PDA

View Full Version : பா.ஜ.க.,சாதனை முறியடித்ததுஆஸ்கார்பாரதி
19-11-2007, 05:09 PM
பா.ஜ.க., ஏற்கனவே 13 நாள்களில் ஆட்சியை கவித்து சாதனை செய்து இருந்துதது. இப்போது அதை பா.ஜ.க., வே முறியடித்தது 5 நாள்களில் ஆட்சியை கவித்து சாதனை செய்தது, கர்நாடகாவில் பா.ஜ.க., தலைமையிலான அரசு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் தங்களது ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்தது. இதனைத்தொடர்ந்து கர்நாக அரசியலில் புது குழப்பமும், பரபரப்பும் ஏற்பட்டது. கர்நாடக முதல்வர் பதவியில் எடியூரப்பா நீ*டிக்க முடியாத சூழ்நிலை உருவாகியது. இந்நிலையில் மாநில ஆளுனரை சந்தித்த முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பா.ஜ.க.,வினர் கூடி பேசி முடிவு எடுக்க உள்ளனர். இதற்கிடையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடா டில்லி செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அறிஞர்
19-11-2007, 06:14 PM
பல ஜோக்கர்கள் விளையாடும் விளையாட்டு.. அரசியல் என்று சிலர் சிலவேளைகளில் நிரூபிப்பது உண்டு... அதில் ஒன்று தான் இதுவும்...

தென்னிந்தியாவில் முதல் ஆட்சி என்று மார்தட்டிய.. பாஜகவிற்கு இது ஒரு சரிவு...

இளசு
19-11-2007, 07:50 PM
அரசியல் மைதானம்..

கேவலங்களின் புது எல்லைகள்..

அனைத்துக் கட்சிகளுமே அதில் களவீரர்கள்.

என்னத்தைச் சொல்ல?

அக்னி
19-11-2007, 09:27 PM
அரசியல் மைதானம்..

கேவலங்களின் புது எல்லைகள்..

அனைத்துக் கட்சிகளுமே அதில் களவீரர்கள்.

என்னத்தைச் சொல்ல?
கட்டாயப் பார்வையாளராக,
பொதுமக்கள்...

இளசு
19-11-2007, 09:31 PM
கட்டாயப் பார்வையாளராக,
பொதுமக்கள்...

ஆஹா... அருமை அக்னி..

ஆட்டக்காரர்களை ஐந்தாண்டுக்கு மாற்றும்
ஆற்றல் இருந்தும்...
நடுவில் குதிரைகளாய் மாறும் மனிதர்கள்..
நல்ல விலைக்குக் குதிரும் பேரங்கள் கண்டு
''இதெல்லாம் சகஜமப்பா'' என
இணக்கமாய் ஏற்றுக்கொண்ட
இந்நாட்டு ''மன்னர்'' -இப்பார்வையாளர்கள்!

arun
19-11-2007, 09:39 PM
எ ஏ எ ஏ அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா :D

தங்கவேல்
20-11-2007, 12:39 AM
அரசியல்... அரசியல்... பொய்... பித்தலாட்டம்...

lolluvathiyar
20-11-2007, 05:36 AM
மன்குதிரை நம்பி ஆற்றில் இறங்கிய பஜவு க்கு இது ஒரு நல்ல பாடம். இனிமேலாவது கூட்டனி வைக்காமல் தைரியமாக தேர்தலை சந்திக்க வேண்டும். தேர்தலுக்கு பிறகு மறுபடியும் தேர்தல் வந்தாலும் பரவாயில்லை கூட்டனி மட்டும் வைக்க கூடாது.
இது மாயாவதி குமாரசாமி யிடம் நம்பிக்கை மோசம் போயும் புத்தி வராததுக்கு நல்ல தன்டனை

அக்னி
20-11-2007, 05:39 AM
அப்போ கூட்டணி வைத்தாலும், வைக்காவிட்டாலும் மறுபடி மறுபடி தேர்தல் வரும் என்று சொல்கின்றீர்களா வாத்தியாரே...
இதனால் பாதிப்படைவது, மக்கள்தானே...

அன்புரசிகன்
20-11-2007, 05:58 AM
ஆனாலும் தேர்தல் அதிகாரிகளுக்கும் வாக்குச்சாவடியில் வேலைக்குப்போபவர்களுக்கும் நல்ல வேட்டு. :D

lolluvathiyar
20-11-2007, 07:10 AM
மறுபடி மறுபடி தேர்தல் வரும் என்று சொல்கின்றீர்களா வாத்தியாரே...இதனால் பாதிப்படைவது, மக்கள்தானே...

ஆம் பாதிப்ப*டைவ*து ம*க்க*ள் தான். அவ*ர்க*ள் பாதிப்பு அடைந்து தான் ஆக*வேண்டும். கார*ன*ம் இது ம*க்க*ள் செய்த* த*வ*றுதானே? ம*க்க*ள் தானே இப்ப*டி யாருக்கு மெஜாரிட்டி த*ராம*ல் தொங்கு ச*பை வ*ர* கார*ன*மாகிறார்க*ள்.

பகுருதீன்
20-11-2007, 07:17 AM
கர்நாடகாவில் தரங்கெட்ட அரசியல் நடந்து கொண்டிருக்கிறது

lolluvathiyar
20-11-2007, 11:02 AM
அரசியல் என்றாலே தரங்கெட்டதுதான் கர்நாடகா மட்டுமல்ல*

அக்னி
20-11-2007, 11:13 AM
ஆம் பாதிப்ப*டைவ*து ம*க்க*ள் தான். அவ*ர்க*ள் பாதிப்பு அடைந்து தான் ஆக*வேண்டும். கார*ன*ம் இது ம*க்க*ள் செய்த* த*வ*றுதானே? ம*க்க*ள் தானே இப்ப*டி யாருக்கு மெஜாரிட்டி த*ராம*ல் தொங்கு ச*பை வ*ர* கார*ன*மாகிறார்க*ள்.
உண்மைதான் வாத்தியாரே...
விழிப்படைய வேண்டியதும், எழுச்சி கொள்ள வேண்டியதும் நாமாக இருக்கின்றோம்...
ஏமாளிகளாக நாம் இருக்கும்வரை, ஏமாற்றியே குளிர் காய்வார்கள் அரசியல்வாதிகள்...
எம் கையில் உள்ள வலிமையை, தீர்மானிக்கும் சக்தியை என்றுணர்வோம்..?
அன்றுதான் எமக்கு நிம்மதி வாழ்வு....

alaguraj
20-11-2007, 12:28 PM
http://tamilhelp.files.wordpress.com/2007/10/thuglaq_karnataka_kumarasamy_bjp_bangalore_party.jpg

நேசம்
21-11-2007, 02:41 AM
நம்பிக்கை துரோகத்தின் விளைவாக பிஜேபீ இந்த சாதனை செய்துள்ளது.தென்னிந்தியாவில் எப்படியாவது ஆட்சி அமைக்க வேண்டும் என்று நாலாம்தர அரசியலை மற்ற கட்சிகள் செய்வது போல செய்தது விளைவுதான்.

கஜினி
21-11-2007, 03:35 AM
ஏமாறுவது மக்கள்தான் என்று நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது.