PDA

View Full Version : ஜிமெயிலில் உள்ள குறைகள்

பாரதி
18-11-2007, 04:58 PM
அன்பு நண்பர்களே,
நம்மில் பலரும் ஜிமெயிலை உபயோகப்படுத்தி வருகிறோம். நான் அறிந்த வரையில் ஜிமெயிலில் அல்லது ஜிமெயிலுக்கு *.exe வகை கோப்புகளையோ அல்லது ஜாவா வகை கோப்புகளையோ அனுப்ப முடிவதில்லை. ஆனால் வேறு மின்னஞ்சலில் இதை அனுப்ப முடிகிறது. இதைப்போல அனுபவ பூர்வமாக நீங்கள் ஜிமெயிலில் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி.

மலர்
18-11-2007, 05:08 PM
குறைகள் என்றால்
1.ஜிமெயிலில் Yahoo மாதிரி Folders கிடையாது..
2.அதே மாதிரி .EXE அனுப்பமுடியாது

பூமகள்
18-11-2007, 05:15 PM
நல்லதொரு திரி. வாழ்த்துகள் பாரதி அண்ணா.

எனக்கு முதன் முதலில் ஜிமெயில் பயன்படுத்தும் போது ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறேன்.
முக்கிய பிரச்சனை..!

1. மெயில்களை சேர்த்து வைக்க போல்டர் உருவாக்கும் அமைப்பே இல்லை. ஆகவே, மெயில்களை பிரித்து வரிசைப்படுத்துவது கடினப்படுகிறது. முடிவதில்லை.

இன்னும் யோசிச்சு தோன்றியதை நாளை சொல்கிறேன் அண்ணா.

நேசம்
18-11-2007, 05:20 PM
இது எல்லோருக்கும் தெரிந்த பிரச்சனை.இன்னும் மற்றவைகளுடன் ஓப்பிட்டு ஜிமெயிலின் நிறை-குறைகள் கொடுங்கள்.பகிர்தலுக்கு நன்றி

ஓவியன்
18-11-2007, 05:21 PM
நான் விரும்பிப் பாவிப்பதும் ஜி.மெயிலே...
என்னைப் பொறுத்தவரை குறைகளிலும் நிறைகளதிகம்...

exe வகை கோப்புக்களை அனுப்ப முடியாதென்பது குறையென்றாலும் கோப்புக்களை சிப்(Zip) பண்ணி அனுப்பலாமென நினைக்கின்றேன்..

குறையென்றால் ஸ்பாம் மெயில்களின் தொல்லை கொஞ்சம் அதிகம்..

பூமகள்
18-11-2007, 05:26 PM
ஓவியன் அண்ணா...!
EXE File - ஐ, Zip செய்தும் அனுப்ப இயலாது என்று நினைக்கிறேன்.
பல முறை நான் முயற்சித்து தோற்றுவிட்டேன்.

மலர்
18-11-2007, 05:27 PM
exe வகை கோப்புக்களை அனுப்ப முடியாதென்பது குறையென்றாலும் கோப்புக்களை சிப்(Zip) பண்ணி அனுப்பலாமென நினைக்கின்றேன்..

எனக்கும் ஜிமெயில் தான் பிடிக்கும் Yahoo mails தமிழை ஒழுங்காவே சப்போட் பண்ணாது
ஜிமெயில்
சில பைல்ஸ் சிப் பண்ணி அனுப்பினால் கூட போக மாட்டேங்குது..
அந்த மாதிரி நேரத்துல Yahoo தான் கண்முன்னால் வரும்

அக்னி
18-11-2007, 05:29 PM
folder உருவாக்கும் வசதி, உள்ளதுதானே...
நான் உருவாக்கி உள்ளேனே...

மலர்
18-11-2007, 05:30 PM
ஓவியன் அண்ணா...!
EXE File - ஐ, Zip செய்தும் அனுப்ப இயலாது என்று நினைக்கிறேன்.
பல முறை நான் முயற்சித்து தோற்றுவிட்டேன்.

முடியும் அக்கா
நான் அனுப்பியிருக்கேனே

பூமகள்
18-11-2007, 05:31 PM
folder உருவாக்கும் வசதி, உள்ளதுதானே...
நான் உருவாக்கி உள்ளேனே...
எங்கே? எப்படி செய்வது என்று விளக்கப்படம் தாருங்கள் அக்னி அண்ணா.

மலர்
18-11-2007, 05:33 PM
folder உருவாக்கும் வசதி, உள்ளதுதானே...
நான் உருவாக்கி உள்ளேனே...

அக்னி Labels தான் உண்டு folder கிடையாது

அக்னி
18-11-2007, 05:44 PM
எங்கே? எப்படி செய்வது என்று விளக்கப்படம் தாருங்கள் அக்னி அண்ணா.
Lables > New Lable > Create
இப்போது நீங்கள் தெரிவு செய்த மின்னஞ்சலை, Create செய்த Lable இல் போட்டு (நகர்த்தி),
பின்னர், அதனை Archive செய்துவிட்டால், அது inbox இல் இருக்காது... Lable இல் இருக்கும்....

ஆனால், Lable இல் வைத்து Remove Lable கொடுத்தால், அது எங்கே செல்கின்றது என்று எனக்குத் தெரியாது. மீளப்பெற முடிவதில்லை. அப்படியான போது மீள inbox அனுப்பி, அங்கிருந்துதான் பெறுவேன்.

Folder மாதிரி...

ஆதி
18-11-2007, 05:49 PM
ஜி-மெயிலில் ஜிப் பையில்களை அனுப்ப இயலும், அது மட்டுமின்றி *.exe என்பதை *.txt பெயர் மாற்றம் செய்து அனுப்பினால் மெயில் எந்த பிழையும் சொல்லது.. *.exe ஜாவா தொடர்புடைய பையில்களை ஏன் அனுப்ப இயலாது என்றால் அது வைரஸ்களை தவிற்கும் முயற்சியால்தான்.. ஜி-மெயில் இன்னும் சில நாட்களில் நாம் offline-னில் இருந்தவாறே மெயில் படிக்கிற வசதியை கொணரப்போகிறது.. அதாவது நீங்கள் ஜி-மெயிலை திறந்தவுடன் உங்கள் எல்லா மெயில்களும் உங்கள் கணினிக்கும் தரவிரக்கு ஆகிவிடும், அதன் பின் நீங்கள் இணையத்தொடர்பை துண்டிதுவிட்டு கூட உங்கள் மெயில்களை படிக்களாம், அது மட்டுமின்றி அதை நீங்கள் நினைக்கும் பொழுது திறந்து படிக்கமுடியும்..

கூகுள் இன்னும் நிறய வசதிகளை செய்து தந்திருக்கிறது, கூகுள் 'calender' பயன் படுத்து இருக்குறீர்களா.. calender உங்கள் நாள் அட்டவனையை பதித்து வைத்து கொள்ளலாம்.. அதில் உங்கள் செல்லுலா பேசியின் எண்ணை பதித்துவிட்டால் அந்த அட்டவனையை உங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் எஸ்.எம்.எஸ் அனுப்பி ஞாபகமூட்டும்.. இதுப்போல் பல பயனுள்ள விடயங்கள் கூகிளில் உள்ளது..

அன்புரசிகன்
18-11-2007, 06:00 PM
நீங்கள் exe, dll, ocx or bat கோப்புக்களை அனுப்பும் பொழுது
zipped (.zip, .tar, .tgz, .taz, .z, .gz) ஆக அனுப்பினால் அது விடாது ஆனால் .rar ஆக அனுப்பும் போது விடும்.

அதாவது exe என்பதை எந்த extension ம் இல்லாத பெயராக rename செய்தும் அனுப்பலாம். உதாரணம் abc.exe ஐ abc.tamilmantram இவ்வாறு...

தவிர நான் அறிந்த வரை gmail ல் folder வசதியில்லை. மாறாக லேபிள் வசதி உண்டு. ஒவ்வொருவரது அஞ்சல்களுக்கும் பெயரிட்டு வைத்தால் அந்த பெயர் உள்ளோரை நீங்கள் ஒன்றாக காணமுடியும். கிட்டத்தட்ட போல்டர் வசதி மாதிரித்தான். ஆனால் போல்டர் வசதி அல்ல.

அக்னி
18-11-2007, 06:06 PM

நான் Folder ஐத் தேடித்தேடி, கடைசியில் gmail இல் Lable தான் Folder என்று முடிவுசெய்துவிட்டேன்.
இன்றுதான் இரண்டும் வேறு வேறு என்று எனக்குத் தெரியும்.
நன்றி அன்புரசிகரே...

leomohan
18-11-2007, 07:44 PM
சுவையான திரி. இந்த குறைகளை கூகிளின் குறை சொல்லும் பகுதிக்கு அனுப்பினால் அவர்கள் புதிய வடிவத்தில் மின்னஞ்சல் மேம்படுத்தப்படும்போது இவற்றை நினைவில் கொள்வார்கள்.

இளசு
18-11-2007, 08:39 PM
நல்ல திரி.. நன்றி பாரதி..

குறைகளைச் சொல்ல கொஞ்சம் ஞானம் வேணும்.(குப்பைகள் அதிகம் கோடுது என்பதைத் தவிர எனக்கு வேறு ஒண்ணும் தோணலை.

ஆனால் நண்பர்கள் தரும் தகவல்களைப் படித்தேன். நன்றி.

பாரதி
19-11-2007, 01:02 AM
குறைகள் என்றால்
1.ஜிமெயிலில் Yahoo மாதிரி Folders கிடையாது..

நண்பர்கள் சொன்னது போல லேபிள் வசதி இருக்கிறது மலர். உபயோகப்படுத்தி பாருங்கள்.

எனக்கு முதன் முதலில் ஜிமெயில் பயன்படுத்தும் போது ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறேன்.
முக்கிய பிரச்சனை..!

1. மெயில்களை சேர்த்து வைக்க போல்டர் உருவாக்கும் அமைப்பே இல்லை. ஆகவே, மெயில்களை பிரித்து வரிசைப்படுத்துவது கடினப்படுகிறது. முடிவதில்லை.

இன்னும் யோசிச்சு தோன்றியதை நாளை சொல்கிறேன் அண்ணா.

லேபிள் வசதியை உபயோகித்து பாருங்கள் பூ. மின்னஞ்சல்களை பிரிப்பது எளிதுதான்.
உங்களுக்கு பிரச்சினை என்று கருதுவதை கூறுங்கள்.

இது எல்லோருக்கும் தெரிந்த பிரச்சனை.இன்னும் மற்றவைகளுடன் ஓப்பிட்டு ஜிமெயிலின் நிறை-குறைகள் கொடுங்கள்.பகிர்தலுக்கு நன்றி
நீங்களும் தரலாமே நண்பரே.

நான் விரும்பிப் பாவிப்பதும் ஜி.மெயிலே... என்னைப் பொறுத்தவரை குறைகளிலும் நிறைகளதிகம்...

exe வகை கோப்புக்களை அனுப்ப முடியாதென்பது குறையென்றாலும் கோப்புக்களை சிப்(Zip) பண்ணி அனுப்பலாமென நினைக்கின்றேன்..

குறையென்றால் ஸ்பாம் மெயில்களின் தொல்லை கொஞ்சம் அதிகம்..
நான் குறிப்பிட்ட வகை மின்னஞ்சல்களை சுருக்கியும் கூட அனுப்பவியலாது ஓவியன்! குப்பை மின்னஞ்சல்கள் குறை என்றாலும் கூட அது தனிப்பகுதிக்கு போய்விடுகிறதே.

முடியும் அக்கா
நான் அனுப்பியிருக்கேனே
உண்மையாகவா...? மறுபடி சோதனை செய்து சொல்லுங்களேன்.

Lables > New Lable > Create
இப்போது நீங்கள் தெரிவு செய்த மின்னஞ்சலை, Create செய்த Lable இல் போட்டு (நகர்த்தி),
பின்னர், அதனை Archive செய்துவிட்டால், அது inbox இல் இருக்காது... Lable இல் இருக்கும்....

ஆனால், Lable இல் வைத்து Remove Lable கொடுத்தால், அது எங்கே செல்கின்றது என்று எனக்குத் தெரியாது. மீளப்பெற முடிவதில்லை. அப்படியான போது மீள inbox அனுப்பி, அங்கிருந்துதான் பெறுவேன்.

Folder மாதிரி...
நாம் நீக்கிய எல்லா மின்னஞ்சல்களும் TRASH-ல் தான் இருக்கும். நீங்கள் அங்கு சென்று அழித்தால் ஒழிய உங்கள் மின்னஞ்சல்களை மீள பெறுவது எளிதுதான்.

ஜி-மெயிலில் ஜிப் பையில்களை அனுப்ப இயலும், அது மட்டுமின்றி *.exe என்பதை *.txt பெயர் மாற்றம் செய்து அனுப்பினால் மெயில் எந்த பிழையும் சொல்லாது.. *.exe ஜாவா தொடர்புடைய பையில்களை ஏன் அனுப்ப இயலாது என்றால் அது வைரஸ்களை தவிர்க்கும் முயற்சியால்தான்.. ஜி-மெயில் இன்னும் சில நாட்களில் நாம் offline-னில் இருந்தவாறே மெயில் படிக்கிற வசதியை கொணரப்போகிறது.. அதாவது நீங்கள் ஜி-மெயிலை திறந்தவுடன் உங்கள் எல்லா மெயில்களும் உங்கள் கணினிக்கும் தரவிறக்கம் ஆகிவிடும், அதன் பின் நீங்கள் இணையத்தொடர்பை துண்டித்துவிட்டு கூட உங்கள் மெயில்களை படிக்கலாம், அது மட்டுமின்றி அதை நீங்கள் நினைக்கும் பொழுது திறந்து படிக்கமுடியும்..

கூகுள் இன்னும் நிறய வசதிகளை செய்து தந்திருக்கிறது, கூகுள் 'calender' பயன் படுத்து இருக்குறீர்களா.. calender உங்கள் நாள் அட்டவனையை பதித்து வைத்து கொள்ளலாம்.. அதில் உங்கள் செல்லுலா பேசியின் எண்ணை பதித்துவிட்டால் அந்த அட்டவனையை உங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் எஸ்.எம்.எஸ் அனுப்பி ஞாபகமூட்டும்.. இதுப்போல் பல பயனுள்ள விடயங்கள் கூகிளில் உள்ளது..
நண்பரே... நானும் ஜிமெயிலை முதலில் இருந்தே பாவித்து வருகிறேன். ஆனால் நீங்கள் கூறியது போல வெறுமனே கோப்புகளின் பெயர்களை மாற்றினால் அனுப்ப முடியும் என்பது பிழை என்று தோன்றுகிறது. மேலும் முன்பிருந்தே ஜிமெயிலின் உதவியால் அவுட்லுக் போன்ற மென்பொருளின் உதவியால் பதிவிறக்கிக் கொண்டால் இணையத்தொடர்பு இல்லாத போதும் படிக்க இயலும். மேலதிக விபரங்களுக்கு மிக்க நன்றி.

நீங்கள் exe, dll, ocx or bat கோப்புக்களை அனுப்பும் பொழுது
zipped (.zip, .tar, .tgz, .taz, .z, .gz) ஆக அனுப்பினால் அது விடாது ஆனால் .rar ஆக அனுப்பும் போது விடும்.

அதாவது exe என்பதை எந்த extension ம் இல்லாத பெயராக rename செய்தும் அனுப்பலாம். உதாரணம் abc.exe ஐ abc.tamilmantram இவ்வாறு...

தவிர நான் அறிந்த வரை gmail ல் folder வசதியில்லை. மாறாக லேபிள் வசதி உண்டு. ஒவ்வொருவரது அஞ்சல்களுக்கும் பெயரிட்டு வைத்தால் அந்த பெயர் உள்ளோரை நீங்கள் ஒன்றாக காணமுடியும். கிட்டத்தட்ட போல்டர் வசதி மாதிரித்தான். ஆனால் போல்டர் வசதி அல்ல.
நீங்கள் கூறிய படி முயற்சி செய்து பார்க்கிறேன் அன்பு. மிக்க நன்றி ஆலோசனைக்கு.

சுவையான திரி. இந்த குறைகளை கூகிளின் குறை சொல்லும் பகுதிக்கு அனுப்பினால் அவர்கள் புதிய வடிவத்தில் மின்னஞ்சல் மேம்படுத்தப்படும்போது இவற்றை நினைவில் கொள்வார்கள்.
அன்பு மோகன், நேரடியாக நான் நினைத்ததை அப்படியே கூறிவிட்டீர்கள். என் உண்மையான நோக்கமும் அதுவே!

நல்ல திரி.. நன்றி பாரதி..
குறைகளைச் சொல்ல கொஞ்சம் ஞானம் வேணும்.(குப்பைகள் அதிகம் கோடுது என்பதைத் தவிர எனக்கு வேறு ஒண்ணும் தோணலை.
ஆனால் நண்பர்கள் தரும் தகவல்களைப் படித்தேன். நன்றி.
உங்கள் தன்னடக்கம் நானறிவேன். மிக்க நன்றி அண்ணா.

மாதவர்
19-11-2007, 01:21 AM
மேலும் ஜி மெயிலில் ip address எடுக்க முடியாது.

கஜினி
19-11-2007, 04:12 AM
ஆதி அவர்களுக்கு...
நீங்கள் சொல்வதுபோல் இணையம் இல்லாமல் ஜிமெயிலை படிப்பதற்கு ஏற்கனவே வசதிகள் வந்துவிட்டன.

ஜிமெயில் பாதுகாப்பு அதிகம். எனக்கு ஜிமெயில்தான் பிடிக்கும்.

மேலும் போல்டர் வசதி இல்லை என்று சொன்னார்கள். ஏன் இல்லை, ஜிமெயிலில் போல்டர் வசதிகள் இருக்கின்றது. என்னுடைய எல்லா யாகூ மெயிலையும் நான் ஜிமெயிலில்தான் திறக்கிறேன். போல்டர்களில் அதைப் பாதுகாக்கிறேன்.

கஜினி
19-11-2007, 04:16 AM
மேலும் யாகூ மெயிலை அரைமணிநேரம் திறக்கவில்லையென்றால் பேஜ் எக்ஸ்பெயர்டு என்று வந்துவிடுகிறது. ஜிமெயிலில் அந்த பிரச்சினை இல்லை.

அன்புரசிகன்
19-11-2007, 04:19 AM
கஜினி அவர்களே... நீங்கள் கூறுவது லேபிளைப்பற்றியது என்று எண்ணுகிறேன். காரணம் போல்டர் வசதி இல்லை என ஜிமெயில் காரர்களே கூறியிருப்பதை எங்கோ படித்த ஞாபகம். கண்டுபிடித்தால் இங்கு தருகிறேன்.

ஒருவேளை நீங்கள் யாஹூ அஞ்சல்களை ஜிமெயிலில் தரவிறக்குவதால் அங்கே இருந்த போல்டர்கள் வந்ததோ தெரியவில்லை. லேபிள் வசதி வேறு. போல்டர் வசதி வேறு என்று நினைக்கிறேன்.

praveen
19-11-2007, 04:25 AM
குறை பற்றிய திரியில் நிறை பற்றி தெரிவிப்பதாக கோவித்து கொள்ளாதீர்கள்.

exe பைலை அனுப்ப முடியவில்லை என்றீர்களே?. அதற்கு பதில் ஜிமெயிலையே உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு டிரைவாக வைத்து கொண்டால் எப்படி இருக்கும். அப்படி வைத்து கொண்டு ஜஸ்ட் காப்பி & பேஸ்ட் செய்து மகிழுங்கள்.

அந்த யுட்டிலிட்டிக்கு கிழே சென்று பதிவிறக்குங்கள்.

http://www.softpedia.com/progDownload/GMail-Drive-shell-extension-Download-15944.html

அன்புரசிகன்
19-11-2007, 04:32 AM
நீங்கள் ஜி ட்ரைவ் ஐ தானே கூறுகிறீர்கள். பரவாயில்லைத்தான். ஆனாலும் அது ஜிமெயிலில் நேரடியாக அனுப்புவதிலும் மோசமாக சிலநேரங்களில் இருக்கிறது. கணிணி அப்படியே விறைத்ததுபோல் ஆகிவிடுகிறது. வேறு வேலைகள் செய்யமுடிவதில்லை.

மற்றது.... மின்னஞ்சலில் கோப்புக்களை அட்டாச் பண்ணும் போது கோப்புக்களை காட்டியபின் அதுதானாகத்தான் பதிவேற்ற தொடங்கும். சிலவேளை அப்படியே இருக்கும். சிலபலதடவைகள் றீஃபிரஷ் பண்ணவேண்டிவருகிறது.... பிறவுஸ் பண்ணி காட்டியவுடன் அட்டாச் என்னும் ஒரு சுட்டி இருந்தால் இன்னும் நன்மை....

ஷீ-நிசி
19-11-2007, 04:44 AM
நண்பர்களே! ஜிமெயிலில் ஃபோல்டர் வசதியில்லை... ஆனால் அதைவிட பல மடங்கு சிறப்பம்சம் கொண்டதுதான் லேபிள்..

நான் செயல்விளக்கமே தருகிறேன்.

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Gmail%20Folder/1.jpg

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Gmail%20Folder/2.jpg

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Gmail%20Folder/3.jpg

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Gmail%20Folder/4.jpg

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Gmail%20Folder/5.jpg

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Gmail%20Folder/6.jpg

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Gmail%20Folder/7.jpg

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Gmail%20Folder/8.jpg

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Gmail%20Folder/9.jpg

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Gmail%20Folder/10.jpg

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Gmail%20Folder/11.jpg

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Gmail%20Folder/12.jpg

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Gmail%20Folder/13.jpg

அன்புரசிகன்
19-11-2007, 04:49 AM
நீங்கள் கூறிய இந்த வசதிகள் hotmail மற்றும் yahoo ல் உண்டு நிஷி. மீண்டும் ஒரு சந்தேகம். ஒரு மின்னஞ்சலுக்கு லேபிள் இட்டதும் அந்த அஞ்சல் inbox ல் இருக்குமா? அல்லது வேறு பகுதிக்கு நகர்த்தப்பட்டிருக்குமா?

நேசம்
19-11-2007, 04:50 AM
பாரதி அண்ணா ஆரம்பித்த திரியில் இவ்வளவு விஷயங்கள் நன்பர்கள் கொடுப்பார்கள் என்று நினைக்கவில்லை.அண்ணாவுக்கும் லேபெல்ஸ் பற்றி விலக்கம் கொடுட்த்த ஷி-நிசி மற்றும் அனைவருக்கும் நன்றி

ஷீ-நிசி
19-11-2007, 05:13 AM
நீங்கள் கூறிய இந்த வசதிகள் hotmail மற்றும் yahoo ல் உண்டு நிஷி. மீண்டும் ஒரு சந்தேகம். ஒரு மின்னஞ்சலுக்கு லேபிள் இட்டதும் அந்த அஞ்சல் inbox ல் இருக்குமா? அல்லது வேறு பகுதிக்கு நகர்த்தப்பட்டிருக்குமா?

அன்பு நீங்க அந்த option செலக்ட் செய்யலாம். அதாவது skip to inbox நீங்க செலக்ட் செய்தா. அந்த நபரிடமிருந்து வரும் மெயில்கள் எல்லாம் அந்த லேபிள் ஃபோல்டரில் மட்டும்தான் இருக்கும். இன்பாக்ஸில் இருக்காது. இன்பாக்ஸிலும் வேண்டும், அந்த லேபிளிலும் வேண்டும் என்றால், நீங்க 'skip to inbox' செலக்ட் செய்ய வேண்டாம்.

leomohan
19-11-2007, 05:23 AM
செயல்முறை விளக்கத்திற்கு நன்றி ஷீநிசியாரே.

கஜினி
19-11-2007, 06:36 AM
நான் சொல்ல நினைத்ததை செயல்முறை விளக்கத்தோடு கொடுத்திருக்கிறார்கள். மிக்க நன்றி ஷீ-நிசி.

பாரதி
19-11-2007, 04:02 PM
மேலும் ஜி மெயிலில் ip address எடுக்க முடியாது.
நன்றி மாதவர்.

ஆதி அவர்களுக்கு...
நீங்கள் சொல்வதுபோல் இணையம் இல்லாமல் ஜிமெயிலை படிப்பதற்கு ஏற்கனவே வசதிகள் வந்துவிட்டன.

ஜிமெயில் பாதுகாப்பு அதிகம். எனக்கு ஜிமெயில்தான் பிடிக்கும்.

மேலும் போல்டர் வசதி இல்லை என்று சொன்னார்கள். ஏன் இல்லை, ஜிமெயிலில் போல்டர் வசதிகள் இருக்கின்றது. என்னுடைய எல்லா யாகூ மெயிலையும் நான் ஜிமெயிலில்தான் திறக்கிறேன். போல்டர்களில் அதைப் பாதுகாக்கிறேன்.
நன்றி கஜினி.

குறை பற்றிய திரியில் நிறை பற்றி தெரிவிப்பதாக கோவித்து கொள்ளாதீர்கள்.

exe பைலை அனுப்ப முடியவில்லை என்றீர்களே?. அதற்கு பதில் ஜிமெயிலையே உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு டிரைவாக வைத்து கொண்டால் எப்படி இருக்கும். அப்படி வைத்து கொண்டு ஜஸ்ட் காப்பி & பேஸ்ட் செய்து மகிழுங்கள்.

அந்த யுட்டிலிட்டிக்கு கிழே சென்று பதிவிறக்குங்கள்.

http://www.softpedia.com/progDownload/GMail-Drive-shell-extension-Download-15944.html
அன்பு பிரவீண், நானும் ஜிமெயில் துவங்கப்பட்டதில் இருந்து உபயோகித்து வருகிறேன்.
இந்தத்திரி ஆரம்பித்தன் நோக்கம் என்ன குறைகள் உள்ளன என்பதைக் கண்டறிந்து அவற்றை களைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதற்காகவே. நீங்கள் கூறிய ஜிமெயில் டிரைவ் நானும் அறிவேன். அது ஒருவரின் சுய உபயோகத்திற்குத்தானே பயன்படும்? நாம் மற்றோருக்கு மடல் அனுப்புவதற்கு இது உதவுமா..? இது போன்ற மென்பொருட்கள் நம்முடைய நடவடிக்கைகளை கண்காணிக்குமோ என்ற அச்சமும் எனக்கிருக்கிறது. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

அன்பு நீங்க அந்த option செலக்ட் செய்யலாம். அதாவது skip to inbox நீங்க செலக்ட் செய்தா. அந்த நபரிடமிருந்து வரும் மெயில்கள் எல்லாம் அந்த லேபிள் ஃபோல்டரில் மட்டும்தான் இருக்கும். இன்பாக்ஸில் இருக்காது. இன்பாக்ஸிலும் வேண்டும், அந்த லேபிளிலும் வேண்டும் என்றால், நீங்க 'skip to inbox' செலக்ட் செய்ய வேண்டாம்.

அருமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஷீ. ஜிமெயிலில் வேறு எந்த குறையும் உங்களுக்குப் படவில்லையா..?

அக்னி
19-11-2007, 04:28 PM
நாம் நீக்கிய எல்லா மின்னஞ்சல்களும் TRASH-ல் தான் இருக்கும். நீங்கள் அங்கு சென்று அழித்தால் ஒழிய உங்கள் மின்னஞ்சல்களை மீள பெறுவது எளிதுதான்.

ஆமா... Trash இல் Lable நீக்கப்பட்டவை உள்ளன....
நன்றி அண்ணா...