PDA

View Full Version : காதலித்துப் பார்...!!



பூமகள்
21-11-2007, 12:57 PM
http://bp3.blogger.com/_ATCRNmCxu-E/R0cjEj1EkPI/AAAAAAAAAQs/6eHDQz_nvHo/s320/thwink.gif (http://bp3.blogger.com/_ATCRNmCxu-E/R0cjEj1EkPI/AAAAAAAAAQs/6eHDQz_nvHo/s1600-h/thwink.gif)

"காதலித்துப் பார்...!
உலகம் அர்த்தப்படும்..!"

காதலில் தோல்வி..!
உலகம் இன்னும் அர்த்தப்படும்..! - விலையாக
சந்தோசத்தின் மொத்தம்..!

காதலில் வெற்றி..!
சந்தோசத்தின் சாகரம்..!




நன்றிகள்:

முதல் இரு வரிகள் - உபயம் : கவிப்பேரரசு வைரமுத்து.

யவனிகா
21-11-2007, 01:05 PM
குட்டிக் கவிதையில் பெரிய விசயத்தை சொல்லியிருக்க பூவு.

மொத்த சந்தோசத்தையும் விலையாய்க் கொடுத்து
உலகத்தின் அர்த்தம் காணத்தான் வேண்டுமா?
வாழ்வைத் தொலைத்த பின்,
உலகம் அர்த்தப்பட்டு என்ன பயன்?
விடையில்லாக் கேள்வி.

அழகான கவிதை. வாழ்த்துக்கள்.

ஆதி
21-11-2007, 01:07 PM
காதலில் தோல்வி..!
உலகம் இன்னும் அர்த்தப்படும்..! - விலையாக
சந்தோசத்தின் மொத்தம்..!

[/COLOR][/COLOR]

நிதர்சனம்..

தோற்றாள் எல்லாம்
விளங்கும்..
இதுவரைத் தெரியாத்து..

வாழ்த்துக்கள்..

-ஆதி

சிவா.ஜி
21-11-2007, 01:09 PM
அப்ப காதலில் தோற்றால் மொத்த சந்தோஷத்தையும் அள்ளிடலான்னு சொல்றீயாம்மா...?(சும்மா டமாஸுக்கு)
காதலின் மூன்று நிலைகளையும் கைக்கடக்கமான பிரதியாக கவியில் படைத்த பூமகளுக்கு வாழ்த்துகள்.

க.கமலக்கண்ணன்
21-11-2007, 01:10 PM
காய் கனிந்தால் பழம்
எதிரி பணிந்தால் வெற்றி
தாலி அணிந்தால் கல்யாணம்
பெண் நாணினால் வெட்கம்
பெற்றோர்கள் கோபம் தணிந்தால்
காதல் கைகூடும்... இது உண்மைதானே பூமகள்...

சிறிய கவிதை சிறப்பான கவிதையடா...

IDEALEYE
21-11-2007, 01:12 PM
காதலித்துப்பார்- கவிதை வரும்
காதலில் தோற்றுப்பார்- தாடி வரும்
காதலில் ஜெயித்துப்பார்- சுமை வரும்
என்றவார்த்தைகள் படித்துப்பழகியிருந்த தருணத்தில்
பூமகள் புதுவரிகள் கொண்டு வந்துள்ளார்,,,,,
அசத்தல்
வாழ்த்துகள்
பூமகள்

பூமகள்
21-11-2007, 01:51 PM
குட்டிக் கவிதையில் பெரிய விசயத்தை சொல்லியிருக்க பூவு.

மொத்த சந்தோசத்தையும் விலையாய்க் கொடுத்து
உலகத்தின் அர்த்தம் காணத்தான் வேண்டுமா?
வாழ்வைத் தொலைத்த பின்,
உலகம் அர்த்தப்பட்டு என்ன பயன்?
விடையில்லாக் கேள்வி.

அழகான கவிதை. வாழ்த்துக்கள்.
தாங்கள் சொல்வதும் சரி தான் அக்கா.
மொத்தமாய் விலை கொடுத்து மகிழ்ச்சியைத் தொலைத்தாலும் பின்
இருப்பதைத் தொலைக்காமல் இருக்கும் கல்வி கிட்டுமே...!! :icon_ush:
நன்றிகள் யவனி அக்கா.

நிதர்சனம்..
தோற்றால் எல்லாம்
விளங்கும்..
இதுவரைத் தெரியாதது..
வாழ்த்துக்கள்..
உண்மை தான் ஆதி.
உங்களின் விளக்கத்துக்கு நன்றிகள். :)

பூமகள்
21-11-2007, 01:54 PM
அப்ப காதலில் தோற்றால் மொத்த சந்தோஷத்தையும் அள்ளிடலான்னு சொல்றீயாம்மா...?(சும்மா டமாஸுக்கு) காதலின் மூன்று நிலைகளையும் கைக்கடக்கமான பிரதியாக கவியில் படைத்த பூமகளுக்கு வாழ்த்துகள்.
உங்க டமாசுக்கு அளவே இல்லாம போச்சு சிவா அண்ணா. :lachen001:
பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் சிவா அண்ணா.

காய் கனிந்தால் பழம்
எதிரி பணிந்தால் வெற்றி
தாலி அணிந்தால் கல்யாணம்
பெண் நாணினால் வெட்கம்
பெற்றோர்கள் கோபம் தணிந்தால்
காதல் கைகூடும்... இது உண்மைதானே பூமகள்...
சிறிய கவிதை சிறப்பான கவிதையடா...
ஆஹா.. கமல் அண்ணா... கலக்கலா இருக்கு கவிதை..! :icon_b:
உண்மையே தான் அண்ணா.
உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றிகள். :)

பூமகள்
21-11-2007, 01:57 PM
காதலித்துப்பார்- கவிதை வரும்
காதலில் தோற்றுப்பார்- தாடி வரும்
காதலில் ஜெயித்துப்பார்- சுமை வரும்
என்றவார்த்தைகள் படித்துப்பழகியிருந்த தருணத்தில்
பூமகள் புதுவரிகள் கொண்டு வந்துள்ளார்,,,,,
அசத்தல்
வாழ்த்துகள்
பூமகள்
அழகான சுட்டிக்காட்டிய பின்னூட்டக் கவிதை.

பாராட்டி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள் ஐடியல் ஐ. :)

ஆதவா
21-11-2007, 02:00 PM
"காதலித்துப் பார்...!
உலகம் அர்த்தப்படும்..!"

காதலில் தோல்வி..!
உலகம் இன்னும் அர்த்தப்படும்..! - விலையாக
சந்தோசத்தின் மொத்தம்..!

காதலில் வெற்றி..!
சந்தோசத்தின் சாகரம்..!




நன்றிகள்:

முதல் இரு வரிகள் - உபயம் : கவிப்பேரரசு வைரமுத்து.


இதென்ன முரண்?

காதலில் தோல்வி − சந்தோசத்தின் மொத்தம்,
காதலில் வெற்றி − சந்தோசத்தின் சாகரம்...

எனக்கு விளங்கவில்லை... சற்று புரிய வையுங்கள் சகோதரி.

அன்புடன்
ஆதவா

ஓவியன்
21-11-2007, 02:00 PM
காதல் தோல்வியின் விலை
உலகின் மொத்த சந்தோசமா...???

நன்றாக இல்லையே பூ...!!
வாழ்க்கை மிக, மிக குறுகியது
அந்த குறுகிய வாழ்விலே
காதல் ஒரு அங்கம் அவ்வளவே..!!

அதனையும் தாண்டி
இன்னும் எத்தனையோ எத்தனை
மீதமாக உளதே...!!

காதல் தோல்வி
ஜீரணிக்க கடினமானதே
ஆனால், ஆனால்
அதற்காக மீதமுள்ள
வாழ்வின் மகிழ்ச்சியைத்
தொலைப்பதில் அர்த்தமில்லையே..!!

ஓவியன்
21-11-2007, 02:03 PM
இதென்ன முரண்?

காதலில் தோல்வி − சந்தோசத்தின் மொத்தம்,
காதலில் வெற்றி − சந்தோசத்தின் சாகரம்...

எனக்கு விளங்கவில்லை... சற்று புரிய வையுங்கள் சகோதரி.

முரணில்லை ஆதவா!...
காதல் தோல்வியின் விலை (தோல்வியைப் பெறுவதற்கு கொடுத்த விலை) - சந்தோசத்தின் மொத்தம்,
காதலில் வெற்றி − சந்தோசத்தின் சாகரம்...
என்றுதான் பூமகள் குறிப்பிட்டுள்ளதாக உணருகிறேன்...

ஆதவா
21-11-2007, 02:17 PM
முரணில்லை ஆதவா!...
காதல் தோல்வியின் விலை (தோல்வியைப் பெறுவதற்கு கொடுத்த விலை) - சந்தோசத்தின் மொத்தம்,
காதலில் வெற்றி − சந்தோசத்தின் சாகரம்...
என்றுதான் பூமகள் குறிப்பிட்டுள்ளதாக உணருகிறேன்...

நன்றி ஓவியன்...

விலையாக" என்ற வரியை உள்வாங்கவில்லை என்பது புரிகிறது....

நன்றி

பூமகள்
21-11-2007, 02:31 PM
இதென்ன முரண்?
காதலில் தோல்வி − சந்தோசத்தின் மொத்தம்,
காதலில் வெற்றி − சந்தோசத்தின் சாகரம்...
எனக்கு விளங்கவில்லை... சற்று புரிய வையுங்கள் சகோதரி.

காதலில் தோல்வி:
கிடைப்பது - உலகம் நன்கு அர்த்தப்படும்.
விலை - ஒட்டுமொத்த மகிழ்ச்சி

காதலில் வெற்றி:
கிடைப்பது - மகிழ்ச்சி
விலை - விலையில்லை.

பின்னூட்டத்துக்கு நன்றிகள் ஆதவா.

முரணில்லை ஆதவா!...
காதல் தோல்வியின் விலை (தோல்வியைப் பெறுவதற்கு கொடுத்த விலை) - சந்தோசத்தின் மொத்தம்,
காதலில் வெற்றி − சந்தோசத்தின் சாகரம்...
என்றுதான் பூமகள் குறிப்பிட்டுள்ளதாக உணருகிறேன்...
மிகச் சரியான விளக்கம் ஓவியர் அண்ணா. :)
மிக்க நன்றிகள்.

அமரன்
21-11-2007, 04:09 PM
பூமகள் நீங்கள் எதை வைத்து காதல்ஜெயம்/தோல்வி என்பதை தீர்மானிக்கின்றீர்கள்?

பூமகள்
21-11-2007, 04:26 PM
பூமகள் நீங்கள் எதை வைத்து காதல்ஜெயம்/தோல்வி என்பதை தீர்மானிக்கின்றீர்கள்?
காதல் ஜெயம்:

பிரிவில்லாமல் ஜீவன் உள்ளவரை உயிர்க்கும் காதல்,
அருகே வாழும் பேறு பெற்ற காதல்.காதல் தோல்வி:

மனம் முரண் கொண்டு பிரிந்த காதல்..
பிரிக்கப்பட்ட காதல்..
ஒன்றாய் வாழ்ந்தும் காதல் மறத்த உள்ளம் கொண்ட காதல்.சட்டென்று தோன்றிய வரையறை இவை அமரன் அண்ணா.
இன்னும் யோசிக்க வேறு சிலவும் சிக்குமென்று நினைக்கிறேன்.

அமரன்
21-11-2007, 04:30 PM
நன்று..

எப்போதோ கைகுலுக்கிய காதல்
இப்போது எனக்குள் இல்லை
என்று யாராவது சொன்னால்
காதல் தோல்வி என்பேன்....

அவர்கள் மகிழ்வு மரித்துவிட்டதெனில்
ஒட்டுமொத்த மகிழ்வே விலை என்பேன்..

பூமகள்
21-11-2007, 04:37 PM
அதே...அதே அமரன் அண்ணா.

மிகச் சரியாக நாடி பிடித்து கணித்து விட்டீர்கள்.
மிக்க நன்றிகள் அண்ணா. :)

அமரன்
21-11-2007, 04:40 PM
அதே...அதே அமரன் அண்ணா.

மிகச் சரியாக நாடி பிடித்து கணித்து விட்டீர்கள்.
மிக்க நன்றிகள் அண்ணா. :)
நாடிபிடித்து கணிக்க மட்டுமே
தெரியும் எனக்கு.
நாடி பிடித்து பிடிக்கத் தெரியாது..:)

பூமகள்
21-11-2007, 04:42 PM
நாடிபிடித்து கணிக்க மட்டுமே
தெரியும் எனக்கு.
நாடி பிடித்து பிடிக்கத் தெரியாது..:)
ஆஹா.... :rolleyes:
விரைவில் பிடித்து பிடிக்கவும் அமரன் அண்ணா. ;):icon_b:
வாழ்த்துகள்..! :p:)

நேசம்
21-11-2007, 06:36 PM
காதல் தோல்வியடைந்தவர்கள் நேர்மறையான சிந்தனையில் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் அழகான கவிதை.வாழ்த்துக்கள்.

பூமகள்
21-11-2007, 06:38 PM
வாழ்த்து கிட்டியது மகிழ்ச்சியைத் தருகிறது.
மிக்க நன்றிகள் நேசம் அண்ணா. :)

இளசு
21-11-2007, 07:29 PM
காதல்?

என்ன என்று எனக்கு இன்னும் புரியவே இல்லை!

காதல்

எத்தனை அதைப்பற்றி வாசித்தாலும் அலுக்கவே இல்லை!

கவிஞர் வைரமுத்து முதல் படி அமைக்க
கவிப்பாமகள் மூன்றடியாய் நீட்ட..
காதல் பற்றிய கண்ணாமூச்சி
நீடிக்கிறது.. நீடிக்கும்...
கடைசி மனித உயிர் உள்ளமட்டும்!


வாழ்த்துகள் பூமகள்!

பூமகள்
22-11-2007, 06:16 AM
கவிஞர் வைரமுத்து முதல் படி அமைக்க
கவிப்பாமகள் மூன்றடியாய் நீட்ட..
காதல் பற்றிய கண்ணாமூச்சி
நீடிக்கிறது.. நீடிக்கும்...
கடைசி மனித உயிர் உள்ளமட்டும்!
வாழ்த்துகள் பூமகள்!
காதலின் கண்ணாமூச்சியை
கண்டுகொண்டவர் எவர் உளர்?
எங்கே, எப்போது, எப்படி வருமென்று
புரிந்துவிட்டால் லயம் இனிக்குமா??
புரியாதிருப்பதால் தான் உலகம் இயங்குதோ??

கவிப்பாமகள் என்று இளசு அண்ணாவின் இதழ்
சொன்னதிலேயே இமைகலங்கி நிற்கிறேன்.! :traurig001:

நன்றிகள் பலப்பல இளசு அண்ணா. :)

அண்ணா,

"வானவில்லில் மட்டும் - இனி
வர்ணபேதம் இருக்கட்டும்!"

உங்களின் கையெழுத்து அருமையோ அருமை..!! :icon_b:

தாமரை
22-11-2007, 06:22 AM
"காதலித்துப் பார்...!
உலகம் அர்த்தப்படும்..!"

காதலில் தோல்வி..!
உலகம் இன்னும் அர்த்தப்படும்..! - விலையாக
சந்தோசத்தின் மொத்தம்..!

காதலில் வெற்றி..!
சந்தோசத்தின் சாகரம்..!




நன்றிகள்:

முதல் இரு வரிகள் - உபயம் : கவிப்பேரரசு வைரமுத்து.


அர்த்தம் தேடி
காதலித்துப் பார்த்தேன்
அர்த்தமில்லாமல்

காதலில் ஏது
வெற்றி தோல்வி!!!

காதலி என்னை
காதலிக்காவிட்டால்
காதல் தோல்வியா

காதலர் இருவரை
உலகம் காதலிக்கா விட்டால்
காதலரைப் புதைத்து விட்டு
காதலைப் பாடமாக்கினால்
காதல் தோல்வியா

காதல் வசப்படுவதே
வெற்றிதானே?

எங்கே தோல்வி
எங்கே அர்த்தம்..

பூமகள்
22-11-2007, 06:31 AM
அழகான கோணத்தில் அலசல் தாமரை அண்ணா.

காதல் வசப்படுவதே
வெற்றிதானே?

கேட்பது சரிதான்..!

காதல் வசப்படுவது
எங்ஙனம் வெற்றியென்று
விளங்கவில்லை..!!

மயிலுக்கும் உண்டு..
மானுக்கும் உண்டு..
காதல்..!

வண்டுக்கும் உண்டு..
பூச்செண்டுக்கும் உண்டு..
காதல்..

இங்கே காதல் வயப்படுவது
எதார்த்தம்..!

மனிதமும் இயற்கையின்
படைப்பெனில்
காதல் வருவதில்
வியப்பொன்றுமில்லை..!

வெற்றி என்பது மகிழ்ச்சி..!
உண்மை அன்பின் மகிழ்ச்சி..!
உளம் ஒன்றாகக் கொண்ட நெகிழ்ச்சி..!

அது தரும் காதல் களிப்பு
அமரத்துவ வெற்றியாக..!!

ஓவியன்
22-11-2007, 06:43 AM
அர்த்தம் தேடி
காதலித்துப் பார்த்தேன்
அர்த்தமில்லாமல்
காதலில் ஏது
வெற்றி தோல்வி!!!
காதலி என்னை
காதலிக்காவிட்டால்
காதல் தோல்வியா
காதலர் இருவரை
உலகம் காதலிக்கா விட்டால்
காதலரைப் புதைத்து விட்டு
காதலைப் பாடமாக்கினால்
காதல் தோல்வியா
காதல் வசப்படுவதே
வெற்றிதானே?
எங்கே தோல்வி
எங்கே அர்த்தம்..
வாழ்வில்
இணைந்த காதலர்களிலும்
இணையாக் காதலர்களே
இன்றும் பேசப்படுகிறார்கள்
அம்பிகாவது,அமராவதி
சலீம், அனார்கலி என
நீளமானது இவர் வரிசை...

காதலிப்பதே வெற்றிதான்
அந்த உணர்வே
வாழ்வின் அர்த்தம்..!!
அது வாழ்வுக்கு தரும்
புது இரத்தம்...!! :)

நல்லதோர் பின்னூட்டக்கவி அண்ணலே, மிக்க நன்றி...!!

சுகந்தப்ரீதன்
22-11-2007, 06:48 AM
வாழ்த்துக்கள் பூமகள் கவிதைக்கு...
உங்கள் கவிதையையும் அதிலிலுள்ள தங்களின் பின்னூட்டத்தையும் பார்த்தால்...யாரையோ நீங்கள் காதலிப்பதுபோல் தெரிகிற*தே.. யாரென்று எனக்கு மட்டுமாவது சொல்லமுடியுமா சகோதரி..?
அத்துடன் சாகரம் என்றால் என்ன என்றும் சொல்லுங்களேன்..?

பூமகள்
22-11-2007, 06:56 AM
வாழ்த்துக்கள் பூமகள் கவிதைக்கு...
உங்கள் கவிதையையும் அதிலிலுள்ள தங்களின் பின்னூட்டத்தையும் பார்த்தால்...யாரையோ நீங்கள் காதலிப்பதுபோல் தெரிகிற*தே.. யாரென்று எனக்கு மட்டுமாவது சொல்லமுடியுமா சகோதரி..?
அத்துடன் சாகரம் என்றால் என்ன என்றும் சொல்லுங்களேன்..?
மிக்க நன்றிகள் ப்ரீதன்...!:)
இப்படி வம்பில் மாட்டி விடுறீங்களே... இன்று ஓட்டுவதற்கு யாரும் சிக்கவில்லையா??:confused::icon_ush:
காதலுக்கும் எனக்கும் தூரம் அதிகம்..! ஒருவேளை, எட்டும் தூரமிருந்தாலும் எட்டிப் பிடிக்க மனமில்லை. :icon_rollout:

சாகரம் = கடல் என்று அர்த்தப்படுவதாக அகராதி சொல்கிறது.

சுகந்தப்ரீதன்
22-11-2007, 07:30 AM
காதலுக்கும் எனக்கும் தூரம் அதிகம்..! ஒருவேளை, எட்டும் தூரமிருந்தாலும் எட்டிப் பிடிக்க மனமில்லை. :icon_rollout:


ஓட்டறதா.. அப்படின்னா என்னாங்க...?

ஆக மொத்தம் எட்டும் தூரத்தில்தான் இருக்குன்னு சொல்லுறீங்க... சீக்கிரம் உங்களுக்கு கிட்டறதுக்கு எனது வாழ்த்துக்கள்..!

அக்னி
23-11-2007, 06:02 PM
காதல்,
புத்துலகம் காட்டும்...
சுவாதீனமாய்..,
அல்லது
சித்தசுவாதீனமாய்...

கவிதை வரிகள்... பின்னூட்ட கவிகள்... அனைத்தும் அருமை...
பாராட்டுக்கள்...

சிந்தித்தால் காதல் ஏது..?
காதலித்தால் சிந்தனை ஏது..?

பூமகள்
23-11-2007, 06:07 PM
காதல்,
புத்துலகம் காட்டும்...
சுவாதீனமாய்..,
அல்லது
சித்தசுவாதீனமாய்...
அருமை..அருமை..!! :icon_b:

சிந்தித்தால் காதல் ஏது..?
காதலித்தால் சிந்தனை ஏது..?
அனுபவ கவிஞர் சொன்னால்,
அதற்கு மறுப்பு ஏது அக்னி அண்ணா? ;) :icon_rollout::icon_ush:
அழகிய பின்னூட்டத்துக்கு மிக்க நன்றிகள் அக்னி அண்ணா. :)

தாமரை
23-11-2007, 06:23 PM
அதெப்படி பூமகளே!
அபாரமாய்
ஆமாம் போடுகிறாய்!

தாமரை
23-11-2007, 06:26 PM
மிக்க நன்றிகள் ப்ரீதன்...!:)
இப்படி வம்பில் மாட்டி விடுறீங்களே... இன்று ஓட்டுவதற்கு யாரும் சிக்கவில்லையா??:confused::icon_ush:
காதலுக்கும் எனக்கும் தூரம் அதிகம்..! ஒருவேளை, எட்டும் தூரமிருந்தாலும் எட்டிப் பிடிக்க மனமில்லை. :icon_rollout:

சாகரம் = கடல் என்று அர்த்தப்படுவதாக அகராதி சொல்கிறது.

தூரமென்றால்?
அந்தக் காலத்தில்
கடிதக் காதல்
இந்தக்காலத்தில்
இணையக் காதல்..

ஹா!
இணையக் காதல்
இணையத்தானே காதல்

அமரன்
23-11-2007, 06:28 PM
எந்தக்காலத்திலும்
இணையக்காதல் செய்வதுதானே
வழக்கம்..
இக்காலத்தில் மட்டுமா?
இக்காலத்தில் மட்டா..?

இணையம்
உலகை உள்ளங்கையில்
கொணருதாம்..
காதலை தூரமாக்குதே...
இக்காலத்தில் காதல்
அருங்காட்சியப் பண்டமோ?
அருவ விருட்சமோ..?

பூமகள்
23-11-2007, 06:29 PM
அதெப்படி பூமகளே!
அபாரமாய்
ஆமாம் போடுகிறாய்!
கற்றறிந்த பெரியவர் சொன்னால்
கற்கும் சிறியவர் ஒப்புக்கொள்ளத்தானே
வேணும் அண்ணா? :icon_ush:
தாங்கள் இதைச் சொன்னாலும் மறுக்க இயலுமா அண்ணா? :icon_rollout:

அக்னி
23-11-2007, 06:30 PM
அதெப்படி பூமகளே!
அபாரமாய்
ஆமாம் போடுகிறாய்!
இது எனக்குச் சொன்னதில்லை அண்ணா...


அனுபவ கவிஞர் சொன்னால்,
அதற்கு மறுப்பு ஏது அக்னி அண்ணா?
இங்கே அனுபவக் கவிஞர் பூமகள்...
மறுத்துப் பேசாதே ஆமாம் போடு, என்று வெருட்டுகின்றார்...

பூமகள்
23-11-2007, 06:35 PM
தூரமென்றால்?
அந்தக் காலத்தில்
கடிதக் காதல்
இந்தக்காலத்தில்
இணையக் காதல்..
தூரம் எதிரெதிர் தொலைவில்..!
காதல் கிழக்கென்றால்..
நான் மேற்கு..!
சூரியனாய் மஞ்சள்
கழுத்தைச் சுற்றும் வரை
காதல் தூரமே..!!


ஹா!
இணையக் காதல்
இணையத்தானே காதல்
மனை விரும்பும்
இணை வரும்வரை
இல்லை காதல்..!

தாமரை
23-11-2007, 06:36 PM
எந்தக்காலத்திலும்
இணையக்காதல் செய்வதுதானே
வழக்கம்..
இக்காலத்தில் மட்டுமா?
இக்காலத்தில் மட்டா..?

இணைய மட்டுமல்ல காதல்
கண்களோ கைகளோ
உள்ளமோ கூட இணையாமல்
காதல்கள் வாழ்ந்துகொண்டுதான்
இருக்கின்றன..
ஜெயித்துக் கொண்டும்...

அக்னி
23-11-2007, 06:37 PM
ஹா!
இணையக் காதல்
இணையத்தானே காதல்
இணையக்காதல்...
பணம் கேட்கிறதே,
இணைய...

பூமகள்
23-11-2007, 06:41 PM
இணைய மட்டுமல்ல காதல்
கண்களோ கைகளோ
உள்ளமோ கூட இணையாமல்
காதல்கள் வாழ்ந்துகொண்டுதான்
இருக்கின்றன..
ஜெயித்துக் கொண்டும்...
உள்ளங்கள் இணைவது தான் காதல் எனில்
இங்கே உள்ளம் இணையாமல்
எப்படி காதலாகும்?? :confused::confused:

தாமரை
23-11-2007, 06:48 PM
கற்றறிந்த பெரியவர் சொன்னால்
கற்கும் சிறியவர் ஒப்புக்கொள்ளத்தானே
வேணும் அண்ணா? :icon_ush:
தாங்கள் இதைச் சொன்னாலும் மறுக்க இயலுமா அண்ணா? :icon_rollout:

உள்ளங்கள் இணைவது தான் காதல் எனில்
இங்கே உள்ளம் இணையாமல்
எப்படி காதலாகும்??

காதலுக்கு ஒரு உள்ளம் போதும்..
இணையாய் இன்னொரு உள்ளம் தேவையில்லை..
ஒரு தலைக் காதல் என உலகம் சொல்லும்
ஆனால்
காதலி உள்ளமும் தன்னைக்
காதலித்தே ஆக வேண்டும் என
சுயநலமும்
ஆதிக்க மனோபாவமும் இன்றி
காதலே கடமையாக
கண்ணாக
ஜெயிக்கும் காதல்கள்
உண்டென்று
என்றாவது உணர்வாய்!

கற்று மட்டுமல்ல
பட்டும் அறியலாம்
பட்டு மட்டுமல்ல
பகுத்தும் அறியலாம்..
பெரியவர்கள் எல்லாம்
கற்றவர்கள் அல்ல..
அனைவரும் கற்பவர்கள் தாம்..:icon_rollout:

அமரன்
23-11-2007, 06:49 PM
இணைய மட்டுமல்ல காதல்
கண்களோ கைகளோ
உள்ளமோ கூட இணையாமல்
காதல்கள் வாழ்ந்துகொண்டுதான்
இருக்கின்றன..
ஜெயித்துக் கொண்டும்...
ஆதியில்
அந்தமான நோக்கமாக
"இணைவு"..

நடுவில்
அழையா விருந்தாளிகளாக
இதர காதல்..

ஆம்
காதல் வாழ்ந்துகொண்டு
இருக்கின்றது
ஜெயித்துக்கொண்டும்..

பூமகள்
23-11-2007, 06:54 PM
ஒரு தலைக்காதல்..
உன்னதத்தை உணர்த்தியதுக்கு
நன்றிகள் அண்ணா.

"கற்றது கைமண்ணளவு..
கல்லாதது உலகளவு..!"
எல்லோருக்கும்
பொருந்தும் வாசகம்..!
ஏடும் எதார்த்தமும்
கொடுக்கும் அனுபவம்
வாழ்க்கைப் பாடம்..!

விளக்கத்துக்கு நன்றிகள் அண்ணா. :)

தாமரை
23-11-2007, 06:58 PM
தூரம் எதிரெதிர் தொலைவில்..!
காதல் கிழக்கென்றால்..
நான் மேற்கு..!
சூரியனாய் மஞ்சள்
கழுத்தைச் சுற்றும் வரை
காதல் தூரமே..!!

மனை விரும்பும்
இணை வரும்வரை
இல்லை காதல்..!

எதிரெதிர் என்றால்
நேருக்கு நேர் என்றல்லவா
பொருள்
மாலையிடக் கூடத்தான்
நிற்பார்
எதிரெதிர்
கிழக்கிலிருந்து மேற்கிற்கு
சூரியன் வர ஆவது
12 மணி நேரமே..
மாலை வெய்யில்
மஞ்சள் வானம்

மனை விரும்பும் இணை
ஓ வீட்டிலும் ஒப்புக் கொண்டாகி விட்டதா?

அப்படியானால்
மாலை
மஞ்சள் வெயிலில்
மணாளன்
பராக்
அப்படித்தானே!

அமரன்
23-11-2007, 07:02 PM
காதலுக்கு ஒரு உள்ளம் போதும்..
இணையாய் இன்னொரு உள்ளம் தேவையில்லை..
ஒரு தலைக் காதல் என உலகம் சொல்லும்
ஆனால்
காதலி உள்ளமும் தன்னைக்
காதலித்தே ஆக வேண்டும் என
சுயநலமும்
ஆதிக்க மனோபாவமும் இன்றி
காதலே கடமையாக
கண்ணாக
ஜெயிக்கும் காதல்கள்
உண்டென்று
என்றாவது உணர்வாய்!


ரோஜாக்கூட்டம் படத்தில் வசனம்...

"இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா
இவ நல்லா இருப்பா என்று நினைக்கிறதுதான் காதல்.
நான் நல்லா இருப்பேன்னு நினைப்பது சுயநலம்"

பூமகள்
23-11-2007, 07:09 PM
எதிரெதிர் என்றால்
நேருக்கு நேர் என்றல்லவா
பொருள்
காந்தம் விலக்கும் ஒத்த
துருவங்கள் எப்படி
இணையாதோ.. அப்படியான எதிரெதிர்..!
இணைய முடியாது..
இல்லகம் மனதுருவமாற்றி
இணைக்கும் வரை..!

மாலையிடக் கூடத்தான்
நிற்பார்
எதிரெதிர்
கிழக்கிலிருந்து மேற்கிற்கு
சூரியன் வர ஆவது
12 மணி நேரமே..
மாலை வெய்யில்
மஞ்சள் வானம்
முகூர்த்த காலம்
நிதமும் வருவதில்லை..!
நாள் குறிக்கும் வரை
நங்கையிவளுக்கு காதலுமில்லை..!

மனை விரும்பும் இணை
ஓ வீட்டிலும் ஒப்புக் கொண்டாகி விட்டதா?

அப்படியானால்
மாலை
மஞ்சள் வெயிலில்
மணாளன்
பராக்
அப்படித்தானே!
என் வந்தியதேவன்
வரும் திசை அறியவில்லை..!
வந்துவிட்டால் தாங்கள்
சொன்ன "பராக்"
நிச்சயம் நகர்வலம் வரும்..!!

தாமரை
23-11-2007, 07:17 PM
காந்தம் விலக்கும் ஒத்த
துருவங்கள் எப்படி
இணையாதோ.. அப்படியான எதிரெதிர்..!
இணைய முடியாது..
இல்லகம் மனதுருவமாற்றி
இணைக்கும் வரை..!

முகூர்த்த காலம்
நிதமும் வருவதில்லை..!
நாள் குறிக்கும் வரை
நங்கையிவளுக்கு காதலுமில்லை..!

என் வந்தியதேவன்
வரும் திசை அறியவில்லை..!
வந்துவிட்டால் தாங்கள்
சொன்ன "பராக்"
நிச்சயம் நகர்வலம் வரும்..!!

மொத்தத்தில் ஓர் ஈர்ப்பு விசை
உண்டென்று சொல்கிறாய்
காந்தமாய் - சாந்தமாய்

பூமியின் துருவங்களே
காலப்போக்கில்
மாறி விடுகின்றதான்
பூமகளின் துருவங்கள்
எம்மாத்திரம்

தினமும் தான்
முகூர்த்தமுண்டு
அதன் பெயர்
பிரம்ம முகூர்த்தம்

வந்தியத்தேவன்
வந்த இதயத் தேவன்
இது போதுமே
குந்தவை
ஏன் குந்தியிருக்கிறாள்
என்றறிய..

பூமகள்
23-11-2007, 07:27 PM
மொத்தத்தில் ஓர் ஈர்ப்பு விசை
உண்டென்று சொல்கிறாய்
காந்தமாய் - சாந்தமாய்
விசையில்லை - காந்தம்
வரும்திசை தெரியும்வரை..!

பூமியின் துருவங்களே
காலப்போக்கில்
மாறி விடுகின்றதான்
பூமகளின் துருவங்கள்
எம்மாத்திரம்
காந்தப்புலங்கள் காட்டிக்கொடுக்கும்
காந்தமவர் வந்துவிட்டால்
புலம்மாறும் துருவம்..
பூக்காந்தம் இணைக்கும் நிச்சயம்..!

தினமும் தான்
முகூர்த்தமுண்டு
அதன் பெயர்
பிரம்ம முகூர்த்தம்
பிரம்ம முகூர்த்ததிலும்
மங்களம் இசைக்க
மங்களநாண் பூண
மட்டுமோ?? :confused:

வந்தியத்தேவன்
வந்த இதயத் தேவன்
இது போதுமே
குந்தவை
ஏன் குந்தியிருக்கிறாள்
என்றறிய..
வந்தியத்தேவன்
வந்துவிட்டால்..
குந்தவைக்கு
குறையொன்றுமில்லை..!

தாமரை
23-11-2007, 07:39 PM
வந்தியத்தேவன்
வந்த இதயத் தேவன்
இது போதுமே
குந்தவை
ஏன் குந்தியிருக்கிறாள்
என்றறிய..

வந்த இதயத் தேவன்
இது நடந்து முடிந்த கதை

விசையில்லை - காந்தம்
வரும்திசை தெரியும்வரை..!

உன்னுள் விசை இருந்ததென்றாய்
நேர் துருவங்கள் விலகுமென்றாய்
இப்பொழுதோ
விசையின்றி
அசைவின்றிக் கிடக்கிறாய்..

அரைமணி நேரத்தில்
இத்தனை மாற்றமென்றால்
பிரம்ம முகூர்த்தத்திற்கு
இன்னும்
இருமணி நேரம்
இருக்கின்றதே

காந்தப்புலங்கள் காட்டிக்கொடுக்கும்
காந்தமவர் வந்துவிட்டால்
புலம்மாறும் துருவம்..
பூக்காந்தம் இணைக்கும் நிச்சயம்..!


இரும்புக்குக் கூட
காந்தத்தின் மீது
ஈர்ப்பு தானாம்..
காந்தத்திற்காய் காந்தம்
காத்துக் கொண்டேயிருந்தால்
காயில்களில் மின்சாரம் ஓட
மின்கடத்திகள்
கோயில்களில் மணமுடித்து
அவனுடன் ஓடிவிடும்

ஓவியன்
23-11-2007, 11:48 PM
அடடே அழகுக் கவிதைகள்...

இரசித்தேன், மனமகிழ்ந்தேன்....

மிக்க நன்றிகள் செல்வண்ணா, அமரன், அக்னி, பூமகள்..!!

பூமகள்
24-11-2007, 07:47 AM
உன்னுள் விசை இருந்ததென்றாய்
நேர் துருவங்கள் விலகுமென்றாய்
இப்பொழுதோ
விசையின்றி
அசைவின்றிக் கிடக்கிறாய்..
விசையில்லை என்றது ஈர்ப்புவிசையில்லை
என்ற பொருளில்..!
காலம் வரும் வரை..
விலக்கும் விசை மட்டுமே உண்டென்று
பொருள்...!


அரைமணி நேரத்தில்
இத்தனை மாற்றமென்றால்
பிரம்ம முகூர்த்தத்திற்கு
இன்னும்
இருமணி நேரம்
இருக்கின்றதேமாற்றம் பூவுலகில் ஒவ்வொரு
வினாடியின் ஆயிரமாவது பங்கிலும்
நடந்து கொண்டே தான் இருக்கிறது..!
மாற்றமில்லையேல்..
மந்தியிலிருந்து
மனிதர் இல்லை..!
மாற்றம் காணாதிருக்க
பூ மட்டுமென்ன விதிவிலக்கா?!;)

தாமரை
25-11-2007, 07:36 PM
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=204609&postcount=82

ஆதி
25-11-2007, 07:49 PM
மாற்றம் பூவுலகில் ஒவ்வொரு
வினாடியின் ஆயிரமாவது பங்கிலும்
நடந்து கொண்டே தான் இருக்கிறது..!
மாற்றமில்லையேல்..
மந்தியிலிருந்து
மனிதர் இல்லை..!
மாற்றம் காணாதிருக்க
பூ மட்டுமென்ன விதிவிலக்கா?!;)[/QUOTE]

மாற்றம் என்பது மானிட தத்துவம்
மாறும் உலகில் மகத்துவம் அறிவேன்

- கவியரசு கண்ணதாசன் - காலக்கணிதம் - கண்ணதாசன் தொகுதி - ஐந்தாம் பாகம்