PDA

View Full Version : அன்புக்கை



பகுருதீன்
20-11-2007, 04:54 PM
நெற்றி தொட ஆளில்லாத
காய்ச்சல் நாட்களிலும்
முந்தானையில் தலை துவட்டாத
மழை காலங்களிலும்
தலை முடி கோதாமல்
தூக்கம் வர மறுக்கும் போதும்
கை நீட்டி அழைக்காமல் தினம்
காலையில் எழும் போதும்
உன் கை கொண்டு ஊட்டாமல்
கால் வயிறு சாப்பிடும் போதும்
என் கண்களில் நிழலாடுகிறது தாயே
கண்ணீருடன் உன் அன்புக்கை

ஆதி
20-11-2007, 05:05 PM
விண்ணுலகையே
வரமாய் வழங்கினாலுன்
உன் நிழல் விழுந்த
மண்போது தாயே
நான் உயிர் வாழ்வதற்கு..

கவிதை அழகு அருமை.. வாழ்த்துக்கள்.. நன்றி.

-ஆதி

அமரன்
20-11-2007, 05:46 PM
அன்னைக்கொரு கவி..
அள்ள அள்ள குறையாத அன்பைப்போல்
எழுத எழுத குறையாத அம்மாக்கவிதைகள்
தின்ன தின்ன தெவிட்டாத அமிழ்தின் சுவை.
பாராட்டுக்கள்..தொடருங்கள்..

பூமகள்
20-11-2007, 06:00 PM
அம்மா...!
மூன்றெழுத்தில் காவியம்..!
மூவுலகும் சங்கமம்..!

அன்னை துதி
ஆயிரம் முறை
படித்தாலும்
அடங்கா பாசம்..
அணையிடமுடியா நேசம்..
உயிரின் ஆதாரம்..!

பாராட்ட வார்த்தை இல்லை..!
கவி வரிகள் அத்தனையும் தேன்...!

வாழ்த்துகள் அன்பரே..! :)

இளசு
20-11-2007, 07:23 PM
அன்னைக்கரங்கள் அமுதசுரபி போல - அள்ள அள்ளக் குறையாது
அன்னைக்கரங்கள் ஆண்டவன் போல - அவதாரங்கள் பலப்பல..

வாழ்த்துகள் பக்ருதீன் அவர்களே!

ஓவியன்
23-11-2007, 06:11 AM
அன்னையின் கரங்களுக்கு ஈடுண்டோ
இந்த உலகில்...!!

பாராட்டுக்கள் பகுரூதீன்...!
தொடர்ந்து படையுங்க...

ஆதவா
23-11-2007, 12:55 PM
நெற்றி தொட ஆளில்லாத
காய்ச்சல் நாட்களிலும்
முந்தானையில் தலை துவட்டாத
மழை காலங்களிலும்
தலை முடி கோதாமல்
தூக்கம் வர மறுக்கும் போதும்
கை நீட்டி அழைக்காமல் தினம்
காலையில் எழும் போதும்
உன் கை கொண்டு ஊட்டாமல்
கால் வயிறு சாப்பிடும் போதும்
என் கண்களில் நிழலாடுகிறது தாயே
கண்ணீருடன் உன் அன்புக்கை

எல்லாம் கல்யாணம் ஆகும் வரைதான் பஹ்ருதீன். பிறகு அம்மாவை மறந்துவிடுவோம்.. :)

தாயை எந்த சூழ்நிலையிலும் மறக்காதவன் மனிதன்...

காட்சிகளைத் தேர்ந்தெடுத்த விதத்தில் இன்னும் வனப்பூட்டுங்கள். ஆழத்தினுள் செல்லுங்கள். செறிவை க் கடந்து உள் நுழையுங்கள் ..

நல்ல கவிதை வரன் உங்களுக்கு வாய்த்திருக்கிறது. மேலும் எழுப்பி கொண்டுவாருங்கள்....

வாழ்த்துகள்.