PDA

View Full Version : பதிலற்ற கேள்விகள்ஆதி
20-11-2007, 02:55 AM
உன்
பார்வைகள் பாய்ந்து
தெறித்தன
காதலின் வர்ணங்கள் எண்ணுள்..

இலையாய் மாறிய
இதயம்
தீட்டியது
உன் ஓவியங்களை தன்னில்..

மென்மைக்குள் நுழைந்த
பொழுதுகள்
மேகமாய் வருடிச்சென்றன
என்னை..

கனலும் மணல்வெளிகளில்
சில்லறைகளாய்
காதலை
அள்ளி எறிந்துவிட்டு
திரும்பியும் பாரமல்
நடக்கிறாய் நீ..

யாருக்கோ நீ
மருமகளான நிலையில்
பலரும் என்னைப் பார்த்து
கேட்கிறார்கள்..
"எப்படா கல்யாணம் ?"

-ஆதி

அக்னி
20-11-2007, 03:28 AM
காதல்...
விடைகளே கேள்விகளாகும்
விந்தைப் போட்டி...

தீர்மானிக்கப்பட்ட விடைகள்...
தீயைத் தெளிக்கும் வினாக்கள்...

காதல்,
சாத்தியமாக்கும் வேண்டாக் கனாக்கள்...

இலையாய் மாறிய
இதயம்
தீட்டியது
உன் ஓவியங்களை தன்னில்..

சருகாய் மாறிய இதயம்...
ஓவியங்களாய் நீ தீய்த்த வடுக்கள்...

மீண்டும் ஒரு அழகிய கவிதை...
பாராட்டுக்கள் ஆதி...

ஆதி
20-11-2007, 03:35 AM
சருகாய் மாறிய இதயம்...
ஓவியங்களாய் நீ தீய்த்த வடுக்கள்...இது இன்னும் அருமை அக்னியவர்களே..

உங்கள் தொடர் ஊக்கத்திற்கும் பாரட்டுக்களுக்கும் நன்றி..

சிவா.ஜி
20-11-2007, 04:09 AM
அவள் மணல்வெளியி தூவிய சில்லறைகள்...அவன் இதயத்தின் சில அறைகளைத் திறந்துவிட்டது.திறந்தவளே அதை அடைத்துவிட்டு அக்ன்றுவிட்டாள்.
மீண்டும் அந்த நாதாங்கியை அசைத்து திறக்க நான் தாங்கியாய் ஒரு இதயம் வரும்வரை எந்த கேள்விகளுக்கும் இங்கே பதிலில்லை.
அசத்தல் கவிதை ஆதி.வாழ்த்துகள்.

ஆதி
20-11-2007, 06:00 AM
பின்னூட்டதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் சிவா.ஜி அவர்கட்கு..

-ஆதி

பூமகள்
20-11-2007, 06:19 AM
"இதயத்து கருப்பையில்
காதல் பூக்க வைத்தாய்..
கருக்கலைப்பு செய்து
ஏன் தவிக்க வைத்தாய்..!

எங்கோ நீ
எழில்கொண்டிருக்க..
நமக்கான நினைவு-என்னுள்
துயிலாமல் துடிப்பதென்ன?

இல்லாளாய் ஒருத்தி வருவாள்..
இதயத்தை நினைவழித்து
சுத்தமாக்க வேண்டும்..!
திரும்பி வர முடியா தூரத்துக்கு
வெளிநடப்பு செய்...!"

ஆதியின் கவிகள் தனி முத்திரை...!
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..! :icon_b:

IDEALEYE
20-11-2007, 06:45 AM
காதல்
ஒருவழிப்பாதை
ஒருதடவை மட்டும்தான்
செல்லலாம்
மீண்டு வரமுடியாது.
ஆதியின் வரிகள் அற்புதம்...
ஐஐ

ஆதி
20-11-2007, 07:38 AM
[B]
[FONT=TSC_Paranar]ஆதியின் கவிகள் தனி முத்திரை...!
:icon_b:

பூமகள் இந்த வரிகளை படித்த தருணத்தில்.

என்னக்குள் எதிரொலித்தது
இதுவரை கேட்காத ஒரு குரல்..
டேய்!
நீ கூட
நல்லா கவித எழுதுறியோ !! என

நன்றி பூமகள்..

ஆதி
20-11-2007, 02:14 PM
காதல்
ஒருவழிப்பாதை
ஐஐ

ஆமாம், நிதர்சனம்.. இதை படிக்கையில்

கிளிஞ்சல்களில் டி.ராஜேந்தர் எழுதிய வரிகள் நினைவிலாடுகின்றன..

காதல் ஒருவழி
பாதை பயணம் - இதில்
நுழைவது என்பது
சுலபம்..
மீள நினைப்பது பாவம் - காதல்
ஆற்ற முடியா காயம்..

நன்றி ஐஐ உங்கள் பாரட்டிர்க்கு..

அமரன்
20-11-2007, 02:48 PM
உன்
பார்வைகள் பாய்ந்து
தெறித்தன
காதலின் வர்ணங்கள் எண்ணுள்..
மோகத்துடன் அவளைத் தொட்டு மீண்ட
பார்வை ஒளிக்கீற்றுகள் விழிவழி புகுந்து
முறிவடைந்து, உட்சுவர்களில் பட்டுத்தெறித்து
வெளியேற முடியாது திண்டாடுகின்றன..

இலையாய் மாறிய
இதயம்
தீட்டியது
உன் ஓவியங்களை தன்னில்..
ஒளிவாங்கி பசுமை விருத்தி
இலைகளின் தன்மை. மரத்துக்கு தண்மை..
அபிமன்ஜு கதிர்களால்
இல்லத்தினுள் பசுமை. வாழ்வுக்கு தண்மை.

மென்மைக்குள் நுழைந்த
பொழுதுகள்
மேகமாய் வருடிச்சென்றன
என்னை

தனிமைச்சத்தம் கொடூரமானது
ஏகாந்தநிசப்தம் கீதம்போன்றது..
குவளைப்பூக் குவலய ஏகாந்தமாக
அவள்வாசனை நிரப்பிய பொழுதுகள்..

கனலும் மணல்வெளிகளில்
சில்லறைகளாய்
காதலை
அள்ளி எறிந்துவிட்டு
திரும்பியும் பாரமல்
நடக்கிறாய் நீ..
நளின நதியின் நயனங்கள் வழிந்த
துளிகள் கோர்வைகளை மேவிய
வெது வெதுப்பான உணர்வுதந்து
பௌதீகப் பிரிவு பரிசாகத் தந்து...

யாருக்கோ நீ
மருமகளான நிலையில்
பலரும் என்னைப் பார்த்து
கேட்கிறார்கள்..
"எப்படா கல்யாணம் ?"

அவள் மணத்துக்கு எனக்கு பரிசுதந்தது
எனது மணத்துக்கான பரிசெனப் புரியாது
மதிமயக்கும் நினைவு வசியங்களை நுகர்ந்து
காலங்கள் சாகடித்துக் கொண்டு...
கலங்களை வீணடித்துக்கொண்டு....

பொல்லாத இவ்வகைக் காதல்
இல்லாது போக எனது சாபம்..
அழகிய கவிதைக்கு என்சாமரம்

மனோஜ்
20-11-2007, 02:52 PM
காதல் என்றும் நிலைக்கும் பலரை நிலைகுலைய செய்யும்

அருமை வரிகள் ஆதி வாழ்த்துக்கள்

யவனிகா
20-11-2007, 03:09 PM
பூமகள் இந்த வரிகளை படித்த தருணத்தில்.

என்னக்குள் எதிரொலித்தது
இதுவரை கேட்காத ஒரு குரல்..
டேய்!
நீ கூட
நல்லா கவித எழுதுறியோ !! என

நன்றி பூமகள்..

சந்தேகம் வேண்டாம்...நல்லாவே எழுதறீங்க...

ஆதி
20-11-2007, 04:38 PM
சந்தேகம் வேண்டாம்...நல்லாவே எழுதறீங்க...

மகிழ்ச்சியில் மனம் நெகிழ்ந்தேன்.. நன்றிகள் சகோதரி யவனிகாவிற்கு

ஓவியன்
21-11-2007, 05:32 AM
காதலைத் தெளிக்கத்
தெரிந்த உனக்கு
காதலைத் தெளியத்
தெரியாததால்
தெரிகிறேன் நானும்
தெளியா பைத்தியமாய்....

ஆதி..!!

அழகிய கவிதை வரிகளை அணு அணுவாய் இரசித்தேன்..
அத்துணை அழகு...
பாராட்டுக்கள் நண்பரே..!! :icon_b:

கஜினி
21-11-2007, 05:47 AM
காதல் கற்றுத்தரும் பாடம் ஏராளம்.

ஆதி
23-11-2007, 08:19 AM
காதலைத் தெளிக்கத்
தெரிந்த உனக்கு
காதலைத் தெளியத்
தெரியாததால்
தெரிகிறேன் நானும்
தெளியா பைத்தியமாய்....

ஆதி..!!

அழகிய கவிதை வரிகளை அணு அணுவாய் இரசித்தேன்..
அத்துணை அழகு...
பாராட்டுக்கள் நண்பரே..!! :icon_b:

அழகிய பின்னூட்டம் ஓவியன், கவிதையும் மிக அழகு..

ரசித்து எழுதிய பின்னூட்டதிற்கு..

என் நன்றிகள் பல..

-ஆதி

ஆதவா
23-11-2007, 08:51 AM
பதிலுள்ள கேள்விகள்தான் ஆதி. பதில்களை நாம் தேடாவிடில்தான் கிடைக்காது.

கவிதைக் கரு... சாரி ஆதி. வித்தியாசப்போக்கு, பழைய கரு.. இதைத்தான் என்னால் சொல்லமுடியும். இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமெனில், எங்கள் வீட்டுப் பிள்ளை எம்.ஜி.ஆரைக் போலவே இருக்கும் இன்றைய அழகிய தமிழ்மகன்கள் என்று சொல்லலாம். திரைக்கதை மட்டுமே மாறுகிறது அல்லவா.?

வர்ணனைகளுள் அழுத்தமில்லை. இன்னும் முயன்றிருக்கலாம். இதயத்தை இலையாக்கியது பாராட்டுக்குரியதென்றால் அதன் நரம்புகளை ஓவியங்களாய்த் தீட்டியதும் கவிதைத் தனமே! முடிவில் இரு அர்த்தங்கள் பொதிந்திருப்பது கவனிக்கத்தக்கது. முடிவாக அவன் அவளை இன்னும் நினைக்கிறானா இல்லை மறந்துவிட்டானா என்ற இருபொருள் நீடிக்கிறது.. இது அவசியமாகவே தென்படுகிறது. ஆனால் கவிதையின் தலைப்பு, அவன் இன்னும் அவள் ஞாபகத்தில் இருப்பதைக் குத்திக் காட்டுகிறது,

காதலை உதறியது அவள் என்று சில்லறையைப் போல தெறித்துவிட்டால் என்று சொல்லப்படுவதைப் பார்க்கும் போது அவளின் இயலாமையோ அல்லது இவனின் புரிந்துகொள்ளாத் தன்மையோ வெளிப்படுகிறது. காதல் முறிவதற்கு சில காரணங்கள் இருக்கவேண்டும். இல்லை காரணங்கள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அவள் செய்தது இரண்டாம் வகை. காதலில் அது மோசமான வகை.

முடிவு ஏற்படுத்திய வடுவைப் போல வேறேதும் ஏற்படுத்தாது குறையே! இருப்பினும் அழகான வரிகளால் அமைந்த இந்த கவிதைக்கு என் வாழ்த்துகள்.

எண்ணுள் - என்னுள்
பாரமல் - பாராமல்

ஆதி
23-11-2007, 09:09 AM

எப்படி இருக்கனும் என்கிற கவிதயின் இரட்டை இது..

அதாவது அந்த கவிதையை எழுதக்கொண்டிருந்த போது வழிந்த வரிகள் இவையும்..

வழிந்ததை வினாக்க வேண்டம் என்றே இன்னொரு கவிதையாய் வடித்து ஒரு முடிவு..

Tiger or Lady

என்னும் சிறுகதைப் போல் முடித்தேன்..

அந்த கவிதையை செதுக்கிய போது சிதறிய செதில்கள் இவை..

பாரமல் - பாராமல் - பாராமல் விட்ட எழுத்து பிழை..

எண்ணுள் - என் எண்ணதினுள் என பொருபடுத்தி எழுதியது..

பின்னூட்டம் அருமை.. கவிதையின் கருவை எப்படி தேர்ந்தெடுப்பது என ஒரு நல்ல விளக்கம் கிடைத்துவிட்டது..

தேடல் - என்கிற ஒரு கவிதை புதிய கவிதை பகுதியில் உள்ளது நேரமிருந்தால் அதைப் படித்து ஒரு பின்னூட்டம் தருமாறு கோருகிறேன், ஏனெனில் அது உள்முக தேடல் சம்பந்த பட்ட கவிதை.. அதான்..

பொருமையான பின்னூட்டத்திற்கு என் பல கோடி நன்றிகள்..

-ஆதி

Narathar
23-11-2007, 09:18 AM
என் கறுப்பு வெள்ளை கனவுகளுக்கு
வண்ணமடித்துவிட்டது காதல் -கடைசியில்
வெள்ளைத்துணி மட்டும் போர்த்தி
ஊர்வலமாய் அனுப்பிவைததும் அதே காதல்

உங்க கவிதையைப்பார்த்து சும்மா ஒரு புளோவில எழுதினேன்... என்னையே கவிதை எழுதவைத்துவிட்டது உங்கள் கவிதை வாழ்த்துக்கள்

ஆதவா
23-11-2007, 09:53 AM

நாரதரே கலக்கல்....... எப்படி இப்படி????

சீக்கிரமே கவிதை ஒன்றை தனித்திரியாக போடவும்...:)

ஆதி
23-11-2007, 10:11 AM
நாரதரே கலக்கல்....... எப்படி இப்படி????

சீக்கிரமே கவிதை ஒன்றை தனித்திரியாக போடவும்...:)

உண்மைதான் நாரதரே.. நீங்கள் தனி கவிதை திரி துங்கி எங்களை கவிமாரியில் நனைய விடுவீர் என நம்புகிறேன்

-ஆதி