PDA

View Full Version : அன்பு தங்கை



க.கமலக்கண்ணன்
19-11-2007, 02:11 PM
அன்பு தங்கை என்று

ஒரு தேவதை

அன்புடன் இருந்தால்

இப்படித்தான் இருப்பாள்

என்ற எண்ணத்தை என்னுள்

விதைத்த இந்த ஆலமரம்

விழுது மண்ணில் விழுவதற்குள்

மறைந்து விட்டதே

சில மணி நேரங்களே

பேசியிருந்தாலும் அந்த

முகம் அறியாத பாச மலரை

மறக்க முடியவில்லை அன்பு

தங்கை நீ ஒவ்வொரு முறை

அழைக்கும் அண்ணா என்ற

அற்புதமான வார்த்தை

மரணநேரத்திலும் மறக்க முடியுமா

தங்க தாமரையே ஏன் என்னிடம்

இது வரை பேசவில்லை

உள்ளம் மட்டும் அல்ல

உடலும் சேர்ந்து வாடுகிறது

உன்னுடைய வார்த்தைகளும்

ஓராயிரம் அன்பு சக்தியை தாங்கி வரும்

மீண்டும் அந்த ஒலியை என் செவிகள்

கேட்டுமா அந்த சகோதரி இங்கு

வந்து பின்னூட்டம் இடுமா?

காத்திருப்பது நான் மட்டும் அல்ல

எனது கைபேசியும் தான்

கலங்க விடாமல் மீண்டும்

கதைப்பாயா என்னை ஈன்றவளே...


நேசத்துடன்

அமரன்
20-11-2007, 05:51 PM
தங்கை பாசம்
கிட்டியும் கிட்டாத அண்ணன்.

எட்டாத் தொலைவிலிருபவளை
அலைந்து வரும் அலை
வரைந்து காட்டும்..

அந்நல் ஓவியத்தை தொலைத்த
அண்ணணின் சோகம் இழையோடுகிறது
எனக்குள் ஏக்க விதை போடுகிறது..

க.கமலக்கண்ணன்
21-11-2007, 05:34 AM
தங்கை பாசம்
கிட்டியும் கிட்டாத அண்ணன்.

எட்டாத் தொலைவிலிருபவளை
அலைந்து வரும் அலை
வரைந்து காட்டும்..

அன்புள்ள

அமரன்

அத்தனையும் உண்மை

அருமையான கவிதையால்

அளித்திட்ட மருந்துக்கு நன்றி

பூமகள்
21-11-2007, 06:39 AM
தங்கை பிரிந்த தமையன்
துயர் மாளாமல் துடிக்கும்
இதயம்..!

அன்புத் தங்கை
வருவாள் நிச்சயம்!

வாழ்த்துகள் கமல் அண்ணா.

க.கமலக்கண்ணன்
21-11-2007, 11:01 AM
நன்றி அன்பு தங்கையே என் தங்கை

நலமுடன் திரும்பி வர அள்ளித் தெளித்த அன்புடன்

நன்மையுடன் அளித்த வார்த்தைகளுக்கு புன்னகையுடன்...

நேசம்
21-11-2007, 06:06 PM
அன்பான தங்கை நிச்சயம் வருவாள்.வாழ்த்துக்கள் கமல் அவர்கள்

க.கமலக்கண்ணன்
22-11-2007, 08:35 AM
நன்றி நேசம். உங்களின் கூற்று உண்மையானால் அதைவிட சந்தோசம் எதுவும் இல்லை...

IDEALEYE
10-12-2007, 04:36 AM
தங்கை வருவாள்...
வர வேண்டும்...
வர வைப்போம்....
உண்மையான பாசம் எத்தேசத்திலும்
வாழும்...
ஐஐ

ஓவியா
13-01-2008, 05:25 PM
அன்பு கமல் அண்ணா,
நம்பினார் கெடுவதில்லை, அவசியம் ஒரு நாள் வருவாள்.

ஆனால் அது என்றோ!!!

மனோஜ்
13-01-2008, 06:48 PM
கவிதைக்கு விடைகிடைத்தது தொடருமா ஓவியக்கா

தாமரை
14-01-2008, 09:28 AM
அன்பு கமல் அண்ணா,
நம்பினார் கெடுவதில்லை, அவசியம் ஒரு நாள் வருவாள்.

ஆனால் அது என்றோ!!!

:lachen001::lachen001::lachen001:

:icon_rollout::icon_rollout::icon_rollout:

:icon_b::icon_b::icon_b:

அனுராகவன்
17-02-2008, 03:00 AM
நன்றி கமல்;;;;!!
ஆனாலும் சோகம் கலந்த பாசத்திற்கு ஏங்கும் அன்பு அண்ணனின் கவி..
ம்ம் என்ன செய்வது குருவி சிறகு முளைத்த பிறகு தானா பறந்துவிடுதே,..
கவலை வேண்டாம்..
இங்கே பல தங்கைகள் உள்ளனர்.
என் வாழ்த்துக்கள்!!

தாமரை
17-02-2008, 04:56 AM
அதான் தங்கை வந்தாச்சே

sarathecreator
17-02-2008, 07:36 AM
அண்ணன் தங்கைப் பாசத்தில் டீ. ராஜேந்தரையே மிஞ்சிவிட்டீர்கள்

சாலைஜெயராமன்
19-02-2008, 02:30 AM
இது மரணம் தந்த நிரந்தரப்பிரிவா அல்லது தங்கையைப் பார்க்கமுடியாமல் வந்த ஏக்கமா என்று அறிந்து கொள்ள முடியாதபடி வடித்திருப்பது கவிதைக்கு அழகுக்கு அழகூட்டுகிறது கமல்,

காதலிக்கும் காதலுக்காகவும் ஏங்கி எழுதப்படும் கவிதைகளின் தாக்கத்தைவிட இது அதிக வலியைத் தந்தது,

அபிராமி பட்டர் அன்னையின் வடிவை அனைத்து பெண்பாலிலும் கண்டு தொழுததுபோல் பார்க்கும் அனைத்து பெண்பாலினையும் அக்கா தங்கையாக பாவித்துப் பார்த்தால் உலகமே நமக்கு சொந்தம்தானே.

போர்முனைக்குச் செல்லும் ஒவ்வொரு வீரனுக்கும் முதல் கடமையே நம் குலப் பெண்களை மாற்றானிடம் இருந்து பாதுகாக்கும் பெரிய பொறுப்புதான். அது அனைவரையும் நமது சகோதரிகளாகப் பாவித்தால்தானே வரும். நமது இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு வீரனுக்கும் உள்ள இந்த உயர்பண்பை உங்கள் கவிதை வரிகளைப் பார்க்கிறேன் கமல்.

ரக்ஷா பந்தன் விழாவின் இனிமையை உங்கள் கவிதை தந்தது என்றால் அது பொய்யுரை இல்லை.

நல்ல வரிகள்.

க.கமலக்கண்ணன்
19-02-2008, 02:49 AM
நன்றி சாலைஜெயராமன்

kavitha
27-03-2008, 11:10 AM
கொடுத்து வைத்தவர் அந்த பாசத்தங்கை.

க.கமலக்கண்ணன்
01-04-2008, 05:14 AM
கொடுத்து வைத்தவர் அந்த பாசத்தங்கை.

நன்றி கவிதா. மறைந்துவிட்ட எனது தங்கையின் பெயரும் கவிதா. எனது தங்கையே உங்கள் உருவில் வந்தது போல இருக்கிறது. நன்றி கவிதா...