PDA

View Full Version : அவளுக்கான பூக்கள்



ப்ரியன்
22-11-2007, 07:44 AM
ஓர் அதிகாலையில்
அவளுக்கான பூக்கள்
சேகரித்தவண்ணம்
நடந்து செல்கிறேன்;
புல் மீதான உறக்கம் கலைய -
மண் முத்தமிட்டு
மரணம் தழுவுகின்றன
பனித்துளிகள்!

- ப்ரியன்.

ஆதி
22-11-2007, 07:55 AM
என் காலடி
சப்தம் கேட்டு
அலறியடிது எழுகின்றனப்
பூக்கள்..

- வைரமுத்து

புல்லுக்கடையில்
புதைகிற பனித்துளிகள்
மண்ணைப் போன்று
மனதையும் ஈரமாக்கி விடுகின்றன..

உனக்காக நான்
பறித்து வந்த பூக்கள்
பனி சிந்துகின்றன
விடிந்த பின்னும்..

வண்ணங்களை
அப்பிக் கொண்டு
சுரும்பும் சுற்றித் திரிகிறது
வண்ணத்திப் பூச்சியாகிவிட
உன் குழல் மலர்களில்..

அருமையான குறுங்கவி ப்ரியன்.. வாழ்த்துகள்

-ஆதி

ஆர்.ஈஸ்வரன்
22-11-2007, 10:36 AM
ஓர் அதிகாலையில்
அவளுக்கான பூக்கள்
சேகரித்தவண்ணம்
நடந்து செல்கிறேன்;
புல் மீதான உறக்கம் கலைய -
மண் முத்தமிட்டு
மரணம் தழுவுகின்றன
பனித்துளிகள்!

- ப்ரியன்.

சிறப்பாக இருக்கிறது

அக்னி
23-11-2007, 10:42 AM
பூக்கள் மரணம் நோக்கி...
புல்லும் பனித்துளியும் மரணித்தபடி...
அவளுக்காக, நான்...
கொலைஞனாகும் கவிஞன்...

பாராட்டுக்கள் ப்ரியன் அவர்களே...

பென்ஸ்
23-11-2007, 11:10 AM
காதல் எத்தனை வலிமையானது....
அதனால் தான் யாரையுமே மென்மையாக்கிவிடுகிறது.

ஆவளுக்காக பூ பறிக்கபட்டதால்
செடியும் வருத்தபட்டிருக்காது
என்று அதை சொல்லாமல் விட்டது அருமை... :)

ஆதி, அக்னி பின்னூட்டம் அருமை...

meera
25-11-2007, 01:37 PM
ஒரு சிறு கவிதையில் அழகாய்,ஆழமாய் ..........
அருமை ப்ரியன்.

ஓவியன்
25-11-2007, 02:17 PM
காதலுக்காக மரணிப்பதும்
பெருமைதான்
வீணே கதிரவ வெம்மையில்
மரணிப்பதிலும்......

அழகான, அருமையான்
கவிதை ப்ரியன் பாராட்டுக்கள்....

பூமகள்
25-11-2007, 04:18 PM
காதலிப் பூங்குழல்
தழுவும் வரம் கேட்டு
கைவிரல்பட்டுக் கொய்யக்
காத்திருக்கும் தோட்டத்து
கதம்ப மலர்கள்..!!

புல் தலை மீது
புயலாய் பாதங்கள்..!
பனிரத்தம் சிந்தி
மரணித்தாலும் சொர்க்கம்
எய்தும்..!

அழகான கவிதை..!
சுருங்கச் சொல்லி... காதலை அழகாக்கிவிட்டீர்கள்..!!
வாழ்த்துகள்..!!