29-11-2007, 03:06 AM
நக்களுக்கு பஞ்சமே இல்ல, மாத்தி மாத்தி வாரிக்குதுங்க...
வாழ்த்துக்கள்
தொடருங்கள்

ஆதவா
01-12-2007, 02:44 PM
அவசர காதல் பாகம் 2 - ஜெஸிகாவின் விபரீத ஆசை.

" டேய் கதிர் "

" ம் "

" காதலிச்ச ரெண்டாவது நாள்லயே கவிதை பழகிட்டயே? "

" ஹி ஹி ஆமாம், அது என் திறமை "

" எப்படிடா கவிதை எழுதறது ?"

" கையாலதான் "

"அட அது இல்லை. "

" அது இல்லைன்னா அப்பறம் எப்படி எழுதறது ? "

" அய்யோ! சீரியஸா சொல்லு.. எப்படி எழுதறது? "

" ஜெஸி.. இங்க இருந்து (வயிற்றைக் காட்டி) தொண்டை வழியா அப்படியே வரணும்... "

" நானும் முயற்சி பண்ணினேன் டா "

" என்ன வந்தது? "

" வாந்திதான் வந்தது "

" அதுக்கெல்லாம் தனித் திறமை வேணும் ஜெஸி. "

" எனக்கு அதெல்லாம் தெரியாது. உடனடியா நானும் என் பேருக்கு முன்னாடி "கவிஞை" னு போடனும். அதுக்கு ஐடியா கொடு. "

" இதுக்கெல்லாம் எதுக்கு ஐடியா? நீயாவே போட்டுக்கவேண்டியதுதானே? "

" விளையாடாதே! எப்படி கவிதை எழுதணும் "

" நீ என்ன நெனச்சாலும் அதை அப்படியே ரெண்டு ரெண்டு வார்த்தையைப் போட்டு எழுதறதுதான் கவிதை... நீ ஏதாச்சும் நினையேன்.... "

" ம்... நெனச்சாச்சு '

" என்ன நெனச்சே? "

" உன்னை செருப்பால அடிக்கணும்னு நெனச்சேன். "

" அடிப்பாவி... இதுக்குன்னே அலையறயா? நல்லதா நென "

" ம் சரி// நெனச்சுட்டேன்.. "

" என்ன நெனச்சே? "

" நல்ல செருப்பால உன்னை அடிக்கணும்னு நெனச்சேன்.. "

" ம்ம்ம்ம்... உன்னைத் திருத்தவே முடியாதுடி.. "

" நான் என்ன கொஸ்சன் பேப்பரா? திருத்தறதுக்கு? "

" சரிசரி, நெனச்சதை ஒரு பேப்பர்ல எழுது.. "

"ம்ம் சரி.... " .......... " இதோ, எழுதிட்டேன் டா.. "

" இங்கே கொடு பார்ப்பம்.

காதல் செய்தேன்
பாப்கார் கிடைத்தது
பப்ஸ் கிடைத்தது
சுண்டல் கிடைத்தது
கடைசியில்
காதலனும் கிடைத்துவிட்டான்.

" அட.... என்ன அருமையான கவிதை ஜெஸி.. உன்னைக் காதலிச்ச இந்த மூணு நாள்ல நான் செலவு பண்ணியதை அப்படியே நினைவுக்குக் கொண்டு வரியே!!! பேஷ்.... இதுவரைக்கும் மூவாயிரம் ரூபா செலவாயிடுச்சுடி... "

" ஹேய்,,, ஏண்டா இப்படி அபாண்டமா பழி போடற?

" பழி போடறேனா? "

" ஆமா, மூனு நாள்னு சொல்ற? நாலு நாள் ஆச்சு.... "

" ஆமா, ஒரு நாள்ல மட்டும் என்ன வந்தது ? "

" நேத்திக்கு இப்படித்தான் வடை வாங்கித் தரேன்னு சொல்லிட்டு போனவந்தான்... திரும்பி வரும்போது வெறும் கையை வீசிட்டுத்தானே வந்தே ? "

" இல்லையே! நேத்திக்கு ரெண்டு கையையும் எங்கயும் வீசாமத்தானே வந்தேன் "

" அதைவிடு, நேத்திக்கு நைட் உங்க வீட்டுக்கு வந்தேன்.. அப்ப நீ யாரோ "சந்திரா " வாம். அவகிட்ட கொழைஞ்சு கொழைஞ்சு பேசிட்டு இருந்தியே? "

" அடிப்பாவி.. பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு இருக்கு... சந்திரன் அப்படின்னு ஒரு ப்ரண்ட்.. அவனைத்தான் சந்திரா அப்படின்னு விளிச்சு கூப்பிடுவேன்... "

" இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லிட்டுதான் இருக்க....

" என்ன பண்ண? என் விதி அப்படி/// "

" கதிர், செலவுக்கு நீ என்ன பண்ற?"

" பணம்தான்.. "

" அதான்,, எப்படி வருது ?"

" அது கவர்மெண்ட் ரகசியம்.. நாம செஞ்சா உள்ளே போட்டுறுவாங்க. "

" ஹேய்,,, நீ செலவு பண்றதுக்குப் பணம் எப்படி சம்பாதிக்கிற ?

" எப்படியோ சம்பாதிக்கிறேன்.... "

"எவ்வளவு ? "

" உனக்கு செலவு பண்ற அளவுக்கு சம்பாதிக்கிறேன் "

" சே போடா/// "

மனதுக்குள் .. சே போடாவா? அடிப்பாவி, இந்த தீனி திங்கறீயே! உனக்கு தீனி வாங்கிக் கொடுத்தே நான் கரைஞ்சுடுவேன் போல இருக்கே!!!

" அதைவிடு கதிர், எப்படி கவிதை எழுதறதுன்னு நீ சொல்லவே இல்லை. "

" இப்ப நீ எழுதினியே, அதுதான்.. நாலு பத்திரிக்கைக்கு அனுப்பு,,, முடிஞ்சிரும்... "

" என்னது? "

" மேட்டர் முடிஞ்சிரும்னு சொன்னேன்.. "

" கதிர், எனக்கு ஒரு ஆசைடா... "

" என்ன, திடீர்னு குழந்தை கிழந்தை பெத்துக்கணுமா? அதெல்ல்லாம் முடியாதுடி... "

" சே சே! ஆசையப்பாரு.. அதெல்லாம் கல்யாணத்துக்கப்பறம் தான். நான் ஒருதடவையாவது மாட்டு வண்டி ஓட்டணும்.. ஏதாச்சும் பண்ணேண்டா.. "

" அய்யய்யோ, உனக்கு மட்டும் ஏண்டி இப்படி விபரீதமா தோணுது.. "

" அடுத்தவங்க வித்தியாசமா யோசிச்சா உனக்குப் பிடிக்காதே!! "

" சரி சரி... என் நண்பனோட அப்பா மாட்டுக்காரர் தான். அவர்ட சொல்லி ஏற்பாடு பண்றேன்.. "

" சீக்கிரம் டா.. எனக்கு மாடு ஓட்ட ரொம்ப ஆசை. "

" ஆமாமா,,, உன்னை ஓட்ட நான் ஆசைப்படலையா? அந்தமாதிரிதானே. "

" சீ போடா... "

இடம் : மாட்டுக்கார தோழனின் வீடு.


" ஜெஸி, இந்த மாட்டுக்கு எதுக்கு கயிறு போட்டிருக்காங்க தெரியுமா ? "

" தெரியாதே "

" கயிறு கட்டியிருந்தா அந்த மாட்டுக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு அர்த்தம்.. "

" அய்யோஒ!! என்ன அறிவு!! என்ன அறிவு!! "

" நான் ஓட்ட ஓட்ட, மாடு எதுவும் சொல்லாம போகுது,, ஏன் தெரியுமா? "

" ஏன் "

" நான் பொம்பளை இல்லியா,, அதான்... "

" என்னது?? நீ பொம்பளை இல்லியா? "

" அட, உனக்குத் தமிழே தெரியாதா ? "

" தெரியும்... சின்னதா எழுதியிருந்தா தெரியாது "

" இந்த மொக்க கடியை எவகிட்டயும் சொல்லிடாத "

" அதான் உன்கிட்ட சொன்னேன்.. "

( மாடு , இந்த கடியைக் கேட்டு மிரண்டு ஓட, அதில் மாட்டுக்கொம்பு பின்னே குத்தி அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேருகிறாள் ஜெஸிகா.. )

" டாக்டர், ஜெஸிக்கு ஒண்ணுமில்லையே? "

" யார் அந்த ஜெஸி ? "

" என்னோட வுட்பி வைஃப் டாக்டர். "

" அவங்களுக்கு என்னாச்சு? "

" என்ன டாக்டர், இப்பத்தானே நீங்க அவளை பார்த்துட்டு வரீங்க? "

" ஓ, அந்த மாடு கேஸா? "

" அதேதான்.. "

" பீ சீரியஸ்... ஜெஸிகாவுக்கு கொம்பு முளைச்சுடுச்சு... "

" டாக்டர்... ஏற்கனவே ஜெஸிகாவுல கொம்பு இருக்கே? "

" வாட் யு மீன் ? "

" ஜெஸிகாங்கற பேர்ல ஒரு கொம்பு இருக்கே? நீங்க சொல்றதப் பார்த்தா, அது ஜொஸிகா ஆயிடாதா? அப்படியும் இன்னொரு கொம்பு வரலியே? "

" ஹேய் மிஸ்டர், உன்னோட ஆராய்ச்சியை அப்பறம் வெச்சுக்கோ! ஜெஸிகா தலையில ரெண்டு கொம்பு முளைச்சு நிக்குது.... அதுக்குத் தண்ணி ஊத்தி வளர்த்தி... சாரி, அதை எங்களால ஒண்ணும் செய்யமுடியலை.. இப்ப ஜெஸிகா மாடு மாதிரி நிக்கிறா.. "

" நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் அவ மாடுமாதிரிதான் எதுக்கெடுத்தாலும் நிப்பா... வால் முளைக்கிலையா டாக்டர் ? "

" இல்லை. அதுவரைக்கும் சந்தோசம். ஆனா சான்ஸ் இருக்கு "

"அய்யோ... "

" நீங்க உடனே போய் அவளை சமாதானப்படுத்துங்க.. "

(கதிர் உள்ளே போய் பார்த்தான்... அங்கே எதையோ மென்னபடி இருந்த ஜெஸிகாவின் தலையில் இரு கொம்புகள்.... )

தொடரும்..

மதி
01-12-2007, 02:55 PM
அண்ணாத்தே...
ஹீரோ பேர் கதிர்னு போட்டுட்டு மொத வரியிலேயே ஆதவன்னு போட்டிருக்கீங்க...

மலர்
01-12-2007, 02:56 PM
ஏய்...
நீ நல்லா கடிப்ப...
கொம்பு மட்டும் ஜெஸிக்காவுக்கா...

திஸ் ஸ் டூ மச்...

இரு இரு...
இத நான் அப்படியே ஜெஸிக்காவுக்கு அனுப்பி வைக்கிறே,,,

ஆதவா
01-12-2007, 03:02 PM
அண்ணாத்தே...
ஹீரோ பேர் கதிர்னு போட்டுட்டு மொத வரியிலேயே ஆதவன்னு போட்டிருக்கீங்க...

ஹி ஹி... ஆர்வக்கோளாறு.... கதை எப்படி இருக்குங்கோ?

ஆதவா
01-12-2007, 03:03 PM
ஏய்...
நீ நல்லா கடிப்ப...
கொம்பு மட்டும் ஜெஸிக்காவுக்கா...

திஸ் ஸ் டூ மச்...

இரு இரு...
இத நான் அப்படியே ஜெஸிக்காவுக்கு அனுப்பி வைக்கிறே,,,

அட ஏன் அவரசப்படறீங்க? கதிருக்கு ஒரு பெரிய ஆப்பே காத்திருக்கு...

ஜெஸிகாவுக்கு அனுப்பல்லாம் முடியாது.. (ஜெஸி நம்பர் உனக்குத் தெரியுமா? நீ பேசியிருக்கேல்ல? )

மயூ
01-12-2007, 03:10 PM
அண்ணாத்தே...
ஹீரோ பேர் கதிர்னு போட்டுட்டு மொத வரியிலேயே ஆதவன்னு போட்டிருக்கீங்க...
ஆ.. ஆ...!! ஆசையைப் பாரு!!! ஹி.. ஹி...
நல்லா இருக்குதுப்பா... சிரிச்சு சிரிச்சு வயிறு நோகுது~!!!! :aetsch013:

மலர்
01-12-2007, 03:23 PM
அட ஏன் அவரசப்படறீங்க? கதிருக்கு ஒரு பெரிய ஆப்பே காத்திருக்கு...
அப்படின்னா டபிள் ஓக்கே:icon_b::icon_b:


ஜெஸிகாவுக்கு அனுப்பல்லாம் முடியாது.. (ஜெஸி நம்பர் உனக்குத் தெரியுமா? நீ பேசியிருக்கேல்ல? )

ஆமா பேசியிருக்கேன்...
அப்படின்னா....
ஹீ....அவங்க தான் ஜெஸியா...
சொல்லவே இல்லை... வாழ்த்துக்கள்...:D:D:D
ஆனா நீ ஜெஸிகிட்ட நல்லபுள்ளை மாதிரில்ல நடிக்கிற..:icon_rollout::icon_rollout:
நான் சொன்னா நம்பமாட்டாங்களே.. :icon_hmm::icon_hmm:

இருந்தாலும் மாட்டிவிடாம விடமாட்டேன்...:D:D

ஆதவா
01-12-2007, 03:26 PM
ஆ.. ஆ...!! ஆசையைப் பாரு!!! ஹி.. ஹி...
நல்லா இருக்குதுப்பா... சிரிச்சு சிரிச்சு வயிறு நோகுது~!!!! :aetsch013:
நெச*மாவா? ந*ம்ப*வே முடிய*லைப்பா..... ஹி ஹி
ந*ன்றி..

அப்படின்னா டபிள் ஓக்கே:icon_b::icon_b:

ஆமா பேசியிருக்கேன்...
அப்படின்னா....
ஹீ....அவங்க தான் ஜெஸியா...
சொல்லவே இல்லை... வாழ்த்துக்கள்...:D:D:D
ஆனா நீ ஜெஸிகிட்ட நல்லபுள்ளை மாதிரில்ல நடிக்கிற..:icon_rollout::icon_rollout:
நான் சொன்னா நம்பமாட்டாங்களே.. :icon_hmm::icon_hmm:

இருந்தாலும் மாட்டிவிடாம விடமாட்டேன்...:D:D

சொல்லிடாதம்மா.. அப்பறம் ஊருக்குள்ளே தலைவெச்சு படுக்கமுடியாது....

மலர்
01-12-2007, 03:32 PM
ஆ.. ஆ...!! ஆசையைப் பாரு!!! ஹி.. ஹி...
நல்லா இருக்குதுப்பா... சிரிச்சு சிரிச்சு வயிறு நோகுது~!!!! :aetsch013:

ஹீ... அட மயூ
இன்னும் ஆதவன் உன்னை விட முந்தவில்லை...


ஜொள்ளு விடுறதில எனக்கு அடுத்தாள் (கவனிக்கவும் முதலாவது நான்தான்) நீதானப்பா!!! வாழ்த்துக்கள் நண்பா!!!

ஆதவா
01-12-2007, 03:37 PM
ஹீ... அட மயூ
இன்னும் ஆதவன் உன்னை விட முந்தவில்லை...

உன் ஞாபக சக்தியில் என் பீச்சாங்கைய வைக்க.

கண்மணி
01-12-2007, 03:40 PM
ஏய்...
நீ நல்லா கடிப்ப...
கொம்பு மட்டும் ஜெஸிக்காவுக்கா...

திஸ் ஸ் டூ மச்...

இரு இரு...
இத நான் அப்படியே ஜெஸிக்காவுக்கு அனுப்பி வைக்கிறே,,,

கதிர் கண்ணாடி பாக்கற சீன் வரை பொறுங்களேன் மலர்

ஆதவா
01-12-2007, 03:42 PM
கதிர் கண்ணாடி பாக்கற சீன் வரை பொறுங்களேன் மலர்

அவ்ளோ நல்லா இருக்குமா?

மலர்
01-12-2007, 07:32 PM
அவ்ளோ நல்லா இருக்குமா?
ஹீ..ஹீ
கண்ணாடியே உடைஞ்சிரும்...:D:D

lolluvathiyar
02-12-2007, 05:42 AM
ஆகா வார்த்தைக்கு வார்த்தை நல்ல நகைசுவையாக போய் கொண்டு இருகிறது. அருமை பாராட்டுகள் ஆதவா? உங்க கதையை படிச்சவுடன் எனக்கு மாட்டு வண்டி நியாபகம் வந்தது. என் மனைவியும் மாட்டு வண்டி ஓட்டி பழக்கி விட கேட்டா, (எனக்கு ஒத்த மாட்டு வண்டி ஓட்ட தெரியும்) ஆனா நான் பழகிகலாம்னு சொல்லி நாள் கடத்திய விளைவு, இப்ப அதுக்கு வாய்ப்பு இல்லாம போச்சு.

ஓவியன்
02-12-2007, 02:47 PM
வால் முளைச்ச காதலனைச் சமாளிக்க, கொம்பு முளைத்த காதலிதான் சரினு முடிவெடுத்திட்டீங்க போல....

ஆதவா கதைனு இல்லாட்டியும் :D, செம விறு விறுப்பு - பாராட்டுக்கள் நண்பா..!! :icon_b:

ஆதவா
03-12-2007, 08:01 AM
ஆகா வார்த்தைக்கு வார்த்தை நல்ல நகைசுவையாக போய் கொண்டு இருகிறது. அருமை பாராட்டுகள் ஆதவா? உங்க கதையை படிச்சவுடன் எனக்கு மாட்டு வண்டி நியாபகம் வந்தது. என் மனைவியும் மாட்டு வண்டி ஓட்டி பழக்கி விட கேட்டா, (எனக்கு ஒத்த மாட்டு வண்டி ஓட்ட தெரியும்) ஆனா நான் பழகிகலாம்னு சொல்லி நாள் கடத்திய விளைவு, இப்ப அதுக்கு வாய்ப்பு இல்லாம போச்சு.
ந*ன்றி வாத்தியாரே! மாட்டுவ*ண்டி ஓட்டத்தெரியுமா? ப*லே! என*க்கும் ஆசைதான்.... ஆனால் நெறைய* முறை ப*ய*ண*ம் எமெற்கொண்டிருக்கிறேன்.

வால் முளைச்ச காதலனைச் சமாளிக்க, கொம்பு முளைத்த காதலிதான் சரினு முடிவெடுத்திட்டீங்க போல....

ஆதவா கதைனு இல்லாட்டியும் :D, செம விறு விறுப்பு - பாராட்டுக்கள் நண்பா..!! :icon_b:

ஹி ஹி ஹி ஹி.... நன்றிங்க.....