PDA

View Full Version : வாழ்ந்து பார்..



rambal
03-04-2003, 10:31 AM
வாழ்ந்து பார்..

பத்தில்..
ஓடிப் பழகு..
அது பின்னாள் ஓட்டத்திற்கு
முன்னோட்டமாக இருக்கும்...

பதினாறில் வருவது
காதல் அல்ல...
ஹார்மோன்களின் சேட்டை..
எவன் சொன்னது?
சொன்னவனை இழுத்து வந்து
சிலுவையில் ஏற்று..

திருட்டு தம் அடித்துப்பார்
பீர் குடித்துப் பார்..
தறுதலை என்று திட்டுகிறார்களா?
கவலைப் படாதே...
அவர்கள் உன் வயதில்
பண்ணாத எதையும்
புதிதாக நீ பண்ணவில்லை..

இது எல்லாவற்றையும் ரசிக்கும் வயது..

எல்லாவற்றையும் முடிந்தவரை
முயற்சித்துப்பார்..
ஆனால்,
எதற்கும்
அடிமை மட்டும் ஆகிவிடாதே..

சுகபோகம் தீர்ந்ததா?
விட்டொழி அந்த கர்மங்களை...
பரீட்சைக்கு தயாராகு
யுத்தகளம் புறப்படும்
போராளியைப் போல...

கல்லூரிக்குப் போ...
கற்றது கை மண் அளவு..
கல்லாதது?
கல்லூரிக்கு வெளியே கற்றுக் கொள்..
சைட் அடிப்பதிலிருந்து
கட் அடிப்பது வரை....

தண்டவாளத்தின்
ஒரு டிராக்காக படிப்பை மட்டும்
வைத்துக் கொள்...
மற்றொரு டிராக்காக
சகலமும்..
இரண்டையும் சேரவிட்டால்
உன் வாழ்க்கை
ரெயில் கவிழ்ந்து விடும்..

இருபத்தைந்திற்குள்
எல்லாம் கற்று முடித்து விடு..
கல்லூரிப் பாடங்களில் இருந்து
கலவிப் பாடம் வரை..

ஒருவனை மட்டும்
நல்ல நண்பனாக
தேர்வு செய்து
எப்பொழுதும்
அவனிடம் மட்டும்
உண்மையாக இரு...

நண்பன் தேர்வில் தவறினால்
அது
கல்லூரித் தேர்வில்
தோற்றதற்குச் சமம்..

பஸ் ஸ்டாப்பில்
ஓரவிழியில் உன்னை கவிழ்க்க
ஒருத்தி காத்திருப்பாள்..
அவளுடன் சுற்று...
நண்பனாக மட்டும்...
இல்லையென்றால்
பிறிதொரு நாளில்
நீ கண் கலங்க வேண்டியிருக்கும்..

கவனமாக இரு...
கல்லூரி முடி..
கல்லூரியுடன் சேர்த்து
எல்லாவற்றையும் புதை...

முதுகு குனிந்து பழகு...
நாயாய் அலைந்து திரி...
வேலையில் உட்கார்..
உள்ளே நடக்கும்
அரசியலில்
கலந்து கொள்ளாதே...
உன்னை பாதிக்கும் வரை...

வாழ்க்கையும்
உலகமும்
புரிந்தும் புரியாததுமாய்
இருக்கும்..

எக்காரணம் கொண்டும்
உத்யோகம் விடாதே..
உன் செருப்பு கூட
உன்னை மதிக்காது...

முப்பதிற்குள்
நல்ல உத்யோகம்,
கை நிறைய சம்பளம்
என
நிரந்தரமாகு...

சம்பளத்தில்
முப்பது சதவிகிதம் மட்டும் சேர்..
முடிந்தால் ஐந்து சதவிகிதம்
அனாதை இல்லத்திற்கு
நன்கொடை கொடு..

மீதியை ஊதாரியாக
செலவு செய்து
வாழ்க்கையை அனுபவி..
வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும்
அனுபவித்துப் பார்...

இப்பொழுது,
பக்கத்து வீட்டுப் பெண்
உன்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பிப்பாள்..
அவள் சிரிப்பை அலட்சியம் செய்..
இல்லையெனில்,
நீ வாழ்வில் கவிழ வேண்டியிருக்கும்..

எப்படி வேண்டுமானாலும் திருமணம்
செய்து கொள்..
காதலோ, நிச்சயமோ
ஆனால்,
பெற்றவர்கள் முன்னிலையில்..
இல்லையெனில்,
அவர்கள் வயிற்றெரிச்சல்
உன்னை வாழ் நாள் முழுதும்
துரத்தும்...

முப்பத்தைந்திற்குள்
தந்தை ஆகிவிடு..
இல்லையெனில்,
ஊர் தப்பாக பேசும்...
ஒரு குழந்தை பெற்ற பின்
முடிந்தால் ஒரு குழந்தையை
தத்தெடுக்கப்பார்..

குழந்தையை சுதந்திரம்
கொடுத்து வளர்...
அவன் போக்கில் விடு..
கடிவாளம் மட்டும்
உன் கைகளில் இருக்கட்டும்...
உன் குழந்தையைப் பொறுத்தவரை
நீதான் ரோல்மாடலாக இருக்க வேண்டும்..
இல்லையெனில்
அவனிடமிருந்து நீ
உபதேசம் பெறவேண்டியிருக்கும்...

இப்பொழுது
வாழ்க்கை கொஞ்சம்
புரிபட ஆரம்பித்திருக்கும்...

நாற்பதிற்கு மேல்
சபலம் எட்டிப் பார்க்கும்...
எல்லாவற்றையும் அனுபவிக்கச் சொல்லும் வயது..
மனசாட்சியைக் கேள்..
அதையும் கட்டுப்படுத்த முடியவில்லையா?
அனுபவித்து விடு...
மனதிற்குள் மட்டும் பூட்டி வைத்து விடாதே..
இல்லையெனில்
அது வியாதியாக மாற வாய்ப்புள்ளது..

முடிந்தால்
கடவுள், ஆன்மீகம் என மனதை
திசை திருப்பு..
நல்ல இசை, ஓவியம்
எல்லாம் ரசி...

ஐம்பதிற்கு மேல்...
உன் குழந்தைக்கு
கல்யாணம் பண்ணிப்பார்..
நீ வேலை பார்த்தது போதும்...
சம்பாதித்ததும் போதும்..
வேலையை ராஜினாமா செய்..
அது அடுத்த தலைமுறைக்கு
நீ செய்யும் உதவியாகும்...

அறுபதிற்கு மேல்..
ஊர் ஊராக சுற்றிப் பார்..
சேர்த்ததை செலவு செய்த மகிழ்ச்சியோடு
வாழ்க்கையை முழுமையாக அனுபவித்த
நிறைவோடு
சாவதற்கு முன்
உன் உடல் உறுப்புகளை
தானமாக எழுதிக் கொடுத்து விடு..
இப்பொழுது செத்துப்போ...

வாழ்க்கையின் அர்த்தம்..

மரிக்கின்ற வயதில்
தொண்டைக்குழி ஏறி
இறங்கினால்
இத்தனை
ஆண்டு காலம்
நீ
வாழ்ந்த வாழ்க்கைக்கு
அர்த்தம் ஏது?

gankrish
03-04-2003, 10:42 AM
மனித வாழ்க்கையை அழகாக பிரித்து தொகுத்து அருளிய ராம்பாலுக்கு ஒரு ஜெ.
சூப்பர்.

Narathar
03-04-2003, 10:57 AM
பத்திலேயே கடன் வாங்கும் திட்டம் ஆரம்பமாகிவிட்டதா??



பத்தில்..
ஓடிப் பழகு..
அது பின்னாள் ஓட்டத்திற்கு
முன்னோட்டமாக இருக்கும்...


அட நல்லாயிருக்கே!!!



தண்டவாளத்தின்
ஒரு டிராக்காக படிப்பை மட்டும்
வைத்துக் கொள்...
மற்றொரு டிராக்காக
சகலமும்..
இரண்டையும் சேரவிட்டால்
உன் வாழ்க்கை
ரெயில் கவிழ்ந்து விடும்..


அனுபவங்கள் ஒருவரை நல்ல கவிஞனாக்குமாம்.... நாராயனா!!



பஸ் ஸ்டாப்பில்
ஓரவிழியில் உன்னை கவிழ்க்க
ஒருத்தி காத்திருப்பாள்..
அவளுடன் சுற்று...
நண்பனாக மட்டும்...
இல்லையென்றால்
பிறிதொரு நாளில்
நீ கண் கலங்க வேண்டியிருக்கும்..


வாங்கிய பட்டத்தையுமா???



கவனமாக இரு...
கல்லூரி முடி..
கல்லூரியுடன் சேர்த்து
எல்லாவற்றையும் புதை...


ராம்பாலின் வயசு என்ன??



நாற்பதிற்கு மேல்
சபலம் எட்டிப் பார்க்கும்...



அட அட இது ஒவ்வொறு இந்தியனும் எடுக்க வேண்டிய முடிவு



வேலையை ராஜினாமா செய்..
அது அடுத்த தலைமுறைக்கு
நீ செய்யும் உதவியாகும்...

rambal
03-04-2003, 11:02 AM
நாராயணா!நாராயணா!
இப்பொழுதுதான் தெரிந்தது நீங்கள் நாரதர் இல்லை என்று..
கலாட்டாராமனே..
நீர்தானா நாரதர் வேடத்தில் உலா வருவது...
என்னை குழப்பி
பொறுமையை சோதித்து விட்டீருமையா...

Narathar
03-04-2003, 11:05 AM
நாராயணா!நாராயணா!
இப்பொழுதுதான் தெரிந்தது நீங்கள் நாரதர் இல்லை என்று..
கலாட்டாராமனே..
நீர்தானா நாரதர் வேடத்தில் உலா வருவது...
என்னை குழப்பி
பொறுமையை சோதித்து விட்டீருமையா...

கலாட்டா ராமனா? யார் அது?
ஸ்ரீ ராமன் தெரியும்
சீதா ராமன் தெரியும்
யார் அது கலாட்டா ராமன்...... நாராயனா!!!!

இளசு
03-04-2003, 01:21 PM
வாழ்க்கைப்பாடம் நடத்திய கவிஆசான் ராமுக்கு வந்தனம்...
இனி இருக்கும் காலத்துக்கு பாடம் பயன்படுமா.... பார்க்கலாம்...

rambal
04-04-2003, 07:38 AM
பாராட்டிய அண்ணனுக்கு நன்றி..

Narathar
04-04-2003, 09:31 AM
பந்தி பந்தியாய் விமர்சித்த இந்த நாரதரை கண்டுக்கலை ராம்பால்.....
ஏதோ அண்ணனுக்கு மட்டும் நன்றியாம்............. நன்றி நன்றி

rambal
04-04-2003, 10:42 AM
சரி அதனாலென்ன நாரதருக்கும்
ஒரு நன்றி...
நாரதருக்கு வாழ்த்துப்பா பாடலாமென்றிருந்தேன்..
சரி.. அதை வேண்டாம் எனும் பொழுது நான் என்ன செய்ய?

kavitha
22-04-2004, 10:16 AM
உன் உடல் உறுப்புகளை
தானமாக எழுதிக் கொடுத்து விடு..

ஆடி அடங்கிய பின் அங்கே என்ன இருக்கும் ராம் ஜி?

Nanban
22-04-2004, 07:10 PM
அழகிய அறிவுரைகள்......

பின்பற்றினால் நலமே.....

பாராட்டுகள் ராம்.....

தமிழமுதன்
27-04-2004, 12:18 PM
இக்கட ரா... ரா, ரா, ராம்(பால்) ஐயா...
பத்துக்குள்ள வாழ்க்கை இருக்கு ராம்(பால்) ஐயா...
பத்து பத்தா மனுஷ வாழ்வ பிரிச்சுக்கோ...
நீ எந்த பத்துல இப்போ இருக்க நெனச்சுக்கோ...

பரஞ்சோதி
27-04-2004, 01:44 PM
நண்பர் ராம்பாலின் எதார்த்த கவிதை மிகவும் அருமை.

அனுராகவன்
02-05-2008, 10:11 AM
நன்றி ராம்பால் அவர்களே!!
ம்ம் உங்கள் கவிகள் அருமையான வரிகள்..