PDA

View Full Version : யார் யார் நம்ம பூமியை நாசம் பண்ணுறாங்க என



சுட்டிபையன்
18-11-2007, 08:09 AM
காபனீரொக்சைட்டை அதிகம் வெளியிடும் முதல் 10 நாடுகளின் பட்டியல்..

(TOP 10 EMITTERS)

National power sector emissions (in tonnes of CO2):

US - 2,530 million
China - 2,430 million
Russia - 600 million
India - 529 million
Japan - 363 million
Germany - 323 million
Australia - 205 million
South Africa - 201 million
UK - 192 million
South Korea - 168 million

Source: Carma/CGD)

கிட்டத்தட்ட 4.5 பில்லியன் (10^9) ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய பூமியில் மனிதன் தோன்றி கிட்டத்தட்ட ஒரு 5 மில்லியன்(10^6) ஆண்டுகள் தான் இருக்கும். ஆனால் மனிதனின் முயற்சியால் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட துரித தொழில்நுட்ப வளர்ச்சியானது நம்ம பூமியை சிதைக்க ஆரம்பித்து இப்போ உலக வெப்பமுறுதல் என்ற முக்கிய பிரச்சனையில் கொண்டு வந்து விட்டுள்ளது.

இதற்கு முக்கியமான காரணியாக இருப்பது சுவட்டு எரிபொருள் பாவனையில் இருந்து வெளியிடப்படும் காபனீரொக்சைட் வாயுவின் அளவு தான். இந்த வாயு வளிமண்டத்தில் 0.04% என்றிருந்து இப்போ சற்று அதிகரித்துச் சொன்றுள்ளது. இதன் காரணமாக சூரியனில் இருந்து வரும் வெப்பக்கதிர்கள் பூமியின் வளிமண்டலத்துள் சிறைப்படுவது அதிகரித்துப் போனதால் பூமியின் சராசரி வெப்பநிலை கடந்த காலங்களில் திடீர் என்ற அதிகரிப்பைக் காட்டியது.

இதனால் துவருவப்பனிப்பாறைகள் மற்றும் மலைகளில் படிந்திருந்த பனிப்பாறைகள் உருகத்தொடங்கின. கடல் மட்டம் உயரத்தொடங்கியது. வெப்பநிலை அதிகரிப்பைத் அதிகம் தாக்க முடியாத கடல் வாழ், தரை வாழ் உயிரினங்கள் அழியத்தொடங்கின.. காலநிலையில் அசாதாரண மாற்றங்கள் எழுந்து, வரட்சி வெள்ளப்பெருக்கென்று காலநிலை அடிக்கடி சீறத் தொடங்கியது. வெப்பநிலை அதிகரிப்பால் நோய்களைத் தரவல்ல உயிரினங்கள் பெருகிப் பரந்தன.

இப்படிப் பல பாதகமான விளைவுகளை மனிதன் சந்திக்கத் தொடங்கிய பின்னரே.. இதெல்லாம் பூமி வெப்பமடைதலின் பொருட்டு எழுந்த பிரச்சனைகள் என்று இனங்கண்டு கொண்டு உசாரானான்.



CO2 EMISSIONS PER CAPITA

Australia - 10.0 tonnes
US - 8.2 tonnes
UK - 3.2 tonnes
China - 1.8 tonnes
India - 0.5 tonnes

(Source: Carma/CGD)

இருந்தாலும் இந்த காபனீரொக்சைட்டை வெளியிடும் அளவில் எந்த மாற்றமும் பெரிதாக ஏற்படவில்லை. மனிதன் நவீன தொழில்நுட்பத்தின் தேவைகளுக்கு அடிமையாகி விட்டதால் அவனுக்கு அவற்றைப் பூர்த்தி செய்யத் தேவையான சக்தியை சுவட்டு எரிபொருட்களை எரித்தே பெற வேண்டிய தேவை இருப்பதால் அவனால் காபனீரொக்சைட் வாயுவை வெளியிடுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

சமீப காலமாக உலக மயமாக்கலின் கீழ் பொருளாதார போட்டி நிலை உலகெங்கும் வியாபித்து விஸ்வரூபம் எடுத்து வருவதால் தொழில்துறைகளின் பெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க காபனீரொக்சைட்டின் அளவும் வளிமண்டலத்தில் அதிகரித்துக் கொண்டே போகிறது. அது இன்று அபாயகரமான எல்லையைத் தொட்டு நிற்கிறது.

இப்படி காபனீரொக்சைட்டை அதிகம் வெளிவிடும் நாடுகளில் அமெரிக்கா, சீனா, ரஷ்சியா, இந்தியா, ஜப்பான், ஜேர்மனி என்று வளர்ந்த மற்றும் துரிதமாக வளர்ந்து வரும் நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. அவுஸ்திரேலியர்களோ ஒரு ஆளுக்கு என்று வெளியிடும் காபனீரொக்சைட்டின் அளவில் உலகில் முன்னணியில் உள்ளனர். அவர்களை அடுத்து அமெரிக்கர்கள் உள்ளனர். இப்படியே போனால் நம்ம பூமியில் எமது எதிர்கால சந்ததி வாழ வழிவிடுவோமா என்பது கேள்விக்குறியாகவே அமையப் போகின்றது..!

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/7092989.stm

ஆதவா
18-11-2007, 09:25 AM
இதிலயும் அறிஞர் நாடுதான் முதலிடமா? :)

பூமியையும் சரி, சாமியையும் சரி, ஆசாமியையும் சரி துவம்சம் பண்றதே இந்த அமெரிக்க நாடுதான்..... ஹூம்,...

மீனாகுமார்
18-11-2007, 10:04 AM
நம்ம ஊருல இருக்குற தகிக்கிற வெப்பத்துக்கு இவங்கள்லாம் தான் காரணம்.... பனிக்கட்டியால் மூடியிருந்த பூமியில் வீடுகளைக் கட்டி வீட்டுக்கு வீடு சூடேற்றிகளை இயக்குகிறார்கள். நியாயமாக பார்த்தால் இந்தியாவில் வெப்பத்தினால் சாகும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பலபல கோடிகோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும்... இவர்கள்...

நாம் அவர்கள் இடத்திலும் அவர்கள் நம் இடத்திலும் இருந்தால் அவர்கள் நம் சட்டையைப் பிடித்து உலுக்கு நம்மிடமிருந்து பணம் வசூல் பண்ணிவிடுவார்கள்... ம்.... எல்லாம் எமன் செயல்... சாரி.. அவன் செயல்...

சுட்டிபையன்
18-11-2007, 11:53 AM
இதிலயும் அறிஞர் நாடுதான் முதலிடமா? :)

பூமியையும் சரி, சாமியையும் சரி, ஆசாமியையும் சரி துவம்சம் பண்றதே இந்த அமெரிக்க நாடுதான்..... ஹூம்,...

அமெரிக்கா என்ற ஒரு நாடு இல்லாவிட்டால் உலகம் நிம்மதியா இருக்கும் ஆதாவரே

lolluvathiyar
19-11-2007, 07:15 AM
அமெரிக்காவோடு கம்பேர் பன்னி பாத்தா இந்தியா 5 மடங்கு குரைவா தான் இருக்கு. அதுவும் கூட மேற்கத்திய மக்களுக்கு நாம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதால் இந்த நிலமை.
அந்த குப்பைகளையும் கூட (ஈவேஸ்ட் உட்பட) நாம் தான் இறக்குமதி பன்னுகிறோம்