PDA

View Full Version : துபாயில் கட்டிட தொழிலாளர் சம்பளம் உயர்த்



mgandhi
19-11-2007, 04:51 PM
துபாயில் கட்டிட தொழிலாளர் சம்பளம் உயர்த்தப்பட்டது
துபாய் : டாலர் மதிப்பு குறைந்து விட்டதால் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என்று துபாய் கட்டிட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந் நிலையில் அங்குள்ள கட்டிட தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 20 சதவீதம் உயர்த்தி இருப்பதாக கட்டிட கான்ட்ராக்டர்கள் அறிவித்துள்ளனர். இந்த தகவலை மிடில் ஈஸ்ட் எக்கனாமிக் டைஜஸ்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. டாலர் மதிப்பு குறைந்துள்ளதாலும் பணவீக்கத்தை கணக்கிட்டும் 20 சதவீத சம்பள உயர்வை உடனடியாக அறிவிப்பதாக ஒரு கான்ட்ராக்டர் தெரிவித்தார். பர்ஜ் துபாய் என்ற புராஜக்ட்டை கான்ட்ராக்ட் எடுத்திருக்கும் அரப்டெக் ஹோல்டிங்க் என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 35 ஆயிரம் தொழிலாளர்கள், 10 நாள் ஓவர்டைம் கேட்டு போராட்டம் செய்தபோது, கான்ட்ராக்டருக்கும் தொழிலாளளுக்குமிடையே இதுபற்றி சமரச தீர்வு ஏற்பட்டுள்ளது.

நன்றி தினமலர்