PDA

View Full Version : நல்லாசிரியன் யாஹூ



பகுருதீன்
19-11-2007, 09:30 AM
.
ஐயோ பாவம் ஆசிரியர்கள். இன்டெர்நெட் பயன்பாடு என்று வரும்போது மாணவர்களுக்கு இருக்கும் வசதி ஆசிரியர்களுக்கு இல்லை. தங்களுக்குள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், பாடம் நடத்துவது தொடர்பான உத்திகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளவும் அவர்களுக்கென்று பிரத்யேக வசதிகள் கிடையாது.
.
இன்றளவும் ஆசிரியர்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள இமெயில் அல்லது இன்டெர்நெட் தகவல் பலகைகளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. வலைப்பின்னல் யுகத்தில் இதெல்லாம் கற்கால சங்கதிகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ஆசிரியர்களுக்கு இவற்றை விட்டால் வேறு வழியில்லை.

இந்த குறையை போக்கும் வகையில் யாஹூ ஆசிரியர்களுக் கான புதிய சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. ஆசிரியர்களுக்கான வலைப்பின்னல் தளம் என்றும் இதனை சொல்லலாம்.

இந்த சேவை இன்னமும் முழுவீச்சில் அறிமுகம் ஆகவில்லை. யாஹூ இதனை முன்னோட்ட கட்டத்திலேயே வைத்திருக்கிறது. ஆனால் இப்போதே ஆசிரியர்கள் பலர் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சோதனைக் கட்டம் முடிந்ததும் விரைவில் இந்த சேவை முழுமூச்சுடன் அறிமுகம் ஆகவுள்ளது.

டீச்சர்ஸ் டாம் யாஹூ டாட்காமில் அணுகக்கூடிய இந்த சேவையை ஆசிரியர்கள் அதாவது அமெரிக்க ஆசிரியர்கள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மைஸ்பேஸ், பேஸ்புக் போன்ற வலைப்பின்னல் தளங்கள் இளைய தலைமுறையினர், தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வதற்கான சாதனங்களாக விளங்கி வரும் நிலையில், ஆசிரியர்களுக்கென்று இதுபோன்ற வசதியை யாஹூ உருவாக்கி தந்திருக்கிறது.

பிரதானமாக யாஹூவின் இந்த சேவை, ஆசிரியர்கள், தங்களது பாடதிட்டங்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கான இடமாக அமையும். இன்றைய அவசர யுகத்தில் எல்லோருக்கும் இருக்கும் நேர நெருக்கடி ஆசிரியர்களுக்கும் உண்டு. அவர்களால் வகுப்பு நடத்த தேவை யான பாட திட்டத்தை தயாரிக்க போதுமான நேரத்தை ஒதுக்க முடிவதில்லை.

இந்நிலையில் சக ஆசிரியர்களோடு பாடம் தொடர்பான தயாரிப்பு குறிப்புகளை இந்த தளத்தின் மூலம் ஆசிரியர்கள் பகிர்ந்துகொள்ளலாம். ஆசிரியர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டு தங்களுக்கான தனிப் பக்கத்தை உருவாக்கிக் கொண்டு அதில் பாட தயாரிப்பு தொடர்பான குறிப்புகளை இடம்பெற செய்யலாம்.

இதேபோல சக ஆசிரியர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பாட குறிப்புக்களை பார்த்து அவை தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம். இந்த கருத்துப் பரிமாற்றம் பாடம் நடத்துவது தொடர்பான புரிதலை அதிகமாக்கி புதிய வழிகளை அறிமுகம் செய்யக் கூடும்.
புதிய ஆசிரியர்கள், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் பாடக்குறிப்புகள் பயன்மிகுந்ததாக இருப்பதாக கருதும் பட்சத்தில் அதனை தங்கள் உபயோகத்துக்காக எடுத்துக்கொள்ளலாம்.

இதற்காக அவர்கள் தனியே அதனை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. யாஹூ காப்ளர் என்னும் வசதியை அளிக்கிறது. அதனை பயன்படுத்தி தேவையான பகுதியில் கிளிக்செய்து தங்கள் பக்கத்தில் இழுத்து வந்து வைத்துக்கொள்ளலாம்.

இத்தளத்தில் உள்ள மற்றொரு சிறப்பான வசதி ஆசிரியர்கள் தங்களது பள்ளி எந்த இடத்தில் இருக்கிறது என்பதை வரைபடத்தில் பார்க்க முடிவதுதான். இதற்கான பகுதியில் சென்று தங்களது பள்ளியின் பெயர் மற்றும் இடத்தை டைப் செய்தால், வரைபடத்தில் பள்ளிஇடம் பெற்றிருக்கும் பகுதி அடையாளம் காட்டப்படும். விஷயம் இத்தோடு நின்று விடுவதில்லை.

அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களின் பெயர்களும் பக்கத்தில் பட்டியலிடப்படும். அதில் குறிப்பிட்ட ஆசிரியர் தனது பெயரையும் இடம்பெற செய்யலாம். இதனால் ஏற்படக்கூடிய பயன் என்னவென்றால், ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படித்து, ஆசிரியர்களான வர்கள் வேறு எந்த பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்பதை தெரிந்துகொண்டு அவர் களோடு தொடர்புகொள்ள முடியும்.

யாஹூ கடந்த சில ஆண்டுகளாக இந்த சேவையை ஓசைப்படாமல் ஆசிரியர்கள் மற்றும் நூலகர்களை பயன்படுத்த வைத்து இதன் சாதக, பாதக அம்சங்களை பரிசீலித்து வருகிறது. இதன்மூலம் குறைகள் சரி செய்யப்பட்டு விரைவில் முழுவீச்சிலான சேவை அறிமுகம் ஆகவுள்ளது.

நன்றி: மாலைச்சுடர்.காம்

அன்புரசிகன்
19-11-2007, 09:49 AM
சென்று பார்த்தேன். மிக தயாராகிக்கொண்டு வருகிறார்கள் போலும். பாடசாலைகளினது பெயர்களையும் சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். யாழ்ப்பாணம் எல்லாம் பெயரிட்டிருக்கிறார்கள். சுட்டி (http://teachers.yahoo.com/peer_network)

தகவலுக்கு நன்றி