PDA

View Full Version : தண்டனை................................



kavinila
20-11-2007, 10:12 AM
முகத்தில் பொலித்தின் பை....
மூக்கருகே பெற்றோல் வாடை...
வௌவால் காவியத்து
வௌவால் போல்
தலைகீழாய் நான்......
தமிழன் என்ற காரணத்தால்....

குண்டாத்தடியடி...
குருனி கலந்த சோறு
குண்டூசி எற்றப்பட்ட
குருதி கசியும் விரல்கள்...
குரல்வளையில் கட்டப்பட
கயிறு...
முகத்தருகே சில
மிளகாய் துகள்கள்
முந்தநாள்
மிளகாய் சாக்கினுள் கிடந்ததனால்...

அதிகாலை வேலை
அதிகாரி வந்தான்...
அவனுடன் கூடவே
ஆ..............வலிக்கிறது
அவனும் வந்தான்....
ஆயுதங்கள் எங்கே??
அற்பமாய் கேட்கின்றான்
ஆயுதம் என்பதை
ஆகராதியில் மட்டும் பார்த்தவனிடம்...

ஆறு அடிகள்
அலவாங்கால்......
..........................................
கேட்டான்...
யார் உனக்கு உதவிக்கு
உண்டென்று..
தமிழகத்து
தாய் சகோதரர்கள் வருவாரென்றேன்
தூங்கும் அவர்கள்
துயில் எழுந்து வருவாரா?
என்றான்....
துயில் கொள்ளவில்லை அவர்
துயில் கொள்ளவைக்கப்பட்டுள்ளார்....
துயில் கலைந்து வருகையிலே
தொலைந்திடுவாய் என்று
சொன்னேன்.......
சொல்லி முடிக்கையிலே
துளைத்தது என்...........................
..............................................
...............................................
................................தோட்....

பூமகள்
20-11-2007, 10:41 AM
வௌவால் காவியத்தின்
வௌவாலைப் போல்
வன்சிறைப்படுத்தி தொங்கவிட்டு
மனிதரை துன்புறுத்தும்
சாத்தான்கள்..!

சாவின் படியில்
சங்கடங்கள் பல
அடைந்தும்..
மண்ணின் மைந்தன்..
மார்தட்டி எழுச்சிவசனம் பேச..
வீரமரணம் எய்திய நிலை..!

வன்சிறைக் கொடுமையை
வார்த்தைகளில் வடித்த
விதம் அருமை..!

என்று தணியும் இந்த
போர்...?
என்று கிடைக்கும் விடுதலை ஈழம்
பார்...!

எழுச்சி மிக்க கவிதை..!
பாராட்டுகள் கவிநிலா.

அக்னி
20-11-2007, 10:46 AM
மனிதம் எரிக்கப்படும் சிதை,
உடல் சிதைக்கும்
வதைகூடங்கள்...

உணர்வோடு பொருதி வெல்ல முடியாது,
உடலினைக் கருக்கிக் கொல்லும் பேடிகள்...

சாக்கடை அழுக்கின் திரட்சியில்
உருவான,
பிணம் தின்னிகள்...

உயிர் போகவிடாமல்,
காத்து..,
உயிர் போகும்வரை,
வதைக்கும்...
கோழைகள்...

வலிகள் எமக்குத் தருவது வலிமை...
வலிமை திருப்பிக் கொடுக்கும் வலியை...

உணர்வை உலுப்பும் கவிவரிகள்...
மீண்டும் ஒரு குற்றவாளியா(ஆ)க.......! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12156)

ஆதி
20-11-2007, 10:48 AM
வலியை
வழித்து புனைந்த
வரிகள்..

வறண்ட வானத்தை
அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்
சுகந்திர தாகத்தின்
சுருக்கெழுத்துக்கள்..

அர்த்தங்களில்
அனலை தடவி
ஆக்கிய சொற்கள்..

அனுபவித்த வேதனைகளின்
ஆன்மா சுற்றுகிறது
இந்த கவிதையில்..




கேட்டான்...
யார் உனக்கு உதவிக்கு
உண்டென்று..
தமிழகத்து
தாய் சகோதரர்கள் வருவாரென்றேன்
தூங்கும் அவர்கள்
துயில் எழுந்து வருவாரா?
என்றான்....
துயில் கொள்ளவில்லை அவர்
துயில் கொள்ளவைக்கப்பட்டுள்ளார்....
துயில் கலைந்து வருகையிலே
தொலைந்திடுவாய் என்று
சொன்னேன்.......
சொல்லி முடிக்கையிலே
துளைத்தது என்...........................
..............................................
...............................................
................................தோட்....

இந்த வரிகளை படித்த பொழிதில் எனக்கு ஞாபகம் வந்தது, தமிழன்பனின் வரிகள்..

அண்டையில் இருந்தாலும்
அருகில் போய்
என்னவென்று கேட்கவா முடிகிறது..
எட்டி இருந்து பார்க்கதான்
இயல்கிறது
ஈழத்தமிழரின் பிரச்சனையை..

ஆற்றாமையின் அழுகுரலுக்கு அனுதாபங்கள்

-ஆதி

அமரன்
20-11-2007, 02:22 PM
தமிழன் என்று சொன்னால் அடியுதை
தமிழ் பேசினாலோ அடிக்கொரு வதை.

தமிழ் காத்துப் பட்டாலே தழல்'கொட்டி' என்ற முத்திரை.
தமிழின் விஸ்வரூபம் கண்டு ஒடுக்குங்கள் என்று தூவிய விஷவிதை..

உடல், ஆயுத பலத்தை விட பன்மடங்கு வீரியமானது மனவலு.
அது தமிழ்நேசர்கள் எல்லாரிடமும் உண்டு.
அது இருக்கும்வரை நீசர்கள் நினைவு துண்டு துண்டு..

இது அவர்கள் எமக்குத்தரும் தண்டனை அல்ல.
அவர்களுக்கே அவர்கள் வெட்டும் புதைகுழி..
புதைகுழிகளின் ஆழ,நீளம் அதிகம் என்பதாலோ தலைப்பில் புள்ளிகள் அதிகம் வைத்திருக்கின்றீகள்..

உணர்ச்சிக்களிம்பு வார்த்தைகள். வலிக்கு இதமாக உள்ளன.

யவனிகா
20-11-2007, 02:42 PM
நியாயத்தின் நிதர்சன வார்த்தைகள்...
உண்மை ஊமையாகும் அவலம்...
அருகில் வந்து அணைத்துத்
தோள் கொடுக்க முடியவில்லை..
தூர இருந்து ஆறுதல்
சொல்லத் தான் முடிகிறது...
உடைத்தெடுத்து க*த*றக் கதறக்
ப*ட்டை தீட்டிய*மையால்
உயிரை ஜொலிப்பாய்த்
தந்து மிளிர்கின்ற*ன*
வைர* வ*ரிக*ள்.