PDA

View Full Version : எப்படி இருக்கனும்ஆதி
20-11-2007, 04:19 AM
எப்படி இருக்கனும்

பிரிவு தேவதைகள்
வட்டமிட்டனர்
நம் உறவில்..

வாசலையும் தாண்டாத
நம் காதல்
உந்தையின்
எந்தையின்
கண்பட்டதால் கருகியது..

இறந்தவர் பட்டியலில்
என் தந்தையின் பெயரும்
எழுதப்பட்டுவிட
குடும்ப வாகனதின்
ஓட்டுனனாய் நான்..

கடினப்பட்டு
கடினப்படாத இடங்களில்
தங்கைகளின் திருமணத்தை
முடித்த தருணத்தில்
அறிந்தேன் உனக்கும்
திருமணமானதை..

பிறகு தாயின்
பிரிவு..

நொறுங்கி தூசியாய்
உதிர்ந்த என்னை
ஒருங்கே சேர்க்க ஆனது
ஒரு மூன்று ஆண்டு..

எதிர்ப்பாரது ஒருநாள்
தரகரோடு வந்த
தங்கையர் வினவினர்..

"பொண்ணு எப்படி
இருக்கனும் அண்ணேன் ?"

மனதுக்குள் முனகிக் கொண்டேன்
"க்ளாடிஸ் மாதிரி"

-ஆதி

அக்னி
20-11-2007, 04:23 AM
காதல்...
வாழ்க்கைத் துணையின்
புரிந்துணர்வுக் காலம்...

இன்பத்தை மட்டும் எதிர்பார்த்து
காதல் வந்தால்,
எம் மேல் படியும் துன்பத்தின் நிழல்...

சுமை பகிரமுடியாத,
காதல்...
இருப்பதுதான் சுமை...
இல்லாமல் இருப்பது
நம் வாழ்வில் மேன்மை...

கடினப்பட்டு
கடினப்படாத இடங்களில்
தங்கைகளின் திருமணத்தை
முடித்த தருணத்தில்

இவ்வரிகளில் வார்த்தைகளின் கையாளுகை அருமை... மிகவும் ரசித்தேன்...

அழகிய கவிக்குப் பாராட்டுக்கள்...

ஓவியன்
20-11-2007, 05:08 AM
சுழன்றடிக்குக் வாழ்கைக் சுழலில்
மாட்டிக் கொண்ட ஒரு துரும்பு
தன் அரும் காதலையும் காலத்தையும்
ஒரு சேர தொலைத்து விட்டு
யதார்த்தத்தில் நனைந்து நிற்கிறது...

நல்ல கரு, பிரமாதமான சொற்கட்டு என அசத்தலான கவிதை...
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஆதி..!!

பூமகள்
20-11-2007, 05:28 AM
பிரிவு தேவதைகள்
விட்டமிட்டனர்
நம் உறவில்..
தேவதை வரவு
நல்வரவு என்பர்..
முரண் சொல்லிக் கையாண்டிருப்பது அருமை.

வாசலையும் தாண்டாத
நம் காதல்
உந்தையின்
எந்தையின்
கண்பட்டதால் கருகியது..இருவரின் தந்தையும்
இதயங்களைப்
பிரித்த துயர்
சொன்ன வார்த்தைகள் நயம்..!

கடினப்பட்டு
கடினப்படாத இடங்களில்
தங்கைகளின் திருமணத்தை
முடித்த தருணத்தில்
அறிந்தேன் உனக்கும்
திருமணமானதை..
ஆங்கிலத்தின் மகிழ்ச்சி
அன்பு பூக்க மறுத்து
துயர் கொடுத்தது
முரண் சோகம்..!

அழகான சொல்லாடல்..!
மிகவும் ரசித்தேன்.
துக்கம் தோய்ந்த வரிகள்..!
வாழ்த்துகள் இனிய வாழ்வு அமைய ஆதி. :icon_rollout:

ஆதி
20-11-2007, 11:44 AM
நல்ல கரு, பிரமாதமான சொற்கட்டு என அசத்தலான கவிதை...
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஆதி..!!

நன்றி ஓவியன் உங்கள் தொடர் ஊக்கத்திற்கு..

அமரன்
20-11-2007, 01:25 PM
பிரிவு தேவதைகள்
விட்டமிட்டனர்
நம் உறவில்..

காதல், வட்டதினுள் சிக்கினால்
பிரிவு தேவதைகள் விட்டமிட்டு
விட்டத்தைப் பார்க்க வைத்துவிடும்
திக்குத் தெரியாது திண்டாட நேரிடும்.

காதல்வட்டத்துனுள் சரண்புகுந்தால்
பிரிவுதேவதைகள்
விட்டமிட்டாலும் வட்டமிட்டாலும்
உங்களைச் சரணடைந்து
நல்வழி தேர்தெடுக்கும் தெளிவு வழங்கும்..
வாழக்கை கொடுக்க வாழ்க்கைவட்டம் செழிப்புறும்..

கவிதையில் காதல் இரண்டாம் வகை.????
வாழ்த்துக்கள் கவிதைக்கும் உங்களுக்கும்..

யவனிகா
20-11-2007, 01:36 PM
நல்ல வரிகள்.
கவிதையின் நிஜ நாயகர்களில் சிலரை நான் நேரில் பார்த்திருக்கிறேன். வீட்டில் முதல்வனாய்ப் பிறந்து அனைவரையும் கரையேற்றிப் பின் ஜாதகக் கட்டை கையில் எடுக்கும் போதே..காதோர நரை எட்டிப் பார்த்திருக்கும். இவர்கள் தான் அந்தக் குடும்பங்களின் குல தெய்வங்கள்.

குல தெய்வங்களுக்குப் பாடல் படையல் வைத்த ஆதிக்குப் பாராட்டுகள்.

சிவா.ஜி
20-11-2007, 01:46 PM
காதலி காதலை மறுக்கலாம்...காலமே காதலை மறுத்தது வேதனை.
கடமைகளால் கட்டப்பட்டவன் தளையறுத்து நிமிரும்போது தான் வேண்டியது தவிக்கவிட்டுப் போய்விடுகிறது.
மிக அருமையான வார்த்தையாடல்கள்.உள்ள சோகத்தை அள்ளிக் கொட்டிய விதம் மனதைக் கணக்கச் செய்கிறது. கவிதைக்குப் பாராட்டுக்கள். நல்வாழ்வு அமைய வாழ்த்துக்கள் ஆதி.

ஆதி
20-11-2007, 02:32 PM
ஆங்கிலத்தின் மகிழ்ச்சி
அட! கண்டு புடுச்சுடிங்களா பூமகள்..

அன்பு பூக்க மறுத்து
துயர் கொடுத்தது
முரண் சோகம்..!

அழகான சொல்லாடல்..!
மிகவும் ரசித்தேன்.
துக்கம் தோய்ந்த வரிகள்..!
வாழ்த்துகள் இனிய வாழ்வு அமைய ஆதி. :icon_rollout:

என் வாழ்கை இனிது அமைய வாழ்த்தியதிற்கு நன்றி பூமகள்..

தொடர் ஊக்கத்திற்கும் நன்றிகள்..

-ஆதி

ஆதி
20-11-2007, 02:37 PM
நல்ல வரிகள்.
கவிதையின் நிஜ நாயகர்களில் சிலரை நான் நேரில் பார்த்திருக்கிறேன். வீட்டில் முதல்வனாய்ப் பிறந்து அனைவரையும் கரையேற்றிப் பின் ஜாதகக் கட்டை கையில் எடுக்கும் போதே..காதோர நரை எட்டிப் பார்த்திருக்கும். இவர்கள் தான் அந்தக் குடும்பங்களின் குல தெய்வங்கள்.

குல தெய்வங்களுக்குப் பாடல் படையல் வைத்த ஆதிக்குப் பாராட்டுகள்.

உங்கள் தொடர் பின்னூட்டதிற்கு நன்றிகள்..

ஆதி
20-11-2007, 02:39 PM
காதலி காதை மறுக்கலாம்...காலமே காதலை மறுத்தது வேதனை.
கடமைகளால் கட்டப்பட்டவன் தளையறுத்து நிமிரும்போது தான் வேண்டியது தவிக்கவிட்டுப் போய்விடுகிறது.
மிக அருமையான வார்த்தையாடல்கள்.உள்ள சோகத்தை அள்ளிக் கொட்டிய விதம் மனதைக் கணக்கச் செய்கிறது. கவிதைக்குப் பாராட்டுக்கள். நல்வாழ்வு அமைய வாழ்த்துக்கள் ஆதி.

உங்கள் பாரட்டுகளுக்கும், நல்வாழ்வு அமைய வாழ்த்தியமைக்கும் நன்றிகள்.. சிவா.ஜி

ஆதி
21-11-2007, 03:47 AM
சுமை பகிரமுடியாத,
காதல்...
இருப்பதுதான் சுமை...
இல்லாமல் இருப்பது
நம் வாழ்வில் மேன்மை...
நிதர்சனம், நன்றி பாராட்டுக்கும் தொடர் ஊக்கத்திற்கும்..

கஜினி
21-11-2007, 04:00 AM
பாசமான, பொறுப்பான, நடைமுறைக் கவிதை.

நேசம்
21-11-2007, 04:04 AM
வாழ்க்கையில் சகஜமாக பார்க்க கூடிய கவியின் நாயகனின் ஏக்கத்தை அழகான வரிகளை கொண்டு தந்த ஆதிக்கு பாரட்டுக்கள்.வாழ்த்துக்கள்

மன்மதன்
21-11-2007, 05:46 AM
வாழ்வின் சம்பவங்களை கவிதையாக வடிப்பது தனி கலைதான்..

ஆதி சாதித்திருக்கிறார்... பாராட்டுகள்..!

பூமகள்
21-11-2007, 05:52 AM
என் வாழ்கை இனிது அமைய வாழ்த்தியதிற்கு நன்றி பூமகள்..
தொடர் ஊக்கத்திற்கும் நன்றிகள்..
-ஆதி
கண்டுபிடிக்காட்டி...:icon_b:
எப்படி கவிதை புரியுங்க ஆதி...??!! :icon_rollout:
புரியவேண்டியவருக்குத் தான் புரியாமலே போய்விட்டதே..!:frown:

ஆதி
21-11-2007, 05:55 AM
கண்டுபிடிக்காட்டி...:icon_b:
எப்படி கவிதை புரியுங்க ஆதி...??!! :icon_rollout:
புரியவேண்டியவருக்குத் தான் புரியாமலே போய்விட்டதே..!:frown:

என்ன செய்ய புரியவேண்டியவங்களோட மொழிப்பாடம் ஹிந்தி.. அதான் புரியாம போய்டாங்க போல.. :mini023:

-ஆதி

ஆதவா
21-11-2007, 01:45 PM
கவிதையில் காதல், என்னையே எனக்க்கு ஞாபகப் படுத்துகிறது.

ஜாலங்களால் நிரப்பப் பட்ட கவிச்சாடியாக அல்லாமல்,
கோலங்களால் நிரப்பப் பட்ட வாசலாய் திகழ்கிறது...
உங்கள் கவியில்ல வாசல்.

காதல் ஒரு சாபம், அது யாவருக்கும் வாய்ப்பதில்லை.. வாய்த்தவர்கள் விமோசனம் பெறுவதற்குள் முடிந்துபோய்விடுகிறார்கள்.. இந்த நாயகன் அந்த ரகம்.

ஒரு மூன்று ஆண்டுகள் ?

"ஒரு" தேவையில்லையே?

அடிபட்டு முனகியது யதார்த்தம்.... எங்களுக்கு நல்ல பதார்த்தம்.

வாழ்த்துகள்

ஆதி
21-11-2007, 03:39 PM
கவிதையில் காதல், என்னையே எனக்க்கு ஞாபகப் படுத்துகிறது.

ஜாலங்களால் நிரப்பப் பட்ட கவிச்சாடியாக அல்லாமல்,
கோலங்களால் நிரப்பப் பட்ட வாசலாய் திகழ்கிறது...
உங்கள் கவியில்ல வாசல்.

கொஞ்சம் விளக்கவும்

காதல் ஒரு சாபம், அது யாவருக்கும் வாய்ப்பதில்லை.. வாய்த்தவர்கள் விமோசனம் பெறுவதற்குள் முடிந்துபோய்விடுகிறார்கள்.. இந்த நாயகன் அந்த ரகம்.

ஒரு மூன்று ஆண்டுகள் ?

"ஒரு" தேவையில்லையே?

"ஒருங்கே
ஒரு மூன்று " மோனைகாக சேர்த்தேன் - என் மனதையும் நெருடிய ஒன்றைத்தான் நீங்களும் சொல்லி இருக்குறீர்கள்.

அடிபட்டு முனகியது யதார்த்தம்.... எங்களுக்கு நல்ல பதார்த்தம்.

வாழ்த்துகள்

நன்றி வாழ்த்துக்கும் பின்னூட்டதிற்கும்..

-ஆதி

ஆதி
22-11-2007, 04:17 AM
வாழ்வின் சம்பவங்களை கவிதையாக வடிப்பது தனி கலைதான்..

ஆதி சாதித்திருக்கிறார்...

நன்றி உங்கள் ஊக்கத்திற்கும் நெகிழ வைக்கிற பாரட்டிற்கும்..

-ஆதி

இளசு
22-11-2007, 05:53 AM
நண்பர் நண்பன் சொன்னது -

கவிதைக்குள் கதை வைத்துவிடுவதில் ஒரு வசதியுண்டு..

இங்கே ஆதி ஒரு முழுநாவலையே பொதிந்திருக்கிறார்..
அதை சில வரிகளில் முழு அழுத்தமாய்ச் சொன்ன விதம் அருமை!பாராட்டுகள்.. ஆதி அவர்களே!

யவனிகா- அவர்களின் பின்னூட்டம் கச்சிதம்-
அதை அப்படியே வழிமொழிகிறேன்!

ஆதி
22-11-2007, 08:22 AM
நண்பர் நண்பன் சொன்னது -

கவிதைக்குள் கதை வைத்துவிடுவதில் ஒரு வசதியுண்டு..

இங்கே ஆதி ஒரு முழுநாவலையே பொதிந்திருக்கிறார்..
அதை சில வரிகளில் முழு அழுத்தமாய்ச் சொன்ன விதம் அருமை!கதை வடிவில் கவிதை எழுதினால் அது இன்னும் அதிகமாய் ஆழப்பாயும் என்பது என் எண்ணமும் கூட..

நன்றிகள் இளசு அவர்கட்கு..

ஆதி
19-12-2007, 10:16 AM
பாசமான, பொறுப்பான, நடைமுறைக் கவிதை.

தங்கள் பின்னூட்டத்திற்கு தாமதமான என் நன்றிகள்..

-ஆதி

james
19-12-2007, 11:04 AM
யதார்த்தம்!!!:icon_rollout:

அழகான வரிகளை கொண்டு வாழ்க்கையில் சகஜமாக பார்க்க கூடிய சம்பவங்களை கவிதையாக தந்த ஆதிக்கு பாரட்டுக்கள்.வாழ்த்துக்கள்:D

வசீகரன்
19-12-2007, 11:40 AM
எப்படி இருக்கனும்

இறந்தவர் பட்டியலில்
என் தந்தையின் பெயரும்
எழுதப்பட்டுவிட
குடும்ப வாகனதின்
ஓட்டுனனாய் நான்..வாழ்க்கை சக்கரத்தின் உழற்சியில் நிர்ப்பந்தங்களின் நிதர்சனத்தால்
இனிமைகாலங்களை தொலைத்த
இதயங்கள் எத்தனையோ..... ஆதி அவர்களின் பதிவு..... ஒரு இதயத்தின்
வாழ்க்கையை நமக்கு சொல்கிறது....

நல்ல ஆக்கம்.... அன்பரே...!

jpl
19-12-2007, 01:01 PM
கடினப்பட்டு
கடினப்படாத இடங்களில்
தங்கைகளின் திருமணத்தை
முடித்த தருணத்தில்
அறிந்தேன் உனக்கும்
திருமணமானதை..
சொற்கட்டு ஆதியின் வசம் எளிதில் வசப்படுகின்றது..
ஒரு முற்றுப் பெறாத வாழ்வியலின் துன்பவியல் காட்சிகள்
ஒரு சில வரிகளில் பளிச்சிடுக்கின்றது ஆதியின் கவிவன்மையால்...
நன்றே புனைந்தனை ஆதி..

ஆதி
19-12-2007, 04:43 PM
வாழ்க்கையில் சகஜமாக பார்க்க கூடிய கவியின் நாயகனின் ஏக்கத்தை அழகான வரிகளை கொண்டு தந்த ஆதிக்கு பாரட்டுக்கள்.வாழ்த்துக்கள்

உங்கள் பாராட்டுகள்+வாழ்த்துகளுக்கும், பின்னூட்டத்திற்கும் என் நன்றிகள்..

-ஆதி

பென்ஸ்
20-12-2007, 06:41 AM
"நினைப்பதேல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை"...
என்று நடக்காத ஒன்றுக்கு கடவுள் மேல் போடபடும் பழிகள், இங்கு இல்லை.. பாராட்டுகள்...

வாழ்க்கையில் பல நேரங்களில் , மாட்ரிக்ஸ் படத்தில் மார்பியஸ் நியோவிடம் இரண்டு மாத்திரைகளை காட்டி
" இது உனக்கு கடைசி வாய்ப்பு, நீ நீல மாத்திரையை சாப்பிட்டால், இதோடு கதை முடிந்து விடும், நாளை நீ உன் கட்டிலில் எழும்புவாய், நீ நம்புகிறாயோ அதை நம்பலாம், இந்த சிகப்பு மாத்திரையை சாப்பிட்டால் நீ அழகிய இடத்தில் உலவலாம், மேலும் நான் உனக்கு முயல் குழி எத்தனை தூரம் செல்கிறது என்பதை காண்பிப்பேன்"
நியோ சிவப்பு மாத்திரையை எடுத்து இவர்களுடம் செல்கிறான்....

வாழ்க்கையில் பலமுறை இப்படிதான், நாம் செய்யும் தேர்வுகள், நம் அப்போதைய அல்லது நிண்ட கால தேவைக்கான உந்துதலால்...
அந்த தேர்வை செய்துவிட்டால் அதை ஏற்றுகொண்டு வாழ் வேண்டும்..
மாட்ரிக்ஸில் வரும் சைபர் என்பவன் தான் செய்த தேர்வுக்காக வருந்துகிறான், இதனால் தனக்கும் அடுத்தவர்களுக்கும் பிரச்சினை வருகிறது.

ஆதி, இந்த கவிதையின் நாயகன் செய்த தேர்வு அவன் மனதுக்கு சரியானதாக இருந்தால் அதை ஏற்று கொண்டான், சரியே... ஆனால் அவன் வருந்தாத அளவு காட்டி இருப்பது அழகு.

இனி கடைசி வரிகளுக்கு வருகிறேன்..
உளயியலில் "அனிமா" என்று ஒன்றை சொல்லுவார்கள். இது ஒரு ஆணிடத்தில் இருக்கும் பெண் வடிவம். இது பொதுவாக தான் நெருங்கி பழகும் பெண்களால் (தாய் , சகோதரி, காதலி, தோழி) வரும் என்பது என் கருத்து. இதில் தன்னை அதிகம் பாதித்த்வர்கள் போல் அது அதிகம் வடிவம் பெற்று கொள்ளும்... சில அம்மா போல் பெண் தேடுவது இதனால் தான்... நாயகன் காதலியை அத்தனை நேசித்திருப்பது இந்த வரிகளில் தெரிகிறது...

வாழ்த்துகள்...

ஆதி
20-12-2007, 08:46 AM

கவிதையை நிதானமாய்ப் படித்து, அதன் கட்டமைப்பை, போக்கை பொருமையாய் ஆழ்ந்து அகழ்ந்து ஆராய்ந்துப் பின்னூட்டமிட்டமைக்கு என் நன்றிகள் பென்ஸ் அவர்கட்கு..

-ஆதி

ஆதி
21-12-2007, 05:38 AM
யதார்த்தம்!!!:icon_rollout:

அழகான வரிகளை கொண்டு வாழ்க்கையில் சகஜமாக பார்க்க கூடிய சம்பவங்களை கவிதையாக தந்த ஆதிக்கு பாரட்டுக்கள்.வாழ்த்துக்கள்:D

பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஜேம்ஸ் அவர்களே..

-ஆதி