PDA

View Full Version : கடை எதற்காகப் பரப்பியிருக்கிறேன்??



karikaalan
18-11-2007, 02:02 PM
கடை எதற்காகப் பரப்பியிருக்கிறேன்??

நேற்று (18.11.2007) தில்லி கனாட் ப்ளேஸில் உள்ள ஒரு புத்தக்கடையில் அளைந்து கொண்டிருந்துவிட்டு, வேண்டிய புத்தகத்தை எடுத்துவந்து கல்லாவில் இருக்கும் முதலாளியிடம் கொடுத்து பில் போடச்சொன்னேன்.

அந்தச் சமயம் ஒருவர் உள்ளே வந்து கல்லாவில் அமர்ந்திருப்பவரிடம் ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்லி, இருக்கிறதா? என்று கேட்டார்.

தலையைத் தூக்கிப் பார்க்காமலேயே கடைக்காரர் அந்தப் புத்தகம் இல்லை என்றார்.

வந்தவருக்குத் திகைப்பு. என்ன ஐயா இப்படிச் சொல்கிறீர்கள். தேடிப் பார்க்கலாமே என்றார்.

கடைக்காரர் மீண்டும் அதே பதில் சொன்னவுடன், வந்தவருக்குச் சற்றே கோபம்.

ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் இருக்கும் இந்தக் கடையில்... அப்படி இருக்க, சற்றாவது நீங்கள் தேடக்கூடாதா... என்றார்.

கடைக்காரர் மசியவில்லை.

வந்தவரை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தார். "ஐயா, இங்கே நான் வைத்திருப்பது விற்கத்தானே தவிர, எனது வீட்டிற்கு எடுத்துச் செல்ல அல்ல. ஒரு புத்தகம் இங்கே இல்லை என்றால், இல்லை".

ரசித்தேன்.

===கரிகாலன்

ஓவியன்
18-11-2007, 02:12 PM
உண்மைதான் அண்ணா!!

அவருக்குத் தான் எவ்வளவு தொழில்பக்தி...!!
தொழிலில் தான் எந்தளவுக்கு பிடிப்பு..!!
தொழில் மேலுள்ள கவனம், ஞாபகம்.....!!

உண்மையிலே அவர் அத்தொழிலில் உயர இவையன்றோ காரணிகள்...

அழகான சம்பவத்தை, இரசித்து நம்மையும் இரசிக்க வைத்தமைக்கு நன்றிகள் பல...!!

பாரதி
18-11-2007, 04:13 PM
நானும் ரசித்தேன் அண்ணா..! சில இடங்களில் வேலை பார்ப்பவர்களின் நினைவாற்றல் பிரமிக்கத்தக்கது என்பதை நானும் கண்டிருக்கிறேன்.
(என்ன புத்தகம் வாங்கினீர்கள் அண்ணா..?)

இளசு
18-11-2007, 07:23 PM
அண்ணலுக்கு

செய்யுந்தொழிலில் முழுமையான ஈடுபாட்டைக் காட்டும் நிகழ்வு....

அவர் மதிக்கத்தக்கவர். அவர் சொன்ன வாசகம் இரசிக்கத்தக்கதே!

பகிர்ந்தமைக்கு நன்றிகள் அண்ணலே!

மன்மதன்
18-11-2007, 11:20 PM
கடையிலேயே இருப்பவருக்குத்தானே எந்த புத்தகம் இருக்கு இல்லை தெரியும்.. கரெக்ட்டாதான் சொல்லி இருக்கார்.

சிவா.ஜி
19-11-2007, 04:02 AM
அதானே எத்தனைப் புத்தகம் இருந்தாலென்ன அத்தனையும் அவரின் நினைவில் இருக்குமல்லவா..?உண்மையிலேயே ரசிக்கத்தகுந்த பதில்தான்.பகிர்ந்தமைக்கு நன்றி கரிகாலன் சார்.

mania
19-11-2007, 04:49 AM
எனக்கென்னவோ சொந்த அனுபவத்தை பெயரை மாற்றி சொல்லியிருக்காரோ என்று ஒரு சிறு சந்தேகம்....!!!!????:rolleyes:(அடிக்க வராதீங்க கரிகாலன்ஜி!!!!):D
அன்புடன்
மணியா...:D

praveen
19-11-2007, 04:51 AM
அதே நேரத்தில் இருந்திருந்து நம்ம ஆளுங்க புத்தகம் வாங்கிற சாக்கில் சுட்டு கொண்டு போனால் தான் அந்த நியாபக சக்தி பற்றி சந்தேகம் வந்திருக்கும். ஆனால் அந்த மாதிரி புத்தகமே அவர் பழையதை விலைக்கு வாங்கவில்லை என்றால் சந்தேகமேயில்லாமல் பதில் கூறலாம்.

ஒருவேளை புத்தகம் கைவசம் இருந்திருந்தால், சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு புத்தகம் இந்த வரிசையில் இந்த புத்தகத்திற்கு அருகில் உள்ளது பாருங்கள் என்பார்கள்.

அவர்களுக்கு அவர்கள் வேலையின் பால் உள்ள ஞாபகசக்தி.

karikaalan
19-11-2007, 05:10 AM
அடியேன் வாங்கிய புத்தகம் ஆலன் க்ரீன்ஸ்பான் எழுதி, சமீபத்தில் வெளியான −− தி ஏஜ் ஆஃப் டர்புலன்ஸ். கிட்டத்தட்ட அவரது வாழ்க்கைச் சித்திரம்.

===கரிகாலன்

அன்புரசிகன்
19-11-2007, 05:22 AM
அவர் என்ன பிரச்சனையில் இருந்தாரோ. வீட்டில் என்ன ரகளையோ.... :D

lolluvathiyar
19-11-2007, 06:49 AM
கடைகாரர் சொன்னதில் அர்த்தம் இருகிறது. இப்பல்லா கடைகளில் ஆள் கிடைப்பதில்லை. அதுவும் புத்தகடை புத்தக அறிவுடன் ஆள் கிடைப்பது சுத்தமாக இல்லை. பெரிய கடையா இருந்தால் கன்னி வச்சு அதன் மூலம் இருக்கா இல்லையானு சொல்லலாம்.

அமரன்
19-11-2007, 07:45 AM
எனக்கென்னவோ சொந்த அனுபவத்தை பெயரை மாற்றி சொல்லியிருக்காரோ என்று ஒரு சிறு சந்தேகம்....!!!!????:rolleyes:(அடிக்க வராதீங்க கரிகாலன்ஜி!!!!):D
அன்புடன்
மணியா...:D
நீங்களாகவும் இருக்கலாமல்லவா.. நண்பனை எப்படிக் காட்டிக்கொடுப்பது என்று சங்கோசப்பட்டு பெயரை குறிப்பிடவில்லையோ..

யவனிகா
19-11-2007, 08:31 AM
பொதுவாகவே புத்தகக் கடைக்காரர்களுக்கு இருக்கும் அறிவு தான் இது...என்ன நீங்கள் சந்தித்த கடைக்காரர் அழகாகப் பேசவும் செய்கிறார்...எனக்குத் தனிப்பட்ட முறையில் புத்தகக் கடைக்காரர் மேல பொறாமை உண்டு. முன்பு சிறுபிள்ளைத்தனமாக யாராவது புத்தகக் கடைக்காரரைத் திருமணம் செய்தால் நிறைய புத்தகம் படிக்கலாமே என்று யோசித்தது உண்டு.இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது.உங்கள் அனுபவத்தைப் அழகாகப் பகிர்ந்தமைக்கு நன்றி.

alaguraj
19-11-2007, 08:32 AM
சில்லரை கேட்கும் பொழுதும் இதே அனுபவம் கிடைத்ததில்லையா?...

சில்லரை இல்லை என்றால் இல்லை......

அக்னி
20-11-2007, 05:07 AM
சிறிய விடயம் ஆனால் அதையும் கூர்ந்து கவனித்து அதிலுள்ள நயத்தை, நயமான சம்பவமாக்கியுள்ளார் அண்ணல் கரிகாலன்ஜி...

அந்தக் கடை உரிமையாளரின் ஞாபகசக்தி, சிலவேளைகளில் உரிய காலத்தில், உரியவர்களால் கண்டறியப்பட்டு வழிநடத்தப்பட்டிருந்தால், மிகச்சிறந்த அறிவாளர் ஒருவர் கிடைத்திருப்பாரே என்ற அங்கலாய்ப்பும் மனதில் எழுகின்றது...

அக்னி
20-11-2007, 05:09 AM
பெரிய கடையா இருந்தால் கன்னி வச்சு அதன் மூலம் இருக்கா இல்லையானு சொல்லலாம்.
வாத்தியாரே இது கொஞ்சமும் நல்லால்ல...
என்னதான் எழுத்துப் பிழை என்றாலும், கணினி கன்னியானால் விபரீதமாகிவிடும்...