PDA

View Full Version : வாரியாரின் நகைச்சுவை



நேசம்
22-11-2007, 02:27 AM
வாரியார் சுவாமிகள் ஒரு கோவில் திருவிழாவில் திருவிளையாடல் புராணம் சொற்பொழிவு செய்து கொண்டு இருந்தார்.

சுவாமிகளிம் சொற்பொழிவை கேட்பவர்கள் மிக கவனமாக இருப்பார்கள்.அதிலும் முன் வரிசையில் இருப்பவர்கள் மிக மிக
கவனமாக இருப்பார்கள்.வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுக்கு இடையில் கேள்வி கேட்பார்கள்.

அன்று வழக்கம்போல் ஒரு சிறுவனை எழுப்பி "தம்ப்!தருமிக்கு பாட்டு
எழுதி கொடுத்தது யாரு?" என்று கேட்டார்கள்.
(அப்போது திருவிளையாடல் வெளிவந்த சமயம்)
அந்த பையன் சட்டென்று "சிவாஜி " என்று கூறினான்.இதை கேட்ட அனைவரும் சிரித்தனர்.

வாரியார் கூட்டத்தை பார்த்து "என் சிரிக்கிறிங்க.பையன் சரியாக சொல்லி இருக்கிறான்".வடக்கில் மரியாதையாக அழைக்க "ஜி" போட்டு அழைப்பது வழக்கம்.அதனால் தான் நேருவை "நேருஜி" என்றும்,காந்தியை "காந்திஜி" என்று அழைப்பது போல இந்த பையன் சிவாஜி ன்னு சொல்லி இருக்கிறான்.

கூட்டம் வாரியார் சுவாமிகளின் நகைச்சுவை திறமை கண்டு வியந்தது

lolluvathiyar
22-11-2007, 07:03 AM
வாரியார் நகைசுயாக பேசுவதில் வல்லவர். பிரசன்ஸ் ஆப் மைன்ட் நிரைந்தவர். இந்த சம்பவத்தை நான் இதே மன்றத்தில் படித்ததாக நினைவு

ஓவியன்
22-11-2007, 07:07 AM
இது நகைச்சுவை என்பதிலும் வாரியார் சிக்கலான நிலமையை எவ்வளவு இலாகவமாக சமாளிக்கத் தெரிந்தவரென விளக்குகிறது...

பகிர்தலுக்கு மிக்க நன்றி நேசம்...!!
-----------------------------------------------------------------------------------------------
பதிவை சுவையான சம்பவங்கள் பகுதிக்கு இடம் மாற்றியுள்ளேன் நண்பரே..!!

xavier_raja
28-11-2007, 03:33 AM
நானும் இதை கேள்விபட்டிருக்கிறேன். இதை தவிர அவர் நிறைய குட்டி கதைகள் சொல்வார் என்பதும் நான் அறிவேன்.