PDA

View Full Version : காதல் பரணி..!

பூமகள்
21-11-2007, 02:19 PM
http://img26.picoodle.com/img/img26/5/11/21/poomagal/f_sunnyeyes01m_b04a3fc.jpg

ஒராயிரம் யானைகள்
போரில் வீழ்த்தினால்
பாடுவது

பரணி!

ஓராயிரம் செல்களை
என் விழியில் போரிட்டு
வீழ்த்தும் - உன் விழிக்கு
எப்படிப் பாடுவேன்

பரணி..??!!

ஆதவா
21-11-2007, 02:24 PM
ஒராயிரம் யானைகள்
போரில் கொன்றால்
பாடுவது

பரணி!

ஓராயிரம் செல்களை
என் விழியில் போரிட்டு
வீழுத்தும் - உன் விழிக்கு
எப்படிப் பாடுவேன்

பரணி..??!![/COLOR]

அடடே!! சிந்திக்க வைக்கிறது.... கரு ஒன்றேதான்... கொண்டு வந்த விதத்தில்... கிரேட்..

வாழ்த்துகள்..

ஓவியன்
21-11-2007, 02:37 PM
ஓராயிரம் செல்களும்
போரிட்டு விழுந்தனவா..??
இல்லை
விரும்பி தானாகவே
மண்டியிட்டனவா....????

நல்லதொரு குறுங்கவி பூமகள், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...!!

ஆதி
21-11-2007, 02:39 PM
போர்க்களத்தில்
பூ
பரணி பாடுகிறது..

தலைப்பே கவிதையானப்பின்
கவிதை எதற்கு ?

நானும் போர்க்களத்தில்
இருந்து திரும்பிய வீரண்தான்
ஆனால்
என் வாளில் வழியும்
குருதியில் தோல்விகள்..

காதலுக்கு பரணி..
பூமகளின்
கவிதை வெற்றிக்கு
பள்ளுப் பாடுகிறேன் நான்..

வாழ்த்துக்கள்..
சிந்திக்க ஒன்னாத கருவை சிந்திபதே கவிதைதான்..

-ஆதி

ஓவியன்
21-11-2007, 02:46 PM
அழகான கவிப்பின்னூட்டம் ஆதி..!!

வாளில் வடியும் குருதி
சொல்வது
வாழ்க்கையின் தோல்வியல்ல
வாழ்வியல் யதார்த்தத்தையே...

ஆதி
21-11-2007, 02:54 PM
வாளில் வடியும் குருதி
சொல்வது
வாழ்க்கையின் தோல்வியல்ல
வாழ்வியல் யதார்த்தத்தையே...

யதார்த்தமான உண்மைதான் ஓவியன்..

எல்லாரும் தோற்க பயந்தால்
யார் ஜெய்பது.. - வெற்றி
எப்படி வெற்றியாகும்..

நன்றி..

-ஆதி

யவனிகா
21-11-2007, 03:01 PM
பூ மகளின் அழகான கவிதையும்....ஆதியின் அற்புதமான பின்னூட்டக் கவிதையும்...பரணி பாட நினைத்தாலும் வாயிலிருந்து வார்த்தைகள் வந்தால் தானே? விழியாலே கவிதை சொல்ல வேண்டியது தான்...வாழ்த்துக்கள் பூமகள்.

பூமகள்
21-11-2007, 03:44 PM
அடடே!! சிந்திக்க வைக்கிறது.... கரு ஒன்றேதான்... கொண்டு வந்த விதத்தில்... கிரேட்..
வாழ்த்துகள்..
மிக்க நன்றிகள் ஆதவா.. :)

குறுங்கவி எழுதிப் பழக்கம் இல்லாததால் எழுத முனைந்து பிறந்த கவி..!
என் ஞாபகத்தில் நான் முதன்முதலில் மன்றத்தில் பதித்த கவியும் 4 வரிகளில் ஒரு குறுங்கவி தான் என்று நினைக்கிறேன். ஆனால் அது புதிய கவிதைகள் பகுதியில் பதித்தது.
உங்களின் ஊக்கம் என்னை மேலும் எழுதத்தூண்டுகிறது. :icon_rollout:

ஓராயிரம் செல்களும்
போரிட்டு விழுந்தனவா..??
இல்லை
விரும்பி தானாகவே
மண்டியிட்டனவா....????

நல்லதொரு குறுங்கவி பூமகள், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...!!
ஆஹா.. வித்தியாசமான கோணத்தில் சிந்தனை..! :icon_b:

"வேல்விழிப் பார்வையில்
அம்பு எய்தினால்
வீழுமா? மண்டியிடுமா??
இரண்டில் ஒன்று
இம்சையின்றி நடக்குமோ??"

அழகான பின்னூட்ட ஊக்கத்துக்கு மிக்க நன்றிகள் ஓவியன் அண்ணா. :)

அமரன்
21-11-2007, 04:02 PM
விழுப்புண் அடைந்த பீஷ்மருக்கு பஞ்சணை இதமானதாக இல்லாததால் அம்புப்படுக்கை அமைத்து கொடுத்தார்களாம். அதிலவர் ஆனந்தமாக சாய்ந்தாராம்.
அப்படித்தான் இதுவும். பரணியெல்லாம் பாடமுடியாது பூ. ஏனென்றால் இது உயிர் குடிக்கும் வலி தரவல்லது அல்ல. உயிர்துடிப்புக்கு வலிமை தரவல்ல வல்ல கொலை. பாராட்டுக்கள்.

பூமகள்
21-11-2007, 04:17 PM
போர்க்களத்தில்
பூ
பரணி பாடுகிறது..
தலைப்பே கவிதையானப்பின்
கவிதை எதற்கு ?
மிக்க நன்றிகள் ஆதி.
போர்க்களத்தில்
செந்நீரால் வளர்ந்த பூ..
கவிப்பாடுவதில் வியப்பென்ன?

நானும் போர்க்களத்தில்
இருந்து திரும்பிய வீரண்தான்
ஆனால்
என் வாளில் வழியும்
குருதியில் தோல்விகள்..
தோல்விகள் களத்தின்
நியதிகள்..!
வீறுகொண்டு எழுந்து
வாழ்வை நோக்குவதுதான்
தோல்வி தோற்றுவிக்கும்
வெற்றி..!

காதலுக்கு பரணி..
பூமகளின்
கவிதை வெற்றிக்கு
பள்ளுப் பாடுகிறேன் நான்..
வாழ்த்துக்கள்..
முற்றிலும் மலரா
பூவைப் பார்த்து
மலர்ந்த பூவனம்
கவிபாடும் விந்தை..!!

சிந்திக்க ஒன்னாத கருவை சிந்திப்பதே கவிதைதான்..
சிந்திக்க ஒன்னாத கருவில் பின்னூட்டச் சிந்தனை தருவதும் கவிதை தான்..! :icon_b:
மிக்க நன்றிகள் அன்பரே..!!

பூமகள்
21-11-2007, 04:20 PM
பூ மகளின் அழகான கவிதையும்....ஆதியின் அற்புதமான பின்னூட்டக் கவிதையும்...பரணி பாட நினைத்தாலும் வாயிலிருந்து வார்த்தைகள் வந்தால் தானே? விழியாலே கவிதை சொல்ல வேண்டியது தான்...வாழ்த்துக்கள் பூமகள்.
உங்களின் விழி சொன்ன அந்த அற்புத வரிகளைப் படிக்கும் பேறு என்று கிட்டுமோ யவனி அக்கா?? :icon_ush::icon_ush:

மிக்க நன்றிகள் யவனி அக்கா..! :)

பூமகள்
21-11-2007, 04:32 PM
விழுப்புண் அடைந்த பீஷ்மருக்கு பஞ்சணை இதமானதாக இல்லாததால் அம்புப்படுக்கை அமைத்து கொடுத்தார்களாம். அதிலவர் ஆனந்தமாக சாய்ந்தாராம்.
அப்படித்தான் இதுவும். பரணியெல்லாம் பாடமுடியாது பூ. ஏனென்றால் இது உயிர் குடிக்கும் வலி தரவல்லது அல்ல. உயிர்துடிப்புக்கு வலிமை தரவல்ல வல்ல கொலை. பாராட்டுக்கள்.
நல்லதொரு எடுகோள்..!
மிக மிகச் சரியான கூற்று அமரன் அண்ணா.

விழிசெல் வீழ்ந்தாலும்
வழிசெல் காதல்
வாழ வைத்திருக்கும்..!
வைத்துக் கொண்டிருக்கும்..!
எப்போதும் வைக்கும்..!

பாராட்டுக்கு நன்றிகள் அமரன் அண்ணா. :)

பூமகள்
22-11-2007, 06:20 AM
எல்லாரும் தோற்க பயந்தால்
யார் ஜெய்பது.. - வெற்றி
எப்படி வெற்றியாகும்.
தோல்வியின் பலத்தில் தான்
வெற்றியின் வீரம் தெரியும்..!!

நாணயத்தின் இரு பக்கமாய்
நாளின் இரு காலமாய்..!
வாழ்வில் தோல்வியும் வெற்றியும்..!!

மிக்க நன்றிகள் ஆதி..!! :icon_b:

சிவா.ஜி
22-11-2007, 06:34 AM
ஓராயிரம் செல்களை வீழ்த்திய ஓர்விழிப் பார்வை...ம்..ம்....மிஞ்சியிருக்கும் செல்களும் வரிசையில் நிற்கிறதே எங்களையும் கொல் என்று.கொல்லப்பட்டால் இறக்குமென்பார்கள்..இங்கு கொல்லப்பட்டதால் காதல் பிறக்கும் அதிசயத்தை என்னவென்று சொல்வது.அழகிய குறுங்கவி.வாழ்த்துகள் பூமகள்.

பூமகள்
22-11-2007, 06:38 AM

ஆஹா... அபாரமான சிந்தனை சிவா அண்ணா..!:)
இதை வைத்தும் குறுங்கவி படைக்கலாம் போல் உள்ளதே..!! :icon_b:
அழகிய பின்னூட்ட ஊக்கம் தந்ததற்கு மிக்க நன்றிகள் சிவா அண்ணா.:icon_rollout:

அக்னி
23-11-2007, 05:38 PM
விழிகள் வீழ்த்துகையில்
இதயம் துடிப்பில்
பாடும்
காதல்பரணி...
இதயத்தை வீழ்த்தினால்,
பிறகு வாழ இருக்குமா திராணி..?
பிறகு எப்படி வரும் பரணி...

பாராட்டுக்கள் பூமகள்...
மற்றும் அழகுப் பின்னூட்டம் தந்த உறவுகள் அனைவருக்கும்...

ஆர்.ஈஸ்வரன்
24-11-2007, 10:28 AM
http://img26.picoodle.com/img/img26/5/11/21/poomagal/f_sunnyeyes01m_b04a3fc.jpg

ஒராயிரம் யானைகள்
போரில் வீழ்த்தினால்
பாடுவது

பரணி!

ஓராயிரம் செல்களை
என் விழியில் போரிட்டு
வீழ்த்தும் - உன் விழிக்கு
எப்படிப் பாடுவேன்

பரணி..??!!
அற்புதமான கவிதை

தாமரை
24-11-2007, 10:38 AM
http://img26.picoodle.com/img/img26/5/11/21/poomagal/f_sunnyeyes01m_b04a3fc.jpg

ஒராயிரம் யானைகள்
போரில் வீழ்த்தினால்
பாடுவது

பரணி!

ஓராயிரம் செல்களை
என் விழியில் போரிட்டு
வீழ்த்தும் - உன் விழிக்கு
எப்படிப் பாடுவேன்

பரணி..??!!

இரண்டே வார்த்தையில் பாடலாமே

மெட்ராஸ் ஐ.

:lachen001::lachen001::lachen001:
:icon_rollout::icon_rollout::icon_rollout:

பூமகள்
25-11-2007, 07:52 AM
பாராட்டுக்கள் பூமகள்...
மற்றும் அழகுப் பின்னூட்டம் தந்த உறவுகள் அனைவருக்கும்...
நன்றிகள் அக்னியாரே...!
உங்களின் கவியும் அருமை. :)

அற்புதமான கவிதை
மிகுந்த நன்றிகள் அன்பரே..!! :icon_rollout:

பூமகள்
25-11-2007, 07:54 AM
இரண்டே வார்த்தையில் பாடலாமே
மெட்ராஸ் ஐ.
:lachen001::lachen001::lachen001:
:icon_rollout::icon_rollout::icon_rollout:
ஆஹா... அது வைரஸால் வரும் கண்நோய் அண்ணா...
இது காதல்வைரஸால் வரும் நோய்....!!
கண்ணில் தான் தாக்குதல் என்றாலும் இதயத்தில் தான் நோய்... அன்புநோய்...!!

தாமரை அண்ணாவின் நகைச்சுவைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. நன்றிகள் அண்ணா. :)