PDA

View Full Version : புது மாடல் ரோபோ.

யவனிகா
20-11-2007, 01:21 PM
புது மாடல் ரோபோ
அறிமுகம் இந்தியாவில்!

காலை முதல் மாலைவரை
கடுமையாய் உழைக்கும்...

வெள்ளென எழுந்து
வாசல் பெருக்கும்...

கூட்டி மெழுகி
துணி துவைக்கும்...

அறுசுவையும் ஆக்கிப்போடும்
கடைகண்ணி போய் வரும்...

அனுமதித்தால் வேலைக்குப் போகும்...
கவர் பிரிக்காமல்
சம்பளம் தரும் மாத இறுதியில்...

பிள்ளைக்குப் பாடம் சொல்லும்...
தொல்லை எதுவும் வைக்காது...

கட்டிலிலும் அனுசரித்துப் போகும்...
கற்பில் நெருப்பாய் இருக்கும்...

பகட்டாக உடுத்த வைத்து
பதவிசாக வெளியே அழைத்துச் செல்லலாம்..

இன்று புதுசு வேண்டாம்..
அழுக்குத் துணி போதும் என்றால்
அதற்கும் சம்மதிக்கும்.

மாலை முகம் கழுவி, உடை திருத்தி
வீடு திரும்பும் உங்களுக்காய் காத்திருக்கும்...

சர்வீஸ்,ரீசார்ஜ் எதுவுமே வேண்டாம்
ஆயுள் முழுதும் உழைப்பு கேரண்டி
கட்டணம் தேவையில்லை...

கயிற்றில் சிறு கயிறு கட்டி
அழைத்தால் அதுவே வந்து விடும்...வரும் போதே,
பொன்னும் பொருளும்
உங்கள் தகுதிக்கேற்பக் கொண்டுவரும்...

"மனைவி" என்ற
அழகான பெயருள்ள ரோபோ அது...

அக்னி
20-11-2007, 01:34 PM
ரோபோவாய் வந்த மனைவி
மனுசியாய் மாறிவிட்டாள்...
மனிதனாய் இருந்த கணவன்
ரோபோவாய் மாறுகின்றான்...

வித்தியாசமான கவிக்குப் பாராட்டுக்கள் யவனிகா...
ஆனாலும், இன்றைய உலகில் ஏற்றுக்கொள்ள முடியாத கரு இது...

அறிஞர்
20-11-2007, 01:37 PM
உயிருள்ள ரோபாக்கள்..... பற்றிய உணர்வுள்ள கவிதை.....

சில மனைவிகளின் நிலை இப்படியாய் இருப்பது.. வருத்தப்படவேண்டிய விசயமே......

சிவா.ஜி
20-11-2007, 01:39 PM
இயந்திரம் புதிதானாலும் கண்டுபிடிக்கப்பட்டு வெகு காலம் ஆகிவிட்டது.
உண்மை என்னவென்றால்...இந்த இயந்திரம் இப்போதுதான் சுயமாய் சிந்திக்கும் திறன் பெற்று தன்னை மட்டுமல்லாது தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றும் வல்லமை பெற்று வருகிறது.
இந்த கவிதையில் காணப்படும் ரோபோ மிகப் பழைய மாடல். சந்தையில் இல்லை. கவிதை நன்று.கருவில் உடன்பாடு இல்லை தங்கையே.

யவனிகா
20-11-2007, 01:41 PM
ஆனாலும், இன்றைய உலகில் ஏற்றுக்கொள்ள முடியாத கரு இது...

இன்றைய உலகிலும் ஏதேனும் இருட்டு மூலையில் இதுபோன்ற ரோபோக்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவும் முடியாது தானே. பின்னூட்டக் கவிதை அழகு.

அமரன்
20-11-2007, 01:44 PM
உங்கள் கருத்தில் உடன்படுகின்றேன்
இன்றைய உலகின் பெரும்பான்மையான இயக்கம்
நாளைய உலகின் முழுமையான இயக்கம்-இரண்டும்
ரோபோக்கள் கையில் என்பதை பலருறுதிப்படுத்துவதால்..

ஏதோ ஒரு சக்தி சாவிகொடுக்க, சக்திகொடுக்க
ஆடும் ரோபோக்கள்தானே நாமெல்லாம்...
பாலின வேறுபாடு உருவானதே எம்மால்தானே..

யவனிகா
20-11-2007, 02:46 PM
உயிருள்ள ரோபாக்கள்..... பற்றிய உணர்வுள்ள கவிதை.....

சில மனைவிகளின் நிலை இப்படியாய் இருப்பது.. வருத்தப்படவேண்டிய விசயமே......

வ*ருத்த*ப் ப*டுவோம் அறிஞ*ர் அய்யா...வேறென்ன* செய்ய*?

யவனிகா
20-11-2007, 02:48 PM
உண்மை என்னவென்றால்...இந்த இயந்திரம் இப்போதுதான் சுயமாய் சிந்திக்கும் திறன் பெற்று தன்னை மட்டுமல்லாது தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றும் வல்லமை பெற்று வருகிறது.

மகிழ்ச்சி அண்ணா...

யவனிகா
20-11-2007, 02:49 PM
உங்கள் கருத்தில் உடன்படுகின்றேன்
இன்றைய உலகின் பெரும்பான்மையான இயக்கம்
நாளைய உலகின் முழுமையான இயக்கம்-இரண்டும்
ரோபோக்கள் கையில் என்பதை பலருறுதிப்படுத்துவதால்..
..

ஒத்துக் கொண்டாலும் விட்டுக் கொடுத்துப் பேச மாட்டீர்கள் உங்கள் இனத்தை....சரியா?

ஆதி
20-11-2007, 02:50 PM
இன்றைய உலகிலும் ஏதேனும் இருட்டு மூலையில் இதுபோன்ற ரோபோக்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவும் முடியாது தானே. பின்னூட்டக் கவிதை அழகு.

கவிதை அருமை.. கவிதையின் கரு நிதர்சனமானதே..

இருந்தாலும்.. இன்னொன்றையும் இங்கு ஒற்றுக்கொள்ளதான் வேண்டும்..

பெண்களுக்கு எதிராய்
பெண்களே இருப்பதையும்..

வாழ்த்துக்கள்.. நன்றி..

-ஆதி

மனோஜ்
20-11-2007, 03:01 PM
யவனி(ய)க்கா வேலை செய்யும் பெண்கள் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது காரணம் அவர்கள் சிந்தித்து செயல்படுபவர்கள் வேலைக்கு அனுமதிக்கும் கணவர் கண்டிப்பாக அவரின் மனம் அறிந்து நடப்பவராக தான் இருப்பார்

கவிதை அருமை நன்றி

யவனிகா
20-11-2007, 03:12 PM

இப்படி அநியாயத்துக்கு உலகமே தெரியாமல் நல்ல பிள்ளையா இருக்கையே குட்டித்தம்பி....நான் என்னன்னு சொல்லுவேன்?

யவனிகா
20-11-2007, 03:13 PM
கவிதை அருமை.. கவிதையின் கரு நிதர்சனமானதே..
நன்றி..

-ஆதி

வாழ்த்துக்கும் நன்றிக்கும் நன்றி சகோதரா!

அமரன்
20-11-2007, 06:16 PM
ஒத்துக் கொண்டாலும் விட்டுக் கொடுத்துப் பேச மாட்டீர்கள் உங்கள் இனத்தை....சரியா?

எங்கள் இன தை அல்லவோ
எப்படியாம் விட்டுக்கொடுப்பது..
இப்படியும் பாதிக்கு மேல்
எங்களினத்தை ஆக்கிரமித்து..

யவனிகா
நான் சொல்வது சரியா..

மன்மதன்
20-11-2007, 06:22 PM
அனுமத்தால் வேலைக்குப் போகும்...
கவர் பிரிக்காமல்
சம்பளம் தரும் மாத இறுதியில்....

அனுமதித்தால் என்று இருக்கவேண்டுமோ..
அழகிய கவிதை.. பாராட்டுகள் யவனிகா.

நுரையீரல்
20-11-2007, 06:53 PM
எங்க வீட்டு ரோபோ எப்பவாது ரிப்பேர் ஆகும், அன்னைக்கு
அடுப்பறையிலுள்ள கரண்டிகள் என் முகத்தினில் வந்து விழும்.

நகைக் கடை, துணிக் கடையைப் பார்த்தா
ரோபோ ஸ்ட்ரக் ஆயிடும்....

கேட்பதை வாங்கிக் கொடுத்தாத் தான்
அந்த இடத்த விட்டு ரோபோ நகரும்......

இருந்தாலும் உங்க ரோபோக் கவிதை சூப்பரா இருக்கு யவனிகா.

நான் என் கதையை சொன்னதை நீங்க மனசுல வச்சுக்காதீங்க.

இளசு
20-11-2007, 07:29 PM
கவிதைக்குப் பாராட்டுகள் யவனிகா அவர்களே..

முழுக்க முழுக்க இப்படிப்பட்ட ரோபோக்களாய்
எல்லாப் பெண்களும் இல்லை..

இப்படி இல்லவே இல்லை எனும் சொல்லும் நிலைமை
உலகம் எங்கிலும் இதுவரை இல்லை..

இருப்பவர் நிலைமை இன்னும் வேகமாய் மாறணும்..
இனி வருங்காலம் எல்லாரும் ''மனிதர்கள்'' ஆகணும்..

நேசம்
20-11-2007, 08:18 PM
காலம் மாறினாலும் யவனிகா சொல்லும் நிலை இன்னும் அதிகமாக இருக்கிறது.சொற்ப மாற்றங்களுக்கே ஆண்களுக்கு எற்பட்ட கதி....
(புள்ளி ராஜாவை நினைத்து சொன்னேன். -தப்பா நினைக்க வேண்டாம்)

கவிதை சிம்பிளா இருந்தது.வாழ்த்துக்கள்

பென்ஸ்
21-11-2007, 03:32 AM
இன்ஸ்டால்மென்டில் டீவி பிரிஜ் வாங்க வைக்காத
வாரம் ஒரு புடவை வாங்கி கேட்காத
ஒரு மனைவி என்றால் நலமே...

சில பல வருடங்களுக்கு முன் ஒரு தமிழ் வாரபத்திரிகையில் "ரோபோ" கனவண்கள் பற்றி ஒரு பெண் கேட்டிருந்தார்...
அதற்கு அந்த ஆசிரியர் (மதன் என்று நினைக்கிறேன்)...
"மார்கழி குளிரில் காலையில் ஆசை முத்தம் கொடுக்க நினைத்தால், "சில்" என்று இருக்கும்.. பரவாயில்லையா..?"
என்று நக்கலாக கேட்டிருந்தார்..

உணர்வுகளை பகிராமல் உடலைமட்டும் பகிரும் எந்த உறவும் நிலைத்ததில்லை...,
உடல் வதைக்கபடும் உறவுகளும் நிலைத்ததில்லை...

கஜினி
21-11-2007, 04:17 AM
காலையில் எழுந்தேன்
அடுக்களை நுழைந்தேன்
தேனீர் கொண்டுவந்து
மனைவியை எழுப்பினேன்

புதுயிடம் என்பதால்
குளிரிங்கு அதிகம்
எனக்கது பழக்கம்
அவளுக்கே பிணக்கம்

வெட்கப்படவில்லை நான்
வேலைகள் அணைத்தும்
நானும் செய்கிறேன்
என்வீட்டில் நாங்களிருவரும்
மனிதர்களாய், ரோபோக்களாய்
இரண்டுமாய் இருக்கிறோம்.

நல்ல கவிதை. இன்னிக்கு அதெல்லாம் செய்வதற்கு வேலையாட்கள் பணியிலமர்த்தப் படுகிறார்கள்... அந்தரங்கம் தவிர.

மன்மதன்
21-11-2007, 05:40 AM
கஜினியின் பதில் கவிதை அருமை..

கஜினி
21-11-2007, 05:47 AM
கஜினியின் பதில் கவிதை அருமை..

நன்றி மன்மதன்.

யவனிகா
21-11-2007, 12:56 PM
நான் என் கதையை சொன்னதை நீங்க மனசுல வச்சுக்காதீங்க.

???

இருப்பவர் நிலைமை இன்னும் வேகமாய் மாறணும்..
இனி வருங்காலம் எல்லாரும் ''மனிதர்கள்'' ஆகணும்..

மாறணும்...ஆகனும்...பின்னூட்டத்திற்கு நன்றி அய்யா!

கவிதை சிம்பிளா இருந்தது.வாழ்த்துக்கள்

நன்றி நேசம்.

காலையில் எழுந்தேன்
அடுக்களை நுழைந்தேன்
தேனீர் கொண்டுவந்து
மனைவியை எழுப்பினேன்

நெஜ*மாவா?ல*க்கி ரோபோதான்.ரோபாவிட*ம் கேட்டாத்தான் உண்மை தெரியும்.

உணர்வுகளை பகிராமல் உடலைமட்டும் பகிரும் எந்த உறவும் நிலைத்ததில்லை...,
உடல் வதைக்கபடும் உறவுகளும் நிலைத்ததில்லை...

நல்ல வரிகள்.

பிழைதிருத்திய தோழர் மன்மதனுக்கு நன்றி.

ஓவியன்
21-11-2007, 01:13 PM
இயந்திரமாக மாறிவிட்ட
மாற்றப்பட்டு விட்ட
ஒரு மனைவியின் நிலை
வாசிக்க வாசிக்க வலிக்கிறது...

எல்லோரும் இப்படித்தான்
என கூறவும் இயலாது..
இப்படி இல்லையென்று கூறி
ஒதுக்கவும் இயலாது..

மனதொருமித்து மனம் கோணாது
மணம் கமழ வேண்டிய
மணவாழ்க்கையில்
இப்படி இன்னமும்
ஒரு சில கரும் புள்ளிகள்
இருக்கத் தான் செய்கின்றான...

இருபாலாரும் உணர்ந்து நடந்தால்
கரும்புள்ளிகளைக் களைந்து
மனம் போல் வாழலாம்...

பாராட்டுக்கள் யவனிகா, ஒரு நல்ல கவிதைக்கு..!!

ஆதவா
21-11-2007, 01:23 PM
இப்படிப்பட்ட மனைவிகள் இன்னும் இருக்கிறார்கள் என்பது வேதனை.

ஆனால் கவிதை காலம் மாறி வந்துவிட்டது.
அக்காலக் கவிதைக்கு
சொக்காய் போட்டு வந்ததைப் போல.

கணிணி உலகில் இயந்திரத்தனமாக உழைப்பதில் ஆணுக்கு நிகராக பெண்கள் வருகிறார்கள். அவ்வகையில் ஆணும் ரோபோவாகவே மாறிக் கொண்டிருக்கிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வார்த்தை மனதுள் அமர்ந்த அளவுக்கு கரு அமையவில்லை... அது என் குறை.

இளசண்ணா சொல்வதைப் போல, மனிதர்களாகவாவது ஆகவேண்டும்..... வருங்காலமே!

யவனிகா
21-11-2007, 01:33 PM
பாராட்டுக்கள் யவனிகா, ஒரு நல்ல கவிதைக்கு..!!

நன்றி ஓவியன்.

யவனிகா
21-11-2007, 01:35 PM
[QUOTE=ஆதவா;301022]
வார்த்தை மனதுள் அமர்ந்த அளவுக்கு கரு அமையவில்லை... அது என் குறை.

வருங்காலமே![/QUஓடே]
பாதிக்கப்பட்ட...படும் ...பெண்ணாகப் பிறந்திருந்தால் கருவும் மனதில் கட்டாயம் அமர்ந்திருக்கும் ஆதவன்....ஆதவன் ஆடவனாகையால் அமரவில்லையோ... என்னவோ? பின்னூட்டத்திற்கு நன்றி தோழரே!

ஆதவா
21-11-2007, 03:09 PM

மன்னிக்கவும், என்னால் அப்படி கற்பனை பண்ணி பார்க்க இயலாமைக்கு...

உண்மையில் இருக்கலாம்.... பெண்ணாய் அமர்ந்து சிந்திப்பதற்கும், பெண்ணே சிந்திப்பதற்கும்...

எனக்குள் அமரத்துடிப்பவைகள் அமரத்துவம்..

நன்றி.