PDA

View Full Version : அழகிய மொழியே...



பகுருதீன்
20-11-2007, 07:10 AM
உலக அழகியை கண்டறிவதற்கு அழகிப் போட்டி நடத்தப்படுவது போல, எஸ்டோனியா நாட்டில் மிகவும் புதுமையான போட்டி ஒன்று நடத்தப்பட உள்ளதாம்.
உலகிலேயே அழகான மொழியை தேர்வு செய்வதற்காக இந்த போட்டி நடைபெற உள்ளதாம்.
.
எஸ்டோனியா தனது 90வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. அதனை முன்னிட்டு இந்த போட்டி நடத்தப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட போட்டியில் எஸ்டோனிய மொழி உலகிலேயே மிகவும் அழகான உச்சரிப்பை கொண்டதாக தேர்வானது. இந்நிலையில், அந்நாடு அழகான மொழிக்கான போட்டியை நடத்த தீர்மானித்துள்ளது.

இதற்காக தங்களது மொழியில் உள்ள 7 வார்த்தைகளை உச்சரித்து அதன் பதிவை அனுப்பி வைக்குமாறு உலக நாடுகளின் கல்வித்துறை அமைச்சர்களுக்கு எஸ்டோனியா அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எஸ்டோனிய மொழி ஐரோப்பிய மொழிகளிலேயே மிகவும் வித்தியாசமானதாக கருதப் படுகிறது.

நன்றி: மாலைச்சுடர்.காம்

ஓவியன்
20-11-2007, 07:14 AM
நல்ல விடயம் நண்பரே!

அப்படியே தகவல் பெறப்பட்ட மூலத்தையும் குறிப்பிட்டு நன்றி கூறலாமே..!!

பகுருதீன்
20-11-2007, 07:31 AM
நல்ல விடயம் நண்பரே!

அப்படியே தகவல் பெறப்பட்ட மூலத்தையும் குறிப்பிட்டு நன்றி கூறலாமே..!!

தகவல் பெறப்பட்ட மூலம் அதில் இல்லை