PDA

View Full Version : வலி...........



kavinila
19-11-2007, 07:09 PM
இரத்தம்.......
எலும்பு துண்டு.....
சதைத்துண்டு........
சீமெந்து சிதறல்....
கந்தக நெடி....
கதறல் ஒலி.....
அவலம்.....
சிறுவர் பாடசாலை மீது
சிறீலங்கா
வீசிய
விமானக் குண்டில்
வீழ்ந்த்தவர் போக
உடல்
ஊனமாய் நான்.................
எதிர்காலம்????

இளசு
19-11-2007, 07:11 PM
விடியும் நிச்சயம்
விரைவாய்..

அதுவரை ஆறுதலும் நம்பிக்கையும்...

அக்னி
19-11-2007, 11:14 PM
வலி..!
பேறு கால மொழி...
பிறக்கும் சுதந்திர தேசம்...

நம்பிக்கையுடன் காத்திருப்போம்...

ஓவியன்
20-11-2007, 03:48 AM
வலி...!!

தந்தவனுக்கு திருப்பிக் கொடு
பயணிக்கிறது தமிழர்தேசம்...!!
விடிந்திடும் ஒரு நாள் வரும்...
அதுவும் விரைவினில்....!!

அக்னி
20-11-2007, 03:58 AM
வலி...!!

தந்தவனுக்கு திருப்பிக் கொடு
பயணிக்கிறது தமிழர்தேசம்...!!
விடிந்திடும் ஒரு நாள் வரும்...
அதுவும் விரைவினில்....!!
ஆமாம் ஓவியன்...
துன்பங்களைச் சுமக்க வைத்தார்கள்...
விளைவுகளைச் சுமக்கத் துடிக்கின்றார்கள்...
வருந்தி அழைக்கின்றார்கள் வருந்த...

சிவா.ஜி
20-11-2007, 04:04 AM
வலியை வலியத்தருவதால் வீழ்ந்துவிடுவோமென்று வீணர்கள் வீணாய் கனவு காண்கிறார்கள்.அந்த வலியும் ஒரு உரமென்பதை மறந்து.விடுதலை விருட்சம் விஸ்வரூபமெக்கும்போது இவர்கள் இல்லாமலேயே போய்விடுவார்கள்.

அமரன்
20-11-2007, 06:20 PM
தமிழ்நிலா..
இவை பிரசவகால வலிகள்.
கத்தியோ, கத்தியின்றியோ
பிரவசம் நிச்சயமல்லவா?
காத்திருப்போம் அதுவரை.

கஜினி
21-11-2007, 05:10 AM
வலிக்கிறது கவி.

பூமகள்
21-11-2007, 06:27 AM
வலி..
புண் பட்ட வலி.. - தமிழ்
மண் கொண்ட வலி..!
மறுக்க முடியா பிணி..!
மாற்றுவது நம் பணி..!

வலி சொல்லி இதயம் கனக்க வைத்துவிட்டீர்கள்.
பாராட்டுகள் கவிநிலா.

ஆதவா
21-11-2007, 01:38 PM
நான் வெளிப்படையாகவே சொல்லுகிறேன். தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்... (எனக்கு அந்தளவுக்குத்தாங்க அறிவு!!!:))

வார்த்தைகள் பிடிமானமில்லை....
அதனாலேயெ கரு தடிமனாகவில்லை....

என்றுமே இரவு நீளுவதில்லை... விடியல் உண்டு..... காத்திருப்போம்.