PDA

View Full Version : பனித்துளியும் மண்ணறையும்



Hayah Roohi
19-11-2007, 02:49 AM
அவிழத்துடித்த
ரோஜா மொட்டு
உதிர்ந்து விழுகிறது!

அசைந்து ஆடி
கதை பேசிய
உன் கால்கள்....
தொய்ந்து கிடக்கின்றன!

ஒரு
மூன்று மாதக்கனவு
கலைந்து போகிறது!


காற்றுத்தேடி
களைத்துப் போன
குட்டி இதயம்
என்றைக்குமாய்
துடிக்க மறுத்தது!

`இப்போது விரியும்`
என்பதான
விழிச்சுவர்கள்
இறுகிக்கிடக்கின்றன!



இரங்க மறுக்கும்
இருண்ட கதவுகளை
தட்டி தட்டி
சோர்ந்து போனதா
உன்
உயிரின் குரல்?


உனக்காய்
நாமெல்லாம்
உயிரில் நொந்ததை...
குருவிசேர்ப்பதாய்
காசு சேர்த்ததை....
காணச்சகியாமல்
ஒரேயடியாய்
உன் கண் மூடினாயா?



வெள்ளைத்துணியில்
சுற்றி வைத்த
சிட்டுக்குருவியாய்
உன்
அசைவற்ற உடல்!
--
ஒரு
பனித்துளியின் பாடல்
போன்ற
உன் கன்னங்களில்
உறைந்து போகிறது
மனசு!



இதோ...
உன்னைத்தூக்குகிறார்கள்.....
.......................

கடைசி கடைசியாய்
நான்
கட்டறுந்து அழுகிறேன்........



உன்னை
மண் தாங்கிக்கொள்கிறது...
.................................
மலரைக் காம்பு தாங்குவதான
மென்மையுடன்
உன்னைத்தாங்கிக்கொள்கிறது!!!


இறைவன் போதுமானவன்!!!

பிஞ்சு ஹம்தாவைப் பிரிந்து வாடும் பெற்றோருக்கு
இறைவன் அமைதியையும் மன உறுதியையும்
அளிக்க....
ஏந்துவோம் எம் கரங்களை!!!

சிவா.ஜி
19-11-2007, 03:41 AM
பிறந்து வளர்ந்து நீ
பெறப்போகும் துன்பம்
பெற்றுவிடாமல் இருக்க உன்னை
பெற்றுவிடாமல் செய்தானோ...
இரக்கமே உன்
இறப்புக்கு காரணமோ....
கண் விழிப்பாய்
புன்சிரிப்பாயென
உன் அன்னை எதிர்நோக்கினாளே..
செவிப்புலன் அறியுமுன்னே
புவி விடுத்தது ஏன்....
கவி பாடி கலங்குகிறதே ஒரு நெஞ்சம்.....
அவிப்போமா ஆறுதல் வார்த்தைகளால்
அந்த அன்னையின் அனலை!

வலி சுமந்த வரிகள்.இதயம் கணக்கிறது.

IDEALEYE
19-11-2007, 03:47 AM
ஹம்தாவின் பிரிவுச்செய்தி
எட்டிய தருணம்
இதயம் கனக்கின்ற தருணம்!
கண்கள் பனிக்கின்றன

ஆனாலும்
சுவனத்து சுகம்
காணப்புறப்பட்டு விட்டாள்
என்ற உறுதியான
அத்தியாயங்கள்
புரட்டப்பட்ட பொழுது

மனம் அமைதிஅடைகின்றது
எம் ஆழ்ந்த அனுதாபங்கள்
ஹம்தாவின் இழ்ப்பு
நிகழ்த்திய துயரம் கொள்
அனைவருக்கும்
ஐடியல் ஐ

ஓவியன்
19-11-2007, 05:10 AM
மனசு கனக்கிறது வார்த்தைகள் வரவில்லை...
அந்த பிஞ்சு உள்ளத்தின் ஆத்மா சாந்தியடையட்டும்..!!

இளசு
19-11-2007, 07:36 PM
இறப்புகள் நிச்சயம் என்றாலும்
இவ்வகை பிஞ்சுகள் உதிரும்போது
இதயம் அதிர்வது அதிகம்..
இக்கொடுமை நேர்ந்த பெற்றவர் நிலைமை?

அனுதாபங்கள்.

அக்னி
19-11-2007, 11:29 PM
தளிர்களை நெ(க)ருக்கும்
இறப்பின் எல்லை..,
விதியின் கொடுஞ் சதி...

பிரிந்த ஆத்மம் சாந்தி பெறவும், பிரிந்து துயருறும் மனங்கள் தேறுதல் பெறவும்,
இறைவன் அருள் பாலிக்கட்டும்...