PDA

View Full Version : இயற்(ல்)பியல்



kavinila
21-11-2007, 07:18 AM
பெண்ணே
நீ ஒரு பௌதீகவியல்........

பொறியியல்
போல் உன்னை சுற்றி
இயங்க வைப்பதனால்...

உன் கண்ணில் எற்படுகின்ற
ஒவ்வொரு தாக்கத்திற்கும்....
என் இதயத்தின் ஒரத்திலே
எதிர்தாக்கம் தான் பெண்ணே.....

ஒளியியல் போல் நீயும்
வண்ணத் திருசியமாய்
இருக்கின்றாய்....
ஓடி வந்து நான் அணைத்தால்
ஓவியமாய் மறைகின்றாய்..

ஒளி போல செல்லும்
உந்தன் நேர் பார்வைதாளாமல்
நான்
நிலைகுலைந்து நிற்கையிலே
தளவாடி பார்த்து விட்டு
தழுங்காமல் செல்கின்றாய்.....

மின்னியல் போல் என்னை
சாக் அடிக்கசெய்கிறாய்.....காதல்
சாகடிக்க முடியாமல்
சாதுவாய் நான் நிற்கையிலே......
v=ir என வினவிவிட்டுசெல்கின்றாய்....

ஆதி
21-11-2007, 08:48 AM
உன்
லேசர் பார்வையில்
லேசாக ஆனது
என் எடை

x-கதிர் புன்னகைகள்
உன் நகல்
பதித்து போனது எண்ணுள்..

மூடியும் என் இமைகள்
அக-சிவப்பு கதிராய்
தெளிவாய் காட்டும்
உன் அழகை..

உன் ஒவ்வொரு
சமிஞ்கையும்
வானவில் நிறங்களில்
மின்னல் மின்ன வைத்தன
எனக்குள்..

எல்லா வினைக்கும்
எதிர் வினையுண்டு
எனும் நியூட்டனின் விதியை
உனைக் கண்டுணர்ந்த போது
என் வினைகள்
என் விதியை
மாற்றி இருந்தன..

அழகிய கவிதை கவிநிலா..

வாழ்த்துக்கள்..

-ஆதி

ஆதவா
21-11-2007, 01:35 PM
இதென்ன அறிவியல் கவிதையா? :)

எனக்கும் அறிவி'யலுக்கும் வெகுதூரம்... பெளதிகத்தை மொழிபெயர்க்க முயன்றி இறுதிவரி விதிக்குக் வழிதெரியாமல் இருக்கிறேன்....

காந்தமாய் கவிதை
இரும்பல்ல நான்.

வாழ்த்துகள்.

அமரன்
21-11-2007, 05:13 PM
ஒளியியல் போல் நீயும்
வண்ணத் திருசியமாய்
இருக்கின்றாய்....
ஓடி வந்து நான் அணைத்தால்
ஓவியமாய் மறைகின்றாய்..


எட்டுத்திக்கும்
அக, புற விழிகளால் பார்க்கும்
வல்லமை மிகுந்தவள் பெண்..

அவள்
உள்ளெடுத்து விடுமொளி
ஆக்கும் ஓவியத்துக்கு
தளமாக நாமிருத்தல் நலம்...

பாராட்டுகள் கவிநிலா!

பூமகள்
21-11-2007, 05:27 PM
கவிநிலாவின் கவி வரிகள் இயற்பியலை கொண்டிருந்தாலும் இயல்பாகவே இயற்பியலினை இம்சை அரசனாய் பார்த்த எனக்கு இனிப்புச் சுவையாய் ஊட்டிய விதம் அருமை. :icon_b:

பாராட்டுகள் கவிநிலா. :)
ஆதியின் பின்னூட்டம் வழக்கம் போல்.. அசத்தி சொக்க வைக்கிறது.
பாராட்டுகள் ஆதி. :)

V=IR என்ற பொதீக வாக்கியத்தை நினைவு கொள்ள Vegitarian = ஐயர் என்று சுறுக்குவழிச் சொல்லிக் கொடுத்த ஆசான் என் கண் முன் வந்து போகிறார்.

இது என்ன விடையை வினாவாக்கும் v=ir கேள்வி?? :confused::confused:

புரியவில்லை இந்த புத்திக்கு...! :confused:
யாரேனும் புரியவையுங்களேன்...:icon_rollout:
இயல்பு சொல்லி??!! :icon_ush::icon_ush: