PDA

View Full Version : தனித் தமிழ்த் தளம்ramanan4u
18-11-2007, 07:09 AM
ஒர் தனித் தமிழ் தளத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இதற்க்கு உங்கள் எண்ணங்களும் ஊக்கங்களும் தேவைப்ப்டுகின்றது. உங்களிடம் சில கேள்விகளை கேட்கிறேன் தயவு செய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

:)எத்தகைய சேவைகளை எதிர் பார்க்கிறீர்கள்?
உதாரணம்: செய்திகள், மின்னஞ்சல், அரட்டை,...

:)எத்தகைய புதுமைகளை தமிழ் தளத்தை நீங்கள் விரும்புகிறீர்கள்?
உதாரணம் :( www.தமிழ்தளம்.com , இரமணன்@தமிழ்தளம்.com) முற்றிலும் தமிழாக்கப்பட்ட

:) சினிமா பற்றிய தகவல்களையும் விமர்சனங்களை விரும்புகிறீர்களா?

குறிப்பு : உங்கள் திறமைகளையும் ஆற்றலையும் இந்த தளத்தின் வளற்சிக்கு வழ்ங்க விரும்பினால் தயவு செய்து தெரியபடுத்தவும்.

எனது தேவைகள்
**********************
சிறந்த தமிழ் அறிவுமிக்கோர்
இணையதள வடிவமைப்பாளர்( designers and programmers)
சிறந்த அறிவுரையாளர்
***********************************************
மிக விரைவில் இந்த தளத்தின் பயனை உலகறியும் தரணியெங்கும் தமிழ் மணக்கும்

நன்றி

அன்புரசிகன்
18-11-2007, 07:59 AM
வாழ்த்துக்கள் நண்பரே.. நீங்கள் உதாரணங்களாக கூறியவற்றை அமுல் படுத்தினாலே மிக மிகச்சிறப்பாக இருக்கும். ஆனால் தற்போதய அரட்டைகளில் உள்ள குறைபாடுகள். நானறிந்த வரையில் ஒன்றில் ஜாவா ஐ அடிப்படையாக்கப்பட்டவை. அல்லது flash ஐ அடிப்படையாக கொண்டவை. சில நேரங்களில் நாம் இவற்றை நிறுவினாலும் சரியாக வேலைசெய்வதில்லை...

ramanan4u
18-11-2007, 04:13 PM
தகவலுக்கு நன்றி எப்பெரும் இடர் வந்தாலும் முயன்று வெற்றி பெறுவோம்

நேசம்
18-11-2007, 06:34 PM
தங்களின் முயற்சி வெற்றி பெற இறைவனிடன் பிராத்திக்கிறேன்

sns
19-11-2007, 10:00 AM
குறிப்பு : உங்கள் திறமைகளையும் ஆற்றலையும் இந்த தளத்தின் வளற்சிக்கு வழ்ங்க விரும்பினால் தயவு செய்து தெரியபடுத்தவும்.

எனது தேவைகள்
**********************
சிறந்த தமிழ் அறிவுமிக்கோர்
இணையதள வடிவமைப்பாளர்( designers and programmers)
சிறந்த அறிவுரையாளர்
நன்றி

இணையதள வடிவமைப்பாளர்( designers and programmers) ஆக நான் தங்களுக்கு உதவி செய்ய விரும்புகின்றேன்

மீனாகுமார்
19-11-2007, 11:52 AM
வருக திரு இரமணன் அவர்களே.. உங்களுடைய வலைய பக்கத்தில்
http://www.friendsbuster.com/tamilxp/
இருக்கும் தமிழ் விண்டோஸ் XP இடைமுக மென்பொருளே என்னுடைய அனைத்து கணினிகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.. அதற்கு முதலில் மாபெரும் நன்றி.. உங்களுக்கு...

இந்த புதிய வலைதள முயற்சி மிகவும் பெருமையளிக்கிறது. அருமையான துவக்கம்... கண்டிப்பாக நீங்கள் எதிர் பார்க்கும் அனைத்து தகவல்களையும் இந்த மன்றத்து நண்பர்கள் தருவார்கள்....

ஒவ்வொரு வலைதளத்திற்கும் ஒவ்வொரு தனி உள்நோக்கம் இருக்கும். உங்கள் வலைதளம் அந்த நோக்கத்தை மையமாக கொண்டே இருக்கும். சினிமா விமர்சனங்கள் தர ஆயிரம் தளங்கள் உள்ளனவே.. தமிழுக்கு என்று ஒரு தளம் அமைப்பீர்களானால்.. நான் கீழ் காணும் விசயங்களை எதிர்பார்ப்பேன்..

1. தமிழ் இலக்கணமும், தமிழ் கற்க விருப்புபவர்களுக்கு பாடமும். ஆங்கில அல்லது பிற மொழி சொற்களுக்கு தமிழ் வார்த்தைகளும்...
2. தமிழ் சொத்துக்களின் அதாவது, இலக்கியம் போன்ற பொக்கிஷங்களின் சுட்டிகள்.. உதாரணம் project madurai, chennailibrary.com போன்றவைகள்..
3. தமிழ் வளர்ச்சி பற்றிய செய்திகள்... தமிழர்களின் சாதனைகள் பற்றிய செய்திகள்...

இந்த விசயங்கள் எல்லாம் இணையத்தில் பலவே நல்ல பொக்கிஷங்களாக இறைந்து கிடக்கின்றன. அவையெல்லாம் தொகுத்தாலே மிக அருமையாக இருக்கும்.. அதே நேரம் புதிய படைப்புகளுக்கும் இடவகை செய்தல் வேண்டும்.

மேலும் இங்கு அழகாக இயங்கிடும் இந்த தமிழ்மன்றமே உங்களுக்கு அருமையான வாழும் உதாரணம்.. இந்த மன்றத்தை உலா வாருங்கள்.. எந்த திரிகளில் மக்கள் அதிக நாட்டம் காட்டுகிறார்கள் என்பதை பாருங்கள்... எந்த திரிகள் ஒட்டி வைக்கப்படுகின்றன என்பதையும் நோக்குங்கள்... உங்கள் விடைகள் இங்கேயே இருக்கிறது...

ramanan4u
20-11-2007, 04:20 AM
இந்த தளத்திற்க்கு சிறந்த தமிழ் பெயரை தெரிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளேன். உங்களுக்கு தெரிந்த சிறந்த தமிழ் பெயர்களை தெரிவு செய்து உதவும்

உதாரணம் : பொதிகை , வாழ்கதமிழ் , தாய்மொழி , அருவி , தென்றல்

மீனாகுமார்
22-11-2007, 01:20 PM
தமிழருவி, தேனருவி, தமிழ்தென்றல், செம்மொழி, செந்தமிழ் - என்னுடைய சில பரிந்துரைகள்... ...

அரசன்
02-12-2007, 08:15 AM
உங்கள் பணி நிறைவடைய வாழ்த்துக்கள்.
பொதிகை, அருவி - இவை என்னுடைய பரிந்துரைகள்.

சாலைஜெயராமன்
09-01-2008, 01:32 AM
மீனாகுமார் சொன்னதுபோல் பல தமிழ்த் தளங்களில் உள்ள தமிழ் சாதனையாளர்கள், தமிழின் பொக்கிஷங்களான அமுத மொழி நூல்கள் போன்றவற்றின் தொகுப்னைத் தேடித்தரும் பெரிய தொண்டுக்கான முதல் முயற்சியாக தங்கள் தளம் இருக்கட்டும்.

தங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தனிச்செயற்பதி என்னுடைய தெரிவு

உதயசூரியன்
10-01-2008, 06:14 PM
தங்களின் தமிழ் வளர்ச்சி பணியை மெச்சுகிறோம்..
வாழ்த்துக்கள்

தங்களின் தளத்திற்கு என்னால் செல்ல இயல வில்லையே..

மேலும்.. தங்களின் இந்த தளத்தின் பங்களிப்பு குறையாமல் பார்த்துகொள்ளுங்கள்..

என்னுடைய ஆர்வம்..

தமிழ் தலைவர்களின் வரலாறு..
தலைவர்களின் நற்சிந்தனைகள்..சிரிப்புகள்..

ஆங்கில தமிழ் அகராதி

தமிழ் பெயர்களின் அட்டவணை..

தமிழில் செயல் படும் மின்னஞ்சல்.. இன்னும் பல...வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

இளஞ்சூரியன்
12-01-2008, 05:34 AM
உதய சூரியன் அவர்களின் கருத்தை இளஞ்சூரியன் அப்படியே வழி மொழிகிறேன். தங்களின் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள். தங்களின் இந்த முயற்சிக்கு என் பாராட்டுக்கள்.

ஆர்.ஈஸ்வரன்
13-01-2008, 10:33 AM
தங்களின் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்

நாகரா
11-02-2008, 08:30 AM
தனித் தமிழ் தளத்தை உருவாக்கும் உம் முயற்சியில் நீவிர் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.