PDA

View Full Version : கணினி மொழியில் ஒரு காதல் கடிதம்

நேசம்
21-11-2007, 02:34 AM
நன்பர் ஒருவர் மெயிலுக்கு அனுப்பியதை இங்கு கொடுப்பது அனைவரும் விரும்புவிர் என்ற நம்பிக்கையில்

கணப்பொழுது கூட கவனம் சிதறாமல் கருமமே கண்ணாய் கண்ணிமைக்கமால் கணினியையே கண்டுகொண்டிருக்கும் காதலிக்கு....

காதல் என்றால் kilobyte என்ன விலை? என்று தான் இருந்தேன் உன்னை பார்க்கும் வரை.என்று உன்னை கண்டனனோ,அன்று தொலைந்த என் மனதை google searchல் தேடியும் கிடைக்கவில்லை.

உன் நுனிவிரல் விளையாடும் கீபோர்டில் நான் ஒரு கீ யா இருக்க கூடாதா? உன் உள்ளங்கை தொட்டதால் mouse க்கு மவுஸ் எறி விட்டது.
Printer Ribbon யை பார்க்கும் போதெல்லாம் ribbon வைத்த உன் கூந்தல் தான் ஞாபகம் வருகிறஹு

Busy Mouse Pointerல் House glass காணும் போது உன் உடல்வாகு ஞாபகம்.எத்தனை முறை Restart செய்தாலும் Hang ஆக மறுக்கிறது மனசு.
Intellignet என்று பெயரெடுத்த நான் இப்போது உன்னால் Artificial Intelligence இல்லாத ஜடமாகி போனேனடி.உன் கணினியில் உள்ள வைரஸை Anti Virus கொண்டு க்ளின் செய்தாய்.என் மனம் பாதித்த காதல் வைரஸுக்கு உன் மனம் என்னும் antivirus யை தருவயா...

உன் கணினிக்கு மின் தடை பாதிக்க வண்ணம் UPS Backup வைத்து இருக்காய்.நீ இல்லையேன்றால் எனக்கு Backup யாரும் இல்லையடி(தங்கை யாரும் இல்லையா)
உன்னை அழைத்து கொண்டு Drive செய்ய நான் இருக்கும் போது,நி Floppy Drive, CD Drive என்று வாழ்வது சரியா ?

JPEG Formatல் உள்ள உன் படங்கள்,MPEG Formatல் உள்ள உன் அசைவுகள் என்று அனைத்தையும் என் Hard Diskl நிரம்ப்பி விட்டேன்.

உன் ஈ-மெயிலுக்காக என் Inbox காத்து கொண்டு இருக்கும்.

பின் குறிப்பு : பழக்க தோஷத்தில் CC to Multiple recipent போட்டு விடாதே.

இதுக்கும் பிரவிண் காதலி இடத்தில் இருந்து பதில் சொல்வாரா:)

மதி
21-11-2007, 02:48 AM
விதவிதமான காதல் கடிதங்கள்..அதில் இன்றைக்கு கணினி வல்லுநர்கள் அறிந்த வார்த்தைகளையே கொண்டு வித்யாசமாக உள்ளது இக்கடிதம்...
பகிர்ந்தமைக்கு நன்றி..

ஆதி
21-11-2007, 03:04 AM
காதல் என்றால் kilobyte என்ன விலை? என்று தான் இருந்தேன் உன்னை பார்க்கும் வரை..

உன் விழிகள் ping செய்த்தது எனக்கு:cool:

எத்தனை முறை Restart செய்தாலும் Hang ஆக மறுக்கிறது மனசு.

உன் பெயர் கொண்ட ddl file missing என்றல்லவா பிழை தெறிக்கிறது என் மன ஓ.எஸ்.:frown:

அழகு நேசம் அவர்களே, ரசிக்க வைக்கிறது ஒவ்வொரு வரியும்..

பகிர்விற்கு நன்றி..

-ஆதி

நேசம்
21-11-2007, 03:50 AM
நண்பர் ஆதி நான் கூட நண்பர் அனுப்பியதை இங்கு பதித்தேன்.ஆனால் விடுப்பட்ட வரிகளாக நிங்கள் தந்தது(அனுபவமோ) ரசிக்கும்படியா இருந்தது.நன்றி ஆதி

ஆதி
21-11-2007, 03:54 AM
நண்பர் ஆதி நான் கூட நண்பர் அனுப்பியதை இங்கு பதித்தேன்.ஆனால் விடுப்பட்ட வரிகளாக நிங்கள் தந்தது(அனுபவமோ) ரசிக்கும்படியா இருந்தது.நன்றி ஆதி

படிக்கிற தருணத்தில், இப்படி இருந்தால் இன்னும் கொஞ்சம் அழகு கூடிருக்குமோ ? என்று தோன்றியது, அவ்வளவுதான் மற்றபடி வேறொன்றுமில்லை..

நன்றி..

-ஆதி

விகடன்
21-11-2007, 03:55 AM
காதல்கடிதமே எழுதிப் பழக்கமல்லாதவனிற்கு இது ஒரு பொக்கிஷந்தான் அன்பரே!

இன்னும் சில காதல் கடிதங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். தேவைப்படும் வேளைகளில் பயன்படுத்திக்கொள்கிறேன்.

பி.கு: படிக்கும்போது நகைச்சுவையாகவும் நன்றாகவும் அமைந்திருந்தது. காதலிற்கு இந்த கடிதம் சரிவருமா? என்பதனை அனுபவவாதிகள்தான் சொல்லவேண்டும்.

தீபன்
21-11-2007, 04:30 AM
இன்றைய காதலிகள் யதார்த்தவாதிகள்... அன்பே கண்ணே மணியே என்றெல்லாம் உருகுவதைவிட இப்பிடி கிறுக்குத்தனமான ஆனால் கிரியேட்டிவ் ஆன கடிதங்கள் எந்தப்பெண்ணையும் மடக்கிவிடும்...நம்பி முயற்சியுங்காள் நண்பரே..

நேசம்
21-11-2007, 04:32 AM
இன்றைய காதலிகள் யதார்த்தவாதிகள்... அன்பே கண்ணே மணியே என்றெல்லாம் உருகுவதைவிட இப்பிடி கிறுக்குத்தனமான ஆனால் கிரியேட்டிவ் ஆன கடிதங்கள் எந்தப்பெண்ணையும் மடக்கிவிடும்...நம்பி முயற்சியுங்காள் நண்பரே..

ந*ண்ப*ர் என்று ஒருமையில் சொல்வ*தால்,யாருக்கு எந்த* ந*ம்பிக்கையூட்டு.

கஜினி
21-11-2007, 04:36 AM
இந்த கணினி கடிதம் கன்னி கடிதமா?

தீபன்
21-11-2007, 04:48 AM
ந*ண்ப*ர் என்று ஒருமையில் சொல்வ*தால்,யாருக்கு எந்த* ந*ம்பிக்கையூட்டு.

விராடனின் பிற்குறிப்பிற்காக சொன்னேன் நண்பரே...

விகடன்
21-11-2007, 05:22 AM
இன்றைய காதலிகள் யதார்த்தவாதிகள்... அன்பே கண்ணே மணியே என்றெல்லாம் உருகுவதைவிட இப்பிடி கிறுக்குத்தனமான ஆனால் கிரியேட்டிவ் ஆன கடிதங்கள் எந்தப்பெண்ணையும் மடக்கிவிடும்...நம்பி முயற்சியுங்காள் நண்பரே..

கிறுக்குத்தனமான கடிதமோ!
கிரியேட்டிவ்வான கடிதமோ!!
பிரச்சினை இல்லை.
மடங்குமா?

மடங்கிறது கிறுக்குத்தனமாக இல்லாமல் இருக்குமா???
அதுதான் முக்கியம்.

ஏதோ சீனியராக இருக்கிறீர்கள் போல (கடிதம் கொடுப்பதில்...)...
சொன்னபடி முயற்சிக்கிறேன்.

மன்மதன்
21-11-2007, 05:34 AM
நீ இல்லையேன்றால் எனக்கு Backup யாரும் இல்லையடி(தங்கை யாரும் இல்லையா)

அருமையான லவ் லட்டர்..பேக் அப் எல்லாம் கேட்டிருக்கிறதே..:D

மனோஜ்
21-11-2007, 03:16 PM
வேடில்(word) அடிக்காது போட்டே(photoshop) சாப்பில் அடித்தால் கடிதம் இன்னும் ஜெலிக்கும் என்று நினைக்கிறோன்

வித்தியாசமான கதிதத்தை வித்தியாசமா செய்யனு:D நேசம்:icon_b:

அன்புரசிகன்
21-11-2007, 03:48 PM
RAM இலிருந்து உங்கள் காதல் காதலியின் HARD DISK ற்கு செல்ல வாழ்த்துகிறேன்....

ஓவியன்
21-11-2007, 03:54 PM
RAM இலிருந்து உங்கள் காதல் காதலியின் HARD DISK ற்கு செல்ல வாழ்த்துகிறேன்....

அதற்கிடை யாராவது கொப்பி செய்து இணையத்தில் ஏற்றி விடுவார்கள் கவனம்..!! :)

அன்புரசிகன்
21-11-2007, 04:17 PM
அதற்கிடை யாராவது கொப்பி செய்து இணையத்தில் ஏற்றி விடுவார்கள் கவனம்..!! :)

நேசத்திற்கு தீங்கு விளைவிக்கும் எண்ணத்திலேயே இருக்கிறீர்.....:icon_rollout:

பூமகள்
21-11-2007, 05:31 PM
இதற்கு பெயர் தான்...
கணி(ன்)னி காதலா??

கன்னி மீது காதல் கொண்டதை விட...
கணினி மீது காதல் கொண்டு வடித்த வர்ணனைகள் தான் அதிகம் போல்..!!

நேசம் அண்ணா...
நல்ல கணி(ன்)னி காதல் கடிதம் கொடுக்க கிடைக்க வாழ்த்துகள்..!! :) ;)

நேசம்
21-11-2007, 05:48 PM
நேசம் அண்ணா...
நல்ல கணி(ன்)னி காதல் கடிதம் கொடுக்க கிடைக்க வாழ்த்துகள்..!! :) ;)

அண்ணியிடம் கேட்டு தான் சொல்றியா? ம்ம்.. இப்போ கிடைச்சு என்ன செய்றது:frown:

பூமகள்
21-11-2007, 05:56 PM
அண்ணியிடம் கேட்டு தான் சொல்றியா? ம்ம்.. இப்போ கிடைச்சு என்ன செய்றது:frown:
அப்போ ஆல்ரெடி கிடைச்சாச்சுன்னு சந்தோசமா சொல்லனும் நேசம் அண்ணா. :icon_b:
வள்ளுவர் என்ன சொல்லியிருக்கார்...:cool:;)

இடுக்கன் வருங்கால் நகுக..!! :lachen001::lachen001:

நேசம்
21-11-2007, 05:59 PM
இடுக்கன் வருங்கால் நகுக..!! :lachen001::lachen001:
உங்க அண்ணி வரும் போது இடுக்கன் வருங்கால் நகுக..!! :sauer028:

பூமகள்
21-11-2007, 06:05 PM
உங்க அண்ணி வரும் போது இடுக்கன் வருங்கால் நகுக..!! :sauer028:
அச்சச்சோ... கோபிச்சிட்டீங்களா?? :icon_ush::icon_ush:
சும்மா சொன்னேன் அண்ணா..
நான் அப்படிச் சொல்லலையே..!! :frown:

நேசம்
21-11-2007, 06:09 PM
அச்சச்சோ... கோபிச்சிட்டீங்களா?? :icon_ush::icon_ush:
சும்மா சொன்னேன் அண்ணா..
நான் அப்படிச் சொல்லலையே..!! :frown:

மலர்தான் மண்டூன்னா...
அண்ணி வரும்போது இடுங்கண் வருங்கால் நகுக என் நினைத்ததை சொன்னேன்.
(தங்கையிடம் கோவிச்சுக்குவனா)

மலர்
22-11-2007, 03:18 AM
நேசம் அண்ணா..
இதை அண்ணிக்கு ஒரு கொப்பி எடுத்து அனுப்பிட்டேன்...
வந்த வேலை முடிஞ்சது..
நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்...

சிவா.ஜி
22-11-2007, 03:47 AM
கணிணியைக் கட்டிக்கொண்டு அழுபவர்கள் அதன் மொழியிலேயே காதலிக்கும் கடிதமெழுதியிருக்கிறார்கள்.சுவைபட எழுதப்பட்டுள்ளது.பகிர்தலுக்கு நன்றி நேசம்.

praveen
22-11-2007, 03:53 AM
[COLOR=black]
இதுக்கும் பிரவிண் காதலி இடத்தில் இருந்து பதில் சொல்வாரா:)

ரொம்ப தான் ஆசை, ஒரு பெண் எழுதின மாதிரி இருந்தால் நான் பதில் கொடுத்திருப்பேன்.

காதல் செய்து அனுபவமில்லை, இந்த கவிதையும் வர மாட்டேன்கிறது. நேரமில்லாததால் இதற்கு பதில் கடிதம் எழுத முயற்சிக்க வில்லை.(இன்று).

lolluvathiyar
22-11-2007, 06:58 AM
அருமையான காதல் கவிதை, முன்னமே படித்ததுதான் ஆனால் ரசிக்குபடி இருக்கிறது. அதெல்லா சரி இதுக்கு பிரவீன் வந்து பதில் சொல்வாரா என்று ஆதங்கபடுகிறீர்கள். பாருங்க பிரவீன் சன்னமே எஸ்கேப் ஆகராரு. ஆனா நிச்சயம் மன்றத்து காதல் மன்னன் இதயம் வந்தா நல்ல பதில் கிடைக்கும் என்று பத்தவைகிறேன் ஓ சாரி கருதுகிறேன்

ஓவியன்
22-11-2007, 11:24 PM
மன்றத்து காதல் மன்னன் இதயம் வந்தா நல்ல பதில் கிடைக்கும் என்று பத்தவைகிறேன் ஓ சாரி கருதுகிறேன்

ஆகா காதல் மன்னரே உங்கள் வருகைக்காக நாம் காத்திருக்கிறோம்..!! :D:D:D

ஜெயாஸ்தா
23-11-2007, 03:31 AM
கணிணி மொழியில் காதல் கடிதம் எழுதுவதெல்லாம் சரி.....ஹேக்கர்ஸ் ஜாக்கிரதை....!

அக்னி
23-11-2007, 04:06 AM
கணினி அறிந்தால் பிரசுர உரிமை கோரலாம்.

இன்றைய சூழ்நிலையில் இக்கடிதத்தை பயன்படுத்தலாம்.
ஆனால்,
எதிர்காலத்தில் பயன்படுத்த நிச்சயமாக முடியாமல் போகும்.
ஏனென்றால்,
கணினி வளர்ச்சியின் விரைவு அதிகமல்லவா...
அதனால்,
பயன்படுத்த இருப்பவர்கள் விரைந்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்...

பாராட்டுக்கள் நேசம்...

கண்மணி
23-11-2007, 04:29 AM
இதை எத்தனைப் பேருக்கு
BCC -இல் அனுப்பினீர்?

கண்மணி
23-11-2007, 04:48 AM
நன்பர் ஒருவர் மெயிலுக்கு அனுப்பியதை இங்கு கொடுப்பது அனைவரும் விரும்புவிர் என்ற நம்பிக்கையில்

கணப்பொழுது கூட கவனம் சிதறாமல் கருமமே கண்ணாய் கண்ணிமைக்கமால் கணினியையே கண்டுகொண்டிருக்கும் காதலிக்கு....

காதல் என்றால் kilobyte என்ன விலை? என்று தான் இருந்தேன் உன்னை பார்க்கும் வரை.என்று உன்னை கண்டனனோ,அன்று தொலைந்த என் மனதை google searchல் தேடியும் கிடைக்கவில்லை.

உன் நுனிவிரல் விளையாடும் கீபோர்டில் நான் ஒரு கீ யா இருக்க கூடாதா? உன் உள்ளங்கை தொட்டதால் mouse க்கு மவுஸ் எறி விட்டது.
Printer Ribbon யை பார்க்கும் போதெல்லாம் ribbon வைத்த உன் கூந்தல் தான் ஞாபகம் வருகிறஹு

Busy Mouse Pointerல் House glass காணும் போது உன் உடல்வாகு ஞாபகம்.எத்தனை முறை Restart செய்தாலும் Hang ஆக மறுக்கிறது மனசு.
Intellignet என்று பெயரெடுத்த நான் இப்போது உன்னால் Artificial Intelligence இல்லாத ஜடமாகி போனேனடி.உன் கணினியில் உள்ள வைரஸை Anti Virus கொண்டு க்ளின் செய்தாய்.என் மனம் பாதித்த காதல் வைரஸுக்கு உன் மனம் என்னும் antivirus யை தருவயா...

உன் கணினிக்கு மின் தடை பாதிக்க வண்ணம் UPS Backup வைத்து இருக்காய்.நீ இல்லையேன்றால் எனக்கு Backup யாரும் இல்லையடி(தங்கை யாரும் இல்லையா)
உன்னை அழைத்து கொண்டு Drive செய்ய நான் இருக்கும் போது,நி Floppy Drive, CD Drive என்று வாழ்வது சரியா ?

JPEG Formatல் உள்ள உன் படங்கள்,MPEG Formatல் உள்ள உன் அசைவுகள் என்று அனைத்தையும் என் Hard Diskl நிரம்ப்பி விட்டேன்.

உன் ஈ-மெயிலுக்காக என் Inbox காத்து கொண்டு இருக்கும்.

பின் குறிப்பு : பழக்க தோஷத்தில் CC to Multiple recipent போட்டு விடாதே.

இதுக்கும் பிரவிண் காதலி இடத்தில் இருந்து பதில் சொல்வாரா:)

கிலோபைட்டில் மெமரியை வைத்து "மெகா" பிட்டைப் போடப் பார்ப்பவரே!!

"Goggles" போட்ட கண்களால் கூகுளிலும் தேட முடியா மனதுடையவரே!
மனமில்லாமல் எழுதி விட்டு பதிலேன் எதிர் பார்க்கிறீர்.

கீ போர்டும் மௌஸும் லெகஸியிலிருந்து வயர்லஸ் ஆனபின்னும் யூஸ் லெஸ்ஸாய் டாட் மேட்ரிக்ஸ்ஸின் ரிப்பனுக்கும் பின் அலையும் அப்பனே,
டச் ஸ்கிரீனாயம் என் மனதை டச் செய்ய வில்லையே நீ!

கிளாஸ் கண்டாலே ஆடிப்போகும் நீ, அலவதை விட தூக்கில் தொங்கி (ஹாங்க் ஆகி) விடுவதே நன்று. காதல் வைரஸை கொல்ல ஆண்டி வைரஸ் கேட்கும் நீ ஆண்டிக்குப் பின்னால் போனால் ஆண்டி ஆவது யார்?

Drive எல்லாம் சேமித்து வைக்கும். உன் drive ஓ ஓசிக்காரில் ஊர்சுற்றும்.
மெகாபைட் , கிகாபைட் வேண்டாம், ஒரு பஜாஜ் பல்சராவது சொந்தமாய் உண்டா?

UPS - இல்லாமல் அப்செட் ஆனவனே, தன் கையை பார்க்காமல் தங்கையைப் பார்ப்பவனே.

CC என்ன BCC யில் கூட உன் பெயரில்லை..

ஓவியன்
23-11-2007, 06:37 AM
அடப் பாவமே இப்படியா பதில் கடிதம் வரணும்...!! :confused:

நேசம்
23-11-2007, 06:44 AM
ப்ரவிண் பதில் எழுதுவாருன்னா பார்த்தா,கண்மனி சொல்லி இருக்காரு.
அருமையாக இருந்தது.வாழ்த்துக்கள் கண்மணி

அக்னி
23-11-2007, 06:50 AM
சூப்பருங்கோ பதில் கடிதம்...

மலர்
25-11-2007, 03:08 PM
CC என்ன BCC யில் கூட உன் பெயரில்லை..

கண்மணி,,,
உங்க பதில் கடிதம் சூப்பர்...:D:D