PDA

View Full Version : சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும்...விகடன்
22-11-2007, 07:16 AM
சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலான இடைவெளி

ஓர் ஞானி கடவுளுடன் கதைக்கும் வல்லமை பெற்றிருந்தார். ஒரு தடவை கடவுளுடன் பேச்சிலீடுபட்டிருக்கும்போது தான் "சொர்க்கத்திற்கும்", "நரகத்திற்கும்" இடையிலான வித்தியாசத்தை/ வேறுபாட்டை அறிய விருப்பப்படுவதாக கூறினார்.

உடனே கடவுள் இரண்டு கதவுகளை அவர் முன் வருவித்து அவற்றினுள் சென்று பார்க்க அனுமதித்தார்.

ஞானி முதலாவது கதவை திறந்தார்...
அறையின் மையத்திலே ஒரு பெரிய வட்ட மேசை,மேசையின் மையத்திலே பெரிய வட்ட வடிவிலான சூடான உணவுப் பண்டம் மிக்க நல்ல வாசத்தை ஏற்படுத்தியவண்ணம் இருந்தது. அதன் வாசனை இந்த ஞானியின் வாயை உமிழ்நீரால் நிரப்பிவிட்டது.

அந்த உணவுப் பண்டங்களை சூழ்ந்திருந்தோர் மிகவும் மெலிந்தோராகவும் வறுமையில் வாடியோராகவும் காணப்பட்டதுடன் பசியுடனும் இருந்தனர். அவர்கள் கையில் பற்றியிருந்த கரண்டி, கைபிடி மிகவும் நீண்டதாக, அவர்கள் கைகளின் நீளத்திலும் சற்று அதிகமானதாகவும் காணப்பட்டது.அவற்றின் உதவியால் பாத்திரத்திலிருக்கும் உணவினை தாராளமாக அள்ளிக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் கையின் நீளத்திலும் அதிகமாக இருப்பதால் எடுத்த உணவு அவர்களுடைய வாயை இட முடியாத நிலையில் காணப்பட்டனர்.

இதனைக்கண்ட ஞானி மிகவும் கவலையுற்ற நிலையில் சோர்ந்து காணப்பட்டார்.

கடவுள் குறிக்கிட்டு, "இப்போது நீ பார்த்தது நரகம், சொர்க்கத்தையும் பார்" என்று சொல்லி, சொர்க்கத்தை பார்க்க அனுமதித்தார்...

அடுத்த கதவை திறந்த ஞானி, அங்கேயும் நரகத்தில் பார்த்த மேசை ஒழுங்குமுறை, உணவுவகை, மற்றும் கரண்டி போன்றவற்றை பார்த்தார். ஆனால் அந்த அறையிலிருந்த மனிதர்கள் மிகவும் சந்தோஷமாகவும் உடல் ஆரோக்கியமாகவும் தங்களுக்கிடையே சிரித்து கதைத்துக் கொண்டுமிருந்தனர்.

இவற்றை கவனித்த குழம்பி நின்ற ஞானி, "எனக்கு ஒன்றுமே விளங்கவில்லயே" என்று கடவுளிடம் விளக்கம் கேட்டார்.

"மிகவும் எளிதான ஒன்று" என்று கடவுள் விளக்கத்தை அளிக்க ஆரம்பித்தார்.
சொர்க்கத்தில் இருக்கும் அனைவருக்கும் ஒரு இயல்பு அதிகமாக காணப்படுகிறது,அவர்கள் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்த தெரிந்தவர்கள். அடுத்தவன் தேவைகளை பூர்த்திசெய்யும் மனப் பக்குவம் அடைந்தவர்கள். அதனால் அவர்கள் அனைவரும் சந்தோஷமாக உள்ளனர்.


பி.கு: மின்னஞ்சலில் கிடைத்தது. படித்துவிட்டு அதன் சாராம்சத்தை எழுதியுள்ளேன்.

சிவா.ஜி
22-11-2007, 07:45 AM
மிக மிக அற்புதமான உண்மை விராடன்.அடுத்தவரை சந்தோஷப்படுத்திப்பார்ப்பதில்தான் உண்மையான சந்தோஷமிருக்கிறது.அதுதான் சொர்க்கம்.எளிய வரிகளில் இணையற்ற கருத்து.பகிர்தலுக்கு நன்றி விராடன்.

ஓவியன்
22-11-2007, 07:51 AM
நல்ல கருத்து விராடன் மற்றவருக்கு ஊட்டி விட மனமில்லாமல் பசி பட்டினியுடன் நரகத்திலேயே உழன்று கொண்டிருக்கிறார்களே அவர்கள் நரகத்தில் தான் இருக்க வேண்டும். தப்பித் தவறி சொர்க்கத்தினுள் வந்தால் அதனையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விடுவார்கள்.
நல்லதோர் நீதிக்கதைக்கு நன்றிகள் பல நண்பரே...!!
-------------------------------------------------------------------------------
இப்போது நம் அமரன் வந்து ஏன் கையினால் அள்ளி சாப்பிட முடியாதா...?
கரண்டியினால் தான் சாப்பிட வேண்டுமா என்று வினவுவார் பாருங்களேன்..!! :icon_rollout:

விகடன்
22-11-2007, 08:04 AM
நன்றி சிவா.ஜி, ஓவியன்.
-----------------------------------------
அமரன் கேற்பார். அதற்கு கதையில் சிறு மாற்றத்தை ஏற்படுத்திவிடவேண்டியதுதான். அதாவது அனைவரிற்கும் முழங்கை என்றொரு அங்கமில்லை. ஆதலால் கையை மடிக்க இயலாது என்று.

சொர்க்கத்திலும் நரகத்திலும் எப்படி இருப்பர் என்று யாருக்கு தெரியும். ஆகையால் எப்படி சொன்னாலும் நம்பிவிடுவார் அமரன்.

இளசு
22-11-2007, 08:12 AM
[COLOR="DarkRed"][FONT="Latha"]மற்றவருக்கு ஊட்டி விட மனமில்லாமல் பசி பட்டினியுடன் நரகத்திலேயே உழன்று

பொருள், அன்பு, அறிவு - என எல்லாவற்றுக்கும் பொருந்தும்!

''ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தன் பிள்ளை தானே வளரும்,,''


பகிர்ந்தமைக்கு நன்றி விராடன்!

நேசம்
22-11-2007, 08:12 AM
வாழ்க்கையில் நாம் ஒவ்வொருத்தரை தான் சார்ந்து இருக்க வேண்டிய அவசியத்தை சொல்வது போல இருக்கிறது.
ந்ல்ல நீதி கதையை பகிர்ந்து கொண்ட விராடனுக்கு நன்றி

பூமகள்
22-11-2007, 08:16 AM
ஆழ்ந்த கருத்துள்ள கதை..!! நானும் படித்த நியாபகம்.

"மத்தவர்களை சந்தோசப்படுத்தினால் நீ சந்தோசமாய் இருப்பாய்" என்ற தத்துவத்தைச் சொல்லும் கதை..!!

நரகத்தில்,
சுவையான உணவு, நீண்ட கரண்டிகள்.. ஆயினும் பட்டினி.. பசி.. காரணம்.. அவரவர் மட்டும் சாப்பிடனும் என்ற எண்ணம். கரண்டி எட்டாமல் உணவு வாய்க்கு கிட்டவில்லை.

சொர்க்கத்தில்,
அதே சுவையான உணவு, நீண்ட கரண்டி... சந்தோசமாய் திடகாத்திரமாய் இருக்கிறார்கள். காரணம்.. நீண்ட கரண்டியில் அள்ளி எதிரில் அமர்ந்தவருக்கு ஊட்டும் பாங்கு..! அனைவரும் வயிறு முட்ட உண்டு மகிழ்ந்து இருக்கின்றனர்.

பாராட்டுகள் விராடன் அண்ணா.
தமிழாக்கம் அருமை. :)

அன்புரசிகன்
22-11-2007, 08:56 AM
திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்பது போல் தான் நம் வாழ்க்கையின் யதார்த்தம்.

அழகான விபரிப்பு... நன்றி...

இன்னெரு நகைச்சுவை கலந்த கதை கேட்டிருக்கிறேன்.

பில்கேட்ஸ் சாவதற்கு முன்னர் சொர்க்கம் நரகம் பார்க்க ஆசை வந்ததாம். கடவுளிடம் அனுமதி வாங்கி முதலில் நரகத்தை பார்க்க சென்றாராம். அங்கு எல்லாம் பார்க்க சூப்பராக இருக்கவே இதுவே எனக்கு போதும். எனக்கு சொர்க்கம் சென்று பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. நான் இனி பூலோகம் செல்ல ஆசை இல்லை என்றாராம். சரி எதற்கும் யோசித்துவிட்டு சொல் என இறைவன் சொல்ல... அவரும் யோசிக்கவேண்டிய அவசியம் ஏது. இது நான் என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்தாலும் இப்படி ஒரு இடத்திற்கு போகமுடியாது இங்கே தான் இருக்கப்போகிறேன் என்று சொன்னாராம். சரி ஆகட்டும் என்று சொல்லிவிட்டு இறைவன் மறைந்து சில மணித்துளிகளில் அனைத்தும் மாறி படுமோசமாக தெரிந்ததாம் அந்த பிரதேசம். இவருக்கு கோபம் வர மீண்டும் இறைவனை அழைத்தாராம். என்ன இது என்று கேட்க்க... இது தான் நிஜம். முதலில் நீ பார்த்தது நரகத்தின் LATEST VERSION SCREEN SAVER என்றாராம் கடவுள்... :D

அமரன்
22-11-2007, 09:15 AM
சின்னவயதில் அடம்பிடிக்கும் குழந்தைக்கு அன்னை சோறூட்டுவாள். அன்னையுடன் குறும்பு புரிவதற்காகவே சில சிறார்கள் அடம்பிடிப்பது போல நடிப்பார்கள். அந்நிகழ்வு இருவருக்கும் சொர்க்கம். பார்த்துக்கொண்டு இருப்போருக்கும் சொர்க்கம்.

குழந்தைகள் "இது என்னது " என்று சொந்தம்கொண்டாடினாலும் பகிர்ந்துண்ணவோ, சேர்ந்துவிளையாடவோ பின்நிற்பதில்லை. தமக்குத்தேவையான சந்தோசத்தைப்பெறவே இவ்வாறு செயல்படுகின்றார்கள். எல்லாரும் குழந்தைகளாகவே இருந்தால் இவ்வுலகம் சொர்க்கம். பாடப்பகிர்வுக்கு நன்றி விராடன்.

praveen
22-11-2007, 09:18 AM
ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தால் வாழ்க்கை சொர்க்கம் என்பது தானே. எனது கையெழுத்தும் அது போலத்தான்.

தமிழ்படுத்தி இங்கே அறிய தந்ததற்கு நன்றி விராடான்.

lolluvathiyar
22-11-2007, 02:21 PM
அருமையான கருத்து முதலில் புரிய வில்லை ( நான் கொஞ்ச டியுப்லைட்னு நேசம் சொன்னதா நியாபகம்). பிறகு 1 நிமிடம் யோசித்து தான் புரிந்தது. இது போன்ற நல்ல தகவல்களை தரவும் கலபதி விராடன்

ஜெயாஸ்தா
22-11-2007, 03:12 PM
நல்ல கதை.....ஒற்றுமையே வாழவைக்கும் என்ற நீதியை சொல்கிறது..... நன்றி விராடன்.

அக்னி
23-11-2007, 01:01 PM
சொர்கமும் நரகமும் நம் மனதின் நற்சிந்தனைகளிலேயே.., என்பதை எடுத்தியம்பும் கதை.
சிறுவயதில் வாசித்தது. மீண்டும் வாசிக்கையில் புதுப்பிக்கப்படுகின்றது...

நன்றி...

அன்புரசிகரே,
பில்கேட்ஸுக்கே ஸ்கிரீன் சேவரா...
நடக்கட்டும்... நடக்கட்டும்...

தாமரை
23-11-2007, 01:04 PM
இது கல்லூரிக் காலத்தில் 1988, அண்ணாமலைக் கல்லூரி. லி-ஃபோனிக்ஸ் கலைவிழாவில் நாங்கள் போட்ட நாடகமாயிற்றே..

விகடன்
24-11-2007, 06:35 AM
இது கல்லூரிக் காலத்தில் 1988, அண்ணாமலைக் கல்லூரி. லி-ஃபோனிக்ஸ் கலைவிழாவில் நாங்கள் போட்ட நாடகமாயிற்றே..

எதண்ணா?
அன்பினுடைய ஸ்கிரீன்சேவர் கதையா :lachen001::lachen001::lachen001:
------------------------------
சில வேளைகளில் அந்த நாடகக் குழுவில் இருந்த உறுப்பினர் அதை மின்னஞ்சலாக உருமாற்றி எழுதிய ஆக்கம் பரிமாறப்பட்டு என்னிடம் வந்து சிக்கியதோ???
எதுவாக இருந்தாலும், மன்றத்தில் இதே ஆக்கம் முன்னர் வந்திருக்கவில்லைத்தானே.
இல்லையாயின், அதுவரைக்கும் என் கௌரவம் காக்கப்பட்டது.

மலர்
26-11-2007, 11:06 PM
அட...
இது நம்ம விராடன் அண்ணனா...
ம்ம்...நல்ல நீதிக் கதை...
பாராட்டுக்கள் அண்ணா...

பகிர்ந்தமைக்கு நன்றி...

மதி
27-11-2007, 03:18 AM
சொர்க்கமும் நரகமும் நம் மனத்தை பொறுத்தே இருக்கிறது.. பிறருடன் நட்பு பழகி வாழ்பவர்க்கு எவ்விடமும் சொர்க்கம் தான்..
அழகான கதை.. நல்ல கருத்து..
நன்றி விராடன்.

தாமரை
27-11-2007, 04:58 AM
எதண்ணா?
அன்பினுடைய ஸ்கிரீன்சேவர் கதையா :lachen001::lachen001::lachen001:
------------------------------
சில வேளைகளில் அந்த நாடகக் குழுவில் இருந்த உறுப்பினர் அதை மின்னஞ்சலாக உருமாற்றி எழுதிய ஆக்கம் பரிமாறப்பட்டு என்னிடம் வந்து சிக்கியதோ???
எதுவாக இருந்தாலும், மன்றத்தில் இதே ஆக்கம் முன்னர் வந்திருக்கவில்லைத்தானே.
இல்லையாயின், அதுவரைக்கும் என் கௌரவம் காக்கப்பட்டது.

மின்னஞ்சலே இல்லாத காலமடா அது.. பார்வையாளர்களில் யாரோ அதை மனதில் சுமந்து பரப்பி.. 19 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.