PDA

View Full Version : கைம்பெண்



ஆதி
19-11-2007, 03:25 PM
இந்த கவிதை கவிச்சமரில் சகோதரி யவனிகா முடித்த பெண்கள் என்ற சொல்லைக் கொண்டு துடங்கி படைக்கப் பட்ட கவிதை, உங்கள் கருத்துக்காக இங்கே படைக்கிறேன், இக்கவிதையில் உயிர் உள்ளதா, இன்னும் மெறுக்கேற்ற என்ன செய்ய வேண்டும், என்கிற எண்ணதுடன் உங்கள் முன்வைக்கிறேன், ஈரிடத்தில் ஒரே கவிதை இருக்க கூடதாயின் இதை எடிட் செய்து வேறு கவிதை புனைந்து விடுகிறேன்.. நன்றி


வேலை...
சம்பளத்திற்காய்
சில மணிநேரம்...வெளியில்
ஊதியமே இல்லாமல்
பலமணி நேரம்...வீட்டில்
பாராட்டுகளே இல்லாமல்
பயணப் படுகிறோம்
வேலையெனும் வீதியில்...பெண்கள்...



பெண்கள் பெண்கள்
பிறப்பின் மாண்புகள்..

கைம்பெண் என்ன
கடவுளின் பிழைகளா?

எதிர்ப்பட்டால் வருமாம்
இடையூறு காரியத்தில்..

தறிகெட்ட சமூகதின்
சரிகெட்ட வார்த்தைகள்..

நெற்றி நிலா
இழந்த வானங்களே..

நெறிகெட்ட சொற்களில்
மதிநொந்து விடவேண்டாம்..

நயம்செத்த ஞாலத்தின்
பயன்கெட்ட வார்த்தையிவை..

கைம்பெண் குழலில்
கமழாத மலர்கள்
கற்பக பூவாயினும்
கருவாட்டுக்கே சமம்..

-ஆதி

பூமகள்
19-11-2007, 05:11 PM
கைம்பெண் குழலில்
கமழாத மலர்கள்
கற்பக பூவாயினும்
கருவாட்டுக்கே சமம்..
கைம்பெண் கண்டால்
கால் தெறிக்க ஓடும்
கயவர்கள் இன்னும்
காணக்கிடைக்கத்தான் செய்கிறார்கள்..!!

வேதனையின் வலி..
வெந்த புண்ணில்
வேல் பாய்ச்சும் கலி..!

ஆஹா... நச் என்ற வரிகள் ஆதி...!!
பாராட்டுகள்..!!

உண்மையில் கவிச்சமரின் உதித்த கவியை இரு புறமும் பதிக்கக் கூடாது. ஏதோ ஒரு இடத்தில் தான் இருக்கனும் என்ற விதியை பொறுப்பாளர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
தாங்கள் கவிச்சமர் கவிதையை பெரிதாக எழுதி மேலும் மெருகேற்றிப் பதித்திருந்தால் இது இங்கு இருப்பதில் தவறில்லை என்பது எனது கருத்து.

ஆதி
19-11-2007, 06:18 PM
ஓ! அப்படி எனில் இக்கவிதை இங்கு இருத்தல் இயலாது..

எடிட் செய்து மாற்றி விடவேண்டியதுதான்..

நாளைக்கு மாற்றிவிடுகிறேன் சிறிது பொறுத்தருள்க பொறுப்பாளர்களே..

உங்கள் பாரட்டுக்கு நன்றி பூமகள்..

-ஆதி

அக்னி
20-11-2007, 12:15 AM
இந்தக் கவிதையையே, கரு மாற்றாது, இவ்வரிகளையும் நீக்காது விரிவுபடுத்த இயலுமானால் விரிவுபடுத்தித் தாருங்கள்.
இயலாவிட்டால் இம்முறை இப்படியே விட்டுவிடுங்கள்.

கவிச்சமரில் உதித்த கருவில், சில கவிதைகள் திரிகளாகியுள்ளன.
கவிச்சமர், கருக்களின் உற்பத்திக் களம். அவை கவியாக உருப்பெறுவதில் தவறில்லை. தடையுமில்லை.

ஆதி
20-11-2007, 04:05 AM
நன்றி அக்னி அவர்கட்கு

அமரன்
20-11-2007, 03:39 PM
தேவதைகள் வெள்ளுடையில் வருவார்களாம்..
இப்படிச்சொன்னவர்கள் இப்படியும் சொல்லிவைத்தார்கள்...
பேய்,பிசாசுகள் கூட வெள்ளுடைக் காதலர்களே...
தேவதைகள் மேல் பாசம்..துர்தேவதைகள் மேல்பயம்..

இதுமாதிரி இல்லாமல் புதுமாதிரியாக
வெள்ளுடைத்தேவதைகளை வதைக்கும் பண்பு
புரையோடிக்கிடக்கு இன்னமும் சிலதேசங்களில்.

பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பவர்கள்
கைம்பெண்களைக்கண்டு இரங்காது விட்டால்
பேய்களை விட கேவலமானவர்கள் அல்லவா?

எல்லாரும் அப்படியில்லை. அப்படியாருமில்லை என்றும் சொல்வதற்கில்லை.
எப்படி பாடினாலும், எத்தனைபேர் பாடினாலும் குறையவில்லை இந்நிலை..