PDA

View Full Version : என் அவளுக்காய்IDEALEYE
21-11-2007, 11:18 AM
மரணம் நோக்கிய
எம் எல்லோரது பயணத்திலும்
வாழ்க்கை வழியோரத்தில்
நின்று நிலைக்கும்
ஏதோவொன்று
எனக்கு - காதல்.

உத்தமக்காதல்
வீணாய் வராது
வீம்பாய் வராது
வினையும் தராது
விசும்பலும் தாராது
வீரமற்று ஓரம்போகாது
காலத்தால், சூழ்நிலையால்
நிலைகுழைக்கப்பட்டு
நீர்த்துப்போகாது

அது
உன்மீது வந்த அந்த தருணம்
எனக்குள் மட்டுமல்ல
அது உனக்குள்ளும்
கருக்கொண்டதாய்
அறிந்த பொழுதுகளில்
என் வாழ்வு அர்த்தப்பட்டுப்
போனது

உன் வதனம்
முக்காட்டுக்குள்
ஒழிந்திருந்தும்
உன் விழிவழியே
உன் இதயம் திறந்தாய்
அன்றுதான்
உன்விழி - என்விழி
ஒரு மின்னல் சந்திப்பில்,
ஒருநொடி
எல்லாம் மாறிப்போனது.

கலீல் ஜிப்ரானுடைய
கவிவரிகளும்
தாஜ்மஹாலின்
சவரக்கற்களும்
வர்மாவின்
ஓவியங்களும்
என் புல்லாங்குழல்
இசையும்
உன் பெயருக்கு முன்
வலுவிழந்து போயிற்று

ஒரு அட்டைப்பைக்குள்
அடங்கிப்பேன
வேதம் நீ
ஒரு பழைய அரைக்குள்
பூட்டப்பட்ட
பெட்டகம் நீ
அடுக்களையில்
அடுப்பூதும்
ஒரு புல்லாங்குழல் நீ
மௌனம் கண்டெடுத்த
சங்கீதம் நீ
முடவன் கை
பேனா நீ
குரங்கின் கை
பூமாலை நீ
என்று உன்னை
கவிவடிக்கும்
துர்ப்பாக்கியம்
எனக்குத் தேவையில்லை.

நீ பெண் - நீ பூ
பெண் என்பதும்
ஆண் என்பதும்
எமக்குத்தரப்படும்
விலங்கும், விடுதலையும்
அல்ல.
அது ஒரு தேவை கருதிய
கடவுள் நியதி
அவ்வளவுதான்
அத்தேவை தவிர்த்து
வேறு எதுவும்
அதற்குள் இருப்பதாய்
எனக்குத்தெரியாது

எனவே
நீ என்னுடன் சமமாய்
நடந்துவா,
வாழ்வு இருவருக்கும் பொதுவானதே
உன் அளவில் நீ என்னுடன்
பகிர்ந்துகொள்
என் அளவில் நான் உன்னுடன்
பகிர்ந்து கொள்வேன்
சோதிப்புகள் சாதிப்புகள்
எல்லாம் பொதுவாய்
போகட்டும்
உனக்குள் நான் எனக்குள் நீ
தொலைந்துபோகும் வரை
இப்படியே இருப்போம்.
IDEALEYE

பென்ஸ்
21-11-2007, 11:24 AM
அபாரம் ஐடியல் ஐ....
நம்பிக்கை என்றும் அச்சில் ஓடும் இந்த வாழ்க்கையில் முதல் படிகள்...
காதலியோ, மனைவியோ கண்களாலும் வார்த்தைகளாலும் கவிதையாலும் ஒரு வயர்லேஸ் டேட்டா டிரான்ஸ்பர்.... (அதுதாங்க நம்மகிட்டு இருக்கிறத அப்படியே அங்க சொல்லி கொடுக்கிறது)...
நம்பிக்கை இல்லா எந்த இனைப்பும் நல்ல கருத்து பரிமற்றதுக்கு வழிவகுக்கது... காதலும் கணிணியும், வாழ்க்கையும்தான்....
வாழ்த்துகள்

IDEALEYE
21-11-2007, 01:07 PM
நன்றிகள் பென்ஸ் உணர்வுகள் புரியப்படுகின்றன.....
ஐஐ

பூமகள்
21-11-2007, 05:41 PM
காதல் தேடி
கட்டியம் பாடி..!
வாழ்வு சொல்லும்
வாழும்நியதி படித்து
தத்துவம் சொல்லும்
வரிகள் அனைத்தும்
அற்புத கருத்துகள்..!
நிதர்சன உண்மைகள்..!
பாராட்டு சொல்ல
வார்த்தைகள் இல்லை..!


நீ பெண் - நீ பூ
பெண் என்பதும்
ஆண் என்பதும்
எமக்குத்தரப்படும்
விலங்கும், விடுதலையும்
அல்ல.
அது ஒரு தேவை கருதிய
கடவுள் நியதி
அவ்வளவுதான்
அத்தேவை தவிர்த்து
வேறு எதுவும்
அதற்குள் இருப்பதாய்
எனக்குத்தெரியாது

எனவே
நீ என்னுடன் சமமாய்
நடந்துவா,
வாழ்வு இருவருக்கும் பொதுவானதே
உன் அளவில் நீ என்னுடன்
பகிர்ந்துகொள்
என் அளவில் நான் உன்னுடன்
பகிர்ந்து கொள்வேன்
சோதிப்புகள் சாதிப்புகள்
எல்லாம் பொதுவாய்
போகட்டும்
உனக்குள் நான் எனக்குள் நீ
தொலைந்துபோகும் வரை
இப்படியே இருப்போம்.


அற்புத வரிகள்..! மிகவும் ரசித்த வரிகள்..! பாராட்டுகள் ஐடியல் ஐ..!

உங்களின் மனைவி.. கொடுத்து வைத்தவர் தான்..! :icon_b:

IDEALEYE
22-11-2007, 02:14 AM
நன்றி பூமகள்......
ஒரு புதிர்....
விடை தேடுங்கள்
என் காதலி + எதிர் கால
மனைவி
இங்குதான் மன்றத்தில்
இருக்கிறார்
முடிந்தால முயன்று
கண்டு கொள்ளுங்கள்
அந்த கொடுத்து வைத்தவரை.........:icon_b::icon_b:
ஐஐ

பூமகள்
22-11-2007, 10:33 AM
புதிர் கேள்வி கேட்டு
புரியாமல் விழிக்க வைத்துவிட்டீர்களே
ஐடியல் ஐ!!

மன்றத்தின் உறவில் ஓர் உறவு
உங்கள் உறவென்றால்..
எப்படிக் கண்டுகொள்வது?

உன் வதனம்
முக்காட்டுக்குள்
ஒழிந்திருந்தும்
ஏதோ சொல்ல வருகிறீர்கள்..!
புரிந்து விட்டமாதிரி தெரிகிறது..! ;)

வாழ்த்துகள்..! :)

IDEALEYE
22-11-2007, 05:16 PM
பூமகள்,
சற்றுப்பொறுங்கள்
எல்லாமே
வெளியில் வரும்
நாளொன்று
இல்லாமலில்லை
ஐஐ

அக்னி
22-11-2007, 05:46 PM
உண்மையான காதல்,
என்றும் திகட்டாத சுவை...


அது
உன்மீது வந்த அந்த தருணம்
எனக்குள் மட்டுமல்ல
அது உனக்குள்ளும்
கருக்கொண்டதாய்
அறிந்த பொழுதுகளில்
என் வாழ்வு அர்த்தப்பட்டுப்
போனது

எம் மனதில் பூக்கும் காதல்..,
பூக்க காரணமானவர் மனதிலும் வாசமாக கமழ்ந்தால்,
முழுமை பெற்ற நிலை...
நுகரப்படும் சுகந்தம், வாழ்வின் வசந்தம்...


பெண் என்பதும்
ஆண் என்பதும்
எமக்குத்தரப்படும்
விலங்கும், விடுதலையும்
அல்ல.
அது ஒரு தேவை கருதிய
கடவுள் நியதி

பெண்ணின்றி ஆணுமில்லை...
ஆணின்றி பெண்ணுமில்லை...
கடவுளின் நியதி,
புரியாதவர்கள்தான் உலகில் மிகுதி...

அழகிய கவிதைக்குப் பாராட்டுக்கள்...

அக்னி
22-11-2007, 05:49 PM
என் காதலி + எதிர் கால
மனைவி
இங்குதான் மன்றத்தில்
இருக்கிறார்


உன் வதனம்
முக்காட்டுக்குள்
ஒழிந்திருந்தும்
உன் விழிவழியே
உன் இதயம் திறந்தாய்

நான் கண்டுபுடிச்சிட்டேன்...
ஆனா... சொல்லமாட்டேன்...

பூமகள்
22-11-2007, 06:38 PM
பூமகள்,
சற்றுப்பொறுங்கள்
எல்லாமே
வெளியில் வரும்
நாளொன்று
இல்லாமலில்லை
ஐஐ
புரிந்துவிட்டது என்ன
புரிய வைத்தீர்கள் என்று,,! :icon_b:
அதனால் தான் வாழ்த்து
பகர்ந்தேன்..!:icon_b:
காலம் கனியும் வரை
பூ பொறுமையாக
இருப்பாள்..! :)
கவலை வேண்டாம்..!
வண்ணத்துப்பூச்சியாய்
வகையான திருமணச் செய்தி
விரைவில் வர வேண்டுகிறேன்..!!:icon_rollout:

மீண்டும் அன்பு வாழ்த்துகள்..! :) ;)

பூமகள்
22-11-2007, 06:39 PM
நான் கண்டுபுடிச்சிட்டேன்...
ஆனா... சொல்லமாட்டேன்...
நானும்...!:icon_rollout:
ஐடியல் ஐ சொன்ன காலம் வந்து அவர் சொல்லும் வரை..!!:)

IDEALEYE
22-11-2007, 06:40 PM
அக்னி,
நன்றிகள்
முக்காட்டுக்குப் பின்னாலே எல்லோரும்
போனால்
யார் புதிருக்கு விடை காண்பது??/

அக்னி
22-11-2007, 06:52 PM
முக்காட்டுக்குப் பின்னாலே எல்லோரும்
போனால்
யார் புதிருக்கு விடை காண்பது??/
இன்பமானாலும் துன்பமானாலும்,
முக்காலத்திலும்,
தானாகவே நிறைந்து கொள்வது,
காதல் உணர்வு...
முக்காடு மட்டும் மறைத்துவிடுமா..?

IDEALEYE
23-11-2007, 04:57 AM
அக்னி,
அசத்துரீங்க......
தொடருங்கள்,
என் காதல் சொன்னது
அக்னி
இரண்டில் ஒன்று பார்த்து விடுவார்,
பூமகளும் சும்மா சொல்லக்கூடாது
நெத்தியடி தருகிறார்....
ஐஐ