PDA

View Full Version : காதல் குளிர் - 9



gragavan
20-11-2007, 06:24 PM
சென்ற பகுதி இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13263)

பக்கத்தூர் என்பது ஏதோ பெரிய ஊர் என்று எண்ணிவிட வேண்டாம். பட்டிக்காட்டிலிருந்து பட்டிக்காட்டிற்கு வந்தார்கள். அங்கும் எந்தப் பேருந்தும் நிற்கவில்லை. இருட்டும் குளிரும் மட்டுமே கூடியது. என்ன செய்வதென்று யாருக்கும் தோன்றவில்லை. பெராவை வைத்துக் கொண்டும் பயந்து போயிருக்கும் ரம்யாவை வைத்துக் கொண்டும் விழித்தார்கள். தங்குவதற்கு ஒரு விடுதியும் இல்லை.

அப்பொழுதுதான் ப்ரகாஷாவிற்கு அந்தத் திட்டம் தோன்றியது. அவர்கள் வந்த ஆட்டோவிடம் போனான். மதுராவிற்கு ஆட்டோ வருமா என்று கேட்டான். ஒப்புக்கொள்ளாத டிரைவரிடம் பேசிச் சரிக்கட்டினான். அறுபது கிலோமீட்டர் தொலைவு. முந்நூற்று ஐம்பது ரூபாய்களுக்குப் பேரம் பேசி ஆட்டோவை மதுராவுக்குத் திருப்பினான்.

விதி...அல்லது கடவுள்...எப்படி விளையாடுகின்றார் பார்த்தீர்களா? நான்கு மணி வாக்கில் ப்ரகாஷாவின் பக்கத்தில் உட்கார விரும்பாமல் முன்னால் சென்று உட்கார்ந்தாள் ரம்யா. ஆனால் இப்பொழுது கிடுகிடு ஆட்டோவின் பின்னால் பிரகாஷாவை ஒட்டிக்கொண்டு...சாய்ந்து கொண்டு...கட்டிக்கொண்டு....அட. அதே ரம்யாதான். அப்பொழுது நொந்து பாடிக்கொண்டிருந்த ப்ரகாஷாவின் உள்ளம் இப்பொழுது காதற் சிந்து பாடிக் கொண்டிருந்தது.

ரம்யாவின் நிலையோ வேறுவிதம். படபடப்பும் பயமும் அடங்காமல் அவன் அணைப்பிலே அடங்கியிருந்தாள். இதே நெருக்கத்தில் அவள் இதற்கு முன்பும் உட்கார்ந்திருக்கிறாள். ஆனால்...இன்றைய நெருக்கத்தில் வேறு எதையோ உணர்ந்தாள். சரி. எதையோ உணர்ந்தார்கள். அதுக்குப் பேர் காதல்தானா!

ஆட்டோ ஜக்கடிஜக்கடியென ஒருவழியாக மதுராவிற்குள் நுழைந்தது. பெரிய பட்டிக்காடு அது. கோயில் உள்ள ஊர். புகழ் பெற்ற ஊர். ஆனால் பட்டிக்காடு போல இருந்தது. பெட்டிக்கடைகளும் மஞ்சள் பல்புகளும் அழுது வடிந்து கொண்டிருந்தன. பேருந்து நிலையம் என்பது நான்கே பேருந்துகள் நிற்கக் கூடிய இடமாகவே இருந்தது. அதிலும் இருந்தது ஒரே ஒரு பேருந்து. பெரிய வேன் என்று சொல்லலாம். அதுவும் வேறொரு ஊருக்கு. டெல்லிக்கோ நொய்டாவிற்கோ எதுவும் இருப்பது போலவே தெரியவில்லை.

"ரம்யா இல்லே இரு. பத்து நிமிசத்துல வர்ரேன். சப்யா பாத்துக்கோ" சொல்லிவிட்டு ஆட்டோ டிரைவரிடம் எதையோ சொல்லி அழைத்துச் சென்றான். சரியாகப் பத்து நிமிடத்தில் ஒரு ஜீப்போடு வந்தான். இரண்டாயிரம் ரூபாய்க்குப் பேசி முடித்திருந்தான். ஏனென்றால் வேறு ஒரு வண்டியும் இல்லை. அதுவுமில்லாமல் ஏற்கனவே எட்டரை மணியாகியிருந்தது. தங்க நல்ல இடமும் இல்லை. ஆகையால் எப்படியாவது நொய்டா போவதுதான் நல்லது என்று முடிவு செய்தான் ப்ரகாஷா. அதனால்தான் வண்டியைப் பிடித்து வந்தான்.

வண்டியில் பிரகாஷாவின் மடியில் படுத்துக் கொண்டாள் ரம்யா. அப்பொழுதுதான் சித்ரா கேட்டாள்.

"ஏய்....எங்கடி நீ வாங்குன தாஜ்மகால்? அந்தப் பைய மட்டும் காணோமே. மித்ததெல்லாம் இருக்கே."

"அத ஆட்டோலயே விட்டுட்டேண்டி."

"ஆட்டோலயா?"

"ஆமா. அத வாங்குனதுனாலதான் இப்படியெல்லாம் ஆச்சோன்னு தோணிச்சு. அதான் ஆட்டோலயே விட்டுட்டேன். என்ன இருந்தாலும் அது காதல் கல்லறை....அதுனால எனக்குப் பிடிக்கலை. அந்தத் தாஜ்மகால் எனக்கு வேண்டாம். அதுனாலதான் ஆட்டோலயே வெச்சிட்டேன்."

சொல்லி விட்டு தூங்கிவிட்டாள் ரம்யா. படபடப்பு லேசாகக் குறைந்தது போல இருந்தது. தலைவலி மட்டும் லேசாக இருந்தது. ஒருவழியாக நொய்டா வந்து சேர்ந்தார்கள். அதுவும் பதினொன்னரை மணிக்கு. வெளியே குளிர் கும்மியடித்துக் கொண்டிருந்தது. சப்யா ஹீட்டர்களைத் துவக்கினான்.

ரம்யா தொண்டையத் தடவிக்கொண்டு எதுக்களித்தாள். "என்னடி மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு?"

"வாந்தி வர்ர மாதிரி இருக்கு." லேசாக உமட்டினாள்

அந்நேரம் பெரா அழத் தொடங்கினான். தூக்கத்திற்குத்தான். ப்ரகாஷாவிடம் சொன்னாள் சித்ரா. "டேய். பக்கத்துத் தெருவுல மெடிக்கல் ஷாப் இருக்கு. எலக்ட்ராலும் அவாமினும் வாங்கீட்டு வா. போக ரெண்டு நிமிஷம். வர ரெண்டு நிமிஷம். பட்டுன்னு வந்துரு. இந்தா சாவி." வீட்டுச் சாவியை வாங்கிக் கொண்டு வெளியே போனான் அவன். பெராவின் அழுகை கூடியது.

சித்ராவை ரம்யா அழைத்தாள். "ஏய். நீங்க போய்ப் படுங்க. எனக்கு இப்பத் தேவலை. அவன் வந்ததும் மருந்து வாங்கிச் சாப்பிட்டுக்கிறேன். இப்ப உள்ள போய்ப் படுக்கிறேன்.

ரம்யா அவள் அறைக்குச் சென்று கதவைச் சும்மா மூடிக்கொண்டு படுத்தாள். சித்ராவும் சப்யாவும் பெராவைத் தூக்கிக்கொண்டு அவர்கள் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார்கள்.

தூங்கிக் காலையில் எழுந்த சித்ராவிற்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. சப்யாவை எழுப்பினாள். "சப்யா...சப்யா...ப்ரகாஷாவைக் காணோம்."

-----------------------------------------------------
பின்குறிப்பு

சித்ரா எப்பொழுதோ மனதில் எழுதி மறந்து போன கவிதை

விடிவது என்றால் என்ன?
உனது நிழல்
என் மீது படிவதுதான்
இல்லையென்றால் மடிவதுதான்

தொடரும்

மன்மதன்
20-11-2007, 06:33 PM
ஆஹா... ப்ரகாஷாவை காணோமா.. சரிகாஷா மாதிரி இவனுக்கும் ஏதாவது நடந்திருக்குமோ..

நடந்த சம்பவத்துக்கு தான் வாங்கிய தாஜ்மகால்தான் காரணம் என்று நினைத்து அதை ஆட்டோவிலே விட்ட சாஃப்ட்வேர் ரம்யா..சகுன ரம்யா..

அடுத்த பாகத்தை சீக்கிரம் கொடு ராகவா..

அன்புரசிகன்
20-11-2007, 06:33 PM
நிச்சயமாக சாக போய் இருக்கமாட்டார். பார்ப்போம் அடுத்த கதையில்.

தொடருங்கள் அண்ணா...

அக்னி
20-11-2007, 06:59 PM
ஒருவேளை பிரகாசாவை ட்ரைவர் கடத்தி இருப்பானோ...?
எனக்கு இன்னும் அந்த ட்ரைவர் மேல் சந்தேகம் தீரவில்லை.
பாராட்டுக்கள் ராகவன்ஜி... இத்தொடரிலும் விறுவிறுப்புக் குன்றவில்லை...
தொடருங்கள்... நாங்களும் தொடருகின்றோம்...

அன்புரசிகன்
20-11-2007, 07:04 PM
ஒருவேளை பிரகாசாவை ட்ரைவர் கடத்தி இருப்பானோ...?
எனக்கு இன்னும் அந்த ட்ரைவர் மேல் சந்தேகம் தீரவில்லை.


:rolleyes: இப்படியும் நடந்திருக்கும்..... பார்ப்போம்.........:)

மதி
21-11-2007, 02:00 AM
அட பிரகாஷாவிற்கு உண்மையிலேயே என்ன தான் ஆச்சு?ரம்யா என்ன ஆனாள்.அவளை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.. பிரகாஷாவிற்காக காத்திருந்த அவள் தூங்கிவிட்டாளா..இல்லை அவனைத் தேடி போய்விட்டாளா..? சஸ்பென்ஸ் தாங்கல.. சீக்கிரம் சொல்லுங்க

பூமகள்
21-11-2007, 07:31 AM
ஆஹா... சஸ்பென்ஸா வைச்சி கலங்கடிச்சிட்டீங்களே...!
பிரகாஷாவுக்கு என்ன ஆச்சுன்னு என்னோட வியூகம்... சொல்றது இது தான்.
ரம்யா விட்டு வந்த தாஜ்மஹாலை எடுக்கச் சென்றிருப்பாரோ??
பெரிசா ஏதும் குண்ட தூக்குப் போட்டுடாதீங்கப்பூ.....!!
ராகவன் அண்ணா...
காதல் குளிர் சும்மா குளிருதில்ல...!! :D:D

பாராட்டுகள் ராகவன் அண்ணா.

மன்மதன்
21-11-2007, 08:57 AM
ஆஹா... சஸ்பென்ஸா வைச்சி கலங்கடிச்சிட்டீங்களே...!
பிரகாஷாவுக்கு என்ன ஆச்சுன்னு என்னோட வியூகம்... சொல்றது இது தான்.
ரம்யா விட்டு வந்த தாஜ்மஹாலை எடுக்கச் சென்றிருப்பாரோ??
பெரிசா ஏதும் குண்ட தூக்குப் போட்டுடாதீங்கப்பூ.....!!
ராகவன் அண்ணா...
காதல் குளிர் சும்மா குளிருதில்ல...!! :D:D

பாராட்டுகள் ராகவன் அண்ணா.


சபாஷ்... நல்ல கதையாசிரியர் உங்களிடம் ஒளிந்திருக்கிறார்.. :icon_b: நல்லாவே யோசிக்கிறீங்க.. பார்ப்போம் எப்படி கதை செல்கிறது என்று..

lolluvathiyar
21-11-2007, 11:16 AM
பிரகாஸ கானமா, நல்லா தேடி பாத்தாங்களாம் ரம்யாவாவது இருங்காங்களா, ரம்யாவும் கானாம போயிருந்தா. கனடுக்காம இவுங்க வேலைக்கு போயிரலாம்

பூமகள்
21-11-2007, 05:53 PM
சபாஷ்... நல்ல கதையாசிரியர் உங்களிடம் ஒளிந்திருக்கிறார்.. :icon_b: நல்லாவே யோசிக்கிறீங்க.. பார்ப்போம் எப்படி கதை செல்கிறது என்று..
நன்றிகள் மன்மதன்ஜி..! :)
எவ்வளவோ (யோசனை)செய்யறோம்.. இதை (யோசனை) செய்ய மாட்டோமா??!! :rolleyes: (உபயம்: அழகிய தமிழ்மகன்)
சும்மா.. தமாசுக்கு தாங்க சொன்னேன்..! :icon_rollout:

ஓவியா
21-11-2007, 06:47 PM
நொந்து பாடிக்கொண்டிருந்த ப்ரகாஷாவின் உள்ளம் இப்பொழுது காதற் சிந்து பாடிக் கொண்டிருந்தது.


அடடே.

அன்புரசிகன்
22-11-2007, 03:59 AM
அடடே.

புரியல... என்ன இது???

மலர்
25-11-2007, 07:58 AM
எனக்கென்னமோ பூமகள் அக்கா சொன்னமாதிரி ப்ரகாஷா தாஜ்மஹாலை தேடி போயிருப்பாரோன்னு ஒரு சந்தேகம்...
ஆனா சித்ராக்கு மருந்து கூட குடுக்காமலா போவார்.. :confused::confused:

வழக்கம் போல இப்பவும் சஸ்பென்ஸ் தான்...
ராகவன் அண்ணா...
உங்கள் எழுத்து+காதல் குளிருக்கென்ன்று ஒரு கூட்டமே வெயிட்டிங்..
என்னையும் சேர்த்து தான்...

சீக்கிரம் அடுத்த பாகம் குடுத்திருங்கோ...