PDA

View Full Version : என் கைத்தொலைபேசி



IDEALEYE
21-11-2007, 07:25 AM
பெருங்கடலோசையின்
இடையே
சினுங்கும்
என் கைத்தொலைபேசி,

நீண்ட நேரக்காத்திருப்பின்
பின் வான் அலைகள்
கடந்து,
கடல் அலைகளினிடையே
தவித்த என் இதயம்
ஏறினாய்
என் உயிரே,

நான் உன் அருகில் இருக்கும்
எல்லா நேரங்களிலும்
என் காதுக்கு அருகில்
உன் உதடுபதித்து
கதைத்த நொடிகள் சற்றே.
இப்பே தூரத்தில் நான்
ஆனாலும் இப்பொழுது
நித்தமும் என் காதுமடல்களுக்குள்
உன் உதடுகள்.

நாம் ஒன்றாய் காணும்
நிலா
வேறாய் காணும்
மேகத்திரை
எமக்குள் ஒன்றாய்
நிகழும் மாற்றம்
வேறாய் நிகழும்
சுவாசம்

நீண்ட நேரம்
எம்மைத்தொலைத்து
எம் காதுகளில்
தேன்றும் செயற்கை வெப்பம்
மனது உன்னிடம்
வந்து விடுகின்றது
சட்டென
உயிர் நின்ற வலியாய்
எம் தொடர்பு துண்டிக்கப்பட

அப்பாவியாய் பார்த்தேன்
என் கைத்தொலைபேசி
சக்தி
இன்றி செத்துக்கிடந்தது
என் உள்ளத்தைப்போல...
ஐஐ

மன்மதன்
21-11-2007, 09:19 AM
பிரிவு கொடுக்கும் சோகத்தை குறைக்கும் கருவியே இந்த அலைபேசிகள்.. பேசிக்கொண்டு இருக்கும் போது பேட்டரி குறைந்து ஆஃப் ஆகிவிட்டால் கோபம் வரும். அதுவும் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது நடந்தால்.. கவிதை அருமை ஐஐ..

ஓவியன்
22-11-2007, 10:17 PM
நள, தமயந்திக்கு
ஓர் அன்ன பட்சி
நவயுக காதலர்களுக்கோ
இந்த அலைபேசி...!!

கூடவே தலையணைக்கு
அருகே வைத்து
உறங்கையில்
காதல் துணையே
கூட இருப்பது போலிருக்கும்..

அந்த சின்ன கருவிக்கு
அழகான கவிதை ஐஐ..!!

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நண்பரே..!!

IDEALEYE
23-11-2007, 04:59 AM
நன்றிகள் மன்மதா, ஓவியா,

james
04-12-2007, 10:43 AM
அருமையான கவிதை

மனோஜ்
04-12-2007, 12:21 PM
சொல்லுக்கு ஒரு கவிதை
காதலிக்கு ஒரு தூது அருமை