PDA

View Full Version : பருவநட்சத்திரங்கள்...! - பாகம் 3



பூமகள்
18-11-2007, 07:12 AM
முந்தைய பாகம்: 2 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12841)


பருவ நட்சத்திரங்கள் - பாகம் 3


(ஒருவரைப் பார்த்து கலா அதிர்ந்து சிலையானாள்.)

அந்த ஒருவர் 70 வயதுடைய ஒரு முதியவர். 70 வயது என்று சொல்ல முடியாத அளவு 60 வயது போல் இருந்தது அவரது உடலமைப்பு.

சிலையாய் நின்ற கலாவின் கண்களில் வட்ட வட்டமாய் சுழலும் அந்த கால திரைப்பட பாணியில் ஒரு சுழல் வந்து 10 வருடம் பின்னோக்கி பழைய நினைவுகளை தோண்டி எடுக்கத் துவங்கியிருந்தது.

அந்த பெரியவரின் முகம் மறக்கவே முடியாமல் இன்னும் கலாவின் நினைவில் அப்படியே இருந்தது.

கோவையின் முக்கிய நகர்புற சாலையின் ஓரத்தில் வீற்றிருந்தது அந்த "ப்ளாக் மாரியம்மன் கோயில்". அதன் பிரகாரத்தின் வெளிப்புறத்தில் ஒரு ஆலமரம்.

குயில்களும் குருவிகளும் கோயிலின் மணியும் எழுப்பும் சத்தத்தினூடே காலை பிராத்தனை கூட்டத்தின் சத்தமும் அருகிருந்து வரும் படி அமைந்த ஒரு அழகான உயர்நிலைப் பள்ளி.

அதில் கலா, ரெட்டை ஜடை பின்னலில் மயிலாய் படித்த நடுநிலை வகுப்புக் காலம்.

பள்ளி விட்டு வரும் வழியில் எப்போதும் கலா அந்த கோயிலில் வழியே போவது தான் வழமை.

அன்று அவ்வாறே செல்கையில், அந்த ஆலமரம் அருகே ஒரே சிறார் கூட்டம்.

வேடிக்கை பார்க்கும் ஆவலில் கலாவும் கூட்டத்தில் ஐக்கியமாகிறாள்.

ஒரு முதியவர், அழுக்கேறிய சட்டை, பேண்ட், அழுக்கான கோட், பல நாட்கள் குளியலையே கண்டிராத மேனி, ஒடுக்குழுந்த கண்கள், நரைத்த குறுந்தாடி சகிதமாக நின்றிருந்தார். அவரைச் சுற்றித் தான் சிறார் கூட்டம்.

கலாவுக்கு சிறார்களின் கூட்டத்தின் காரணம் இன்னமும் விளங்கவில்லை.

சலசலப்பின் உச்சத்திலிருந்த சத்தங்களுக்கு நடுவே ஒரு சிறுவனின் குரல்...!

"தாத்தா, என் பெயரை ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் சொல்லுங்க பார்ப்போம்.." என்று கூறி தன் பெயரை 'சந்தோஷ்' என்றான்.

என்ன ஆச்சர்யம் அந்த முதியவர் கண்களில் ஒரு அறிவு ஒளிப் பிரகாசிக்க கச்சிதமாக பெயரின் ஆங்கில ஸ்பெல்லிங்கை எழுத்து விடாமல் சொன்னார்.

உடனே, அடுத்த சிறுவன் இதே போல் ஆங்கிலத்தில் கடினமான வார்த்தை சொல்லி ஸ்பெல்லிங் சொல்லச் சொன்னான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த கலாவுக்கு ஆச்சர்யத்தில் புருவம் உயர்ந்தது.

கண்டிப்பா ஒரு நன்கு படித்த முதியவர் தான் இவர்.. காலத்தின் கோலம் இவரை இப்படி ஆக்கியிருக்கலாம் என்று மனவேதனை கொண்டு
சிறுமியான தன்னால் உதவ முடியாத நிலை கண்டு தவித்தாள்.

பிரசாதமாக கிடைக்கும் உணவும், அப்பப்போ அண்டை வீட்டார் மற்றும் சிறார்கள் கொடுக்கும் உணவும் அந்த முதியவருக்கு போதுமானதாக இருந்தது.

சிறிது காலமாய் பள்ளிக்குச் சென்று திரும்புகையில் மறக்காமல் பார்த்து அவருக்கு ஏதும் உண்ண தன்னிடம் உள்ளதை கொடுத்து வந்த கலா, ஒரு நாள் அவரை அந்த ஆலமரத்தினடியில் காணாமல் திகைத்தாள்.

விவரம் கேட்க யாருமில்லாததால், கலா செய்வதறியாது தவித்தாள்.

சிறுமியான கலா, சிறிது காலத்தில் அந்த நிகழ்வை மறந்தே விட்டாள்.

இப்போது அந்த முதியவரைத் தான் இந்த அன்பு இல்லத்தில் கண்டிருக்கிறாள்.

"என்ன கலா... அப்படியே நின்னுட்ட.... ஆப்பிளை அவரிடம் கொடுமா...!" என்றவாறே காமேஷ் அருகில் வந்தான்.

கலா பழைய நினைவுகளின் சங்கிலி தொடரில் சென்றவள் காமேஷின் குரல் கேட்டு நிஜத்துக்கு திரும்ப வந்தாள்.

"பை த வே.. நான் சொன்னேனே... ஒரு முக்கியமான ஒருவரை சந்திக்க போறோம்னு..! அவரு இவர் தான்.. பேரு ரத்னவேல். இவர் ஒரு ஆங்கில பேராசிரியர். ஃபொனட்டிக்ஸ்-ல் விசேசமா புலமை பெற்றவர்."
என்று சொல்லிவிட்டு அவரிடமும் ஆசி வாங்க முனைந்தனர்.

"மகராசனா இருப்பா..." என்று காமேஷைப் பார்த்தும் "மகராசியா, தீர்க்க சுமங்கலியா இரும்மா" என்று கலாவைப் பார்த்தும் வாழ்த்து சொன்னார் அந்த பெரியவர்.

"ஐய்யா... நல்லாயிருக்கீங்களா? மாத்திரை எல்லாம் நேர நேரத்துக்கு சாப்பிடறீங்களா?" என்று பவ்யமாய் கேட்டான் காமேஷ்.

"எனக்கென்ன தம்பி குறைச்சல்.. நான் நல்லாயிருக்கேன்.. மாத்திரை எல்லா இங்க சரியான நேரத்துக்கு கொடுக்கறாங்கபா.. நான் கரக்டா சாப்பிட்டுட்டு தான் வர்றேன்." என்று தள்ளாத வயதின் நடுக்கத்துடனே பதிலளித்தார் பெரியவர் ரத்னவேல்.

கலாவின் குழப்பமான முகம் புரிந்தாலும் வெளிக்காட்டாமல் காமேஷ் எல்லாருக்கும் உணவு பரிமாறுவதில் குறியாய் இருந்தான்.

எல்லாரும் சாப்பிட்டாயிற்று. இப்போது நேரம் காலைக் 11-ஐ எட்டியிருந்தது.

கலாவும் காமேஷும் இன்னும் சாப்பிடவேயில்லை என்பது அவர்களுக்கு அப்போது தான் வயிறு காட்டிக் கொடுக்கத் துவங்கியிருந்தது.

அன்பு இல்லத்தின் பொறுப்பாளரைச் சந்தித்து, காமேஷ் பேசலானான்.

"மேடம்.. இன்னிக்கு மதியத்துக்கும் இரவு டிப்பனுக்கும் அன்ன பூர்ணாவிலேயே சொல்லியிருக்கேன். டைமுக்கு கொண்டு வந்துடுவாங்க.. அதில் ஏதும் ப்ராப்ளம்னா எனக்கு போன் பண்ணிச் சொல்லுங்க.. நாங்க இப்ப கிளம்பறோம்" என்று சொல்லிமுடித்து பெரியோரைப் பார்க்கச் சென்றான் காமேஷ்.

எல்லாரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு மீண்டும் காரில் செல்ல ஆயித்தமானார்கள் கலாவும் காமேஷும்.

(பயணம் தொடரும்)

யவனிகா
18-11-2007, 08:37 AM
அதென்ன ப்ளாக் "மாரியம்மன் கோவில்"...மாரியம்மன் கறுப்பா இருப்பாங்களா? அது "பிளேக் மாரியம்மன்" அதாகப்பட்டது ப்ளேக் கொள்ளை நோய் வந்தப்ப காத்தருள உருவாக்கப்பட்ட மாரியம்மன்.

முதியவர் உறவுக்காரராக இருக்கக் கூடும் என்று நினைத்திருந்தேன்...பேராசிரியத் தாத்தாவா? கதை சூடு பிடிக்கிறது.
எப்போதும் சஸ்பென்ஸ் வைத்து தொடரும் போடுவாயே...இதில் இல்லையா? ரொம்பக் காக்க வைக்காமல் அடுத்த பாகத்தைக் குடு பூ.

பூமகள்
18-11-2007, 08:42 AM
மிகச் சரி யவனி அக்கா..!
பேச்சு வழக்கில் ப்ளாக் மாரியம்மன் என்று சொல்லி சொல்லி அப்படியே வந்துட்டது..!
கரு மாரியம்மனையும் அப்படி அழைப்பதாக அம்மா சொன்னாங்க..!
எது சரின்னு தெரியலை.
முதல் பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள். :D:D
கண்டிப்பா விரைவில் அடுத்த பாகத்தை கொடுக்க முயல்கிறேன் யவனி அக்கா. :)

மலர்
18-11-2007, 09:02 AM
நான் கதையை வேறு மாதிரி எதிர்பாத்திருந்தேன்..
ஆனா கதை "ப்ளாக் மாரியம்மன் கோயில்"ன்னு அழகா வித்தியாசமா மூவ் ஆயிடுச்சி....

ஆங்கில பேராசிரியர் ஏன் அப்படி அழுக்கு துணியில... யாரு அவரு..???

அவங்களுக்கும் கலாவும் காமேஷு தம்பதிகளுக்கும் ஏதாவது உறவா,,,??

கதை விருவிருப்பா போயிட்டு இருக்குக்கா........
ஆறப்போடாம
அடுத்த பாகத்தை சீக்கிரம் தந்திரணும் இது என் அன்பு கட்டளை ஓக்கேவா...

பூமகள்
18-11-2007, 09:07 AM
எதிர்பார்த்ததை தந்தா த்ரில் இருக்காதே... மலரு..!
அதான் வித்தியாசப்படுத்தி தந்தேன்..!
கதையில் வரும் சில நிகழ்வுகள் உண்மையே..!
பின்னூட்டமிட்டமைக்கு நன்றிகள் மலர்...!

சிவா.ஜி
18-11-2007, 10:39 AM
ஆஹா...பூவு தேறிட்டியே...எல்லோரும் எதிர்பார்த்ததை எழுதாமல் புதிய ட்ராக்கில் கதையை நகர்த்த தொடங்கிவிட்டாயே.அசத்தல்.நடை வெகு சரளமாக வருகிறது.உரையாடல்கள் பக்காவாக இருக்கிறது.மனமார்ந்த வாழ்த்துகள்.மேலும் படிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டது கதை.

பூமகள்
18-11-2007, 10:53 AM
சிவா அண்ணா...
பயத்தோடே தான் இந்த மூன்றாவது பாகத்தைப் போட்டேன். ஆனால் உங்க பின்னூட்டம் கண்டு நிம்மதியா இருக்கு.
உங்க கையில் பாராட்டு வாங்குவது ரொம்பவே சந்தோசமா இருக்கு..!
விரைவில் அடுத்த பாகத்தைத் தருகிறேன் அண்ணா.
மிக்க நன்றிகள் சிவா அண்ணா. :)

சிவா.ஜி
18-11-2007, 11:52 AM
அப்படியே கொஞ்சம் எழுத்துப் பிழையையும் சரி பார்த்துக்கொள் பூமகள்.
(உயிர்நிலைப் பள்ளியா உயர்நிலைப் பள்ளியா)

ஆதி
18-11-2007, 04:38 PM
பூமகள் முதலில் இரு விடயங்களை நான் இங்கு சொல்லியே ஆகவேண்டும்..
முதல் விடயம் நான் இதன் முதல் இரு பாகங்களைப் படிக்கவே இல்லை.. மூன்றாம் பாகம் படித்தவுடன் தொன்றிய முதல் சிந்தனை.. ச்சே முதல் இரண்டு பாகத்தை தவரவிட்டு விட்டோமே என்பதுதான்..
இரண்டாவது விடயம் நான் கதைகளே படிக்க மாட்டேன்.. உண்மையில் கதைகளைப் படிப்பது பொழுதைகழிக்கதான் என்பது என்னுடைய ஆணித்தனமான உணர்வாக இருந்தது.. அதை இந்த பருவநட்சதிரம் நொறுங்க உடைத்துவிட்டது.. உண்மையில் கதை அருமை.. நடை சிலிப்புதட்டவில்லை.. கதையில் உயிரொட்டமும் உணர்ச்சி ஒட்டமும் உள்ளது.. பாரட்டுக்கள்..

நன்றி ஆதி

பூமகள்
18-11-2007, 04:51 PM
அப்படியே கொஞ்சம் எழுத்துப் பிழையையும் சரி பார்த்துக்கொள் பூமகள். (உயிர்நிலைப் பள்ளியா உயர்நிலைப் பள்ளியா)
அண்ணா... மன்னிக்கவும்.. அவசத்தில் பிழையை கவனிக்க மறந்துட்டேன்.

பூமகள்
18-11-2007, 05:10 PM
முதல் விடயம் நான் இதன் முதல் இரு பாகங்களைப் படிக்கவே இல்லை.. மூன்றாம் பாகம் படித்தவுடன் தொன்றிய முதல் சிந்தனை.. ச்சே முதல் இரண்டு பாகத்தை தவரவிட்டு விட்டோமே என்பதுதான்..
ஆஹா..!
மிக்க நன்றிகள்.
முதல் இரு பாகம் தான் இதை விட விறுவிறுப்பாய் இருப்பதாக நினைத்தேன்.
முதலில் இரு பாகங்களையும் படிங்க ஆதி..!
அப்புறம் பின்னூட்டம் கொடுத்து கருத்து சொல்ல தவறாதீங்க..! :)

இரண்டாவது விடயம் நான் கதைகளே படிக்க மாட்டேன்.. உண்மையில் கதைகளைப் படிப்பது பொழுதைகழிக்கதான் என்பது என்னுடைய ஆணித்தனமான உணர்வாக இருந்தது.. அதை இந்த பருவநட்சதிரம் நொறுங்க உடைத்துவிட்டது.. நன்றி ஆதி
உங்களின் ஆழ்ந்த எண்ணத்தை மாற்றியமைக்கும் படி என் கதை அமைந்தது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.
ஆயினும் இங்கு நான் ஒன்றை பணிவோடு தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.

எனது முதல்கதை - சிறுகதை: வழி மாறா பயணம்..!

இரண்டாவது கதை - தொடர்கதை: பருவநட்சத்திரங்கள்..!

என்னடா... பூவுக்கு ஒரு சிறுகதை எழுதின உடனே தொடர் எழுதும் அளவு தைரியமும் திறமையும் வந்துருச்சான்னு நினைப்பீங்க..!
அதாங்க இல்ல..... முயற்சி தான் செய்கிறேன்..
இங்கு மன்றத்தின் கதை எழுதுவதில் நிறைய ஜாம்பவான்கள் இருக்காங்க..!

நான் வெறும் கத்துக் குட்டி தான்.

ஒரு பாகம் படிச்சே.. உங்களுக்கு பிடிச்சிருப்பது ஆச்சர்யம் + மகிழ்ச்சி.

கதையின் முந்தைய பாகங்களும் படிச்சு கருத்து சொல்லுங்க ஆதி.

நேசம்
18-11-2007, 05:52 PM
முன்றாம் பாகத்தை தர எடுத்து கொண்ட நேரத்தின் பலனாக அருமையாக இருந்தது.வாழ்த்துக்கள் பூமகள்

பூமகள்
18-11-2007, 06:33 PM
முன்றாம் பாகத்தை தர எடுத்து கொண்ட நேரத்தின் பலனாக அருமையாக இருந்தது.வாழ்த்துக்கள் பூமகள்
மிகுந்த நன்றிகள் நேசம் அண்ணா.
இத்தனை வரவேற்பு கிடைக்குமென்று சத்தியமா எதிர்ப்பார்க்கவேயில்லை...!
பாராட்டியமைக்கு நன்றிகள்.

lolluvathiyar
19-11-2007, 06:43 AM
ம் கதை இன்னும் சஸ்பென்ஸா தான் போயிட்டு இருக்கு. ஓரளவுக்கு அந்த பெரியவரின் தகுதிகள் தான் வெளியாகி இருகிறது. ஆனா அவர் யார்? தொடருங்கள் படிப்போம்.
ஏன் இந்த பாகத்துக்கு அதிக இடைவெளி எடுக்கபட்டிருகிறது.

பூமகள்
19-11-2007, 07:35 AM
ம் கதை இன்னும் சஸ்பென்ஸா தான் போயிட்டு இருக்கு. ஓரளவுக்கு அந்த பெரியவரின் தகுதிகள் தான் வெளியாகி இருகிறது. ஆனா அவர் யார்? தொடருங்கள் படிப்போம்.
மிக்க நன்றிகள் வாத்தியார் அண்ணா.
உங்களின் உற்சாகம் ஊக்கத்தைத் தருகிறது.

ஏன் இந்த பாகத்துக்கு அதிக இடைவெளி எடுக்கபட்டிருகிறது.
தீபாவளி மற்றும் சில சொந்த காரணங்களில் பிசி ஆகிவிட்டேன். அடுத்து கதையை எப்படிக் கொண்டு போவது என்ற சிந்தனையும் சேர்த்து யோசித்தவண்ணமே இருந்ததால் கதையின் இந்த பாகத்தைத் தர லேட்டாகிவிட்டது. மன்னிக்கவும் வாத்தியார் அண்ணா.

அமரன்
19-11-2007, 08:00 AM
அடுத்தபாகத்தையும் கொடுங்கள் பூமகள்..

பூமகள்
19-11-2007, 08:57 AM
இன்னும் தயாரிக்கவில்லை அமரன் அண்ணா.
பொறுங்கள்...! விரைவில் எழுதித்தருகிறேன் அண்ணா.
"பொறுத்தார் மன்றம் ஆள்வார்..!!"

அக்னி
20-11-2007, 03:01 AM
எதிர்பார்த்த பாதையில் பயணிக்காமல், அதே சமயம் முறிவுமில்லாமல்,
கதையை வேறுதிசை நோக்கி நகர்த்தும் பாங்கு நன்று...
எழுத்தில் தேர்ச்சி தெரிகிறது...

ஆனால், முதலிரண்டு பாகங்களின் வேகம் இப்பாகத்தில் இல்லாதது போல ஒரு உணர்வு...

தொடருங்கள் பார்ப்போம்...

முற்பாகமொன்றில் பென்ஸ் அண்ணா, தலைப்புத் தொடர்பாகக் கோடிட்டுக் காட்டியதை கதையில் தீர்த்துவைப்பீர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றீர்கள்...

என்றும் பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களும்...

பூமகள்
20-11-2007, 09:56 AM
கதை நகர்த்தும் விதம் வித்தியாசப்பட்டு இருப்பதாக கூறியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
அதே சமயம்... விறுவிறுப்பு குறைந்தது போல் தோன்றுவது என்பதை இனி கவனத்தில் கொள்கிறேன்.

இன்னும் இன்னும் எழுத்து பழக வேண்டும். கத்துக் குட்டி இப்படி பிழை செய்வது வாடிக்கை தானே அக்னி அண்ணா.
என்னால் இயன்ற அளவு நல்ல எழுத்தைக் கொடுத்து மகிழ்விக்க முயல்கிறேன்.
பெயர் காரணம் கதையின் முடிவில் விவாதிக்கலாமென்று இருக்கிறேன்.
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் அக்னி அண்ணா.

அக்னி
20-11-2007, 10:00 AM
விறுவிறுப்புக் குறையவில்லை... வேகம் குறைந்த தோற்றப்பாடு தெரிகிறது.
என்னால் சொல்லத்தான் முடியுதே தவிர, எழுத முடியுதில்லையே...
உங்கள் எழுத்தாற்றல் குறுகிய கால, குறுகிய அனுபவத்திலேயே வித்தியாசம் கொண்டு மிளிர்கிறது.
எழுத்துப் பயணம் தொடர, இலக்கு கிட்டும்...
வாழ்த்துக்கள்...

பூமகள்
30-11-2007, 06:44 PM
விறுவிறுப்புக் குறையவில்லை... வேகம் குறைந்த தோற்றப்பாடு தெரிகிறது.எழுத்துப் பயணம் தொடர, இலக்கு கிட்டும்...
வாழ்த்துக்கள்...
வேகத்தைக் கூட்ட முயற்சிக்கிறேன் அக்னி அண்ணா.
நிச்சயம், உங்களின் ஊக்கம் எனக்கு பெரும் பலமாய் அமையும்.

மிகுந்த நன்றிகள் அக்னி அண்ணா. :)

மதி
30-11-2007, 07:02 PM
மூன்று பாகங்களையும் இப்போது தான் படித்தேன்...
விறுவிறுப்போடு செல்கிறது..
அடுத்த பாகத்தை சீக்கிரம் தாருங்கள்..

பூமகள்
30-11-2007, 07:26 PM
மிக்க மகிழ்ச்சி. :D
முதல் சிறுகதை வழிமாறா பயணமாய்..!
அடுத்த முயற்சியே... தொடர்கதை.. பருவநட்சத்திரங்களாய்..!
உங்களின் வரவேற்று உற்சாகத்தைத் தருகிறது.

நன்றிகள் மதி அண்ணா. :)