PDA

View Full Version : வேறுபாடு



kavinila
19-11-2007, 10:41 AM
நள்ளிரவுச் சூரிய நாட்டில்
ஈழத்தின் மைந்தன் நான்....
விடியாத மனங்களுடன்........

17 மே போகும் இங்கு
ஊர்வலங்கள்.....
ஒவ்வொரு நாளும் போகும் அங்கு
பிண ஊர்வலங்கள்.......

காசுக்காக கண்முழிக்கும்...
நான் இங்கே
காப்பதற்காக கண்முழிக்கும்...
வீரர் அங்கே.....

உதிரத்தை உறைய வைக்கும்ம்
உறைபனியில் கூட....
நடுங்காமல் இருக்கின்றேன்
என் தேசத்தில் எரிகின்ற..
போர் தீயினாலே

சிவா.ஜி
19-11-2007, 01:46 PM
உதிரத்தை உறைய வைக்கும்ம்
உறைபனியில் கூட....
நடுஙாமல் இருக்கின்றேன்
என் தேசத்தில் எரிகின்ற..
போர் தீயினாலே

அசத்தும் வரிகள் கவிநிலா..அதில் உறைந்திருக்கும் உண்மை வலிக்கிறது.
பாராட்டுக்கள்.

வசீகரன்
19-11-2007, 02:07 PM
அங்கே மண்ணில் உதிரும் ஒவ்வொரு ரத்தத்துளிகளின்
சூடு இங்கே விறவுகிறது....! வாடை நுகரப்படுகிறது....!
நிச்சயம் பதில் சொல்ல வேண்டும்... இக்கொடுமைகளை பார்த்துக்கொண்டிருக்கும்இறைவன்...!

தங்கள் பெயரில் நிலா இருந்தாலும் சூரியனின் சுட்டெரிக்கும்
வீச்சு உங்களின் பதிவில்.... அருமையான படைப்பு...!

நன்றி
வசீகரன்

kavinila
19-11-2007, 06:36 PM
அசத்தும் வரிகள் கவிநிலா..அதில் உறைந்திருக்கும் உண்மை வலிக்கிறது.
பாராட்டுக்கள்.

நன்றி அண்ணா

இளசு
19-11-2007, 07:06 PM
உடல் பிரிந்திருந்தாலும்
உள்ளம் ஒன்றாய்..
இது -
தொப்புள்கொடி உறவான
தாய்மண்ணுறவு!

பாராட்டுகள் கவிநிலா!

அக்னி
19-11-2007, 11:54 PM
தவிக்கும் எம் உறவுகள்...
தகிக்கும் எம் உணர்வுகள்...

துடிக்கும் பொழுதுகள் விரைந்து விடியும்...

பாராட்டுக்கள் வலி(மை)யான கவிதைக்கு...

அமரன்
20-11-2007, 09:52 AM
உதிரத்தை உறைய வைக்கும்ம்
உறைபனியில் கூட....
நடுங்காமல் இருக்கின்றேன்
என் தேசத்தில் எரிகின்ற..
போர் தீயினாலே
முத்துக்கவிதையின் முத்தாய்ப்பு வரிகள்.
ஈழத்து செம்மண்புழுதியை விட்டு
பல்வேறு பனிபுலங்களின் புகார்களில்
முகங்களை மறைத்து முகங்களை மறக்காது
நெடிய பயணத்தில் நொடிமுட்களாக நாம்...

குளிரோ, மழையோ எதுவுமே நாம் பொருட்படுத்தப்படுவதில்லை.
எதுவுமே எம்மை ஒரு பொருட்டாக நினைத்து நெருங்குவதில்லை.
எமக்குல் இருக்கும் தீ.. எம்மை விரட்டிய தீ..
எதுவோ ஒன்று அனுமாஷ்ய சக்தியாக..
எமக்கு அரணாக..பாராட்டுக்கள் தோழரே...!

kavinila
20-11-2007, 10:14 AM
நன்றி அண்ணா:)

பூமகள்
20-11-2007, 10:22 AM
உதிரத்தை உறைய வைக்கும்ம்
உறைபனியில் கூட....
நடுங்காமல் இருக்கின்றேன்
என் தேசத்தில் எரிகின்ற..
போர் தீயினாலே
பனிப்பொழிவிலும்
நடுங்கா உரம்..!
உறம்..!
அசர வைக்கும்..
ஆழ்ந்து வருந்த வைக்கும்
வரிகள்..!
வாழ்த்துகள் கவிநிலா.

கஜினி
21-11-2007, 05:28 AM
நிலா சுட்டெரிக்கிறது