PDA

View Full Version : அறியாமை



பகுருதீன்
20-11-2007, 05:08 PM
காகிதத்தை பற்றி தெரியாத நான்
கவிதை வடிக்கிறேன்
பேனாவை பற்றி தெரியாத நான்
காவியம் வடிக்கிறேன்
ஓவியத்தை பற்றி தெரியாத நான்
சித்திரம் வரைகிறேன்
காதலை பற்றி தெரியாத நான்
இன்று கண்ணீர் வடிக்கிறேன்

ஆதி
20-11-2007, 05:22 PM
பனித்துளிகள் விழாத
பூக்களும் உண்டு
கண்ணீர் விழாத
காதல் வரலாற்றிலில்லை!

தெரியாதவைகள் தாம்
தெரியவைக்கும் பலவற்றை..

நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்.. நன்றி.

-ஆதி

அமரன்
20-11-2007, 05:34 PM
ஆம்..
கண்ணீர் வீழாத
காதல் வரலாற்றில்லை..
கண்ணீர் துளிகளில்
பனித்துளி குளிர்ச்சியுமுண்டு..

கண்ணீரில் வீழ்ந்த
காதல் மட்டும் வரலாறுமில்லை...
பன்னீர் தெளிக்கும்
காதலும் மட்டின்றி வரலாற்றிலுண்டு..

தெரியாதவைதாம்
தெரியவைக்கும் பலவற்றை..!